ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Showing posts with label பால கௌதமன்.. Show all posts
Showing posts with label பால கௌதமன்.. Show all posts

Thursday, 17 April 2014

கவனமாக எழுதுங்கள் தோழரே!



புலமைபித்தன் தமிழக அரசியலில் எழுதிய (வழமையான) ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பால.கௌதமன் அவர்களின் தெளிவான பதில்.
_____________________________________________________________________________ 
நடுநிலையாளராக விமர்சிப்பதற்கு நாணயம் தேவை. ஈ.வே.ராவின் தொண்டன் என்பதால் மட்டுமே நீங்கள் நடுநிலையாளராகி விட முடியாது. ஐயா புலமைப்பித்தன் அவர்களே, மோடி அவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்தத்தில் உறுதியாக உள்ளவர்  என்றும் தாங்கள் ஈ.வே.ராவின் கொள்கையை ”அணு அளவும் பிசகாமல் ஏற்றுக் கொண்டவர்” என்றும் 16.04.2014 தமிழக அரசியலில் எழுதி உள்ளீர்கள். இதில் தாங்கள் வைக்கும் குற்றச்சாட்டு காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ் என்பது. காந்தி கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் உங்களால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் வீர சாவர்கர்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னும் பொய்யுரைத்து மெய்ப்பிக்கும் கோயாபல்ஸ் தத்துவத்தை நீங்கள் பின்பற்றலாமா? நீங்கள் இம்மியளவும் பிசகாமல் பின்பற்றும் ஈ.வே.ராவின் தத்துவமும் பொய்யின் அடிப்படையிலானது தானோ?

Wednesday, 12 June 2013

மணிமண்டபமும் மானங்கெட்ட அரசியலும் - பாகம் 2

நண்பர் பால கௌதமன் எழுதிய பதிவு. இங்கே வெளியிடுவதில் மகிழ்கிறேன்.

உலகத்தை உலுக்கிய பயங்கரவாதி ஒசாமா பின் லாடன், அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டான். அவன் உடலை விமானத்தில் எடுத்துச்சென்று நடுக்கடலில் விட்டெரிந்தனர் அமெரிக்கர்கள்! என்ன காரணம்? நிலத்தில் அடக்கம் செய்தால் அது தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு நினைவுச் சின்னமாகிவிடும்! அது உலக அமைதிக்கு நிரந்தரத் தலைவலி ஆகிவிடும் என்பதால் கடலில் மீன்களுக்கு இரையாக வீசப்பட்டது ஒசாமாவின் சடலம் ! உலகம் இச்செயலை வரவேற்றது. இது தான் உலக ஒழுக்கம்.

Friday, 24 May 2013

மணிமண்டபமும் - மானங்கெட்ட அரசியலும்

நண்பர் பால கௌதமன் எழுதிய பதிவு. இங்கே வெளியிடுவதில் மகிழ்கிறேன்.


யார் போற்றப்பட வேண்டும்?

யாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும்?

தமிழ்த் தாய்க்கும், வள்ளுவருக்கும், சிலைகளும், பூங்காவும், மண்டபங்களும் அமைக்கும் தமிழக அரசுக்கு இந்த இலக்கணம் தெரியாமலா போயிருக்கும்! 
பெருமையும் உரனும் ஆடூஉ மேன

அச்சமும் மடனும் நாணும் முந்துறுதல்

நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப

(தொல்காப்பியம்)

ஆடவரின் பெருமையையும், உரத்தன்மையையும், பெண்டிரின் அச்சம், மடம், நாணம் ஆகியவையும் புகழப்பட வேண்டும் என்பது தொல்காப்பியம் வகுத்த தமிழ் மரபு.அப்படிப் புகழப்பட வேண்டிய ஆடவர் யார்? 


Saturday, 16 February 2013

டில்லி கற்பழிப்பும் கும்பமேளாக் கோடிகளும்!

நண்பர் பால.கௌதமன் எழுதிய கட்டுரை. இங்கே வெளியிடுகிறேன்....

இன்று காதலர் தினம்(பிப்ரவரி 14, 2013)! விதவிதமான கொண்டாட்டங்கள்!சில நகரங்களில் பூங்காக்கள்(park) இன்று மூடப்பட்டுள்ளது! இதெல்லாம் ஒரு புறம் இருக்க, இன்று நூறு கோடியின் எழுச்சி (one billion rising) என்று ஈவ் என்ஸ்லெர் என்ற அமெரிக்க பெண்மணியின் அழைப்பை ஏற்று, பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சம நீதி கோரி உலகம் முழுவதும் நூறு கோடி பெண்கள் 202 நாடுகளில் வீதிக்கு வரப்போகிறார்களாம்! இந்தப் பெண்மணியை இந்த அறிவிப்பை செய்யத் தூண்டியது என்ன?

“பலவந்தத்தின் மூலம், ஒத்துழைப்பில்லாமல் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டால், பெரும்பாலும் அந்தப் பெண் கர்பமாவதில்லை” என்று அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் திரு. டாட் அக்கின் அவர்கள் பொதுக்கூட்டத்தில் பேசியதே!

Wednesday, 30 January 2013

விஸ்வரூபம் எடுப்பது தமிழன் ஆட்சியா தாலிபான் ஆட்சியா? - பால கௌதமன்

நண்பர் பாலகௌதமன் எழுதிய கட்டுரை இது. தினமணி வலைப்பூ பகுதியில் வெளிவந்தது. 
வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது நியதி. ஆனால் நாம் கற்றுக் கொள்ளவும் இல்லை; நம்மால் மறந்துவிடவும் முடியவில்லை. அதே பிரச்சனைதான் மீண்டும் மீண்டும் வருகிறது. படித்தவுடன் சோடா பாட்டில் போல் சீறுகிறோம். பின்னர் காலி பாட்டில் போல் அமிழ்ந்து விடுகிறோம். 

Friday, 14 December 2012

இதிஹாச நாயகர்களும் இந்த மண்ணின் பாரம்பரியமும்

உமைக்கு ஒரு பாகத்து ஒருவனும், இருவர்க்கு
ஒரு தனிக் கொழுநனும், மலர்மேல்
கமைப் பெருஞ் செல்வக் கடவுளும், உவமை
கண்டிலா நகர்அது காண்பான்,
அமைப்புஅருங் காதல் அதுபிடித்து உந்த,
அந்தரம், சந்திராதித்தர்
இமைப்பு இலர் திரிவர்; இது அலால் அதனுக்கு
இயம்பல்ஆம் ஏதுமற்றுயாதோ! 


”அயோத்தி நகருக்கு ஈடான, உவமை காட்டத்தக்க இன்னொரு நகரத்தை, உமையொரு பாகனாம் கயிலையம்பதியும், திருமகளும் நிலமகளும் நாயகனாய் வணங்கும் வைகுண்டபதியும், பொறுமையின் திருவுருவாய் விளங்கும் சத்தியலோகத்துப் பிரமனும்கூடக் கண்டதில்லை. அயோத்தி மாநகரத்துக்கு உவமையாகச் சொல்லக் கூடிய நகரம் எது என்பதைக் கண்டறியும் அடக்கமுடியாத ஆவலால் தானே சந்திரனும் சூரியனும் வானத்தில் கண்ணை இமைக்காமல் வலம் வருகிறார்கள். இதற்கு மேல் அயோத்தியின் சிறப்பு குறித்து எடுத்தியம்ப ஏதுமில்லை” என்பது தன் வீட்டுக் கட்டுத்தறியையும் கவிபாடச் செய்த கம்பநாட்டாழ்வார் சொல். 

Tuesday, 4 December 2012

புனிதப் புரட்டு - பால.கௌதமன்

நண்பர் பால கௌதமன் அவர்கள் எழுதிய இந்த ஆராய்ச்சிக் கட்டுரைப் பதிவு கிறிஸ்தவ தேவாலயங்கள், அவற்றின் செயல்பாடுகள் குறித்த மிக முக்கியமான பல கேள்விகளை எழுப்புகிறது. அவரது பதிவை அப்படியே இங்கே தருகிறேன். பதிவு நீளமானது. பொறுமையாகப் படிக்கவும். தேவசகாயம்பிள்ளை பெற்ற முக்தி குறித்த என் கேள்விகள், கருத்துக்கள் பின்னொரு பதிவில்.