ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Saturday 21 December 2013

சன் நியூஸில் ஒரு பின் லாடன்


வேதவிஞ்ஞான ஆராய்ச்சி மையத்தில் வெளிவந்த இக்கட்டுரையை எனது தளத்தில் பகிர்வதில் மகிழ்கிறேன். நண்பர் கௌதமன் எழுதியது.
______________________________________________________________________________________________________


ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகங்கள்! இந்த நாட்டின் நலவாழ்வை அவைதான் தூக்கிப் பிடிக்கின்றன! ஊடகங்களே மக்களுக்குப் பல புதிய கண்ணோட்டங்களைக் கொடுத்துச் சிந்திக்கத் தூண்டுகின்றன! அதிலும் தமிழ் நாட்டில் நடுநிலை, உண்மை, உறுதி என்ற அடிப்படையில் பல கருத்துக்களை விவாதம் மூலம் கொண்டு சேர்ப்பதில் முன்னணியில் இருக்கிறோம் என்று மார் தட்டிக் கொள்வது சன் நியூஸ் தொலைக்காட்சி! இதில் “நேருக்கு நேர்” என்கிற விவாத நிகழ்ச்சியை ஒருவர் பல வருடங்களாக நடத்தி வருகிறார்! நிகழ்ச்சியில் இவர்தான் அதிகமாகப் பேசுவார்! அவர் கருத்துக்கு மாற்றுக் கருத்துடையவர்களை பேச விடமாட்டார்! சிலசமயம் ஏளனமும் செய்வார்! இவரின் சித்தாந்தப் பின்னணியிலுள்ளவர்களுக்கு, குறிப்புகள் எடுத்துக் கொடுத்து அதற்குப் பதில் சொல்பவர்களைப் பாதியில் பேச விடாமல் தடுப்பார்! முடிவுரை என்ற பெயரில், அவர் கருத்துக்களை ஒரு சொற்பொழிவாக நிகழ்த்திவிட்டு, மக்கள் மன்றத்திடம் முடிவை விட்டுவிடுகிறேன் என்று தன் பொறுப்பைத் தட்டிக் கழிப்பார்! இந்த விவாதங்களுக்கு ‘’நடுநிலை, உண்மை, உறுதி’’ என்ற சிலாகிப்புகள் வேறு! இவர் யாரென்று தெரிந்ததா?


நீங்கள் நினைப்பது சரிதான்! விவாதம் என்கிற பெயரில் விஷங்களை விதைக்கும்  வீரபாண்டியன் தான் அவர்..

இந்த நடுநிலையாளர் தனது ’நடுநிலையை’ எப்படி நிரூபித்துள்ளார் என்று பாருங்கள்!


டில்லியிலும், காஷ்மீரிலும் நடக்கும் வெடிகுண்டுத் தாக்குதல்கள் சின்ன சம்பவங்களாம்!

2014 ம்தேர்தல் வரை முஸ்லீம்கள் தேவர், கவுண்டர், வன்னியர், செட்டியார்களுடன் இணக்கமாக இருந்து , அவர்கள் வாக்குகளைப் பெற வேண்டுமாம்! தேர்தல் முடிந்தபின் இந்த இந்துக்களை முஸ்லீம்கள் ‘கவனித்துக்’ கொள்ள வேண்டுமாம்!'

இதெல்லாம் ஒரு சாம்பிள் ! இனிமேல் தான் மெயின் ரீல்!

அது போகட்டும்,இதெல்லாம் எங்கு பேசினார் தெரியுமா?

SDPI என்ற இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சியின் ’உ.பி முசாபர் நகர் கலவரமும்- நமது சமூகக் கடமையும்’ என்ற கருத்தரங்கில் 25.11.2013 அன்று மதவெறியைத் தூண்டும் வகையில் பேசினார்! இதை SDPI அமைப்பு வலைத்தளத்தில் வெளியிட்டு, பின் அந்த அமைப்பே அதை வலைத் தளத்திலிருந்து நீக்கியும் விட்டது.

இந்த விஷப்பாண்டியன் பேச்சும் அதன் கருத்துக்களும் சில கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்புகிறது!

மதச்சார்பின்மை பற்றி வாய் கிழியப் பேசும் வீரபாண்டியன் மத அடிப்படைவாத கட்சியான SDPI கூட்டத்தில் கலந்துகொள்ளலாமா?

உறுதியைப் பற்றி பேசும் இவரின் உறுதியின் லட்சணத்தைப் பாருங்கள்! SDPI வலைத்தளத்தில் இடப்பட்டிருந்த பதிவு 19-டிசம்பர்-2013 வரை வலைத்தளத்தில் இருந்தது. இந்த விஷப்பாண்டியனின் பேச்சுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியவுடன், SDPI வலைத்தளத்திலிருந்து இவர் பேச்சு மட்டும் நீக்கப்பட்டது. உறுதி உள்ளவன் என்றால் தைரியமாக நான்தான் பேசினேன் என்று சொல்ல வேண்டியதுதானே? பேடிமைத்தனத்தின் உச்சகட்டம் இது தான்!

இது முதல் முறை அல்ல. இதே விஷப்பாண்டியன் நடத்திய தமிழ்ப் புத்தாண்டு பற்றிய விவாதத்தில், நானும் பேராசிரியர் நன்னன் அவர்களும் கலந்து கொண்டோம். அதில் என் கையே ஓங்கியிருந்தது. அதில் பல பகுதிகளை வெட்டியபின்னும், ஒளிபரப்பப்பட்ட விவாதம், சித்திரைதான் புத்தாண்டு என்பதை நிரூபித்து, எதிர் அணியின் வாதத்தை கேலிக்கூத்தாக்கியது. எல்லா விவாதங்களையும் வலைத்தளத்தில் போடும் சன் நியூஸ் தொலைக்காட்சி, இந்த விவாதத்தை மட்டும் இதுவரை வலைத்தளத்தில் போடவில்லை! இது தான் இவரின் நடுநிலமை!

இதில் கூட ஒரு நகைச்சுவை சம்பவம் நடந்தது. பேராசிரியர் நன்னன் அவர்கள் ஒரு சிறிய சூட் கேஸை எடுத்து வந்திருந்தார். விவாதம் தொடங்கும் முன், தை தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கான சான்றுகள் அந்தப் பெட்டியில் இருப்பதாகச் சொன்னார் வீரபாண்டியன்! சொன்னவுடன் நான் பயந்து விடுவேன் என்ற நினைப்பு! ஏதோ பெரிய சைகாலஜிஸ்ட் என்ற எண்ணம்! விவாதத்தின் இடைவேளையின் போது பேராசிரியர் நன்னன் அவர்கள் அந்த பெட்டியைத் திறந்தார். அதில் ஒரு தண்ணீர் பாட்டில்தான் இருந்தது. நான் நிமிர்ந்து பார்த்தேன் வீரபாண்டியனை! பாவம் என் முகத்தைக்கூட அவரால் பார்க்க முடியவில்லை. இதைவிட வேடிக்கை என்னவென்றால், அந்த விவாதத்திற்கு அவர் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள படித்த பத்திரிகை என்ன தெரியுமா? இன்றைய செய்தி - நாளைய வரலாறு – முரசொலி. இதை வைத்துக்கொண்டு இவரின் அறிவாற்றலை எடை போட்டுக்கொள்ளுங்கள்.

வலைத்தளத்திலிருந்து SDPI இவர் பேச்சை எடுத்துவிட்டால், இவர் பேச்சுக்கு சான்றில்லாமல் ஆகிவிடும் என்று இந்த புத்திசாலி ஆலோசனை வழங்கினாரோ என்னவோ? ஆனால் வலைத்தளத்தை திராவிட இயக்கத்தினர், இடதுசாரிகள், காங்கிரஸ்காரர்கள், பிரிவினைவாதிகள் போன்றோர் மட்டும் பயன்படுத்துவதில்லையே ? சில புத்திசாலிகளும் பயன்படுத்துகிறார்கள் என்பதை மறந்துவிட்டார் போலும்!

//நான் விளக்கமாக பேசத்தொடங்கினால் 2014 ஏப்ரல் முடிந்துவிடும் // என்று பேச்சைத் தொடங்குகிறார்.
முசாபர் நகர் கலவரத்திற்கும் ஏப்ரல் 2014க்கும் என்ன சம்மந்தம்! முசாபர்நகர் கலவரத்தை பாராளுமன்றத் தேர்தல் பிரச்சினையாக மாற்றியது யார்? கலவரத்தை வைத்து அரசியல் நடத்தும் இவர்கள் தானே கலவரத்திற்கு காரணமாக இருந்திருக்க வேண்டும்? பிணத்தைவைத்து அரசியல் நடத்தும் மனித நேயப் பண்பாளர்கள்!

//மேடைக்கு மேடை மாற்றியும், வருபவர்களுக்கு ஏற்றார்போல் மாற்றியும் பேசி வழக்கப்படாதவன்//
அப்படியென்றால் ஏன் இந்த வீரபாண்டியன் பேசியதை மட்டும் SDPI வலைத்தளத்திலிருந்து நீக்கவேண்டும்? தைரியமிருந்தால் சன் நியூசில், இதே கருத்தை இவர் மாற்றாமல் அப்படியே பேசுவாரா?

//கிச்சு கிச்சு மூட்டி பேச வழக்கப்படாதவன்//
அப்படியென்றால், கிசு, கிசுவே பேச்சாகக் கொண்ட கருணாநிதியை குத்திக்காட்டுகிறாரோ?

//எனக்கு எந்தத் தனி இயக்கமும் கிடையாது.ஊடகம் மட்டும் தான் என் இயக்கம்//
இந்தப் பேச்சில் இடம்பெரும் கருத்துக்கள் தான் இவர் கொள்கை என்று எடுத்துக்கொண்டால், இதை வெளிப்படுத்த இவர் பயன்படுத்தும் இயக்கம் ஊடகமா? இது தான் ஊடக தர்மமோ?

// கிறிஸ்தவ, இஸ்லாமிய சமுதாயங்கள் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றன//
ஏன் இந்து சமுதாயம் தாக்கப்படுவதில்லையா? இந்தக் கருத்தை ஒரு இஸ்லாமிய அமைப்புக் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டிய நோக்கம் என்ன? இந்தியாவில் இடிக்கப்பட்ட கோயில்களின் எண்ணிக்கை, சர்ச் மற்றும் மசூதிகளின் எண்ணிக்கையைவிட பல மடங்குகளாச்சே! தீவிரவாதத் தாக்குதல்களில் இறந்தவர்கள் பெரும்பாலும் இந்துக்களே! அப்படியென்றால் இந்தத் தொடர் தாக்குதல்களைத் தொடுப்பது யார்? இதுவரை எத்தனை தாக்குதல்கள் முதலில் இந்துக்களால் தொடுக்கப்பட்டிருக்கிறது?

// உங்கள் தலைக்குமேலே கத்தி ஒன்று தொங்கிக்கொண்டிருக்கிறது//
அது எந்தக் கத்தி? யாரைக் கத்தி என்று குறிப்பிடுகிறார் இவர்? இந்துக்களைத் தானே? எப்படி சொல்கிறார் பாருங்கள்?

//நாற்காலியிலிருந்து நகர்ந்து உட்கார்ந்துகொண்டு சர்சுக்குப் போய் கர்த்தர் பார்த்துக் கொள்வார் என்று சென்றுவிடுவீர்களா, அல்லது அந்தக்கத்தியை அறுத்து வீழ்த்தி புதைக்கப் போகிறீர்களா?// (இப்படிப் பேசியவுடன் கைதட்டல்)
என்ன சொல்ல வருகிறார்? இந்துக்கள் கொடியவர்கள்! அவர்களுடன் அமைதியான முறையில் சேர்ந்து வாழ முடியாது! ஆகவே வன்முறையால் அவர்களை அழியுங்கள்! இந்தப் பேச்சுக்கு கைதட்டல்…விஷத்தை விதைக்கும் வீரப்பாண்டியன் முகத்தில் புன்சிரிப்பு!

//பூதாகாரமாக ஊதி பெரிதாக்கப்பட்ட நரேந்திர மோடி என்ற பலூனை, முஸ்லீம் ஒற்றுமை என்ற ஊசியினால் குத்தி உடைக்க வேண்டும்//
அப்படியென்றால் மோடியைத் தீர்த்துக்கட்ட வேண்டுமா? இந்த அமைப்பிலிருப்பவர்களில் சிலர் பல பயங்கரவாதச் செயல்களில் தொடர்புடையவர்கள். 1998 ல் திரு.அத்வானி அவர்களை குறிவைத்த கோவை குண்டு வெடிப்பு, மற்றும் பல பயங்கரவாதச் சம்பவங்களில் தொடற்புடையவர்கள்! இப்படி விஷத்தைக் கக்கும் விதத்தில் வீரப்பாண்டியன் பேசியவுடன் பலத்த கைதட்டல்! அப்படியென்றால் இந்தப் பேச்சு playing to the gallery அல்லவா?

//இந்த மோடியை ஆட்சிக்கு வரவிட்டால் கால் நூற்றாண்டிற்கு உங்களால் இந்தக் கும்பலை அரியாசனத்திலிருந்து இறக்கமுடியாது//
இது முசாபர் நகர் கலவரக் கூட்டமா? அல்லது அரசியல் கூட்டமா? கும்பல் என்றால் யார்? எந்த கொள்கைப் பிடிப்புமின்றி வெறுப்பைச் சுமந்து கொண்டு மோடி என்பவரை வீழ்த்த யாருடன் வேண்டுமானாலும் சேருங்கள் என்று அறிவுரை கூறும் வீரப்பாண்டியனா? அல்லது பன்நெடுங்காலமாக துஷ்பிரச்சாரத்தை சந்தித்து, பல் முனை எதிர்ப்புக்களை சந்தித்து தேசப் பணியை தெய்வீகப்பணியாக ஆற்றிவரும் இந்து அமைப்புக்களா?

//ஐந்தாண்டு காலம் கூட்டுறவுத் துணையோடு வாஜ்பாயி ஆட்சியில் வரலாற்றை திரித்தார்கள். குதிரையை எருமையாக்கினான்! எருமையை குதிரையாக்கினான்! பசுவைச் சித்திரமாக்கிப் போட்டான்!//
என்ன மரியாதை பாருங்கள்! ஒரு உத்தமத் தலைவரை, முன்னாள் பிரதமரை எப்படி ஏக வசனத்தில் பேசுகிறார் பாருங்கள்! என்ன அவதூறு இது? திரு. வாஜ்பாய் அவர்கள் ஜெண்டில் மேன் என்று இவருக்கு கூலி கொடுக்கும் கருணாநிதி சொன்னது காதில் விழவில்லையோ?

//ரூபாய் நோட்டில் காந்தியைக் கொண்டு வைத்தான், காந்தி மீது அவ்வளவு பாசமா RSS காரனுக்கு? அவரைக் கொன்று குவித்த கோட்சேயின் கும்பல்.//
காந்தி கொலைக்கும் RSS க்கும் தொடர்பில்லை என்று உச்சநீதிமன்றம் சொன்ன பிறகு, இப்படி ஆதரமற்ற அவதூறுகளை வீசுவது தண்டனைக்குறிய குற்றமில்லையா? அது போகட்டும். இந்த கும்பல் பல மாநிலங்களில் ஆட்சியிலுள்ளதே! இரு முறை பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி கண்டதே, அப்படியென்றால் மக்கள் காந்தியை கொன்றது சரி என்று தீர்ப்பு வழங்கி விட்டார்களா? இந்தப் பேச்சு விஷமத்தனமில்லாமல் வேறு என்ன?

// இது இந்து ராஜ்ஜியமாக இருக்க வேண்டும் என்பதற்காக ரூபாய் நோட்டில் அசோகச் சக்கரத்தை நீக்கிவிட்டு காந்தியை கொண்டு வந்தார்கள்//
அசோகச் சக்கரத்திற்கு பதில் காந்தியின் உருவம் பொறிக்கப்பட்டது 1996ல். அப்போது பா.ஜ.க ஆட்சியில் இல்லையே? ’மதச்சார்பற்ற’ ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் என்று சேர்ந்து கும்மியடித்த கூட்டணிஆட்சிதானே? இது இந்துக்கள் மீது முஸ்லீம்களுக்கு வெறுப்பு ஏற்படவேண்டி புனையப்பட்ட விஷமக் கதை தானே?

//இன்னும் 10 வருஷம் போனா காந்தியை தூக்கிவிட்டு கோட்சேயை போட்டு விடுவான்//
யாரு? காந்தியைப் போட்ட ’மதச்சார்பற்ற’ கட்சிகளா?

//உங்களுக்குமுன் உள்ள ஒரே லட்சியம் மோடி போக வேண்டும். அதற்கு காங்கிரஸ் தடி பயன்படுமா, சி.பி.ஐ தடி பயன்படுமா? சி.பி.எம் தடி பயன்படுமா, தி.க தடி பயன்படுமா? எடுத்து அந்தப் பாம்பை அடியுங்கள்! அதற்காக உங்கள் கருத்து மோதல்களை தள்ளிவையுங்கள்//
இதைச் சொன்னவுடன் கைதட்டல்…என்ன கூட்டமோ! என்ன பேச்சோ! ஜனநாயக நாட்டின் பிரதமர் வேட்பாளரை பாம்பு…அதை அடி என்று பேசும் இவர்கள் மனிதநேயர்கள், ஜனநாயகவாதிகள்! சந்தர்ப்பவாதக் கூட்டணியை உறுவாக்குங்கள் என்று யோசனை சொல்லும் இவர் நடுநிலைவாதி!!

//உங்கள் அரசியல் பேதங்களை, தேவன்மார், கவுண்டன்மார் பிரச்சினைகளையெல்லாம் ஏப்ரல் 2014 க்குப் பின் வைத்துக் கொள்ளலாம். இந்தத் தேவனும், கவுண்டனும், செட்டியும், வன்னியனும் உங்களுக்கு ஓட்டுப் போட்டே தீரணும்//
தேர்தலில் இந்துக்களைப் பிரித்து, அவர்களின் ஓட்டுக்களைப் பெற்றுக் கொண்டபின், தேர்தல் முடிந்த பிறகு அவர்களைத் தீர்த்துக்கட்டவும்! என்ன அருமையான யோசனை! எப்படி கலவரத் திட்டம் தீட்டுகிறார் பாருங்கள்?

//இஸ்லாமிய சமுதாயம் ஒரு வணிகச் சமூகம். உங்களுக்கு எவ்வளவோ கல்விச் சலுகைகள் கொடுத்தால் கூட, IPS,IFS அதிகாரிகளாவது குறைந்த நபர்கள் தான்//
அப்படியென்றால் இஸ்லாமியர்களுக்கு அதிக சலுகைகள் உள்ளது என்பதை வீரபாண்டியன் ஒத்துக் கொள்கிறார். ஒரு விவாதத்தில் இவருடன் நானும்,கம்யூனிஸ்ட் அமைப்பைச் சார்ந்த திரு.பாலகிருஷ்ணன் அவர்களும் பங்கெடுத்தோம். அந்த விவாதத்தில், ஐயோ முஸ்லீம்களுக்கு கல்வி மறுக்கப் படுகிறதே என்று ஒப்பாரி வைத்தவர் இவர் தானே? ஸ்டுடியோவில் முஸ்லீம்கள் பிச்சைக்காரர்கள்! அவர்களுடைய கட்சிக் கூட்டத்தில் அவர்கள் பெரு வணிகர்கள்! இவர்தான் மேடைக்கு மேடை மாற்றிப் பேசாதவராம்!

//உங்களுக்கு வர்த்தகம் மட்டுமே தெரிகிறது. உங்களில் பல பேர் மிகபிரம்மாண்டமான தொழில் அதிபர்களாக இருக்கிறீர்கள், உங்களால் ஒரு விஷுவல் மீடியாவைக் கூட கொண்டுவர முடியவில்லை//
ஏதாவது இஸ்லாமியர்கள் தொலைக்காட்சி நிறுவனம் ஆரம்பித்தால் அங்கே சென்று மேலும் விஷத்தை பரப்புவதற்காக மனு செய்கிறாரோ?

//நீங்கள் அப்படியே ஒரு மீடியா கொண்டு வந்தாலும், ஒரு பாய் பயான் ஓதிக்கொண்டுள்ளார்//
இதற்கு பலத்த கை தட்டல்…காரணம் என்ன? ஆன்மீகம் நகைப்புக்குறியது, பயங்கரவாதம் ஊட்டி வளர்க்கப் படவேண்டும்!. யார் உண்மையான மத அடிப்படைவாதி என்பதை இந்தக் கரகோஷத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த அமைப்புக்களை மனிதநேய அமைப்புக்கள் என்று வக்காலத்து வாங்கும்  வீரப்பாண்டியன் போனற இந்த நடுநிலையாளர்களை தேசத்துரோகி என்று தானே சொல்லவேண்டும்?

//ஒரு தொலைக்காட்சியைத் தொடங்கி எந்தச் செய்தி மக்களிடம் போக வேண்டுமோ அதை நீங்கள் சொல்லவில்லை //
என்ன செய்தி? இவர் சொல்லும் பொய்யையும் புரட்டையும் கவனித்துப் படியுங்கள்! தீர்ப்பை உங்களிடம் விட்டுவிடுகிறேன்!

//நரேந்திர மோடி நடை, உடை பாவனைக்காக காஸ்டியூம் கலைஞர்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்//
அது என்ன தண்டனைக்குரிய குற்றமா? யார் அந்தக் கலைஞர்கள்? சொல்ல முடியுமா? வாரம் ஒரு முறை ஒரு மணி நேரம் டி.வி நிகழ்ச்சியில் வருவதற்கே, ஒரு டப்பா பவுடரை முகத்தில் அப்பிக்கொண்டு ஒப்பனை செய்துகொள்ளும் வீரபாண்டியன் காஸ்டியூமைப் பற்றி பேசலாமா? கருணாநிதி என்றைக்காவது கருப்புக் கண்ணாடியை கழற்றிருக்கிறாரா? எம்.ஜி.ஆர் என்றைக்காவது தொப்பியை கழற்றியிருக்கிறாரா? ஈவெரா என்றைக்காவது தனது தாடியை மழித்திருக்கிறாரா? நமது நாட்டில் கிட்டத்தட்ட அனைத்து அரசியல் தலைவர்களும் தங்களுக்கென்று ஒரு அடையாளம் வைத்திருக்கிறவர்கள் தான். தாங்கள் அணியும் உடைகள் விஷயத்தில் கவனமாக இருப்பவர்கள்தான். அவ்வாறிருக்க நரேந்திர மோடி அரைக்கை குர்த்தாவை ஒரு பாணியாகக் கொள்வது மட்டும் இவருக்கு ஏன் உறுத்த வேண்டும்?

//சொந்த மாநில மக்களை நீங்கள் அகதிகளாகக் கொண்டு வைத்துள்ளீர்களே என்று கேட்டதற்கு, ஒரு பாஸ் விடறான், திரும்பிப் பார்கிறான், அவர்கள் சந்தோஷமாக இனப் பெருக்கம் பண்ணிகிட்டிருக்காங்கள் என்று கேட்ட நிருபர்களைப் பார்த்து அகமதாபாத் தலைமைச் செயலகத்தில் பேட்டி கொடுக்கறான்//
என்ன மரியாதையான பேச்சு பாருங்கள்! எல்லாம் வெறுப்புமிழும் ஏக வசனம்! சரி, இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க வீரபாண்டியன் தயாரா?

//உங்களுக்கு ஒரு ஊடகம் இருந்தால், நூறு தடவை திரும்பத் திரும்ப போட்டிருக்கலாம். மோடி அகமதாபாதை விட்டு வந்திருக்க முடியுமா?//
பொய்யை, திரும்பத் திரும்பச் சொல்லுங்கள்! அதற்கு ஒரு டி.வி சேனல் தொடங்குங்கள்! என்னைப் போன்ற புளுகர்களுக்கும் பிழைப்பு ஓடும் என்று சொல்ல வருகிறாரோ! இன்று வரை இவர் மோடி மீதும், RSS மீதும் வீண்பழி சுமத்தும் நோக்கம் என்ன என்று தெரிந்து விட்டதா? முஸ்லீம்களுக்கு சேனலில்லாத குறையை நிவர்த்தி செய்கிறார்! அப்படியென்றால், சன் நியூஸ் தான் தமிழகத்தின் அல்-ஜசீராவா?

//கொள்ளை கொள்ளையாக் தலித் மக்கள் வெளிநாடுகளில் சம்பாதிக்கிறார்கள், அவர்களுக்கும் ஊடகமில்லை//
முஸ்லீமுக்கும், தலித்துக்கும் என்ன சம்மந்தம்? தலித்துகளை மதமாற்றம் செய்யுங்கள் என்று முஸ்லீம்கள் மனத்தில் விஷத்தை விதைக்கப் பார்கிறாரா வீரபாண்டியன். கடலூர் மாவட்டத்தில் பழைய பட்டணம் பகுதியில் அம்பேத்கர் சிலையை முஸ்லீம்கள் அகற்றிய போது வீரபாண்டியன் எங்கே கஞ்சி குடித்துக்கொண்டிருந்தார்? முஸ்லீம் கஞ்சிக்கு ஏன் தான் இந்த மோகமோ?

//பங்களா கட்டுவீங்க, வீடு கட்டுவீங்க, முஸ்லீம் சமுதாயத்திற்கு பணம் வந்தா ஊரையே வளைத்து தொழில் செய்வீங்க//
அப்படீனா முஸ்லீம்கள் வசதியாக இருக்கிறார்கள் என்று நம்ம நடுநிலையாளர் ஒத்துக்கொள்கிறார்! ஊரையே வளைத்து தொழில் செய்வீர்கள்!  நீங்கள் இருக்கின்ற ஊரில் வேற ஒருத்தனும் வியாபாரம் பண்ண முடியாது! அந்த ஊர் பொருளாதாரமே உங்கள் கைக்குள்ள வந்துடும்னு சொல்லறாரு! இந்துக் கடைகளிலே வாங்குங்கனு இந்து முன்னணி பிரச்சாரம் செய்வது நியாயம்தானே!

//மாயாபென் கொட்ணானி என்ற மகப்பேறு மருத்துவ நிபுணர், child specialist//
Child specialist என்றால் குழந்தைகள் மருத்துவ நிபுணர். மகப்பேறு மருத்துவ நிபுணர் என்றால் gynecologist. இந்த அடிப்படை கூடத் தெரியாமல் ஆயிரம் விவாதங்களைக் கடந்த அறிவுஜீவி!

// மாயாபென் கொட்ணானி கர்பிணிப் பெண்கள் வயிறாகப் பார்த்து கிழிக்கச் சொன்னார்//
என்ன ஆதாரம்? மார்ச் 2, 2002 அன்று கௌசர் பானு என்ற கர்பிணிப் பெண்ணின் உடலை பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் திரு J.S. கனோரியா அவர்கள், கர்ப்பப்பை கிழிக்கப்படவில்லை என்று அறிக்கை அளித்துள்ளார். இதை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு நிறுவனம் உறுதி செய்துள்ளது. அப்படியென்றால் இது மத அடிப்படையில் கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் சொல்லப்பட்ட பொய் தானே?

/ /கோத்ராவின் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரை வீதியில் இழுத்துப் போட்டு கொத்து கொத்து என்று கொத்தி, கொத்துப் புரோட்டாபோல் வெட்டிக் கொன்றார்கள்//
எந்தப் பாராளுமன்ற உறுப்பினர்? நரோடா பாட்டியாவில் கொல்லப்பட்டவர் முன்னாள் உறுப்பினர். இவர் இந்துக்கள் மீது துப்பாக்கியால் சுட்டதால் கலவரம் மூண்டது என்கிறது சிறப்பு புலனாய்வுப் பிரிவு.

//மக்கள் ஓடிவந்து இவர் எங்களுக்கு உதவி செய்பவர், கொல்லாதீர்கள் என்று தடுத்தார்கள். தடுத்தவர்கள் 78 பேர் கொல்லப்பட்டனர். ஏதாவது மீடியாவில் வந்ததா?//
இந்த நிமிடம் வரை அதைத்தானே எல்லா மீடியாக்களும் சொல்லுகின்றன! விஷத்தைக் கக்கும் வீரபாண்டியர் கூட, அதைத்தானே சொல்லி வருகிறார். சம்மந்தமே இல்லாத ஹஜ் யாத்திரை விவாதத்தில் கூட குஜராத் என்று தானே இவரே என்னிடம் வாதிட்டார்! அது போகட்டும், இஷான் ஜாப்ரியின் மனைவி ஜாக்கியா ஜாப்ரி, தன் கணவன் துப்பாக்கியால் தற்காப்புக்காகச் சுட்டார் என்று சாட்சியம் அளித்துள்ளாரே! 78 பேர் எங்கிருந்து வந்து இவரைக் கொல்லாதீர்கள் என்று கதறினர்! சீரியலைக் கொண்டு வந்து தமிழகத்தை பாழாக்கிய நிறுவனத்தில் வேலை பார்ப்பதால், சீரியல் கதை எழுதத் தொடங்கிவிட்டாரோ? இந்தப் புரட்டுக்களைச் சொல்ல தனிச் சேனல் வேண்டுமாம்! பொய் சொல்ல ஒரு நிறுவனமா? விளங்கும்!

//காஷ்மீரிலும், டில்லியிலும் ஒரு சிறிய சம்பவம் நடந்தால் அது அடுத்த நிமிடம் கதிகலங்க வைக்கிறானே, அது எப்படி?//
50,000 நபர்களுக்கு மேல் கொலை, பல லட்சம் மக்கள் சொந்த நாட்டிலே அகதிகள், பல்லாயிரம் கோயில்கள் இடிப்பு, பாகிஸ்தான் தேசியக் கொடி ஏற்றம், நம் தேசியக் கொடி எரிப்பு….இதெல்லாம் சிறிய சம்பவம்! வீதி முதல் பாராளுமன்றம் வரை குண்டுவைத்துப் பல்லாயிரம் உயிர்களைக் கொன்றது சிறிய சம்பவம்! இந்த குண்டு வெடிப்பால் கதி கலங்குவது யார்? குண்டுவைக்கும் பயங்கரவாதிகளை, பிரிவினைவாதிகளை நியாயப் படுத்தும் இந்த வீரபாண்டியனை, தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டாமா?

//மோடி நாய் குட்டி என்று சொல்கிறான் உங்களுக்கு யாருக்கும் கோபம் வரவில்லை//
ஒருவரின் பேச்சைத் திரித்து, முஸ்லீம்களுக்கு இந்துக்கள் மீது கோபத்தை ஏற்படுத்தி, கலவரத்தைத் தூண்டி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கிரிமினலை ஒரு பிரதான டி.வி.சேனல் ஊக்குவிப்பது, அந்தச் சேனல் மீதும் நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மோடி ஒரு பாம்பு- அடியுங்கள் என்று வீரபாண்டியன் சொல்லுவது மட்டும் நியாயம். மரண வியாபாரி மோடி என்று இந்தியக் காங்கிரஸின் இத்தாலியத் தலைவர் சோனியா சொன்னது வரவேற்க்கப் படவேண்டும்!

//ஆட்சியில் வரத்துடிக்கும் காங்கிரஸ் கட்சி, தீவிரமாக முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருந்திருந்தால், முஸ்லீம்கள் காங்கிரஸ் கட்சியைவிட்டு போவார்களா?//
தீவிர ஆதரவு என்றால் என்ன? இவரே முன்புஒரு இடத்தில் முஸ்லீம்களுக்கு பல சலுகைகள் இருக்கிறது என்று சொல்கிறார், பல்லாயிரக்கணக்கானோரை கொன்று குவிப்பதை சிறு வன்முறை என்று சொல்லி பயங்கரவாத இஸ்லாம் தழைப்பதை ஒத்துக் கொள்கிறார். இன்னும் தீவிரமாக ஆதரிக்க வேண்டும் என்றால், இந்தியாவை முஸ்லீம் நாடு என்று அறிவிக்க வேண்டும் என்கிறாரா? இந்த தாருல்-.இஸ்லாம் கோட்பாட்டை முன்வைத்துத்தானே பாகிஸ்தானை வெட்டிப் பிளந்தனர். இன்று உலகை உலுக்கும் ரத்தக் காட்டேரியான தலிபான்களின் நோக்கமும் இது தானே? இந்தியா ஆப்கானிஸ்தானாக காங்கிரஸ் ஒத்துழைக்கவில்லை என்ற கவலைப்படுகிறாரா இந்த மதச்சார்பின்மைவாதி?

//இஸ்லாமிய சமுதாயம் ஒரு closed society ஆக உள்ளது. அவர்களுக்குள்ளேயே பேசிக்கொள்கிறார்கள்.அவர்கள் கூட்டங்களில் பேச ஏன் ஒரு வீரபாண்டியன், குப்புசாமி, கோவிந்தசாமி கிடைக்கவில்லையா?//
நீ இவ்வளவு பேசினது போதாதா? இன்னும் பேசணுமா? இந்தக் கூட்டத்திலேயே, ஆ.மார்க்ஸ், வழக்கறிஞர் அங்கையர்கண்ணி, திருமுருகன் போன்றோர் பேசியது போதாதா? இல்லை அவர்களெல்லாம் மதம் மாறிவிட்டார்களா? அந்தக் கூட்டத்தில் சடையன் மணி வேறு!

இந்த வீரபாண்டியன் கக்கிய விஷங்களை வலைத்தளத்தில் SDPI இட்ட லிங்க் இதோ!
https://www.youtube.com/watch?v=N2O1SVNu-zk&feature=youtube_gdata_player

இந்தப் பேடிகள் இப்படி ஓடி விடுவார்கள் என்று தெரிந்து, நாங்கள் SDPI –ஆல் அப்லோடு செய்யப்பட்ட ஆய்வரங்கத்தின் வீடியோவை டவுண்லோடு செய்து வைத்தோம், இதோ அந்த வீடியோ உங்கள் பார்வைக்காக!. நன்றாகப் பாருங்கள்! முசாபர் நகர் கலவரத்தைப் பற்றி ஒரு குறிப்பாவது வருகிறதா என்று!

1 comment:

Unknown said...

Nice Post wish you All the best - See more at: http://wintvindia.com/