ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Wednesday 16 January 2013

25 கோடிக்கும் 100 கோடிக்கும் சோடி போட்டுக்கிருவோமா?

ஐதராபாத் வில்லன் அக்பருதீன் ஒவைசி பேசிய வெறுப்புப் பேச்சின் இந்த மொழிபெயர்ப்பை முதலில் நான் வெளியிட விரும்பவில்லை.  MIM கட்சியின் வரலாறு கொள்கை ஆகியவற்றை சற்றே விரிவாக அலசி இந்தக் கும்பலின் இந்து வெறுப்புக்கான காரணத்தை தமிழ்தாமரை இணைய இதழின் வெறுப்பும் பேச்சும் என்ற கட்டுரையில் சொல்லியிருந்தேன்.

இதுதான் இவர்கள். உஷாராக இருங்கள் பந்தங்களே என்று எச்சரிக்கை செய்வதோடு நிறுத்திக் கொள்ளலாம், வெறுப்பு உமிழும் விஷப் பேச்சை மொழிபெயர்த்து வெளியிட வேண்டாம் என்றே எண்ணியிருந்தேன். ஆனால் முகநூலில் ராஜீவ் மல்ஹோத்ரா அவர்கள் ஒரு படத்தைப் பகிர்ந்திருந்தார். அதைப் பார்த்ததும் அடங்கமாட்டார்கள் இந்தப் பதர்கள் என்று தோன்றியது. வெறுப்பின் உச்சத்தைக் காட்டிய விஷப்பேச்சை மொழிபெயர்த்து வெளியிடும் முடிவுடன் இறங்கிவிட்டேன்.
பாரத தேசியக் கொடியைத் தலைகீழாக பச்சை நிறம் மேலே வருமாறு அச்சிட்டு அந்தப் பச்சையில் இசுலாமியச் சின்னமான பிறைச்சந்திரன் - விண்மீன் வருவது போலச் செய்திருக்கிறார்கள் மூடப் பதர்கள். இது தேசிய அவமானம். இதைச் செய்தவர்கள் MIMன் கடல்கடந்த தோழர்களின் அமைப்பு. இதை ஆதரிக்கும் ஒவைசி சகோதரர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

இதோ அந்தப் படம்:


விஷப்பேச்சு இதோ:

இந்துஸ்தானத்தில் முஸ்லிம்களுக்கு மரியாதை இல்லை. பாதுகாப்பு இல்லை.  அஜ்மல் கசாப் என்ற சிறுவனை தூக்கில் போட்டார்கள். பாகிஸ்தானில் இருந்து வந்து இந்துஸ்தானியர்களைச் சுட்டான் என்பதே புகார். அந்தக் குழந்தை பாகிஸ்தான்காரன் என்றதும் தூக்கில் போட்டீர்களே?  நரேந்திர மோடியை எப்போது தூக்கில் போடுவீர்கள்? மோடி எப்படி இந்துஸ்தானத்தின் பிரதமர் ஆகிறார் என்று பார்த்துவிடுவோம்.

ஏ இந்துஸ்தானமே! நாங்கள் 25 கோடி முஸ்லிம்கள் இருக்கிறோம், நீ 100 கோடி பேரைக் கொண்டிருக்கிறாய். 15 நிமிடங்கள் காவல்துறையை அகற்று. யார் வலுவானவர்கள் பார்த்துவிடலாம்.

ஓராயிரம், ஒரு லட்சம் இல்லை ஒரு கோடி ஆண்மையற்றவர்கள் சேர்ந்தாலும் ஒரு பிள்ளை பிறக்க வைக்க முடியாது. இந்துக்கள் நம்மை எதுவும் செய்ய முடியாது. முஸ்லிம்கள் சகோதரர்கள் ஆனால் மட்டுமே இந்துக்களுக்கு ஆதாயம் இருக்கிறது.

முஸ்லிம்களே! பிரச்சினை வந்தால் அக்பர்பாயிடம் ஓடி வருகிறீர்கள். பிரச்சினை தீர வழி கேட்கிறீர்கள். இனிமேல் பிரச்சினை வந்தால் இதுதான் பிரச்சினை இதைத் தீர்க்க இன்னது செய்தோம். நீங்கள் சமாளித்துக் கொள்ளுங்கள் என்று என்னிடம் சொல்லுங்கள். எது வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். தடியெடுத்தவனே தண்டல்காரன். அவனுக்கே உலகம் மரியாதை தரும்.

இஸ்லாமியர்கள் இந்த நாட்டை விட்டுப் போனால் தாஜ்மஹால், குதுப் மினார், செங்கோட்டை ஆகியவற்றை உடன் எடுத்துக் கொண்டு போய்விடுவோம்.  இங்கே எஞ்சுவது அயோத்தியில் இருக்கும் ஒரு ஓட்டை உடைசலான ராமர் கோவிலும், அஜந்தா, எல்லோவிலுள்ள நிர்வாணச் சிலைகளும் மட்டுமே.

கொஞ்சம் சிந்தியுங்கள்! இந்துக்கள் இறந்தால் எரித்து காற்றோடு காற்றாகக் கலந்து விடுகிறார்கள். முஸ்லிம்கள் இறந்தால் மண்ணில் புதைக்கப்படுகிறார்கள். ஏனெனில் இந்த மண் முஸ்லிம்களுக்குச் சொந்தமானது.

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வழக்கம், ஒவ்வொரு வழிபாடு, ஒவ்வொரு விதமான இறை உருவம், ஒவ்வொரு விதமான வாழ்க்கை முறை.ராமன், லட்சுமணன், லட்சுமி, அனுமான் என்று கடவுள்கள். போதாதென்று வாரத்துக்கு ஒரு கடவுளை உற்பத்தி செய்கிறார்கள். இப்போது புதிதாக ஒரு கடவுளைக் கொண்டு வந்திருக்கிறார்கள். பாக்கியலட்சுமி என்று பெயராம். எல்லாம் வாயில் வழங்காத பெயர்கள். இவற்றை எப்படி உச்சரிப்பது? இந்த புதுக்கடவுளுக்கு சார்மினாரின் கீழே கோவிலாம். சார்மினார் மசூதியைக் குறிவைக்கிறார்கள் சங்க பரிவாரத்தினர். விடமாட்டோம்.

ஏ இந்துஸ்தானமே! முஸ்லிம்களின் கோபம் மிகக் கொடியது. அதை அக்பருதீன் ஒவைசி அணை போட்டுத் தடுக்கிறான். நான் இல்லையென்றால் இந்த முஸ்லிம்களின் கோபத்தை நீ தாங்க மாட்டாய்.

ராமர் அயோத்தியில் மூன்று இடங்களில் பிறந்ததாக மூன்று பூசாரிகள் சொல்கிறார்கள். ஹரியாணாவில் கௌசல்யாபுரம் என்ற ஊர் இருக்கிறது. ராமனை கோசலை அந்த ஊரில் தான் பெற்றாள் அது அவளது பிறந்த வீடு இருக்கும் ஊர் என்கிறார்கள் அந்த மக்கள். ஒரு ராமனை ஒரு கோசலை எத்தனை இடங்களில் போய்ப் பெற்றாள்? கேட்டால் லட்சக்கணக்கான ஆண்டு பாரம்பரியம் என்கிறார்கள்.  20 ஆண்டுகளுக்கு முன் என்ன தேதியில் என்ன கிழமை என்றே மறந்துவிடுகிறது, லட்சம் ஆண்டுகளாக ராமன் பிறந்த இடம் நேரம் எல்லாம் இவர்களுக்கு நினைவிருக்கிறதாம்.

பசு மாமிசம் தின்கிறர்கள் என்று முஸ்லிம்களைச் சாடுகிறீர்கள். பசு இவர்களுக்குத் தாயாம். சரி அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். பசு, மான் இவற்றை அப்படியே விட்டால் இந்துஸ்தானத்தில் பசுமையே இருக்காது, கால்நடைகள் முழுவதையும் மேய்ந்துவிடும்.

நாங்கள் பசு மாமிசம் சாப்பிட்டோம், இனியும் சாப்பிடுவோம். சுவையாக இருக்கும். வேண்டுமானால் இந்துக்களும் சாப்பிட்டுப் பார்க்கட்டும். சுவையான மாமிசம் சாப்பிட உங்களுக்கு கொடுப்பினை இல்லை. அதற்கு முஸ்லிம்கள் என்ன செய்வது?இந்துஸ்தானமே! இன்று என் முன்னால் ஒலிபெருக்கி இருக்கிறது. நாளை வேறெதாவது இருக்கும். அப்போது இந்த நாட்டில் ஓடும் ரத்த ஆறு போல ஆயிரம் ஆண்டு வரலாற்றில் பார்த்திருக்க முடியாது. 

இதன்  பின் ஏசு ஜீவிக்கிறார் கூட்டங்களில் செய்வது போல முஸ்லிம்களைக் காக்க அவர்களை நலமாக வைக்க அல்லாவைத் தொழுகிறார். முஸ்லிம்களின் நிலையை எண்ணி தொழுகையினூடே அழுகிறார். பின் சிரிக்கிறார். கவலைப்படவேண்டாம் என்றும் முஸ்லிம்களுக்கு தாம் இருப்பதாகவும் உறுதியளிக்கிறார்.

இந்த ஒவைசியும் இவரது அண்ணனும் முஸ்லிம்களின் தலைவர்களாக இருக்கட்டும். ஆனால் இந்தியாவை முஸ்லிம் நாடாக ஆக்குவது அரசியல் சட்டத்துக்குப் புறம்பானது. தேசியக் கொடியை அவமதிப்பதும், 100 கோடி இந்துக்களைக் கொல்வேன் என்று கொக்கரிப்பதும் தான் இசிலாமியர்களுக்கு இவர்கள் தரும் பாதுகாப்பு என்று எண்ணினால் இவர்களைப் போல  வடிகட்டிய முட்டாளகள் யாருமில்லை.

நடுவணரசு நடவடிக்கை எடுக்காது. சட்டத்தின் மாட்சிமை காக்கும் ஆட்சி நாட்டில் வேண்டும். 2014 வெகு தொலைவில் இல்லை. மாற்றம் என்ற மனித தத்துவத்தை நடைமுறைப்படுத்தத் தயாராவோம்.

4 comments:

hayyram said...

கசாப்புக்கு வக்காலத்து வாங்கும் இவனையும் தீவிரவாதி லிஸ்ட்டில் சேர்த்து தூக்கில் போட வேண்டும்

Arun Ambie said...

ராம்! ஓவைசியைத் தூக்கில் போட வேண்டும் என்று கேட்டால் ஓமர் அப்துல்லா வானுக்கும் கஷ்மீர மலைக்குமாகக் குதிப்பார். கருணாநிதி கண்ணீர் விடுவார். ஒவைசி லஞ்சம் வாங்கினால் மட்டுமே தூக்கில் போடலாம் என்று அன்னா ஹசாரே அறிவுறுத்துவார். லஞ்சம் வாங்கவில்லை என்றாலும் சிலபல முறைகேடுகள் நடந்துள்ளதால் கொஞ்ச நேரம் தூக்கில் போட்டுவிட்டு பிறகு எடுத்துவிடலாம் என்று புத்திமதி சொல்வார் கேஜ்ரிவால். மனித உரிமையாளர்கள் உங்களை காவிநிறம் படிந்த மூளைக்காரர் என்பார்கள். ஒய் திஸ் கொலவெறி பாட்டை யாராவது FMல் உங்களுக்கு டெடிகேட் செய்வார்கள்..... தேவையா இதெல்லாம்!!

dondu(#11168674346665545885) said...

துக்ளக் ஆண்டுவிழா மீட்டிங்கில் சோ அவர்கள் கூறியது:
அக்பருதீன் ஒவைசி என்பவர் 15 நிமிடங்களுக்குள் இந்துக்கள் அத்தனை பேரையும் கொல்ல முடியும் என பேசியது பற்றி சோவுக்கு ஆடியன்ஸ் தரப்பிலிருந்து கேள்வி வந்தது. அது அயோக்கியத்தனம், தண்டிக்கப்பட வேண்டியது என்றார். ஆனால் மீடியா அதை அடக்கி வாசிக்கிறது. இதையே ராமகோபாலன் கூறியிருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும் என பட்டியலிட்டு காட்டினார். இப்போது உண்மை கூற வேண்டுமானால் இம்மாதிரி அடக்கி வாசித்து மத்திய அரசு இசுலாமியரைத்தான் கேவலப்ப்டுத்துகிறது என்றார். பெரும்பன்மை இசுலாமியர் அக்பருதீன் ஒவைசி கூறியதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்றும் கூறினார்.

பார்க்க்: http://dondu.blogspot.com/2013/01/42.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Arun Ambie said...

//இதையே ராமகோபாலன் கூறியிருந்தால்// வாஸ்தவமான ஒப்பீடு. ராமகோபாலன் இவ்வளவு மோசமாகப் பேசக்கூடியவர் இல்லை. ஆனால் அவர் ஒவைசியின் பேச்சில் 1% பேசியிருந்தாலும் இறையாணமை போச்சு, மதசார்பின்மை போச்சு என்று கூப்பாடு போட்டிருப்பார்கள். குறிப்பாக ஒவைசி விஷயத்தில் வேட்டியை இறுக்கிக் கட்டிக் கொண்டு அமர்ந்திருக்கும் கருணாநிதி கதை, வசனம், கவிதை கட்டுரை என்று தம் திறமையை முழுவதும் காட்டியிருப்பார்.