அரசியல், பொருளாதாரம், நிர்வாகம், சர்வதேச உறவுகள், நாட்டு நடப்பு, குறித்த என் எண்ணங்களையும், என் அனுபவங்களையும் இங்கே பதிவேன்!
Disclaimer
நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.
இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.
அன்புடன் என்றும்,
அருண்அம்பி. (@arunambie)
Saturday 21 December 2013
சன் நியூஸில் ஒரு பின் லாடன்
வேதவிஞ்ஞான ஆராய்ச்சி மையத்தில் வெளிவந்த இக்கட்டுரையை எனது தளத்தில் பகிர்வதில் மகிழ்கிறேன். நண்பர் கௌதமன் எழுதியது.
______________________________________________________________________________________________________
ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகங்கள்! இந்த நாட்டின் நலவாழ்வை அவைதான் தூக்கிப் பிடிக்கின்றன! ஊடகங்களே மக்களுக்குப் பல புதிய கண்ணோட்டங்களைக் கொடுத்துச் சிந்திக்கத் தூண்டுகின்றன! அதிலும் தமிழ் நாட்டில் நடுநிலை, உண்மை, உறுதி என்ற அடிப்படையில் பல கருத்துக்களை விவாதம் மூலம் கொண்டு சேர்ப்பதில் முன்னணியில் இருக்கிறோம் என்று மார் தட்டிக் கொள்வது சன் நியூஸ் தொலைக்காட்சி! இதில் “நேருக்கு நேர்” என்கிற விவாத நிகழ்ச்சியை ஒருவர் பல வருடங்களாக நடத்தி வருகிறார்! நிகழ்ச்சியில் இவர்தான் அதிகமாகப் பேசுவார்! அவர் கருத்துக்கு மாற்றுக் கருத்துடையவர்களை பேச விடமாட்டார்! சிலசமயம் ஏளனமும் செய்வார்! இவரின் சித்தாந்தப் பின்னணியிலுள்ளவர்களுக்கு, குறிப்புகள் எடுத்துக் கொடுத்து அதற்குப் பதில் சொல்பவர்களைப் பாதியில் பேச விடாமல் தடுப்பார்! முடிவுரை என்ற பெயரில், அவர் கருத்துக்களை ஒரு சொற்பொழிவாக நிகழ்த்திவிட்டு, மக்கள் மன்றத்திடம் முடிவை விட்டுவிடுகிறேன் என்று தன் பொறுப்பைத் தட்டிக் கழிப்பார்! இந்த விவாதங்களுக்கு ‘’நடுநிலை, உண்மை, உறுதி’’ என்ற சிலாகிப்புகள் வேறு! இவர் யாரென்று தெரிந்ததா?
Tuesday 10 December 2013
காங்கிரஸ் கட்சிகள்
புதுச்சேரியிலிருந்து வெளிவந்த 28.11.1908 தேதியிட்ட இந்தியா இதழில் மஹாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய கட்டுரை
ஒரு மனிதன் தன் மனிதில்இரண்டு விதமான மாறுபட்ட அபிப்பிராயங்கள் தோன்றி, இது நியாயமா அது நியாயமா என்று நிச்சயிப்படாமலிருக்கும்போது, தான் செய்யவேண்டுவது யாதெனில், பின்னிட்டு அனுபவத்தினாலேனும், அல்லது தக்க பெரியோரின் போதனையினாலேனும் தனக்கு உண்மை தெரியுமளவும் இரண்டு பக்ஷங்களிலே ஒன்றின்மீதும் சார்வு கொள்ளாமல் தன் மனதைச் சமநிலையிலே வைத்திருக்க வேண்டும்.

Wednesday 6 November 2013
கற்பனை, பிதற்றல், புரட்டு, சூது - பால.கௌதமன்
உலகம் முழுவதும் இந்துக்களாலும், சமணர்களாலும், சீக்கியர்களாலும், இந்திய பண்பாட்டை ஏற்று கொள்ளும் பிற மதத்தவர்களாலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை தான் தீபாவளி. இந்த தீபாவளியைத் தன் ஆத்திரம் தீர முன்னோடி நாளிதழ்களான The Deccan Chronicle, The Asian Age ஆகியவற்றின் Op Ed பகுதியில் அடித்துத் துவைத்திருக்கிறார் கஞ்சன் இலையா என்ற புதின எழுத்தாளர். இவர் ஹைதராபாத், மௌலானா ஆஸாத் தேசிய உருது பல்கலைக்கழகத்தின் Study of Social Exclusion and Inclusive Policy மையத்தின் இயக்குனராக பணி புரிகிறார். தன்னை தலித் விடுதலைக்காக குரல் கொடுக்கும் சமூக சீர்திருத்தவாதி என்று அடையாளம் காட்டிக் கொள்பவர். மதம் மாறிய தலித்துக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை கிறிஸ்த்துவ மதமாற்றத்தை வேகப்படுத்துவதற்காக முன் வைத்தவர். இந்த நாட்டில் தலித்துக்கள், மனிதர்களாக நடத்தப்படுவதில்லை என்று சர்வதேச அரங்கான Unrepresented People’s Congressல் இந்தியாவிலிருந்து பிரதிநிதிகளை அனுப்பி, நம் நாட்டில் பிரிவினைவாதத்திற்கு உலக அங்கிகாரம் பெற்றுத்தரத் துடியாக துடித்தவர். மனித நேயத்தை பற்றி மாய்மாலம் செய்துவிட்டு மனித உயிர்களை குடிக்கும் மாவோயிஸ்டுகளுக்கு வக்காலத்து வாங்குபவர். அது மட்டுமா? நான் ஏன் ஹிந்து இல்லை என்ற நூலை எழுதி விட்டு, மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரக் கூடாது என்று குரல் கொடுத்த போலி மதச்சார்பின்மை பேசிய மாமேதை.
Thursday 24 October 2013
இராம ஜென்ம பூமி - தேர்தல் ஆயுதமல்ல தேசத்தின் தேவை.
Wednesday 23 October 2013
தங்க வேட்டையும் சோபனச் சாமியாரும்..
உத்திரப் பிரதேசம் உன்னாவ் தங்கவேட்டை புகழ் சுவாமி ஷோபன் சர்க்கார் மோடியைக் கிழி கிழி என்று கிழித்தார் என்று மானாட மயிலாட எஃபெக்டில் பங்களா ஜந்து சொம்புத்திரன் துவங்கி காதவழி பெயரில்லாத சில கழுதைகள் வரை பலர் முகநூலில் ஸ்டேட்டஸ் போட்டு திருப்திப் பட்டுக் கொள்கின்றனர். பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியைப் படித்துவிட்டு அதை வைத்து புளகாங்கிதம் எய்தி அந்த மனநிலையிலேயே கருத்துப் பேசுகிறார்களோ என்று தோன்றுகிறது.
Sunday 13 October 2013
கட்டுரை என கட்டுக்கதைகளைத் தீட்டும் பழ.கருப்பையா
தமிழ்த்தாமரையில் வெளிவந்த என் கட்டுரை
பலர் தலைகளிலும் வயிறுகளிலும் எரிந்து கொண்டிருக்கிற பொறாமைத்தீயை ஒருவன் எடுத்துத் தன் தலையிலும் வயிற்றிலும் வார்த்துக் கொண்டது போல ஒரு கட்டுரை. ஆனால் வார்த்தவர் வார்த்தை விளையாட்டில் வித்தகர் என்பதால் சற்றே நகைச்சுவை இழையோடவிட முயன்றிருக்கிறார். திராவிட இயக்கத்தின் போர்வாட்கள் என்றறியப்படும் பெருமக்கள் எழுதும் கட்டுரைகளைப் போலவே சொற்களைக் கட்டமைப்பதில் காட்டும் கருத்தைக் கருத்துக்களைக் கட்டமைப்பதில் காட்டத்தவறிய கட்டுக்கதையே இந்தக் கட்டுரை. எதுபற்றிப்பேசுகிறேன் என்று ஊகிக்க ஏலாதோருக்குச் சொல்லிவிடுகிறேன். ஈரொரு தினங்களுக்கு முன் தினமணியில் திரு.பழ.கருப்பையா என்ற பழைய காங்கிரசுக்காரர் எழுதிய கட்டுரை.
புரைதீர்ந்த நன்மை பயக்குமெனின் பொய்மையை வாய்மையிடத்து வைப்பதில் பெருங்குற்றமில்லை என்று வள்ளுவப் பெருந்தகை வாக்குச் சொல்லிர்யிருக்கிறார். ஆனால் புரைதீர்ந்த நன்மை எதுவென்று அறிந்து கொள்வது எப்படி என்பதைப் பற்றிப் பலரும் கவலைப்படுவதில்லை. நான் கருதுவதே புரைதீர்ந்த நன்மை. அதைப் பயக்குமென்பதால் பொய் சொல்லுகிறேன். வள்ளூவனே சொல்லிவிட்டான் அது பெருங்குற்றமில்லை என்று, இனி எனக்கென்ன கவலை என்று இறுமாந்து பொய் சொல்லும் பேர்களின் வரிசையில் பழ.கருப்பையா முதலிடத்துக்கு ஓடுகிறார்.
செங்கோட்டைக்கு மோடியோடு போகப் பலர் பிடியாள் வேலைக்குக் கிளம்பிவிட்டார்கள் என்று தான் அதிமுகவில் இணைந்த காலத்து நிகழ்வுகளை முடிச்சுப்போட்டு நினைவுகூர்ந்திருக்கிறார் கருப்பையா. எனக்குச் சோவைத் தெரியும். சோவுக்கு என்னைத்தெரியும். சோவுக்கு அம்மாவையும் தெரியும் ஆகையால் அம்மாவை எனக்குத் தெரியும், எனக்கு அம்மாவைத் தெரியும் என்ற அடிப்படையில் பேசி அதிமுகவில் இணைந்த வரலாறு மிகச்சமீபத்தியது என்பதால் அவ்வளவாக யாருக்கும் மறந்திருக்காது. புனித ஜார்ஜ் கோட்டைக்கு எம் எல் ஏ என்ற பதவியுடன் இவர் போனபோது “ஐயா சபாநாயகர் வாங்க” என்று வதந்தியைப் பரப்பும் ஏடுகளில் வந்ததை வைத்துப் பலர் வாழ்த்திய போது, “இல்லை. அப்படிப்பேசாதே” என்று மறுக்கத் தோன்றாமல் புன்சிரிப்புடன் அவர்களை நோக்கிக் கையாட்டியவர் பேராசைக்கார பழ.கருப்பையா.
இது கிடக்கட்டும். இவர் அதிமுகவில் சேர்ந்த புதிதில் இவர் இன்னும் காங்கிரசில் இருப்பதாக எண்ணிக் கொண்டு இளைஞர் காங்கிரசின் கூட்டம் ஒன்றுக்கு இவரை அழைத்துவிட்டார்களாம். மரியாதை தெரிந்த அரசியல் பண்பாளர் என்ன செய்திருக்கவேண்டும்? “ஐயா! நான் காங்கிரசில் இருந்து விலகிவிட்டேன். வேறு கட்சியில் இருக்கிறேன். என்னை உங்கள் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பது சரியன்று. நான் வருவதும் முறையாகாது”, என்றல்லவா சொல்லியிருக்கவேண்டும்? வெள்ளையுடை உடுத்திக் கொண்டு மேல்துண்டு பளபளக்க மேடை கிடைத்ததே என்று மகிழ்ந்து பேசக் கிளம்பிவிட்டாராம் காங்கிரசின் பழைய கருப்பையா. மேடையேறியதும் விவரமறிந்து இவரை இறக்கியனுப்பியது தனிக்கதை.
காசுமீரத்துக்கு அத்துமீறி வழங்கப்பட்ட அநியாய உரிமைகள் குறித்தும் அவற்றைக் கொண்டு அங்குள்ள அரசியல்வாதிகள் அநீதியாய் தேசத்துக்கு விரோதமாகப் பேசுவது குறித்தும் கேள்விகளை மோடி மட்டும் எழுப்பவில்லை. போ என்றதும் ரிக்ஷா ஏறிப் போனாரே என்று கருப்பையா மாய்ந்து போகும் அத்வானியும் பேசியுள்ளார். தேசிய உணர்வு இரத்தநாளங்களில் ஓடும் அனைவரும் பேசியிருக்கிறார்கள். மகாவீர் தியாகி என்ற பெரும் தேசியத் தலைவர் நம் நாட்டின் பகுதிகளான அக்சாய் சின் பகுதிகளை சீனா ஆக்கிரமித்த போது நேருவைக் கேட்ட கேள்விகளைக் கருப்பையா மறந்திருப்பாரோ? காசுமீரத்தைத் தன்நாட்டுடன் இணைத்துக் கொள்ள பாகிசுதான் அதிபர் ஜின்னா தன் படைகளை ஏவினார் என்கிறார் கருப்பையா. ஆனால் அவர் ஏவியது தம் படைகளை அல்ல ஆப்கனிசுதானத்துக் கூலிப்ப்டையினரை என்பது வரலாறு. அந்தக் கூலிப்படையினரை விரட்டிவிட்டு நம் நாட்டுடன் காசுமீரத்தை இணைத்துக் கொண்டிருந்தால் பிரச்சினை முடிந்திருக்கும். அதை ஐநா சபைக்குக் கொண்டு போய் இருவரும் இருபாதிகள் என்று காசுமீரத்தைக் கூறுபோட்ட கூறுகெட்ட செயலைச் செய்தது காங்கிரசின் நேரு என்பது வரலாறு. நம்மிடமிருப்பது பெருமலைப்பரப்பு என்றும் எதிரிக்கு அளிக்கப்பட்ட பாதி ஆட்டாம் புளுக்கை அளவு என்றும் கூறுகையில் கருப்பையா பூகோளம் தெரியாதவரா கணக்குத் தெரியாதவரா அல்லது காசுமீரம் குறித்த பிறர் யாருக்கும் தெரியாத உண்மைகள் பல தெரிந்தவரா என்ற கேள்வி எழுகிறது. பூகோளமும் கணக்கும் வரலாறும் சரிவர அறிந்தவர்கள் கருத்துப்படி கருப்பையா ஒன்று புளுக்கையளவு என்று புளுகவேண்டும் அல்லது காசுமீரத்து வரலாறும் பூகோளமும் பிரிவினைக் கணக்குகளும் குறித்த அடிப்படை அறிவே இல்லாதிருக்கவேண்டும். இது தவிர தன் வசமிருக்கும் காசுமீரின் ஒரு சிறு பகுதியை பாகிசுதான் சீனாவுக்குத் தாரை வார்த்தது குறித்து கருப்பையா கருத்தேதும் சொல்லவில்லை. இது அவருக்குத் தெரியுமா? தெரிந்தாலும் ஆட்டாம்புளுக்கையில் அரைப்புளுக்கை போனால் போகட்டுமே என்பாரோ? பழைய காங்கிரசுக்காரர் என்பதால் இது குறித்த ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.
சரி போகட்டும். வேறென்ன சொல்கிறார் காசுமீரைப் பற்றி என்று பார்த்தால் அவை அத்தனையும் பேத்தல். இயற்கையாகவே காசுமீரிகள் முசுலீம்கள் என்கிறார் கருப்பையா. இது அடுத்த அண்டப் புளுகு, காசுமீரத்தில் இருந்து 1980களில் விரட்டப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாக இருக்கும் காசுமீரத்து பண்டிட்டுகள் முசுலிம்கள் அல்ல இந்துக்கள். ஆகவே காசுமீரத்தில் இயற்கையாக அமைந்த முசுலீம்கள் கேட்டுப் பெற்றதல்ல அந்தச் சீர்கெட்ட சலுகைகள். இயற்கையாக காசுமீரத்தில் வசித்து வந்த இந்துக்களின் கருத்தை வழமைபோலப் புறந்தள்ளிவிட்டுப் பேரம் பேசிய காங்கிரசின் கூத்தாட்டமே இந்தச் சலுகை. நம் நாட்டின் அங்கமென்றால் அங்கே நாம் சென்று வசிப்பதில் யாருக்கென்ன தடையிருக்க முடியும்? அந்தப் பகுதி நம்மோடு இணைந்திருக்க நாமேன் தனிச் சலுகை தரவேண்டும் என்று கேட்பதில் என்ன தவறு? அங்கே வேறு யாரும் வரக்கூடாது. இந்துக்களை அடித்து விரட்டினால் கேட்க நாதியில்லை.
ஆனால் முசுலீம்கள் இயற்கையாக அங்கே வசிப்பவர்கள் என்று புரட்டுவாதம் பேசி போலிச் சமாதானம் செய்யும் காங்கிரசுக் கட்சியில் ஊறித்திளைத்த கருப்பையா வேறெப்படியும் பேசுவார் என்று எதிர்ப்பார்ப்பது தவறு. தனி உரிமைகள், தனித்த வாழ்வு, தனிப்பட்டதோர் மாநிலம், அங்கே வேறாரும் வருவதற்கில்லை, இணைந்து அங்கே வாழ வழியுமில்லை என்பன சிறப்புச் சலுகைகள் அல்ல, சீரழிக்கும் சலுகைகள்.
ஆனாலும் காங்கிரசைக் காந்தியார் கலைக்கச் சொன்னது குறித்த விவாதத்தில் ஆதாரங்களைக் கண்டுணர்ந்த பின் சட்டமன்றத்தில் வந்து அது உண்மையே என்று பேசிய ஜெயலலிதாவின் தலைமையை ஏற்றுள்ளாரே ஒருவேளை ஆதாரம் தேடிச் சேர்த்து கோர்வையாகப் பேசப் பழகியிருப்பாரோ என்று எண்ணியது பிழையாகிவிட்டது. புளுகு காங்கிரசுக்கு தொட்டில் பழக்கம். தன் அரசியல் வாழ்வின் தொட்டில்காலம் முதல் காங்கிரசில் குப்பை கொட்டி வந்த கருப்பையா மாறுவதென்பது மனப்பால் என்று இப்போது புரிகிறது.
நாட்டின் நிலைபெற்ற கொள்கைகளை எதிர்ப்பதா என்று பொங்கும் கருப்பையா நூற்றாண்டுகளாய் நிலைபெற்றுவிட்டிருந்த ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக திலகரும், கோகலேயும், போசும், தாசும் பொங்கியது குறித்தும் இதே கருத்தைக் கொள்வாரா? நிலைபெற்று விட்டவை என்பதற்காக தீமைகளை எதிர்க்காமல் இருந்திருக்கிறோமா? இந்திராகாந்தி தாரைவார்த்த கச்சத்தீவில் இலங்கை நிலைபெற்று பல்லாண்டுகள் ஓடிவிட்டன. அது நிலைபெற்றுவிட்டது என்பதால் எதிர்ப்பது குற்றமென்பாரா பழைய காங்கிரசுக்காரர் கருப்பையா?
இந்தியா ஒரு பன்முக நாடு ஆகவே ஒரே உரிமையியல் சட்டத்தால் ஆள்வது இயலாது என்கிறார் கருப்பையா. சிலருக்கு மட்டும் ஆகி வந்த வழக்கத்துக்கு மதிப்பு மற்றவர் வழக்கங்கள் வழக்கொழிக்கப்படும் என்பது என்ன வகையான உரிமையியல் என்று கருப்பையா விளக்குவாரா? இது குறித்த பல விவாதங்களில் மதச்சட்டங்களே முன்வைக்கப்பட்டு ஒரே உரிமையியல் சட்டம் மறுக்கப்பட்டுள்ளது. ஒரு மதத்தின் சட்டம் ஏற்கப்படும் பிறமதங்களின் சட்டம் ஏற்கப்படாது என்பது என்ன விதமான நீதி? இது ஒரு குறிப்பிட்ட மக்களை மதத்தின் பேராலே வசியப்படுத்தி அவர்களின் ஓட்டுக்களைப் பெற்று அதிகாரத்தில் அமர்ந்து பிறரை ஏகடியம் செய்யும் எத்தம் அல்லவா? இதுதானா அரசாட்சி?
இந்து என்பார் தமிழரில் இல்லை என்று பழைய புளித்துப் போன விளக்கம் ஒன்றை அளித்து அதை விவேகானந்தரிடம் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை சொன்னார் என்று சொல்கிறார்கள் என்கிறார் கருப்பையா. சொன்னார் என்று சொன்னால் அதற்கு சுவாமி விவேகானந்தரின் பதிலையும் சொல்லவேண்டுமே. அதைச் சொன்னால் தம் வாதம் தேய்ந்தழிந்து போகுமே என்ற அச்சம். சுந்தரம்பிள்ளை தாம் திராவிடன் என்பதால் இந்து என்ற அடையாளத்தில் இருக்க விரும்பவில்லை என்று சொன்னார். ஆனால் தமிழருக்கு சைவம் வைணவம் ஆகிய மதங்கள் உண்டு என்றும் சொல்லியிருக்கிறார்.
அதற்கு சுவாமி விவேகானந்தர் பதிலுறுக்கையில் “இவர் மெத்தப் படித்தவராக இருந்த போதும் ஆங்கிலேயரின் சூழ்ச்சிச் சொல்லாடலில் சிக்கிப் பொய்யை மெய்யெனக் கொண்டு இனவாதம் கற்பித்த இருண்ட கண்டங்களில் இருக்கிறார். இம்மாதிரியான வாதங்களைத் தாம் தென்னிந்தியாவில் சில நிலையற்ற மனமும், உயர்விலாச் சிந்தனையும் கொண்ட பலரிடம் கேட்டிருப்பதாகவும் அவர்கள் ஆரியம் திராவிடம் என்பதைத் தவறாக விளங்கிக் கொண்டு பேசினார்” என்றும் வருந்தினார். இன்று ஆரியப் படையெடுப்பு என்பதே அப்பட்டமான பொய் என்று அனைத்துத் தரப்பு வரலாற்று அறிஞர்களும் ஓப்புக் கொண்டுள்ளனர். இனவாதத்தை வைத்துப் பிழைப்பு நடத்திவரும் அரசியல் பிச்சைக்காரர்கள் சிலரே அதைத் தாங்கிப் பிடிக்கின்றனர். கருப்பையா இதைத் தூக்கிப் பிடித்துப் பேசுவது அவர் எதையும் ஆராயாமல் அள்ளித் தெளித்த அவசரக் கோலமாகக் கட்டுக்கதைகளை இட்டு நிரப்பி தினமணிக்குத் தந்துள்ளார் என்பதையே காட்டுகிறது.
அத்வானி ஜின்னாவைப் புகழ்ந்ததும் பதவியிறக்கப்பட்டார் என்று புலம்பும் கருப்பையா சீதாராம் கேசரியை எங்கே வைத்துப் பூட்டிவிட்டு சோனியா பதவிக்கு வந்தார், அந்நிகழ்வு நடந்த போது இவர் எந்த முகாமில் முகம் காட்டிக் கொண்டிருந்தார் என்று எண்ணிப்பார்த்தல் நலம். ஒரு தலைவனை அவன் எப்பேர்ப்பட்ட செல்வாக்குள்ளவனாக இருந்தாலும் தொண்டர்களின் உணர்வுக்கு மாற்றுக்கருத்துக் கொண்டிருந்தால் தொண்டர்கள் தலைவனின் கருத்தை ஏற்பது கட்டாயமில்லை ஜனநாயகக் கட்சிகளின் வழிமுறை. அத்வானி ஜின்னா பற்றிப் பேசியது தொண்டர்களுக்குப் பிடிக்கவில்லை. எதிர்த்தனர் என்பதால் அவர் பதவி விலகினார். விலக்கப்படவில்லை கருப்பையா கூறியிருப்பது போல. பிறகும் கட்சியிலிருந்து முற்றாக அவர் விலகவில்லை, கட்சியில்தான் இன்னும் இருக்கிறார். சகல மரியாதைகளுடன் இருக்கிறார்.
இந்திரா காந்திக்காகக் காங்கிரசு உடைந்ததையும் டாங்கேவுக்காக கம்யூனிஸ்டுகள் ஆடிய ஆட்டத்தையும் சுட்டிக் காட்டும் கருப்பையா ஒருவன் தலைமைப் பதவிக்கு வந்தவுடன் தன்னையொத்தவர்களைக் களையெடுப்பான் அதுவே வழக்கம் என்கிறார். கருத்து வேறுபாடுகளைச் சகியாமல் லலித் நாராயண் மிஷ்ரா முதல் பல்வேறு தலைவர்களையும் களையெடுத்த காங்கிரசில் ஊறித்திளைத்த கருப்பையாவுக்கு உட்கட்சி ஜனநாயகம் என்பது அதிசயமாகும். இப்படியும் நடக்குமா என்று ஆச்சரியப்படத் தோன்றும்.
கிணற்றிலே பிறந்து கிணற்றிலே வளர்ந்த தவளையிடம் கடல் கிண்ற்றினும் பெரிதென்ற போது கெக்கலி கொட்டிச் சிரித்ததாம். அதே போல தான் இருந்த பழைய முகாம்களையும் அங்கே நிகழ்ந்த கூட்டல் கழித்தல்களையுமே அரசியல் என்று முழுதாகக் கருத்தில் கொண்டுவிட்ட கருப்பையாவுக்கு தலைமைப் பீடத்தில் இருக்கும் மனிதனை எதிர்த்துக் கருத்துச் சொன்ன தொண்டர்கள் முதல் அதிர்ச்சி. அந்தத் தொண்டர்கள் கருத்தை மதித்து நாடகம் ஏதுமின்றி விலகிய தலைவன் அடுத்த அதிர்ச்சி. அதன்பின் தலைமைக்குத் தகுதியானவன் என்றொருவன் வந்ததும் மாற்றுக் கருத்தைச் சொல்லி அதை மறுத்த சிலரும் பிறகு அனைவரின் ஆசிகளும் பெற்று புடம்போடப்பட்ட புதியவன் பீடமேறியது மூன்றாம் அதிர்ச்சி. அவர் கற்றுத் தேர்ந்த அரசியல் பாடங்களில் இல்லாத விவரங்கள் இவையெல்லாம்.
இதே அத்வானி கருப்பணம் மீட்கப்படவேண்டும் என்று ஆண்டுக்கணக்காகப் போராடிவருகிறாரே, கருப்பையா அப்போதெல்லாம் அத்வானிக்கு ஆதரவாக பேனாவை எடுக்கலாமா என்று யோசித்தது கூட இல்லையே. அத்வானி பதவி துறப்பது புதிதுமல்ல என்பதை சமீபத்திய அரசியல் நடப்புகளை உற்று நோக்கி வந்தாலே புரியும். ஹவாலா ஊழல் என்று அல்லோலப்பட்ட அநாகரிகத்தில் அத்வானியின் பெயரும் இணைத்துப் பேசப்பட்டது. ஆனால் என் பெயரில் குற்றமில்லை என்று தீர்வாகும் வரை தேர்தலில் போட்டியிடுவதோ அரசுப் பொறுப்புகள் வகிப்பதோ இல்லை என்று முடிவெடுத்து விலகினார். ஆண்டுகள் சில கழிந்தபின் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் கூறியபின்னரே தேர்தலில் போட்டியிட்டார்.
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு
என்ற வள்ளுவன் வாக்குக்கிணங்க வரிசையான தேர்தல்களில் மக்களின் தீர்ப்பைத் தன் திறத்தின்பாற்பட்ட ஆட்சிக்கு அங்கீகாரமாகப் பெற்ற மோடி குறித்து கருப்பையா கொண்டுள்ள கருத்து நாப்பிளக்கப் பொய் பேசி நவநிதியம் தேடியலைவே அரசியல் என்ற கொள்கையுடன் ஆளும் காங்கிரசுப் பாரம்பரியத்தில் ஊறித்திளைத்திருப்பதையே காட்டுகிறது. கட்டுக்கதையைக் கட்டுரை எனத் தீட்டிய பழ.கருப்பையா மோடிக்கு முகம் ஆர் எஸ் எஸ் என்கிறார்.
ஆமாம். மோடிக்கும் முகம் ஆர் எஸ் எஸ். அவர் அவ்வியக்கதிலே தான் தொண்டனாகச் சேர்ந்து இன்று நாடு போற்றும் தலைவனாக மிளிர்ந்திருக்கிறார். ஆர் எஸ் எஸ் அமைப்பின் முகம் இந்துத்வம். இந்துத்வத்தின் அடிப்படி ஏகாத்ம மானவ வாதம். அதாவது ஒருதாய் மக்கள் என்பதே அடிநாதம். இப்படி முகங்களின் அடிப்படையும் அடிப்படைகளின் அடிநாதமும் விவரமாகத் தெரிந்ததே பாஜகவின் நிலை.
கருப்பையாவின் முகம் எது என்று இன்னும் தெளிவில்லை. மேற்படிக் கட்டுரை அவரது சொந்தக் கருத்தா அல்லது சமீபத்தில் அவர் சேர்ந்து எம் எல் ஏ ஆன கட்சியின் கருத்தா என்பது புரியவில்லை. சொந்தக் கருத்தெனில் கட்சியின் கருத்தில் இருந்து மாறுபட்டமைக்காக அவர் விசாரிக்கப்படலாம். இவர் ஏன் இப்படிப் பேசுகிறார் என்று உற்றுநோக்குங்கால் காங்கிரசு, சனதா, மீண்டும் காங்கிரசு இப்போது சிலகாலமாக அதிமுக என்று முகாம்கள் மாறிவந்த போதும் பெரும் எதிர்பார்ப்புடன் மாறிய சமீபத்திய முகாமில் இவருக்கு உள்ளம் விரும்பிய வண்ணம் பெருமைகள் கிட்டவில்லை. சற்றே எதிர்ப்புறம் பார்வையைச் செலுத்தினால் காங்கிரசுக் கூடாரத்தில் விவரத்தோடு பலருமில்லை. சற்றே விவரம் இருப்போருக்கும் பேச்சு வரவில்லை. ஆனால் விவராமாக இல்லையென்றாலும் இருப்பது போலப் பேசவல்லவர் கருப்பையா என்பது ஒப்புக் கொண்டாகவேண்டிய உண்மை. மோடி எனும் மனிதரை எதிர்த்துப் பலரும் பலவாறு பேசிவர காசுமீரத்தையும் காங்கிரசுப் பாரம்பரியம் என்ற ஆகாத வழக்கத்தையும் தூக்கிப்பிடித்து வக்காலத்து வாங்கியிருக்கும் கருப்பையாவின் சமீபத்திய கட்டுக்கதைக் கட்டுரை ஒரு செய்தியைச் சொல்லுகிறது.
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.
எனும் வள்ளுவன் வாக்கினுக்கோர் கண்கண்ட சாட்சியாக பல கூடாரங்களில் பரவித்திரிந்து பேசிவரும் பழ.கருப்பையா அதிமுகவில் இலாபம் பெரிதாக ஏதுமில்லை என்பதால் மீண்டும் தாய்கட்சியான காங்கிரசுக்குத் தத்தித்தாவும் தகைமையினாராய் இருப்பது அவரது அரசியல் பயணத்தைக் கூர்ந்து நோக்குங்கால் வெள்ளிடைமலை என விளங்கும். ஆனால் என்ன காரணம் சொல்லிப் போவார், யாரழைத்துப் போவார் இவரை என்பதே சிதம்பர ரகசியம். அதுவும் வெட்டவெளியென்று தெரியாமலா போகும்?

Saturday 24 August 2013
தெலுங்கானா - ஒவ்வாத இணைப்பும் உருப்படாத பிரிவும்
தெலுங்கானா என்றறியப்படும் பகுதி பொது ஆண்டு 1310ல் அலாவுதீன் கில்ஜியின் படைகள் வாரங்கல்லைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த காகதிய மன்னன் ப்ரதாப ருத்ரனை வென்று கொள்ளையிட்ட போது இசுலாமிய ஆட்சியில் விழுந்தது.
இங்கு கொள்ளையடிக்கபட்ட கோஹினூர் வைரம் உள்ளிட்ட பொருட்கள் 1000 ஒட்டகங்களில் ஏற்றப்பட்டு தில்லி கொண்டு செல்லப்பட்டன. மீண்டும் 1336ல் சிருங்கேரி சாரதா பீடத்தின் ஆச்சாரியர் ஸ்ரீ ஸ்ரீ வித்யாரண்யர் வழிகாட்டுதலில் சங்கம வம்சத்தைச் சேர்ந்த ஹரிஹரர், புக்கரராயர் எனும் இளைஞர்கள் தலைமையிலான படை இசுலாமியர்களை வென்று ஹிந்து ராஜ்யத்தை அமைத்தது. இந்த ராஜ்யம் 1678 வரை இசுலாமிய ஏகாதிபத்தியத்தைத் தடுத்து பாரத பாரம்பரியத்தைக் காத்தது. இந்த சாம்ராஜ்ஜியம் மதுரை முதல் வடக்கே ஹிமாசலம் வரை மேற்கே சௌராஷ்டிரம் முதல் கிழக்கே அசாம் வரையிலும் பரவியிருந்தது. இதனால் தென்னிந்தியாவைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர முகலாய அரசுக்கு 500 ஆண்டுகள் பிடித்தன. இதன் வீழ்ச்சிக்குப் பிறகு பல நவாபுகள் சுல்தான்களின் ஆட்சிகள் அப்பகுதியில் நடந்தன.
1678ல் கோல்கொண்டாவின் இசுலாமிய ஆட்சியாளர்களிடம் வீழ்ந்தது வாரங்கல். விஜயநகரப் பேரரசு அத்துடன் முடிவுக்கு வந்தது. நிஜாம்களின் ஆட்சியில் இருந்த அந்தப்பகுதியில் 1752ல் கடற்கரை ஆந்திரப்பகுதியை ஃப்ரெஞ்சுக்காரர்களுக்கு அன்பளிப்பாக நிஜாம்கள் வழங்கினர். 1766ல் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி அப்பகுதியைக் கைப்பற்றியது. ஆனாலும் கோல்கொண்டா பகுதி (தெலுங்கானா/ஹைதராபாத் சமஸ்தானம்) தில்லி,
பஹாமன், குதுப் ஷாஹி, மொகலாயர், மற்றும் நிஜாம் வம்சத்தினரின் ஆட்சிகளில் பல நூற்றாண்டுகள் இருந்தது.
ஹிந்துக்களின் அரசியல் கலாசார விழிப்புணர்வு பல்வேறு துறவிகள் பக்திமான்களால் உயிர்ப்புடன் வைக்கப்பட்டிருந்த போதும் 19ஆம் நூற்றாண்டில் ஹிந்துக்களின் அரசியல் விழிப்புணார்வு தலை தூக்கியது. நிஜாமின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் 90% மக்கள் ஹிந்துக்கள். அவர்கள் அரசியல் பலம் பெறுவது பொறுக்காத நிஜாம் கலாசார அடிப்படையைக் குலைக்கத் திட்டமிட்டார்.
எலகண்டலா, பலமுறு, இந்துரு, மேடுகு ஆகிய பகுதிகளின் பெயர்கள் முறையே கரீம்நகர், மெஹபூப் நகர், நிஜாமாபாத், மேடக் என்று மாற்றப்பட்டன. பாக்கியநகர் ஹைதராபாத் ஆனது. புவனகிரி போங்கிர் ஆனது. பாடு என்று முடியும் ஊர்ப்பெயர்களை பஹாட் என்று உருதுப்படுத்த உத்தரவிட்டார் நிஜாம். அதே வேளையில் 1905ல் ஹைதராபாத் ஒரு இசுலாமிய நாடாக அறிவிக்கப்பட்டது. 1911ல் மீர் உஸ்மான் அலிகான் அதிகாரத்துக்கு வந்ததும் இசுலாமிய மயமாக்கம் வேகம் பிடித்தது. மஜ்லிஸ் இட்டேஹதுல் முஸ்லிமீன் என்ற அமைப்பு துவக்கப்பட்டது.
உஸ்மானியா பல்கலைக்கழகம் துவக்கப்பட்டு உருதுக்கல்வி போதிக்கப்பட்டது. உருது பேசும் முஸ்லிகளுக்கு முக்கியத்துவம் தந்தும் உருது தெரிந்த ஹிந்துக்களுக்கு சலுகைகள் வழங்கியும் உத்தரவிட்டார் நிஜாம். தெலுங்கு மொழி மதிப்பிழந்தது. ஹிந்து கலாசாரம் கேவலமாகச் சித்தரிக்கப்பட்டது.
1937ல் மீலாது நபி கொண்டாட்டங்களில் பேசிய நசருல் ஹசன் கிலானி ”இந்த ராஜ்ஜியத்தில் இன்னும் 22 லட்சம் தின்பண்ட வழிபாட்டாளர்கள் (பசு வழிபடும் ஹிந்துக்கள்) இருக்கிறார்கள் என்பது வருத்தத்துக்குரிய விஷயம் என்று பேசினார். முகமதலி ஜின்னா உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பேசும் போது “என் இனிய இஸ்லாமிய மாணவர்களே” என்று அழைத்துப் பேசினார். ஹிந்து மாணவர்கள் இருக்கிறார்கள் என்ற போது அவர் முகம் சுளித்தார்.
1947ல் ”விடுதலை! விடுதலை! பாரத மாதா கீ ஜெய்!” என்று பாரதம் முழுவதும் முழங்கிய போது ”ஆஜாத் ஹைதராபாத்” முழக்கம் அங்கே கேட்டது. ரஜாக்கர் படையினர் பத்து லட்சம் பேர் பாரதத்துடன் இணையவேண்டும் எனச் சொல்வோரை அடக்கி ஒடுக்க ஏவப்பட்டனர். பல்லாயிரம் ஹிந்துக்கள் ஹைதராபாத் எல்லையைக் கடந்து பாரதத்தில் தஞ்சம் புகுந்தனர். பிற பகுதிகளில் இருந்து முஸ்லிம்கள் ஹைதராபாத் வந்தனர். அவர்களுக்கு உடனடியாக அரசு வேலையும் இருப்பிடமும் வழங்கப்பட்டது. ஹைதராபாத் சுதந்திர தேசம் என்று அறிவித்த இரண்டு மாதங்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் அதிகரித்தது என்று பாண்டுரங்கராவ் குல்கர்னி தெரிவிக்கிறார்.
பாரத அரசு கவலை கொண்டாலும் நிஜாம் இணைப்பு பற்றி முடிவெடுக்க இரண்டு மாத அவகாசம் கேட்டதால் பேசாதிருந்தது. நிஜாம் உலக இசுலாமிய நாடுகளுக்கு இராணுவ அரசியல் உதவி கேட்டு தூதுவர்களை அனுப்பினார். ஹைதராபாத்தில் மக்களுடன் இணைந்து ஹிந்து அமைப்பினர் ரசாக்கர்களை எதிர்த்துப் போரிட்டனர். இந்தப் போராட்டத்தை சுவாமி இராமானந்த தீர்த்தர் வழிநடத்தினார், நிஜாமுக்கு எதிரான போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளும் இணைந்தனர். ரஜாக்கர்களின் தலைவர் காசிம் ரிஸ்வி பாகிஸ்தானுடன் இணைய நிஜாமை வலியுறுத்தினார்.
இந்நிலையில் பாரதத்தின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் போலீஸ் நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். ஆப்பரேஷன் போலோ என்ற பெயரில் இந்திய ராணுவம் 5 முனைகளில் ஹைதராபாத்தைத் தாக்கிக் கைப்பற்றியது. நிஜாம் சரணடைந்தார். காசிம் ரிஸ்வி சிறையில் அடைக்கப்பட்டார், ஆனால் இதற்குள் ஹைதராபாத்தில் இருந்த ஹிந்துக்கள் பயங்கரமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டிருந்தனர்.
ஹிந்துக்களின் வீடுகள் சூறையாடப்பட்டன, கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன, பயிர்கள் கொளுத்தப்பட்டன, பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர். எர்ரபள்ளம் என்ற கிராமத்தில் சந்த் கான் என்ற காவல் அதிகாரியின் துணையுடன் ரஜாக்கர்கள் ஒவ்வொரு வீடாகக் கொள்ளையடித்து மொத்தக் கிராமத்தையும் சூறையாடினர். 70 பெண்கள் கிராமத்தின் நடுவே வைத்து வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். ஹைதராபாத் வங்கியில் 22லட்சம் ரூபாய்கள் கொள்ளையிடப்பட்டது.
இத்தகைய கொடுமைகளைச் செய்த ரஜாக்கர் படையினர் சிறைப்பிடிக்கப்பட்ட போதும் அவர்களின் தலைவர் காசிம் ரிஸ்வி உட்பட பலரும் விடுவிக்கப்பட்டனர். காங்கிரசுக் கட்சி முஸ்லிம்களை திருப்திப்படுத்த அவர்களை குறைந்த தண்டனையுடன் விடுவித்தது. ரிஸ்வி பாகிஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அவர் இட்டேஹதுல் முஸ்லிமீன் அமைப்பை யாரிடமாவது ஒப்படைக்க எண்ணி அப்துல் வஹீத் ஒவைஸி என்ற வழக்கறிஞரிடம் ஒப்படைத்தார். பின்னர் பாகிஸ்தான் சென்றார்.
இத்தகைய கொடுமைகளால் பொருளாதார வளர்ச்சி என்பது தெலுங்கானாவில் கடினமான ஒன்றாகிப் போனது. ஆனால் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் அதிகமிருந்தன. வருவாய் அதிகமுள்ள பகுதியாக தெலுங்கானா இருந்தது. பிற பகுதிகள் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்ததால் வளர்ச்சிப்பணிகள் துரிதமாக நடந்திருந்தன. கிருஷ்ணா கோதாவரி அணைகள் உள்ளிட்ட திட்டங்களால் தெலுங்கானாவுக்கு பலன் ஏதுமிருக்காது என்று அந்த மக்கள் கருதினர்.
ஆங்கிலக் கல்வி பெற்ற ஆந்திர மக்கள் தங்களை ஓரங்கட்டிவிடுவார்கள் என்றும் தெலுங்கானா மக்கள் அஞ்சினர். அது தவிர தெலுங்கானா பகுதியில் பெயருக்கு எதிராக உருது மொழி அதிகம் புழங்கியது. அங்கு பேசப்படும் தெலுங்கு உருது அதிகம் கலந்ததாகவே இருக்கிறது. கலாசார வழியிலும் பல மாறுதல்கள் உள்ளன. 400 ஆண்டுகால தொடர் இசுலாமிய ஆட்சியின் கோரத்தாக்கமும் இருந்தது. ஆகவே அம்மக்கள் ஆந்திரப் பகுதிகளுடன் தெலுங்கானா இணைக்கப்பட்டு ஒரே மாநிலமாவதை விரும்பவில்லை.
புத்திசாலியாகக் காட்டிக் கொள்ள நினைத்த பிரதமர் நேரு திருமணம் நடந்தால் விவாகரத்துக்கு வழி இருப்பது போல இணைப்பு நடந்தால் பிரிவுக்கும் வழி செய்துவிட்டு இணைப்போம் என்று உருப்படாத தத்து(ப்பித்து)வம் பேசினார். 3ல் 2பங்கு பெரும்பான்மை கொண்டு ஆந்திர சட்டசபை தீர்மானம் நிறைவேற்றினால் தெலுங்கானா தனி மாநிலமாகலாம் என்ற அறிவிப்புடன் ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசம் 1956ல் உருவானது. அன்றிலிருந்தே தனித் தெலுங்கானா புகைந்து கொண்டிருந்தது.
முன்னாள் தமிழக ஆளுநர் சென்னா ரெட்டி தனக்கு அரசியல் சிக்கல் வரும் போதெல்லாம் தெலுங்கானா பிரச்சினையைக் கையிலெடுத்துப் பிரச்சினை தீர்ந்த பிறகு கடாசிவிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். 2009ல் மத்திய காங்கிரசு அரசு தனித் தெலுங்கானா அமைக்கப்படும் என்று அறிவித்தது. உடனடியாக தான் அப்படி ஏதும் சொல்லவில்லை. அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது என்று உள்துறை அமைச்சர் சிதம்பரம் அறிவித்தார். விடியோக்கள் காட்டப்பட்ட போதும் தாம் சொன்னதன் பொருள் அதுவல்ல என்று சாதித்தார்.
மஜ்லிஸ் அமைப்பு 1957ல் அரசியல் கட்சியாக உருவாகி தற்போது ஒவைசி சகோதரர்களின் கையில் உள்ளது, ஹைதராபாத் உள்ளிட்ட முஸ்லிம் பெரும்பான்மை இடங்களில் இவர்கள் வைத்ததே சட்டம் என்ற வகையில் நாட்டின் சட்டத்தை மதிக்காமல் நடந்து வருபவர்கள். ஆனால் ஓட்டு வங்கி மதசார்பின்மை என்று காங்கிரசுக் கட்சி இவர்களைக் கண்டு கொள்ளாது இருக்கிறது. இவர்களில் இளையவரான அக்பருதீன் ஒவைசி 15 நிமிடம் போலீசை நிறுத்தி வைத்தால் 100 கோடி ஹிந்துக்களை அழித்துவிடுவதாகச் சவால் விட்டவர். இந்த அமைப்பின் கோட்பாடு இந்தியாவை இசுலாமிய நாடாக்குவதே.
இவர்களில் மூத்த சகோதரர் அசாதுதீன் ஒவைசி தாலிபான்களிடம் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி நல்லுறவை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று பாராளுமன்றத்தில் பேசியவர். காவல்துறை அதிகாரி கிருஷ்ணபிரசாத் இந்த அமைப்பின் ஆதரவாளரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதியுமான முஜீப் என்பவனால் கொல்லப்பட்டார். 14 ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு இசுலாமியர் நல்லெண்ணத்தைப் பெறுவதற்காக காங்கிரசு அரசு விடுவித்தது. இந்த மஜ்லிஸ் அமைப்பைச் சேர்ந்த பலரும் லஷ்கர் இ தய்யபா, ஜய்ஷ் ஏ முகமது, சிமி போன்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள்.
இப்போது அறிவிக்கப்பட்டுள்ள தெலுங்கானா முஸ்லிம் பெரும்பான்மைப் பகுதிகளை இணைத்தே அமையவுள்ளது. ஹைதராபாத், நிஜாமாபாத், மேடக், கரீம் நகர், அடிலாபாத், மெஹபூப்நகர் ஆகியவற்றுடன், மேடக், ரங்காரெட்டி, நல்கொண்டா, கம்மம், வாரங்கல் ஆகிய மாவட்டங்கள் தெலுங்கானாவில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. தெலுங்கானாவின் அதிகாரப்பூர்வ மொழியாக உருது இருக்கும் என்று அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளார். தெலுங்கானாவில் மட்டுமின்றி ஆந்திராவிலும் முஸ்லிம்களின் வளர்ச்சிக்காக மஜ்லிஸ் கட்சி பாடுபடும் என்று அவர் கூறியுள்ளார். 17 பாராளுமன்றத் தொகுதிகளும் 119 சட்டமன்றத் தொகுதிகளும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தெலுங்கானா பல பிரச்சினைகளுக்குத் தீர்வின்றியே அறிவிக்கப்பட்டுள்ளது.
மஹபூப்நகர் மாவட்ட தண்ணீர் பிரச்சினை, நாகார்ஜுன சாகர் அணை தெலுங்கானாவுக்குப் போவதால் க்ருஷ்ணா கோதவரி நீர்ப்பங்கீட்டுப் பிரச்சினை, நிஜாமாபாத்தில் இருந்து வங்கக்கடல் வரை கோதவரியில் எந்த ஒரு நீர்த்தேக்கமும் இல்லை. வருடத்துக்கு 1700 டிஎம்சி தண்ணீர் கடலில் கலக்கிறது, இதற்குத் தீர்வுகாணத் திட்டம் கூடத் தீட்டப்படவில்லை. விவசாயம் செய்ய வழியிருந்தும் இப்பகுதிகளில் பஞ்சம் தலைவிரித்தாடுவது ஏன் என்று பார்த்தால் வளர்ச்சிப் பணிகள் தவிர மற்றெல்லாவற்றிலும் கவனம் செலுத்தும் அரசியல். மஜ்லிஸ் அமைப்பு எல்லாம் இசுலாமிய மயம் என்பதால் முதலீடு செய்ய மற்றவர்கள் வருவதில்லை. முஸ்லிம்கள் இப்பகுதியில் லாபகரமாகத் தொழில் செய்யமுடியாது என்பதால் முதலீடு செய்வதில்லை. விவசாயம் மஜ்லிஸ் அமைப்பால் முன்னெடுக்கப்படவே இல்லை.
இதற்கெல்லாம் தீர்வென்ன என்பது சொல்லாமலே ஓட்டுக் கணக்கின் அடிப்படையில் முஸ்லிம்கள் அதிகமான பகுதிகளை இணைத்து தெலுங்கானா அறிவித்துள்ளது காங்கிரசு அரசு. இணைப்பின் போது மணமுறிவுக்கு வழிசெய்த பிறகே திருமணம் என்று பேத்திய காங்கிரசுக் கட்சி பிரிவின் போதும் ஓட்டுக் கணக்கைத் தவிர வேறெதுவும் கணக்கில் கொண்டதாகத் தெரியவில்லை. ஆக, ஒருங்கிணைந்த ஆந்திரா என்று 1956ல் அமைத்தபோதும், 2013ல் தெலுங்கானா என்று பிரித்த போதும் குறுகிய அரசியல் தவிர வேறெந்த நோக்கமும் காங்கிரசுக் கட்சிக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இனியும் தெலுங்கானாவில் ரஜாக்கர் படையின் மறு அவதரமான மஜ்லிஸ் அமைப்பின் அட்டகாசங்களால் அப்பாவி மக்கள் பாதிப்படையாமல் பார்த்துக் கொண்டால் மட்டுமே பொருளாதாரம் உள்ளிட்ட வளரச்சிகள் சாத்தியப்படும். இல்லையேல் தெலுங்கானா மற்றொரு பாகிஸ்தானாகச் சீரழியும்.

தன் தேசத்தை உயர்த்திக் காட்டுவதே தேசத் தலைமையின் லட்சியம்
தமிழ்த்தாமரையில் வெளிவந்த என் கட்டுரை.
உத்தரேத் ஆத்ம நாத்மாநம் நாத்மாநம் அவஸாதயேத் |
ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்து ராத்மைவ ரிபுராத்மந:
தன்னைத்தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ளக் கூடாது. தனக்குத் தானே நண்பன், தனக்குத் தானே பகைவன்.
இது கீதையில் கண்ணன் சொன்னது. கீதை என்பது போர்க்களத்தில் உறவுகளை எதிரே கண்டு துவண்ட பார்த்தனை ”போரிடுவது தீமையை அழிக்கவே! உறவுகள் தீமையின்பாற்பட்டு நின்றால் எதிர்ப்பது கடமையன்றி வேறில்லை” என தெளிவித்துத் தேற்றிய உரை.

Tuesday 2 July 2013
ஹைதர் - திப்பு மணிமண்டபம் – தமிழனுக்கு அவமானம்
கடந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை 23.06.2013 அன்று மாலை 6 மணிக்கு சென்னை மஹரிஷி வித்யா மந்திர் பள்ளியின் உள்ளரங்கில், வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் சார்பில், “ஹைதர் - திப்பு மணிமண்டபம் – தமிழனுக்கு அவமானம்” என்ற தலைப்பில், ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் பாரத்த்தில் அரங்கேற்றிய வன்கொடுமைகள் பற்றிய ஆவணங்கள் வெளியிடப்பட்டன.
Wednesday 12 June 2013
மணிமண்டபமும் மானங்கெட்ட அரசியலும் - பாகம் 2
நண்பர் பால கௌதமன் எழுதிய பதிவு. இங்கே வெளியிடுவதில் மகிழ்கிறேன்.
உலகத்தை உலுக்கிய பயங்கரவாதி ஒசாமா பின் லாடன், அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டான். அவன் உடலை விமானத்தில் எடுத்துச்சென்று நடுக்கடலில் விட்டெரிந்தனர் அமெரிக்கர்கள்! என்ன காரணம்? நிலத்தில் அடக்கம் செய்தால் அது தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு நினைவுச் சின்னமாகிவிடும்! அது உலக அமைதிக்கு நிரந்தரத் தலைவலி ஆகிவிடும் என்பதால் கடலில் மீன்களுக்கு இரையாக வீசப்பட்டது ஒசாமாவின் சடலம் ! உலகம் இச்செயலை வரவேற்றது. இது தான் உலக ஒழுக்கம்.

Monday 3 June 2013
திருக்குறள் - தெளிவுரை - தேடிப்பதிக்க விழையும் நல்லோர்
இந்த தீரா...விட ஆதிக்கக் காலகட்டத்தில் திருவள்ளுவர் ஒருசமய சார்பற்றவர் என்றும் சமண சமயத்தை தழுவியவர் என்றும், இன்னும் ஒரு படி மேலே போய் வள்ளுவர் கிருஸ்துவ தாமசின் நட்பு மூலம் விவிலியத்தை அறிந்து கொண்டு எழுதியது தான் திருக்குறள் என்றும் பித்தலாட்டச் செயல் அரங்கேறி வந்திருக்கிறது. இந்தத் தமிழ் துரோகிகள் எப்படியெல்லாம் திருக்குறளோடு தங்கள் மனதுக்கு
ஏற்றபடி விளக்க உரை எழுதி தங்கள் வயிறை வளர்த்து கொண்டு திரிந்தார்கள்
என்பதை தமிழ் மக்களுக்கு நாம் புரிய வைக்கவேண்டும்.
இந்து வேதாந்தமும், இந்து தத்துவங்களும் அறிந்த வடிவேலு செட்டியார் என்ற பெரியவர் ஒவ்வொரு குறளும் இந்து தத்துவங்களிளிருந்துதான் எடுத்தாளப்பட்டிருக்கிறது என்பதை ஆதாரங்களுடன் எழுதி இருக்கிறார்.

Thursday 30 May 2013
அறிவுரை நம்பிகள்
ஒருவன் தான் கற்றது கைமண்ணளவே என்று உணரும் போது அறிவாளியாகிறான். ஆனால் தான் கற்றாது அதிகம் என்று என்று ஒருவன் உணரத் துவங்கும் போது முட்டாளாகிறான். முட்டாள்களிடம் கூட விவாதம் செய்து சில விஷயங்களைப் புரிய வைக்கலாம். ஆனால் அறிவாளி என்று தன் தலைக்குப் பின் தானே ஒளிவட்டம் வரைந்து கொண்டு திரியும் பேர்வழிகளிடம் விவாதிப்பது முடியாது. ஏனென்றால் இவர்கள் விவாதம் செய்யமாட்டார்கள். எது பேசினாலும் அதில் தனக்குத் தெரிந்த விஷயத்தை நுழைத்துப் பேசிக் கொண்டே இருப்பார்கள். பேசத் துவங்கிய விஷயத்துக்கும், இவர்கள் சொல்வதற்கும் சம்பந்தமில்லை என்று சுட்டிக்காட்டினால் ’நல்லது சொல்கிறேன் கேட்டுக் கொள்’ என்று உயரத்தில் அமர்ந்து உபதேசிக்கும் நிலையைத் தமக்குத் தாமே வழங்கிக் கொள்வார்கள்.
Tuesday 28 May 2013
ச்சீ...மான் மாலிக்- தேசத்துரோகக் கூட்டணி
நண்பர் பால கௌதமன் எழுதிய பதிவு. இங்கே வெளியிடுவதில் மகிழ்கிறேன்.
கடலூரில் 18.5.2013 அன்று நாம் தமிழர் கட்சி நடத்திய தமிழர் எழுச்சிக் கூட்டத்தில் காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டு, தனி நாடு போராட்டம் வெற்றி பெரும். நீங்கள் தனித்து விடப்பட்டதாக எண்ண வேண்டாம். உங்களுடன் நான் இருக்கிறேன். நான் சிறு வயதிலேயே ஆயுதம் ஏந்தி போராடினேன் என்று வன்முறை மற்றும் பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாகப் பேசினார். இதற்கு காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் தேசியச் சிந்தனையுள்ள அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. ஒரு வழக்கும் கடலூரில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதில் தேசத்துக்கு எதிராக போர் தொடுப்பது போன்ற பிரிவுகள் இடம் பெறவில்லை. ஒரு கண் துடைப்பு வழக்காகவே அது தெரிகிறது.

Monday 27 May 2013
பெரிய புராணச் சிந்தனைச் சொற்பொழிவு
நாகர்கோவிலைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் சார்பில் சென்னை அசோக் நகர் ஆஞ்சனேயர் கோவிலில் பெரிய புராணச் சிந்தனைச் சொற்பொழிவு நடை பெற்றது. சொற்பொழிவாற்றியவர் தமிழாகரர். பேராசிரியர். முனைவர். சாமி.தியாகராசன் அவர்கள். இவர் மூவர் முதலிகள் முற்றம், திராவிடச் சான்றோர் பேரவை ஆகியவற்றின் நிறுவனரும் தலைவரும் ஆவார். பெரிய புராணம் ஒரு வாழ்வியல் என்பதை நிறுவும் ஆய்வு, பக்தி, மொழி, ஆகியவை கலந்த ஒரு உன்னதப் பேருரைத் தொடர் ஒன்றை 14 நாட்களுக்கு நிகழ்த்தினார் அவர்.
வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் ஆகிய அடிப்படைகளில் துவக்கி, தொண்டு என்பது குறித்த தெளிவான விளக்கத்துடன் வேகமெடுத்தது சொற்பொழிவுத் தொடர். சிவ பெருமானின் பெருமைகள், பெரிய புராணத்தின் தோற்றம், தடுத்தாட்கொண்ட தன்மை ஆகியன குறித்து விரிவாக உரையாற்றினார் பேராசிரியர்.
நிகழ்ச்சியின் துவக்க நாளன்று விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் பெரியவர் வேதாந்தம்ஜி அவர்கள் வந்திருந்து சொற்பொழிவைக் கேட்டு மகிழ்ந்தார்.
இது முற்றிலும் ஆன்மீகம் சார்ந்த சொற்பொழிவாக இல்லை. சமீபகாலமாக தமிழ் என்பது இறையியலுடன் சம்பந்தப்பட்டதல்ல என்பது போல திராவிட அரசியல் வட்டத்தைச் சேர்ந்தோர் செய்து வரும் விஷமப் பிரச்சாரங்களுக்கு தக்க பதிலடி தரும் வகையிலும் பல விஷயங்களைச் சொல்லி வந்தார். சத்து சிறிதுமற்ற சில்மிஷக் கேள்விகளுக்குச் சிரிப்புடன் ஓங்கியறையும் பதில்கள் பல இவரது பேச்சில் விரவிக் கிடக்கின்றன.
கேளாரும் வேட்ப மொழிந்த பேராசிரியரின் பேச்சு எக்காலத்திலும் எல்லோருக்கும் கிடைத்திட வேண்டும் என்ற எண்ணத்தில் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தார் இந்தத் தொடர் சொற் பொழிவை ஒலிக்கோப்புகளாகத் தங்களின் இணைய தளத்திலே இட்டு வைத்த்திருக்கிறார்கள்.
தமிழ் அன்பர்களும் தேசிய ஆர்வலர்களும் கேட்டுப் பயன் பெற்று மகிழுமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறது. மேலும் மாதந்தோறும் ஐந்து நாட்கள் இவரது பெரிய புராணச் சிந்தனைச் சொற்பொழிவு நடத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது. காரணாம் 14 நாட்களில் சொல்லி முடிக்கப்படுமளவு சிறிய விஷயமல்ல பெரிய புராணம்.

Friday 24 May 2013
மணிமண்டபமும் - மானங்கெட்ட அரசியலும்
நண்பர் பால கௌதமன் எழுதிய பதிவு. இங்கே வெளியிடுவதில் மகிழ்கிறேன்.
அச்சமும் மடனும் நாணும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப
(தொல்காப்பியம்)
ஆடவரின் பெருமையையும், உரத்தன்மையையும், பெண்டிரின் அச்சம், மடம், நாணம் ஆகியவையும் புகழப்பட வேண்டும் என்பது தொல்காப்பியம் வகுத்த தமிழ் மரபு.அப்படிப் புகழப்பட வேண்டிய ஆடவர் யார்?
யார் போற்றப்பட வேண்டும்?
யாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும்?
தமிழ்த் தாய்க்கும், வள்ளுவருக்கும், சிலைகளும், பூங்காவும், மண்டபங்களும் அமைக்கும் தமிழக அரசுக்கு இந்த இலக்கணம் தெரியாமலா போயிருக்கும்!
பெருமையும் உரனும் ஆடூஉ மேனயாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும்?
தமிழ்த் தாய்க்கும், வள்ளுவருக்கும், சிலைகளும், பூங்காவும், மண்டபங்களும் அமைக்கும் தமிழக அரசுக்கு இந்த இலக்கணம் தெரியாமலா போயிருக்கும்!
அச்சமும் மடனும் நாணும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப
(தொல்காப்பியம்)
ஆடவரின் பெருமையையும், உரத்தன்மையையும், பெண்டிரின் அச்சம், மடம், நாணம் ஆகியவையும் புகழப்பட வேண்டும் என்பது தொல்காப்பியம் வகுத்த தமிழ் மரபு.அப்படிப் புகழப்பட வேண்டிய ஆடவர் யார்?
Friday 17 May 2013
அழியும் நிலையில் 13 தலைமுறைக்கு முந்தய சிவன் கோவில் ..!
அழியும் நிலையில் 13 தலைமுறைக்கு முந்தய சிவன் கோவில் ..! செய்தியை பகிர்ந்து கொண்டு தடுக்க முயல்வோம் வாருங்கள் நண்பர்களே ...!
தேசிய நெடுஞ்சாலை துறையில் நான்கு வழி பாதை திட்டத்தினால், 1300 வருட சிவன் கோவில் அபாயத்தில் உள்ளதாக முகப்புத்தக நண்பர்கள் எழுதியுள்ளார். பகிர்வையும் தினமலர் சுட்டியையும் படித்த போத இதை நடக்க விடக்கூடாது என்ற வைராக்யம் தோன்றுகிறது.

Saturday 11 May 2013
காங்கிரசுக்கு 121ஐ அன்பளித்த 371(J)வும் பாஜகவும்
கர்நாடக தேர்தல் முடிவுகள் பாஜகவைப் பொறுத்தவரை சற்றே எதிர்பார்த்த வகையில் வந்துள்ளன. விவரமறிந்த சங்க வட்டாரத்தினர் 30 முதல் 40 தேறினால் பார்க்கலாம் என்றே சொல்லி வந்தனர். ஆனால் தொங்கு சட்டமன்றம் போல யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத நிலை வரும் என்ற எண்ணம் பலருக்கும் இருந்தது. ஆனால் புள்ளி விவரங்களைக் கூர்ந்து நோக்கினால் எடியூரப்பா பிரித்த ஒட்டுக்களின் எண்ணிக்கையே வீழ்ச்சிக்கு வழிகோலியது என்பது புலனாகும்.
Wednesday 8 May 2013
கர்நாடக தேர்தல் முடிவுகள் - ஒரு சாமானியனின் பார்வை.
கர்நாடகத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. காங்கிரசுக் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. ஆளும் கட்சியான பாஜக இரண்டாமிடத்துக்குக் கடுமையாகப் போராடுகிறது. ஏன் இந்த நிலை? குஜராத்தில் நடப்பது, மத்தியப் பிரதேசத்தில் நடப்பது தெற்கே நடப்பதில்லையே ஏன்? ஆட்சிக்கு எதிரான ஓட்டுக்கள் இவ்வளவு பாதிப்பைத் தரும்போது ஆட்சி எந்த அளவுக்கு மக்களைப் பாதித்தது என்றும் பார்க்கவேண்டும்.
Sunday 28 April 2013
டி எம் கிருஷ்ணாவின் அபஸ்வரம்
டி எம் கிருஷ்ணா என்று ஒரு கர்நாடக சங்கீதப் பாடகர் இருக்கிறார். அவருக்கு திடீரென்று அரசியல் பேசும் ஆசை வந்துவிட்டது போலிருக்கிறது. காலைக் காப்பியோடு நாளிதழைப் படித்தபடி பேசிவிட்டுப் போவது எல்லா மாந்தரும் செய்வதே. அதில் யாதொரு ஆட்சேபமும் யாருக்கும் இருக்க முடியாது. ஆனால் ஒரு அரசியல் தலைவர் பற்றியும் ஒரு அரசியல் வாரிசு பற்றியும் கர்நாடக இசை மேதை என்ற அடையாளத்துடன் பொதுவில் கருத்துக் கூறும் போது உண்மைகளை ஆராய்ந்து பார்த்துப் பேசவோ எழுதவோ வேண்டும்.
Friday 19 April 2013
பிளந்து விட்டார்கள் பாரதத்தை, ஆனால், பிளக்க முடியுமா நம் தர்மத்தை - பாகம் 6
ஹிந்துக்களின் புனித நதியான கங்கை, ரிக் வேதத்தில் ஒரே ஒரு முறைதான் சொல்லப்பட்டுள்ளது, ஆனால் சரஸ்வதி நதியோ குறைந்தது 60 முறை சொல்லப்பட்டுள்ளது. கிறிஸ்துவ மத வியாபாரிகள் இந்த நதியின் குறிப்பை ஏதோ கற்பனை என்று நினைத்தார்கள். இல்லை எங்கோ மத்திய ஆசியாவில் இந்த நதி இவர்களின் கற்பனை ஆரிய படையெடுப்பு சித்தாந்தப்படி ஓடிக் கொண்டிருக்கும் என்று நினைத்தார்கள்.
Monday 15 April 2013
பிளந்து விட்டார்கள் பாரதத்தை, ஆனால், பிளக்க முடியுமா நம் தர்மத்தை பாகம் 5
நண்பர்களே, இது மிக முக்கியமான பகுதி அனைவருக்கும் பகிருங்கள்.
அடுத்து இந்த மதவியாபாரிகள் சொன்ன முக்கிய விடயம் என்னவென்றால் ஆரியர்கள் இரும்பை கையாளும் நுட்பத்தை தெரிந்து வைத்திருந்தார்கள், அதனால் அவர்களால் திராவிடர்களை வெல்ல முடிந்தது எனும் கூற்று. வேதத்தில் ஆயுதங்களை "அயாஸ்" என்று குறிப்பிடுவதை இவர்கள் இரும்பு என மொழிமாற்றம் செய்தார்கள். மற்றுமொறு காரணம் இந்து சமவெளி நாகரீகத்தில் இரும்பின் உபயோகம் கண்டுப் பிடிக்காதது தான்.
Saturday 13 April 2013
பிளந்து விட்டார்கள் பாரதத்தை, ஆனால், பிளக்க முடியுமா நம் தர்மத்தை ? பாகம் 4
ரிக் வேதத்தில் இருந்து எதை எடுத்து குறிப்பிட்டார்கள் ? ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்ட, இந்திரனுக்கும் தசயுக்களுக்கும் நடந்த போரை இவர்கள், ஆரியர்களுக்கும், திராவிடகளுக்கும் நடந்த இணச்சண்டை என்று திரித்து விட்டனர். இந்திரன் வெண்ணிற தோல் உடையவன் என்பதாலும், தசயுக்கள் கரிய நிறம் கொண்டவர்கள் என்பதாலும் அதை இவர்களின் மத வியாபாரத்திற்கு உபயோகித்துக் கொண்டனர்.
Wednesday 10 April 2013
பிளந்து விட்டார்கள் பாரதத்தை, ஆனால், பிளக்க முடியுமா நம் தர்மத்தை ? பாகம் 3
இந்தியாவை குறித்து ஆராய்ச்சி செய்த பல வெளிநாட்டு அறிஞர்கள், குறிப்பாக அகஸ்த் வில்ஹம், ஆர்தர் மற்றும் ஹெர்ன் வில்ஹெம் ஆகியோர் அதன் வேத இலக்கியங்களையும், கோட்பாடுகளையும், தத்துவ ஆழத்தையும் கண்டு வியப்போடு பாராட்டினர்.. ஆனால் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இந்திய துனைக்கண்ட ஆராய்சியாளர்கள் என்ற பெயரிலும் சரித்திர ஆய்வாளர்கள் என்ற பெயரிலும் இந்தியாவுக்கு நுழைந்தது பெரும்பாலும் கிறிஸ்துவ மிஷநரி கும்பல்கள்தான். இவர்களின் முக்கிய பணியே தாங்கள் பிடித்து வைத்திருக்கும் அடிமை நாட்டின் மீது கிறிஸ்துவத்தை திணிப்பது தான்.
Sunday 7 April 2013
பிளந்து விட்டார்கள் பாரதத்தை, ஆனால், பிளக்க முடியுமா நம் தர்மத்தை ? பாகம் 2
ஆங்கிலத்தில் "வல்லவனே நல்லவன்" என்று ஒரு பழமொழியுண்டு. அது சரித்திரத்தை பொறுத்தவரை உண்மை. எவன் வல்லவனோ அவனே சரித்திரத்தை தீர்மானிக்கின்றான். அதாவது சரித்திரத்தை தன்னை ஆராதிக்கும் வகையில் மாற்றி எழுதுகிறான். மனித வாழ்வில் இப்படித்தான் பல சரித்திரங்கள் புரட்டி போடப் போடுகின்றன. பொருள் சார்ந்த இன்றைய உலகில் சரித்திரத்தை படிக்கும் ஆர்வம் கொண்டவர்கள் குறைகின்றனர். எந்த நாடு தன் சரித்திரத்தை காக்கிறதோ, எந்த நாட்டு மக்கள் சரித்திரத்தை மறக்காமல் அதன் பாடங்களை மனதில் பதிந்துக் கொள்கிறார்களோ. அவர்களுக்கு அழிவே இல்லை. அத்தகைய மக்கள் சாம்பலில் இருந்து உயிர்தெழும் பிணிக்ஸ் பறவைகளாய் மீண்டும் மீண்டும் உயிர்த்து எழுவார்கள். யூதர்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணம். தங்கள் சரித்திரத்தை மறந்து தரம் குறைந்து திரிபவர்கள் முன்னேறுவது கடிணம். இந்தியர்கள் அதற்கு நல்ல உதாரணம். அதனால்தான் இத்தனை வளங்கள் இருந்தும் இந்த நாடு தன்னுடைய சக்திக்கு ஏற்ப இன்னும் வளர்ச்சி பெறவில்லை.
Thursday 4 April 2013
பிளந்து விட்டார்கள் பாரதத்தை, ஆனால், பிளக்க முடியுமா நம் தர்மத்தை ? பாகம் 1
முகநூலில் Enlightened Master அவர்கள் எழுதிய அற்புதமான தொடர். என் வலைப்பூவில் வெளியிடுவதில் பெருமிதமே.
நம் தேசத்தையும் கலாசாரத்தையும் பிரித்து ஒற்றுமையைப் பிளக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியம் செய்த சதிகளும் அதற்குப் பலியான நம் முன்னோர்களின் அறியாமையையும் ஆராய்ந்து நாம் விழிப்படைய ஏதுவாக விளக்கங்கள் தரும் வியாசம் இது,.
Saturday 2 March 2013
நயம் ஆன்மீகத்தால் செய்யப்பட்ட சுத்தமான பிரச்சாரம் (அல்ல)
இன்று காலை 10 மணிக்கு வழக்கமான மின்வெட்டு துவங்கியது. 2 மணி நேரங்கள் மின்சாரமிருக்காது. வாசற் கதவைத் திறந்து வைத்து ஒரு நாற்க்காலி போட்டு அமர்ந்துகொண்டேன். சமீபத்தில் வாங்கிய "Grit Guts & Gumption" என்ற புத்தகத்தைப் படிக்க அமர்ந்தேன். பாரத ஸ்டேட் வங்கியில் மாற்றங்களைக் கொண்டு வந்து வெற்றிகரமாகச் செயல்படுத்தியது குறித்த புத்தகம். ஒரு பக்கம் கூடப் படிக்கவில்லை வாசலில் நிழலாடியது.
Saturday 23 February 2013
விசுவரூபம் - சாமானியனின் விமர்சனப் பார்வை.
கதை:
விஸாம் என்ற இந்திய இராணுவ வீரனை தாலிபான் - அல் காயிதா நடவடிக்கைகளைக் கண்காணிக்க சிஐஏ உதவியுடன் ஆஃபக்னிஸ்தான் அனுப்பி வைக்கிறது இந்திய உளவு அமைப்பு ரா. அங்கே அவர் பல தகவல்களை உளவறிந்து அனுப்புகிறார். ஆனால் அவர் முல்லா உமரால் அடையாளம் காணப்பட்டதும் விஸ்வநாத் என்ற ஹிந்துவாகச் சித்தரித்து நியூயார்க்கில் குடியமர்த்துகிறார்கள். அங்கும் தாலிபான் - அல்காயிதாவை அவர் உளவு பார்க்கிறார். அங்கே நியூயார்க்கில் அதே முல்லா உமர் கும்பல் வைக்கும் அணுகுண்டை புற்றுநோயியல் அணுசக்தி ஆராய்ச்சியாளரான தன் மனைவியின் உதவியுடன் செயலிழக்கச் செய்து உலகைக் காப்பாற்றுகிறார்.

Thursday 21 February 2013
முள்ளிவாய்க்கால்: இரத்தக் கால்வாய்?
எனக்கு விடுதலைப் புலிகள் என்ற தீவிரவாத இயக்கத்தின் மீது எள்ளளவும் மரியாதை கிடையாது. விடுதலைப் போராட்டத்திற்காகத் துவக்கப்பட்ட இயக்கம் ஒரு தனிமனிதனின் பேராசைகளுக்கு முக்கியத்துவமளித்தது. இன விடுதலைக்காகக் களம் கண்ட மாத்தையா உள்ளிட்ட பல முக்கியத் தளபதிகளைக் கொன்ற வரலாறுடையவர்கள் விடுதலைப் புலிகள். இந்த இயக்கம் ஆதரிக்கத் தக்கதன்று. அமிர்தலிங்கம் தொடங்கி நீலன் திருச்செல்வம் வரை இவர்களுக்கு இணக்கம் காட்டாத தமிழர்களைக் கொன்று போட்டதில் விடுதலைப் புலிகள் செய்த குற்றங்கள் ஏராளம். இவர்களை நம்பிய ஈழத்து மக்கள் பரிதாபத்துக்குரியவர்கள். அவர்களுக்கு நல்லதோர் தலைவன் இன்று வரை கிட்டவில்லை.
Tuesday 19 February 2013
அஃப்சல் குரு - மெத்தனமிக்க அரசும் கெட்ட அரசியலும்
தமிழ்தாமரையில் வெளிவந்த என் கட்டுரை இது.
கடந்த 2001ஆம் ஆண்டு நமது பாராளுமன்றத்தின் மீது லஷ்கர் ஏ தய்யபா மற்றும் ஜெய்ஷ் ஏ மொகம்மது ஆகிய ஜிஹாதி அமைப்புகள் கொலை வெறித்தாக்குதல் நடத்தின. தாக்குதலுக்கு வந்தவர்களை முதலில் அடையாளம் கண்டவர் கமலேஷ் குமாரி என்ற பாராளுமன்றக் காவலர்.
இவர் உஷார்படுத்தியதில் நம் காவல் படையினர் பதிலடி கொடுக்கத் தொடங்கினர். இந்தப் பெண் அந்தத் தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்தார். கமலேஷ் குமாரி சுட்டதில் தற்கொலைப் படையினரில் ஒருவனது உடம்பில் இருந்த குண்டு வெடித்தது. அந்தப் பெண் காவலர் உட்பட 7 காவலர்கள் கொல்லப்பட்டனர். 18 பேர் காயமடைந்தனர். ஜிஹாதிகளில் இறந்த 5 பேர் இன்னும் தெளிவாக அடையாளம் காணப்படவில்லை.

Saturday 16 February 2013
டில்லி கற்பழிப்பும் கும்பமேளாக் கோடிகளும்!
நண்பர் பால.கௌதமன் எழுதிய கட்டுரை. இங்கே வெளியிடுகிறேன்....
இன்று காதலர் தினம்(பிப்ரவரி 14, 2013)! விதவிதமான கொண்டாட்டங்கள்!சில நகரங்களில் பூங்காக்கள்(park) இன்று மூடப்பட்டுள்ளது! இதெல்லாம் ஒரு புறம் இருக்க, இன்று நூறு கோடியின் எழுச்சி (one billion rising) என்று ஈவ் என்ஸ்லெர் என்ற அமெரிக்க பெண்மணியின் அழைப்பை ஏற்று, பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சம நீதி கோரி உலகம் முழுவதும் நூறு கோடி பெண்கள் 202 நாடுகளில் வீதிக்கு வரப்போகிறார்களாம்! இந்தப் பெண்மணியை இந்த அறிவிப்பை செய்யத் தூண்டியது என்ன?
“பலவந்தத்தின் மூலம், ஒத்துழைப்பில்லாமல் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டால், பெரும்பாலும் அந்தப் பெண் கர்பமாவதில்லை” என்று அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் திரு. டாட் அக்கின் அவர்கள் பொதுக்கூட்டத்தில் பேசியதே!
Saturday 9 February 2013
காந்திய அஹிம்சை - நிம்மதிக்கான வழி அல்ல
காந்திய அஹிம்சை என்று நாட்டில் இன்று போதிக்கப்படுவதும் அறிவுறுத்தப்படுவதும் துன்பமிகக் கொண்டு உழல்வதே சாலச்சிறந்த மனித வாழ்வு என்றும், குற்றமிழைத்தவனை மீண்டும் மீண்டும் மன்னித்துக் கொண்டேயிருப்பதே சாலச்சிறந்த மனிதத்தன்மை என்பதுமே. சுஹ்ரவர்தி முதலாக இப்படிப் பலரை மன்னித்தே இந்த தேசம் உருப்படாமல் போய்விட்டது. இந்த மீண்டும் மீண்டும் மன்னிப்பு என்ற பெரும்போக்கை முன் மற்றும் வழிமொழிவோரை காந்தியார் ஒரு போதும் மன்னிக்கமாட்டார் என்பது என் எண்ணம்.
Friday 8 February 2013
டோண்டு ஐயாவுடனான என் நேரங்கள்.
டோண்டு ராகவன் அவர்களின் மறைவு ஏற்படுத்திய சோகத்தில் இருந்து நான் முழுதும் மீளவில்லை. 6/2/13 அன்று சேதி கேட்டபின் அலுவலகத்தில் விட்டத்தை விழித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். மீட்டிங் என்றதும் வழக்கத்தை விட இரட்டிப்பாக 6 கருங்குளம்பியங்களை (Black Coffee) 2 மணி நேரத்தில் அருந்தினேன்.
Wednesday 6 February 2013
டோண்டு ராகவன் இறைவனடி சேர்ந்தார்.
டோண்டு என்று இணைய உலகில் குறிப்பாகத் தமிழ்ப் பதிவுலகில் பிரபலமான நரசிம்மன் ராகவன் இன்று நம்மிடையே இல்லை. சூரியன் உதிப்பதோ மறைவதோ இல்லை என்ற உண்மையைக் கேள்விக்குறியோடு பார்ப்பது போலவே மனம் இந்த உண்மையையும் நம்ப மறுக்கிறது. பொறியாளார், பன்மொழி வித்தகர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், நூலகள் பல வாசித்தவர், உலக அனுபவம் மிக்கவர். அந்த அனுபவங்களைப் பிறரும் பயன் பெறத்தரும் வகையில் பதிவுகள் எழுதியவர். நல்ல நண்பர், சிறந்த ஆலோசகர், நேர்மையான வழிகாட்டி.
Saturday 2 February 2013
உலகநாயகன் ? ஒரு சாமானியனின் பார்வை
பார்த்தசாரதி என்கிற கமலஹாசன். 58 வயது. தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு கலைஞன் (ர் போட்டால் பாசத்தலைவனுக்குப் பாராட்டுவிழா நினைவுக்கு வந்து தொலைக்கும்). நல்ல நடிகர். சினிமா தொழில்நுட்பம் குறித்து அவருடைய அறிவு சிறப்பானது. சமீப காலமாக ஹாலிவுட் என்றறியப்படும் அமெரிக்கத் திரையுலகின் சிறந்த படங்களைத் தழுவிப் படமெடுத்த்தார். அவர்களது மேக்கப், கேமரா உள்ளிட்ட பல தொழில்நுட்ப விவரங்களைக் கற்றறிந்தோ அல்லது ஆள்கொணார்ந்தோ இங்கே அறிமுகப்படுத்தியவர்,
Thursday 31 January 2013
தீவிரவாத நிறப்பிரிகை
இது தமிழ்தாமரை இதழில் வெளிவந்த என் கட்டுரை.
நமது மாண்புமிகு உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே சில
தினங்களுக்கு முன் நடந்த காங்கிரசு சிந்தனைக் கூட்டத்தில் பாஜக ஆர்எஸ்எஸ்
போன்ற அமைப்புகள் தொண்டர்களிடையே தீவிரவாதத்தை வளர்க்கின்றன என்று
உளறினார். அந்த உளறல் குறித்த கருத்துக்கள், வேதனைகள், கவலைகளை கருத்தில்
கொள்ளுமுகமாக சங்க பரிவார அமைப்புகள் போராட்டம், கண்டனம் என்று
ஆரம்பித்தார்கள்.
Wednesday 30 January 2013
விஸ்வரூபம் எடுப்பது தமிழன் ஆட்சியா தாலிபான் ஆட்சியா? - பால கௌதமன்
நண்பர் பாலகௌதமன் எழுதிய கட்டுரை இது. தினமணி வலைப்பூ பகுதியில் வெளிவந்தது.
வரலாற்றிலிருந்து
பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்
என்பது நியதி.
ஆனால்
நாம் கற்றுக் கொள்ளவும் இல்லை;
நம்மால்
மறந்துவிடவும் முடியவில்லை.
அதே
பிரச்சனைதான் மீண்டும்
மீண்டும் வருகிறது.
படித்தவுடன்
சோடா பாட்டில் போல் சீறுகிறோம்.
பின்னர்
காலி பாட்டில் போல் அமிழ்ந்து
விடுகிறோம்.
Wednesday 16 January 2013
25 கோடிக்கும் 100 கோடிக்கும் சோடி போட்டுக்கிருவோமா?
ஐதராபாத் வில்லன் அக்பருதீன் ஒவைசி பேசிய வெறுப்புப் பேச்சின் இந்த மொழிபெயர்ப்பை முதலில் நான் வெளியிட விரும்பவில்லை. MIM கட்சியின் வரலாறு கொள்கை ஆகியவற்றை சற்றே விரிவாக அலசி இந்தக் கும்பலின் இந்து வெறுப்புக்கான காரணத்தை தமிழ்தாமரை இணைய இதழின் வெறுப்பும் பேச்சும் என்ற கட்டுரையில் சொல்லியிருந்தேன்.
இதுதான் இவர்கள். உஷாராக இருங்கள் பந்தங்களே என்று எச்சரிக்கை செய்வதோடு நிறுத்திக் கொள்ளலாம், வெறுப்பு உமிழும் விஷப் பேச்சை மொழிபெயர்த்து வெளியிட வேண்டாம் என்றே எண்ணியிருந்தேன். ஆனால் முகநூலில் ராஜீவ் மல்ஹோத்ரா அவர்கள் ஒரு படத்தைப் பகிர்ந்திருந்தார். அதைப் பார்த்ததும் அடங்கமாட்டார்கள் இந்தப் பதர்கள் என்று தோன்றியது. வெறுப்பின் உச்சத்தைக் காட்டிய விஷப்பேச்சை மொழிபெயர்த்து வெளியிடும் முடிவுடன் இறங்கிவிட்டேன்.

Friday 11 January 2013
தே.சி.க - இதென்ன புதுக் கழகம்!
கழகம் என்ற பெயர் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. தமிழக மக்களின் சிந்தனையை மழுங்கடித்த ஈவெரா துவக்கிய திராவிடர் கழகம். அந்த மழுங்கிய சிந்தனையில் தொடங்கி மானாட மயிலாட நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகம். கணக்குக் கேட்டுப் பிரிந்து கணக்கற்ற ஓட்டுக்களில் வென்று கணக்காகப் பதின்மூன்றாண்டுகள் கருணாநிதியை நிரந்தர எதிர்க்கட்சித் தலைவராக முடக்கிவைத்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
Friday 4 January 2013
வேதிக்காயடிப்பு வேலைக்கு ஆகாது
நாட்டில் தினவெடுத்த தடியர்கள் மிகவும் அதிகமாகியுள்ளனரோ என்று ஐயப்பாடு எழுந்துள்ளது. இல்லை பலருக்கும் தினவு அதிகமாகிவிட்டது என்பதாக அரசு எந்திரம் நினைக்கிறது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துவிட்டன என்கிறார்கள். கிராமங்களில் பேசும் போது ”இதெல்லாம் முந்திக்காலத்தில இல்லாததா. நம்ம புள்ளைகள நாம பாத்துக்கிட்டோம். தடிப்பசங்க பொத்திகிட்டு போனாய்ங்க. இப்ப அது இல்லை” என்கின்றனர்.
Thursday 3 January 2013
மின் பற்றாக்குறை: யாரும் யோக்கியரில்லை!
கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஒரு சொற்பொழிவில் சொன்னார்..."தொட்டால் ஷாக்கடிக்கும் மின்சாரம்... தொடாமலே ஷாக்கடிக்கும் சம்சாரம்" என்று. இன்று கம்பியைப் பிடித்துக் கொண்டு தொங்கினாலும் ஷாக்கடிக்காத வகையில் இருக்கிறது மின்சாரத்தின் நிலை. இருந்தால் தானே.... எங்கள் ஊரில் 10 மணி நேரம் மின்சாரமின்றிப் போகிறது. இன்வெர்டர் வாங்கி வைக்கலாமே என்றால் அது சார்ஜ் ஆக மின்சாரம் மரத்திலா காய்க்கிறது என்றார் என் தந்தை. குறைந்தது 4 மணி நேரம் சார்ஜ் ஆகவேண்டும். பல ஊர்களில் 4 மணி நேரம் மின்சாரம் தொடர்ச்சியாக இருப்பது கிடையாது.
Wednesday 2 January 2013
மதம் பரப்ப வாரீர்: விதிகள் விலக்கி வலைவிரிக்கும் அரசு
ஒரு நாட்டுக்கு அந்த நாட்டைச் சாராத ஒருவர் போகவேண்டுமென்றால் நுழைவாணை எனப்படும் விசா தேவை. சொந்த நாட்டில் அடையாளப்படுத்தித் தரப்படும் கடவுச்சீட்டு எனும் பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே நுழைவாணை தரப்படும். இல்லையென்றால் அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு மட்டும் சென்று வர அனுமதி பெறலாம்.
Subscribe to:
Posts (Atom)