ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Showing posts with label ஹிந்துத்வா. Show all posts
Showing posts with label ஹிந்துத்வா. Show all posts

Thursday, 17 April 2014

கவனமாக எழுதுங்கள் தோழரே!



புலமைபித்தன் தமிழக அரசியலில் எழுதிய (வழமையான) ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பால.கௌதமன் அவர்களின் தெளிவான பதில்.
_____________________________________________________________________________ 
நடுநிலையாளராக விமர்சிப்பதற்கு நாணயம் தேவை. ஈ.வே.ராவின் தொண்டன் என்பதால் மட்டுமே நீங்கள் நடுநிலையாளராகி விட முடியாது. ஐயா புலமைப்பித்தன் அவர்களே, மோடி அவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்தத்தில் உறுதியாக உள்ளவர்  என்றும் தாங்கள் ஈ.வே.ராவின் கொள்கையை ”அணு அளவும் பிசகாமல் ஏற்றுக் கொண்டவர்” என்றும் 16.04.2014 தமிழக அரசியலில் எழுதி உள்ளீர்கள். இதில் தாங்கள் வைக்கும் குற்றச்சாட்டு காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ் என்பது. காந்தி கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் உங்களால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் வீர சாவர்கர்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னும் பொய்யுரைத்து மெய்ப்பிக்கும் கோயாபல்ஸ் தத்துவத்தை நீங்கள் பின்பற்றலாமா? நீங்கள் இம்மியளவும் பிசகாமல் பின்பற்றும் ஈ.வே.ராவின் தத்துவமும் பொய்யின் அடிப்படையிலானது தானோ?

Monday, 3 June 2013

திருக்குறள் - தெளிவுரை - தேடிப்பதிக்க விழையும் நல்லோர்

இந்த தீரா...விட ஆதிக்கக் காலகட்டத்தில் திருவள்ளுவர் ஒருசமய சார்பற்றவர் என்றும் சமண சமயத்தை தழுவியவர் என்றும், இன்னும் ஒரு படி மேலே போய் வள்ளுவர் கிருஸ்துவ தாமசின் நட்பு மூலம் விவிலியத்தை அறிந்து கொண்டு  எழுதியது தான் திருக்குறள் என்றும் பித்தலாட்டச் செயல் அரங்கேறி வந்திருக்கிறது. இந்தத் தமிழ் துரோகிகள் எப்படியெல்லாம் திருக்குறளோடு தங்கள் மனதுக்கு ஏற்றபடி விளக்க உரை எழுதி தங்கள் வயிறை வளர்த்து கொண்டு திரிந்தார்கள் என்பதை தமிழ் மக்களுக்கு நாம் புரிய வைக்கவேண்டும்.

இந்து வேதாந்தமும், இந்து தத்துவங்களும் அறிந்த வடிவேலு செட்டியார் என்ற பெரியவர் ஒவ்வொரு குறளும் இந்து தத்துவங்களிளிருந்துதான் எடுத்தாளப்பட்டிருக்கிறது என்பதை ஆதாரங்களுடன் எழுதி இருக்கிறார்.

Friday, 17 May 2013

அழியும் நிலையில் 13 தலைமுறைக்கு முந்தய சிவன் கோவில் ..!


அழியும் நிலையில் 13 தலைமுறைக்கு முந்தய சிவன் கோவில் ..! செய்தியை பகிர்ந்து கொண்டு தடுக்க முயல்வோம் வாருங்கள் நண்பர்களே ...!

தேசிய நெடுஞ்சாலை துறையில் நான்கு வழி பாதை திட்டத்தினால், 1300 வருட சிவன் கோவில் அபாயத்தில் உள்ளதாக முகப்புத்தக நண்பர்கள்  எழுதியுள்ளார். பகிர்வையும் தினமலர் சுட்டியையும் படித்த போத இதை நடக்க விடக்கூடாது என்ற வைராக்யம் தோன்றுகிறது.

Wednesday, 8 May 2013

கர்நாடக தேர்தல் முடிவுகள் - ஒரு சாமானியனின் பார்வை.

கர்நாடகத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. காங்கிரசுக் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. ஆளும் கட்சியான பாஜக இரண்டாமிடத்துக்குக் கடுமையாகப் போராடுகிறது. ஏன் இந்த நிலை? குஜராத்தில் நடப்பது, மத்தியப் பிரதேசத்தில் நடப்பது தெற்கே நடப்பதில்லையே ஏன்? ஆட்சிக்கு எதிரான ஓட்டுக்கள் இவ்வளவு பாதிப்பைத் தரும்போது ஆட்சி எந்த அளவுக்கு மக்களைப் பாதித்தது என்றும் பார்க்கவேண்டும்.

Saturday, 2 March 2013

நயம் ஆன்மீகத்தால் செய்யப்பட்ட சுத்தமான பிரச்சாரம் (அல்ல)

இன்று காலை 10 மணிக்கு வழக்கமான மின்வெட்டு துவங்கியது. 2 மணி நேரங்கள் மின்சாரமிருக்காது. வாசற் கதவைத் திறந்து வைத்து ஒரு நாற்க்காலி போட்டு அமர்ந்துகொண்டேன். சமீபத்தில் வாங்கிய "Grit Guts & Gumption" என்ற புத்தகத்தைப் படிக்க அமர்ந்தேன். பாரத ஸ்டேட் வங்கியில் மாற்றங்களைக் கொண்டு வந்து வெற்றிகரமாகச் செயல்படுத்தியது குறித்த புத்தகம். ஒரு பக்கம் கூடப் படிக்கவில்லை வாசலில் நிழலாடியது.


Tuesday, 19 February 2013

அஃப்சல் குரு - மெத்தனமிக்க அரசும் கெட்ட அரசியலும்

தமிழ்தாமரையில் வெளிவந்த என் கட்டுரை இது.

கடந்த 2001ஆம் ஆண்டு நமது பாராளுமன்றத்தின் மீது லஷ்கர் ஏ தய்யபா மற்றும் ஜெய்ஷ் ஏ மொகம்மது ஆகிய ஜிஹாதி அமைப்புகள் கொலை வெறித்தாக்குதல் நடத்தின. தாக்குதலுக்கு வந்தவர்களை முதலில் அடையாளம் கண்டவர் கமலேஷ் குமாரி என்ற பாராளுமன்றக் காவலர்.
இவர் உஷார்படுத்தியதில் நம் காவல் படையினர் பதிலடி கொடுக்கத் தொடங்கினர். இந்தப் பெண் அந்தத் தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்தார். கமலேஷ் குமாரி சுட்டதில் தற்கொலைப் படையினரில் ஒருவனது உடம்பில் இருந்த குண்டு  வெடித்தது. அந்தப் பெண் காவலர் உட்பட 7 காவலர்கள் கொல்லப்பட்டனர். 18 பேர் காயமடைந்தனர். ஜிஹாதிகளில் இறந்த 5 பேர் இன்னும் தெளிவாக அடையாளம் காணப்படவில்லை.

Saturday, 16 February 2013

டில்லி கற்பழிப்பும் கும்பமேளாக் கோடிகளும்!

நண்பர் பால.கௌதமன் எழுதிய கட்டுரை. இங்கே வெளியிடுகிறேன்....

இன்று காதலர் தினம்(பிப்ரவரி 14, 2013)! விதவிதமான கொண்டாட்டங்கள்!சில நகரங்களில் பூங்காக்கள்(park) இன்று மூடப்பட்டுள்ளதுஇதெல்லாம் ஒரு புறம் இருக்கஇன்று நூறு கோடியின் எழுச்சி (one billion rising) என்று ஈவ் என்ஸ்லெர் என்ற அமெரிக்க பெண்மணியின் அழைப்பை ஏற்றுபெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சம நீதி கோரி உலகம் முழுவதும் நூறு கோடி பெண்கள் 202 நாடுகளில் வீதிக்கு வரப்போகிறார்களாம்இந்தப் பெண்மணியை இந்த அறிவிப்பை செய்யத் தூண்டியது என்ன?

பலவந்தத்தின் மூலம்ஒத்துழைப்பில்லாமல் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டால்பெரும்பாலும் அந்தப் பெண் கர்பமாவதில்லை” என்று அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் திருடாட் அக்கின் அவர்கள் பொதுக்கூட்டத்தில் பேசியதே!

Thursday, 31 January 2013

தீவிரவாத நிறப்பிரிகை

இது தமிழ்தாமரை இதழில் வெளிவந்த என் கட்டுரை.


நமது மாண்புமிகு உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே சில தினங்களுக்கு முன் நடந்த காங்கிரசு சிந்தனைக் கூட்டத்தில் பாஜக ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் தொண்டர்களிடையே தீவிரவாதத்தை வளர்க்கின்றன என்று உளறினார். அந்த உளறல் குறித்த கருத்துக்கள், வேதனைகள், கவலைகளை கருத்தில் கொள்ளுமுகமாக சங்க பரிவார அமைப்புகள் போராட்டம், கண்டனம் என்று ஆரம்பித்தார்கள்.

Friday, 11 January 2013

தே.சி.க - இதென்ன புதுக் கழகம்!

கழகம் என்ற பெயர் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. தமிழக மக்களின் சிந்தனையை மழுங்கடித்த ஈவெரா துவக்கிய திராவிடர் கழகம். அந்த மழுங்கிய சிந்தனையில் தொடங்கி மானாட மயிலாட நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகம். கணக்குக் கேட்டுப் பிரிந்து கணக்கற்ற ஓட்டுக்களில் வென்று கணக்காகப் பதின்மூன்றாண்டுகள் கருணாநிதியை நிரந்தர எதிர்க்கட்சித் தலைவராக முடக்கிவைத்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

Wednesday, 2 January 2013

மதம் பரப்ப வாரீர்: விதிகள் விலக்கி வலைவிரிக்கும் அரசு

ஒரு நாட்டுக்கு அந்த நாட்டைச் சாராத ஒருவர் போகவேண்டுமென்றால் நுழைவாணை எனப்படும் விசா தேவை. சொந்த நாட்டில் அடையாளப்படுத்தித் தரப்படும் கடவுச்சீட்டு எனும் பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே நுழைவாணை தரப்படும். இல்லையென்றால் அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு மட்டும் சென்று வர அனுமதி பெறலாம்.

Friday, 14 December 2012

இதிஹாச நாயகர்களும் இந்த மண்ணின் பாரம்பரியமும்

உமைக்கு ஒரு பாகத்து ஒருவனும், இருவர்க்கு
ஒரு தனிக் கொழுநனும், மலர்மேல்
கமைப் பெருஞ் செல்வக் கடவுளும், உவமை
கண்டிலா நகர்அது காண்பான்,
அமைப்புஅருங் காதல் அதுபிடித்து உந்த,
அந்தரம், சந்திராதித்தர்
இமைப்பு இலர் திரிவர்; இது அலால் அதனுக்கு
இயம்பல்ஆம் ஏதுமற்றுயாதோ! 


”அயோத்தி நகருக்கு ஈடான, உவமை காட்டத்தக்க இன்னொரு நகரத்தை, உமையொரு பாகனாம் கயிலையம்பதியும், திருமகளும் நிலமகளும் நாயகனாய் வணங்கும் வைகுண்டபதியும், பொறுமையின் திருவுருவாய் விளங்கும் சத்தியலோகத்துப் பிரமனும்கூடக் கண்டதில்லை. அயோத்தி மாநகரத்துக்கு உவமையாகச் சொல்லக் கூடிய நகரம் எது என்பதைக் கண்டறியும் அடக்கமுடியாத ஆவலால் தானே சந்திரனும் சூரியனும் வானத்தில் கண்ணை இமைக்காமல் வலம் வருகிறார்கள். இதற்கு மேல் அயோத்தியின் சிறப்பு குறித்து எடுத்தியம்ப ஏதுமில்லை” என்பது தன் வீட்டுக் கட்டுத்தறியையும் கவிபாடச் செய்த கம்பநாட்டாழ்வார் சொல். 

Thursday, 6 December 2012

தேவசகாயம் பிள்ளை முக்தி - புதிரா புனிதமா

மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை முக்திபேறு பெற்றவர் என அறிவிக்கும்  பெருவிழா நாகர்கோவிலில் கார்த்திகை மாதம் 17ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (02/12/12) நடைபெற்றது. இது ஜெயா தொலைக்காட்சியின் கூட்டற்குறி அலைவரிசையில் (Jaya Plus Channel) நேரலை காட்டப்பட்டது. அப்போது பிள்ளைவாள் என்ன தவம் செய்து முக்தி பெற்றார் என்று  தேடிப் பார்ப்போம் என்று இணையத்தில் இணைந்த போது குழப்பமே மிஞ்சியது. 

Saturday, 24 November 2012

திடீரென்று மேடையேற்றி விட்டால் சமாளிப்பது எப்படி?

சென்ற சனிக்கிழமை 17/11/12 அன்று மாலை குரோம்பேட்டை வட்டாரம் குமரன் குன்றம் அருகில் உள்ள விவேகானந்தா பள்ளியில் தமிழ்நாடு வாசகர் வட்டம் கூட்டம் இருக்கிறது என்று திராவிட மாயை சுப்பு அவர்கள் தெரிவித்திருந்தார். கூட்டம் 6 மணிக்குத் தொடங்கும் என்று சொல்லியிருந்தார். போகிற வழியில் எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கிவிட்டு நடையைக் கட்டினேன்.

Saturday, 14 July 2012

மெய்வருத்தக் கூலியும் செயலின் முழுப்பலனும்

ஸ்ருங்கேரி மஹா ஸந்நிதானம் ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் சென்னை வந்த அன்று அருளிய அனுக்ரஹ பாஷணத்தில் ஒரு கருத்தைச் சொன்னார். "குருவருளும் திருவருளும் இன்றி எவ்வளவு திறமை கொண்டு என்ன செய்தாலும் உரிய பலன் கிட்டாது" என்றார். அதற்கு எல்லாம் குருவருளும் இறையருளும் தான். நான் எதுவும் செய்யவில்லை என்று கர்வப்படக்கூடாது என்று விளக்கம் சொல்லிக் கொண்டேன். சற்றே யோசித்த போது ஒரு கேள்வி எழுந்தது.

Saturday, 26 November 2011

26/11 கொடுமையும் இந்திய-இஸ்ரேல் நட்புறவும்

கடந்த 2008 நவம்பர் 26 அன்று மும்பை நகரில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 200க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். அதில் காவல்துறை கைது செய்த கசாப் இன்றும் மும்பை சிறையில் சகல வசதிகளுடன் இருக்கிறான். தீவிரவாதிகள் தாக்குதலுக்குத் தேர்வு செய்த இடங்கள் வணிக முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், மத இன பேதமற்று அனைத்து மக்களும் அதிகம் கூடும் இடங்கள். ஒரு தொடர்வண்டி நிலையம், ஒரு தேநீர் விடுதி, இரண்டு நட்சத்திர விடுதிகள், ஒரு யூத சமூக மையம் ஆகிய இடங்கள் தாக்குதலுக்கு உள்ளாயின.

Monday, 17 January 2011

ஹிந்து தீவிரவாதமும் கடமை தவறாத சட்டமும்!

2007ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி பானிபட் நகருக்கு அருகில் ஸம்ஜௌதா எக்ஸ்பிரஸ் (Friendship Express என்ற ஆங்கில மொழியாக்கத்தை நட்பு விரைவுத் தொடர்வண்டி என்று தமிழாக்கலாம்) தொடர்வண்டியில் பயங்கரமான குண்டு வெடித்தது. 68 பேர் இறந்து போனார்கள், 50 பேர் காயமடைந்தார்கள். லஷ்கர் எ தய்யிபா, ஜய்ஷ் எ மொஹமது போன்ற அமைப்புகளும் அவர்களுடன் சேர்ந்த பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கங்களும் காரணம் என்று நம் அரசு அறிவித்தது.