ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Monday 9 April 2012

புதிய த​லைமு​றை 'தமிழன்' விருதுகள் குறித்த செல்​லையா முத்துசாமியின் வயிற்றெரிச்சல்

செல்லையா முத்துசாமி என்கிற "பிரபல பதிவர்" புதிய தலைமுறை தமிழன் விருதுகளில் பார்ப்பானுக்கு விருதுகள் வழங்கி விட்டார்களே என  வயிறெரிந்து பொரிந்து தள்ளியிருக்கிறார் தன் இந்தப் பதிவில். தனக்கேதும் கிடைக்கவில்லையே என்கிற ஆத்திரமும், என்ன முயன்றும் அந்தணர்கள் வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லையே என்கிற ஆற்றாமையும் தவிர இதற்கு வேறு காரணங்கள் தேடினாலும் கிடைக்கவில்லை.