ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Monday 27 May 2013

பெரிய புராணச் சிந்தனைச் சொற்பொழிவு

நாகர்கோவிலைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் சார்பில் சென்னை அசோக் நகர் ஆஞ்சனேயர் கோவிலில் பெரிய புராணச் சிந்தனைச் சொற்பொழிவு நடை பெற்றது. சொற்பொழிவாற்றியவர் தமிழாகரர். பேராசிரியர். முனைவர். சாமி.தியாகராசன் அவர்கள். இவர் மூவர் முதலிகள் முற்றம், திராவிடச் சான்றோர் பேரவை ஆகியவற்றின் நிறுவனரும் தலைவரும் ஆவார். பெரிய புராணம் ஒரு வாழ்வியல் என்பதை நிறுவும் ஆய்வு, பக்தி, மொழி, ஆகியவை கலந்த ஒரு உன்னதப் பேருரைத் தொடர் ஒன்றை 14 நாட்களுக்கு நிகழ்த்தினார் அவர்.


வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் ஆகிய அடிப்படைகளில் துவக்கி, தொண்டு என்பது குறித்த தெளிவான விளக்கத்துடன் வேகமெடுத்தது சொற்பொழிவுத் தொடர். சிவ பெருமானின் பெருமைகள், பெரிய புராணத்தின் தோற்றம், தடுத்தாட்கொண்ட தன்மை ஆகியன குறித்து விரிவாக உரையாற்றினார் பேராசிரியர்.

 நிகழ்ச்சியின் துவக்க நாளன்று விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் பெரியவர் வேதாந்தம்ஜி அவர்கள் வந்திருந்து சொற்பொழிவைக் கேட்டு மகிழ்ந்தார்.


இது முற்றிலும் ஆன்மீகம் சார்ந்த சொற்பொழிவாக இல்லை. சமீபகாலமாக தமிழ் என்பது இறையியலுடன் சம்பந்தப்பட்டதல்ல என்பது போல திராவிட அரசியல் வட்டத்தைச் சேர்ந்தோர் செய்து வரும் விஷமப் பிரச்சாரங்களுக்கு தக்க பதிலடி தரும் வகையிலும் பல விஷயங்களைச் சொல்லி வந்தார். சத்து சிறிதுமற்ற சில்மிஷக் கேள்விகளுக்குச் சிரிப்புடன் ஓங்கியறையும் பதில்கள் பல இவரது பேச்சில் விரவிக் கிடக்கின்றன.


கேளாரும் வேட்ப மொழிந்த பேராசிரியரின் பேச்சு எக்காலத்திலும் எல்லோருக்கும் கிடைத்திட வேண்டும் என்ற எண்ணத்தில் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தார்  இந்தத் தொடர் சொற் பொழிவை ஒலிக்கோப்புகளாகத் தங்களின் இணைய தளத்திலே இட்டு வைத்த்திருக்கிறார்கள்.


தமிழ் அன்பர்களும் தேசிய ஆர்வலர்களும் கேட்டுப் பயன் பெற்று மகிழுமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறது. மேலும் மாதந்தோறும் ஐந்து நாட்கள் இவரது பெரிய புராணச் சிந்தனைச் சொற்பொழிவு நடத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது. காரணாம் 14 நாட்களில் சொல்லி முடிக்கப்படுமளவு சிறிய  விஷயமல்ல பெரிய புராணம்.

No comments: