ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Tuesday 26 June 2012

கலைமகளின் உறைவிடம் அலைமகளின் உதவியைக் கேட்கிறது!

பழம்பெருமை மிக்க சென்னை ஸம்ஸ்க்ருதக் கல்லூரி பாரதத்தின் பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பதில் முன்நிற்கும் நிறுவனம். கலைமகளின் உறைவிடமான அந்தக் கல்விக்கூடம் அலைமகளின் ஆசியை வேண்டுமெனக் கேட்கும் நிலையில் இருக்கிறது. தமிழகத்தின் பழமையான ஒரு ஸம்ஸ்க்ருத மொழியாராய்ச்சி நிறுவனம் ஸ்ரீ குப்புஸ்வாமி ஸாஸ்த்ரி ஸம்ஸ்க்ருத ஆராய்ச்சி மையம். இது அரசு தரும் நிதியும் பெற்றுச் செயல்பட்டு வந்தது. தற்போது  சிலபல காரணங்களால் அரசு உதவி தடைப்பட்டு நிற்கிறது. அதனால் இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் மந்தநிலை அடைந்துள்ளன.

Monday 25 June 2012

வர்ணாஸ்ரம விதாயினீ - ஒரு பாமரனின் புரிதல்

சமீபத்தில் இணைய விவாதம் ஒன்றில் ஒரு புத்திசாலியால் மடத்தனமான கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. தமிழ் இணைய வெளியில் விவரமாகச் சிந்திப்பவர் என்று பொதுவாக அறியப்படும் நபர் அவர். தெளிவான புரிதல் இல்லாமல் பேசமாட்டார் என்று பொதுவாக அவர் பற்றியொரு கருத்து உண்டு. அவருக்கு என்ன அழுத்தங்களோ நெருக்குதல்களோ தெரியவில்லை. சற்றே சறுக்கிவிட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆனைக்கே சறுக்குமாம். அவருக்குச் சறுக்கக் கூடாதா?

Friday 15 June 2012

சிருங்கேரி மஹாஸந்நிதானம் சென்னை வந்தார் - மகிழ்ந்து கூவியது மைக்

மாமனிதர்கள் வருகைக்காக மாங்கங்கள் காத்திருப்பதில் வியப்பில்லை. சென்னை நகரத்து அடியார்கள் 17 ஆண்டுகளாய்க் காத்திருந்தனர். இவ்வாண்டு கோடம்பாக்கம் மீனாக்ஷி கல்லூரி சாரதாம்பாள் கோவில் கும்பாபிஷேகம் உட்பட பல விசேஷங்களுக்காக சென்னை வர சங்கல்பம் செய்து உறுதி சொன்னார் தவமுனிவர். ஏற்பாடுகள் கோலாகலமாக செய்யப்பட்டிருந்தன. வழிமேல் விழிவைத்து என்பர். வழியெல்லாம் மனம் வைத்து அவரது விஜய யாத்திரையை மனதால் பின்தொடர்ந்து கொண்டிருந்த மாந்தர் பலர்.