ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Tuesday 27 November 2012

ப்ராமணாள் வலைப்பூ

சாதி என்பது ஒரு அடையாளம் என்பதாகத்தான் சிறு வயது முதல் எனக்குப் பழக்கம். டேய் ஐயரே.. டேய் தேவரே.. டேய் கோனாரே என்று சகஜமாக விளித்து விளையாடிய பள்ளிப்பருவம் என்னுடையது. என் ஆப்த நண்பன் ஒரு அந்தணன் அல்ல. ஆனால் அவன் வீட்டில் நானோ என் வீட்டில் அவனோ வேறுபாடுகள் சிறிதுமின்றிப் பழகியிருக்கிறோம்.

Saturday 24 November 2012

திடீரென்று மேடையேற்றி விட்டால் சமாளிப்பது எப்படி?

சென்ற சனிக்கிழமை 17/11/12 அன்று மாலை குரோம்பேட்டை வட்டாரம் குமரன் குன்றம் அருகில் உள்ள விவேகானந்தா பள்ளியில் தமிழ்நாடு வாசகர் வட்டம் கூட்டம் இருக்கிறது என்று திராவிட மாயை சுப்பு அவர்கள் தெரிவித்திருந்தார். கூட்டம் 6 மணிக்குத் தொடங்கும் என்று சொல்லியிருந்தார். போகிற வழியில் எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கிவிட்டு நடையைக் கட்டினேன்.

Saturday 17 November 2012

வன்காதல் திருமணங்களால் சாதி ஒழியுமா?

சாதி ஒழிப்பு என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. மதசார்பற்ற நம் அரசு சாதிகளை ஒழிக்கவே எங்கெங்கு நோக்கிலும் சாதிகளைக் கேட்பதாகச் சொல்கிறது. காலகாலத்துக்கும் சாதியைக் கேட்டுக்கொண்டே இருந்தால் அது இருந்துகொண்டே தானே இருக்கும்? அப்புறம் எப்படி ஒழிப்பதாம்? சரி... அரசு தான் அறிவிலிகளின் கையில் சிக்கிச் சீரழிந்து போனது. சமூகநலத்தில் அக்கறை கொண்ட கல்வியாளர்கள் சிந்தனையாளர்கள் சரியான திசையில் மக்களை வழிநடத்தலாமே?

Saturday 10 November 2012

மன்மதன் அம்பு படமும் 2G ஊழல் விசாரணையும்

காலையில் எழுந்ததும் தலைவலியாக இருந்தது. ஹேங் ஓவரெல்லாம் இல்லை. வேலை மட்டுமே... தூக்கம் வேறு சரியில்லை. லைட்டான உணவாக சாப்பிடலாம் என்று 4 இட்லி சாப்பிட்டுவிட்டு நெட்டில் இட்லிவடையை  மேய்ந்தேன். மிளகாய் பொடி சற்றே தூக்கலாக இட்லியும் காரச்சட்னியுடன் வடையும் இருந்தது.  சரி காரசாரமான விஷயத்தைக்  கொண்டு நூலோர் தொகுத்தவற்றுள் தலையானதைச் செய்கிறேன்.

Sunday 4 November 2012

காதல் கசக்குதய்யா (முழுக்க முழுக்க அரசியல் பதிவு)

பரபரப்பான குற்றச்சாட்டுகளை அவ்வப்போது கூறி குற்றம் சாட்டியவரிடமே துணிவிருந்தால் என்மீது மானநஷ்ட வழக்குப் போடு என்று தெனாவட்டாய் சவால் விடுவது திரு. சுப்பிரமணிய சுவாமி மட்டுமே. சோனியா காந்தியின் கதை என்று அவர் சொன்னதை எழுதினால் முழுநீள மர்மநாவல் ஒன்று தயார். ஆனால்  தற்போது அவரது குற்றச்சாட்டுகளுக்கு வலுச் சேர்க்கும் வகையில் ரகோத்தமன் என்ற முன்னாள் ஸிபிஐ விசாரணை அதிகாரி பரபரப்பான குற்றச்சாட்டை வைத்துள்ளார்.