ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Thursday 24 October 2013

இராம ஜென்ம பூமி - தேர்தல் ஆயுதமல்ல தேசத்தின் தேவை.

சமீபத்தில் சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒரு விவாதம் நடந்தது. இராம ஜென்ம பூமியில் இராமருக்கு ஆலயம் அமைப்பது குறித்துப் பேசினார்கள். இதில் விவாதிக்க ஏதுமில்லை என்பதே உண்மை. ஆனால் விவாதிப்போம் என்று கூடிப் பேசுகிறார்கள். காரணம் பாஜக மூத்த தலைவர் முரளி மனோஹர் ஜோஷி அவர்கள் “இராமர் கோவில், இராமர் பாலம், பசுப் பாதுகாப்பு, கங்கை சுத்தப்படுத்துதல், 370ஆவது பிரிவை நீக்குதல், பொது உரிமையியல் சட்டம் ஆகியன பாஜகவின் செயல்திட்டத்தின் பிரிக்கவியலாத அம்சங்கள்” என்று கூறியதே.



அயோத்தியில் இராமர் பிறந்த இடத்தில் தான் மசூதி என்று கட்டப்பட்ட கும்மட்டம் ஒன்று கிட்டத்தட்ட 485 ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது, அங்கே இராமர் கோவிலை இடித்துவிட்டு 1525ஆம் ஆண்டு மீர் பாகி என்ற பாபரின் தளபதி மசூதி ஒன்றைக் கட்டினான். அதற்கு பாபரின் பெயரால் பாப்ரி மசூதி என்று பெயரிட்டான்.

1767ல் ஜோசப் டிபெந்தாலர் என்கிற ஆஸ்திரிய நாட்டுப் பாதிரியார் ஒரு மசூதியில் இந்துக்கள் ஸ்ரீராம நவமி விழாவைக் கொண்டாடுகிறார்கள் என்று குறிப்பெழுதிவைத்திருக்கிறார். 1788ல் டிபெந்தாலரின் குறிப்புகள் பாரீஸ் நகரில் வெளியிடப்பட்டன. அதுதான் பாப்ரி மசூதி என்றறியப்பட்ட கும்மட்டமே இராம ஜென்ம பூமி என்பது குறித்த அச்சிடப்பட்ட முதல் வெளிநாட்டார் குறிப்பு.

”ராம்கோட் என்ற கோட்டையை ஔரங்கசீப் இடித்துவிட்டு அங்கே மூன்று கும்மட்டங்களை உடைய மகமதிய வழிபாட்டுத் தலத்தைக் கட்டினான். அதை ஹிந்துக்கள் 1707ல் ஔரங்கசீப் இறந்த பிறகு போரிட்டுப் பிடித்து மீண்டும் வழிபாடு நடத்தினர். ஜஹாங்கீர் காலத்தில் ஒரு முறை இவ்வாறு போரிட்டு ராம்கோட் கோட்டையைப் பிடித்து ஹிந்துக்கள் இராமரை வழிபட்ட வரலாறு இருக்கிறது. இது போல முன்காலங்களில் பல முறை இராமர் பிறந்த இடத்தை ஹிந்துக்கள் போரிட்டுப் பிடித்து வழிபடுவதும் இசுலாமியர்கள் மீண்டும் அவ்விடங்களைப் பிடிப்பதும் நடந்திருக்கிறது.” என்ற இந்தக் குறிப்பு முழுவதும் அயோத்தி இராமஜென்மபூமி தீர்ப்பில் இருக்கிறது.

Ram JanmBhoomi Babri Masjid Judgement – Annexure IV – Page 129 to 162, pp. 129–162, retrieved 15 April 2011

1858ல் பாப்ரி மசூதியின் தொழுகை அழைப்புப் பாடகர் ஆங்கிலேய அரசிடம் கொடுத்த மனுவில் நூற்றுக்கணக்கான வருடங்களாக ஹிந்துக்கள் இங்கே வழிபாடு நடத்திவந்திருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

The Truth of Babri Mosque. IUniverse.com. 2012. p. 184. ISBN 1475942893.

ஆங்கிலேய அரசு அயோத்தி ஹிந்துக்களின் முக்கியத் தலம் என்று வரையறுத்தது. அது மக்கள் தொகை அடிப்படையில் ஹிந்துக்கள் 66.4% பேர் அயோத்தியிலும் ஃபைசாபாத் மாவட்டத்தில் 60%க்கும் அதிகமாகவும் இருப்பதால் அல்ல. இராமஜென்மபூமி ஹிந்துக்களின் புனிதபூமி என்பதால் மட்டுமே ஆங்கிலேய அரசு இந்த முடிவுக்கு வந்தது.
Islam, Arshad. "Babri Mosque: A Historic Bone Of Contention." Muslim World 97.2 (2007): 259-286. Academic Search Elite. Web. 23 September 2012.

ஷேக் முகமது அசாமத் அலி ககோராவி நாமி (1811–1893) என்கிற இஸ்லாமிய அறிஞர் எழுதியிருக்கிறார், ”துவக்கத்திலிருந்தே இஸ்லாமிய அரசர்கள் பின்பற்றிய விதி காஃபிர்களின் பகுதிகளில் மசூதிகள், மதரசாக்கள் கட்டுவது, இஸ்லாமைப் பரப்புவது, இஸ்லாம் அல்லாத பழக்கங்களை வழக்கொழிப்பது என்பதே ஆகும். அவர்கள் மதுரா, பிருந்தாவன் ஆகிய இடங்களில் இஸ்லாம் அல்லாத குப்பைகளைச் சுத்தமாக்கினர்.

பாப்ரி மசூதி சையத் மூசா அஷிகன் என்பவரது வழிகாட்டுதலில் ஜன்மஸ்தான் கோவிலின் மீது கட்டப்பட்டது. அப்பகுதி ஹிந்துக்களின் சிறந்த வழிபாட்டுக்கு உரியதாகவும் இராமனின் தந்தையின் தலைநகரமாகவும் இருந்தது. ஹிந்துக்கள் இதை சீதையின் சமையற்கூடம் என்று அழைத்தனர்.

ஃபசானா இ இப்ராத் என்ற நூலை எழுதிய மிர்சா ரஜப் அலி பெக் சுரூர் (1787–1867) என்பவர் அந்நூலில் குறிப்பிடுகிறார் “பாபரின் ஆட்சிக்காலத்தில் சீதையின் சமையற்கூடம் என்று அறியப்பட்ட பகுதியில் பெரிய மசூதி ஒன்று கட்டப்பட்டது. அனுமான் கார்ஹியில் ஔரங்கசீப் ஒரு மசூதி கட்டினார். அவர் காலத்துக்குப் பிறகு பைராகிகள் அதை உடைத்து மீண்டும் கோவிலை எழுப்பினார்கள்.”

Shykh Azamat Ali Kakorawi Nami, Muraqqah-i Khusrawi or Tarikh-i Avadh cited by Harsh Narain The Ayodhya Temple Mosque Dispute: Focus on Muslim Sources, 1993, New Delhi, Penman Publications. ISBN 81-85504-16-4

1885ல் மஹந்த் ரகுபர் ராம் அவர்கள் மசூதி என்று சொல்லப்படும் கட்டிடத்துக்கு வெளியே இராமருக்குக் கோவில் கட்டவேண்டும் என்று ஆங்கிலேய அரசுக்கு மனு அளித்தார். ஆனால் அன்றைய ஃபைசாபாத் மாவட்ட நீதிபதி கர்னல் எஃப்.ஈ.ஏ.கேமியர் 1886ல் இடத்தின் மீதான மனுதாரரின் உரிமையை ஒப்புக் கொண்டபோதும் கால்ந்தாழ்ந்த நிவாரணக் கோரிக்கை என்று மனுவை நிராகரித்தார்.

”சம்பந்தப்பட்ட இடத்தைப் பார்த்தேன். மன்ன்ர் பாபர் கட்டிய மசூதி அங்கே இருக்கிறது. ஹிந்துக்கள் புனிதமாக மதிக்கும் இடத்தில் ஒரு மசூதி இருப்பது துரதிருஷ்டவசமானது. ஆனால் இது நடந்து 365 ஆண்டுகள் ஆகிவிட்டபடியால் இப்போது குறைதீர்ப்பது என்பது காலந்தாழ்ந்த செயல்.”  ஃபைசாபாத் மாவட்ட நீதிபதி கர்னல் எஃப்.ஈ.ஏ.கேமியர் அவர்களின் தீர்ப்பு.

Gumaste, Vivek (17 September 2010). "Can court verdict resolve Ayodhya dispute?". Rediff News.

1948ல் இந்திய அரசு அயோத்தி நகருக்கு 200 கெஜதூரத்துக்கு முஸ்லிம்கள் குடியிருப்பதைத் தடை செய்தது. சம்பந்தப்பட்ட கட்டிடம் பூட்டப்பட்டு யாருக்கும் அனுமதி இல்லாமல் இருந்தது. ஆனால் ஹிந்துக்கள் ஒரு சிறு கதவின் வழியே உள்ளே அனுமதிக்கப்பட்டு வழிபாடு செய்தனர். 1989ல் அலாகாபாத் உயர்நீதிமன்றம் இக்கட்டிடத்தைத் திறக்க உத்தரவிட்டது. ஹிந்துக்களின் வழிபாடு அனுமதிக்கப்பட்டது. ஹிந்துக்கள் கட்டிடத்தில் மாற்றம் செய்து கோவிலாக்க வேண்டி அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர். அதனால் கலவரச் சூழல் ஏற்பட்டு விஷயம் மீண்டும் நீதிமன்றத்துக்குப் போனது.

நிற்க. இந்த வரலாற்று உண்மைகளை விடுத்து வில்லியம் என்ற ஆங்கிலேயச் சிப்பாய் எழுதியதாக ஒரு கருத்தை ஜவாஹிருல்லா முன்வைத்தார். ஹனுமன் கார்ஹி கோவில் பூசாரி உதவியில்லாமல் ஆங்கிலேயப்படை வென்றிருக்காது என்று அந்தச் சிப்பாய் கூறினாராம். ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட முஸ்லிம் நவாப்புகளுக்கு எதிராக ஆங்கிலேயருக்கு ஹிந்துக்கள் உதவினர் என்பது போல ஒரு கருத்தைச் சொன்னார். ஆனால் அதற்கு எவ்வித ஆதாரமும் தரவில்லை. ஆதாரம் தந்தபின் அது குறித்து விவாதிக்கலாம்.




1970, 1992, 2003 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகள் ஒரு மிகப்பெரிய ஹிந்துக் கட்டிடத்தின் மேலே மசூதி கட்டப்பட்டதை உறுதிப்படுத்தியது. ஆனால் அகழ்வாராய்ச்சி முடிவுகள் வரும் முன்பே ஆர்.எஸ். சர்மா என்ற இடதுசாரி வரலாற்று அறிஞர் அங்கே கோவில் எதுவும் இல்லை. தவறான கண்ணோட்டத்தில் மசூதி இடிக்கப்பட்டது. அயோத்தி ஒரு ஹிந்து புனிதத் தலமே அல்ல என்று அறிக்கை விட்டார். இவரது முடிபுகள் அராய்ச்சி முடிவுகளுக்கு நேர் எதிராக இருந்தது.

உயர்நீதிமன்றம் இவரையும் இவருடன் அறிக்கைவிட்ட பிற வரலாற்று அறிஞர்களையும் கண்டித்தது. மூன்று நீதிபதிகளில் ஒருவரான நீதியரசர் சுதீர் அகர்வால் தனது நீண்ட குறுக்கு விசாரணையில் இந்தக் குழுவினரின் சாட்சியத்தைப் பதிவு செய்தார். தீர்ப்பில் இவர்களைக் கண்டித்துக் கூறியது இவர்களை வரலாற்று அறிஞர்கள் என்று ஏற்பதையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. ஒருவர் மற்றவரிடம் ஆராய்ச்சி மாணவராக இருந்தவர். இன்னொருவர் மற்றவர் ஆராய்ச்சிக் கட்டுரை எழுத உதவியவர். இவர்களில் சிலர் சேர்ந்து கூட்டாக சில கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். குறுக்கு விசாரணையில் இவர்கள் தங்கள் கருத்துக்கு வலுச்சேர்க்கும் எந்த ஆதாரத்தையும் தரவில்லை.

மாறாக சாட்சியம் அளித்தவர்களில் ஒருவரான சுவிரா ஜெய்ஸ்வால் தான் செய்தித்தாள்களில் படித்தவை மற்றும் பிறரிடம் கேட்டறிந்த செய்திகளைக் கொண்டே அறிக்கை எழுதியதாகக் கூறினார்.

மற்றொரு சாட்சியான சுப்ரியா வர்மா நீதிமன்றத்தின் அகழ்வாராய்ச்சி உத்தரவுக்கு அடிப்படையான பூமியைத் துளைத்து ஆராயும் ராடார் ஆய்வறிக்கையைப் படிக்கவே இல்லை. இவர் ஷெரின் ரத்னாகர் என்ற மற்றொரு அறிஞரின் ஆராய்ச்சி மாணவர். தம் ஆசிரியருக்கு உதவும் வகையில் அறிக்கை எழுதியதாக இவர் சொல்கிறார்.

சுப்ரியா வர்மாவும் மற்றொரு அறிஞர் ஜெயஸ்ரீ மேன்னும் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட தூண்கள் இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம் தோண்டியபோது வைக்கப்பட்டவை என்றார். ஆனால் இவர் தோண்டும் பணி நடந்த போது களத்திலேயே இல்லை.

ஷெரின் ரத்னாகர் என்ற அறிஞர் களத்தில் இறங்கி வரலாற்றாய்வு செய்ததே இல்லையாம். இவர் ஒரு தொல்லியல் நிபுணர் என்பதற்குச் சான்று வேறொரு அறிஞர் என்று வந்த பேராசிரியர் மண்டல் எழுதிய ஒரு புத்தகத்துக்கு அறிமுக உரை எழுதிக் கொடுத்திருக்கிறார்.

சூரஜ் பான் என்பவர் தான் ஒரு தொல்லியல் நிபுணர் என்று சாட்சியம் அளிக்கவந்துள்ளார். ஆனால் இவர் வரலாற்று அறிஞர் அல்ல என்றும் இடைக்கால வரலாறு பற்றிய தெள்ளிய அறிவு இல்லாதவர் என்றும் முஸ்லிம்களுக்காகப் பரிந்து பேசிய ஷிரின் முசாவி எனும் அறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.

நீதியரசர் அகர்வால் தனது தீர்ப்பில்,”முன்பின் முரணாக இவர்கள் அளித்த விளக்கங்களும் அறிக்கைகளும் தம்மைத் திடுக்கிடச் செய்ததாகவும், இவர்களது அறிக்கைகள் பிரச்சினையைத் தீர்க்க உதவுவதற்கு பதிலாக அதை மேலும் சிக்கலாக்குவதற்கே முனைவதாகவும்” கூறினார். மேலும் தீர்ப்பில்,”நிபுணர் என்று சொல்பவர்கள் அறிக்கை அளித்துவிட்டு அறிக்கையின் நம்பகத்தன்மைக்குப் பொறுப்பேற்காது போவது நியாமல்லாத செயல். தான் படித்தோ, ஆராய்ந்தோ அறியாமல் பிறர் சொல்வதைக் கேட்டுச் சொன்னேன் என்று சொல்வோர் எப்படி நிபுணர்கள் ஆவர்?” என்றும் கேள்வி எழுப்பினார்.

இத்தகைய ஆராய்ச்சி நிபுணர்களின் கருத்தை முன்வைத்தே கம்யுனிஸ்டு வீரபாண்டியன் மேற்குறிப்பிட்ட விவாதத்தில் பேசினார். இந்த நிபுணர்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் தடம்புரண்டு போனது பற்றி யாரும் வாய்திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மீராபாய் ராம பக்தை என்று அவர் குறிப்பிட்ட மடத்தனத்தையும் யாரும் மறுக்காதது வினோதமானது.

"How Allahabad HC exposed 'experts' espousing Masjid cause". Times of India
"Evidence of temple found:ASI".  The Triubune.
"Ancient Temple Found Beneath Disputed Mosque".  About.com.










இப்போது ராமஜென்மபூமி வழக்கு நீதிமன்றத்தில் இடம் யாருக்குச் சொந்தம் என்ற கேள்வியோடு தான் இருக்கிறது. ஜன்மஸ்தான் என்று அறியப்படும் இடம் ராமர் பிறந்த இடமே என்பது ஐயம் திரிபற நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஜன்மஸ்தான் மற்றும் அது சார்ந்த இடங்கள் ராமஜென்மபூமி என்று முடிவானபின், அங்கே இருந்த மீர் பாஹியால் கட்டப்பட்ட கட்டிடம் கோவிலை இடித்துக் கட்டப்பட்டது என்று நிரூபணம் ஆனபின் ஏன் சம்பந்தமில்லாமல் அங்கே முஸ்லிம்களுக்கு ஒரு பகுதியை ஒதுக்கவேண்டும் என்பதே நீதிமன்றத்தில் உள்ள கேள்வி.

பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி அவர்கள் “என் தேசம் என் வாழ்க்கை”  என்ற தன் வாழ்க்கை வரலாற்று நூலில் சொன்னது போல “முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய சூழலில் ஒரு மெக்காவும், கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்தவ சூழலில் ஒரு வாட்டிகனும் இருக்கிற போது ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்களுக்கு ஹிந்து சூழலில் ஒரு அயோத்தி ஏன் கூடாது?

ராமஜென்மபூமி என்பது ராமஜென்மபூமிதானா என்று விவாதம் செய்வது வடிகட்டிய மடத்தனம். இதை முட்டாள்தனம் என்று சொல்லாததற்கு அரசியல்/சமூக காரணங்கள் உண்டு.

மேலதிக கருத்துக்கள்  இங்கே.

1 comment:

alayam.sraja said...

ராமருக்கு ராம ஜெம புமில் ஆலயம் எழுப்பாமல் வேறு எங்கு எழுப்புவதாம்...........விருந்தாளிகளின் வாரிசுகளுக்கெல்லாம் வாக்குக்காக அலைபவர்கள் செவி சாய்பார்கள்.....தேச பக்தர்கள் அல்ல