ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Sunday 28 April 2013

டி எம் கிருஷ்ணாவின் அபஸ்வரம்

டி எம் கிருஷ்ணா என்று ஒரு கர்நாடக சங்கீதப் பாடகர் இருக்கிறார். அவருக்கு திடீரென்று அரசியல் பேசும் ஆசை வந்துவிட்டது போலிருக்கிறது. காலைக் காப்பியோடு நாளிதழைப் படித்தபடி பேசிவிட்டுப் போவது எல்லா மாந்தரும் செய்வதே. அதில் யாதொரு ஆட்சேபமும் யாருக்கும் இருக்க முடியாது. ஆனால் ஒரு அரசியல் தலைவர் பற்றியும் ஒரு அரசியல் வாரிசு பற்றியும் கர்நாடக இசை மேதை என்ற அடையாளத்துடன் பொதுவில் கருத்துக் கூறும் போது உண்மைகளை ஆராய்ந்து பார்த்துப் பேசவோ எழுதவோ வேண்டும்.

Friday 19 April 2013

பிளந்து விட்டார்கள் பாரதத்தை, ஆனால், பிள‌க்க முடியுமா நம் தர்மத்தை - பாகம் 6


ஹிந்துக்களின் புனித நதியான கங்கை, ரிக் வேதத்தில் ஒரே ஒரு முறைதான் சொல்லப்பட்டுள்ளது, ஆனால் சரஸ்வதி நதியோ குறைந்தது 60 முறை சொல்லப்பட்டுள்ளது. கிறிஸ்துவ மத வியாபாரிகள் இந்த நதியின் குறிப்பை ஏதோ கற்பனை என்று நினைத்தார்கள். இல்லை எங்கோ மத்திய ஆசியாவில் இந்த நதி இவர்களின் கற்பனை ஆரிய படையெடுப்பு சித்தாந்தப்படி ஓடிக் கொண்டிருக்கும் என்று நினைத்தார்கள்.

Monday 15 April 2013

பிளந்து விட்டார்கள் பாரதத்தை, ஆனால், பிள‌க்க முடியுமா நம் தர்மத்தை பாகம் 5


நண்பர்களே, இது மிக முக்கியமான‌ பகுதி அனைவருக்கும் பகிருங்கள்.

அடுத்து இந்த மதவியாபாரிகள் சொன்ன முக்கிய விடயம் என்னவென்றால் ஆரியர்கள் இரும்பை கையாளும் நுட்பத்தை தெரிந்து வைத்திருந்தார்கள், அதனால் அவர்களால் திராவிடர்களை வெல்ல முடிந்தது எனும் கூற்று. வேதத்தில் ஆயுதங்களை "அயாஸ்" என்று குறிப்பிடுவதை இவர்கள் இரும்பு என மொழிமாற்றம் செய்தார்கள். மற்றுமொறு காரணம் இந்து சமவெளி நாகரீகத்தில் இரும்பின் உபயோகம் கண்டுப் பிடிக்காதது தான்.

Saturday 13 April 2013

பிளந்து விட்டார்கள் பாரதத்தை, ஆனால், பிள‌க்க முடியுமா நம் தர்மத்தை ? பாகம் 4

ரிக் வேதத்தில் இருந்து எதை எடுத்து குறிப்பிட்டார்கள் ? ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்ட, இந்திரனுக்கும் தசயுக்களுக்கும் நடந்த போரை இவர்கள், ஆரியர்களுக்கும், திராவிடகளுக்கும் நடந்த இணச்சண்டை என்று திரித்து விட்டனர். இந்திரன் வெண்ணிற தோல் உடையவன் என்பதாலும், தசயுக்கள் கரிய நிறம் கொண்டவர்கள் என்பதாலும் அதை இவர்களின் மத வியாபாரத்திற்கு உபயோகித்துக் கொண்டனர்.

Wednesday 10 April 2013

பிளந்து விட்டார்கள் பாரதத்தை, ஆனால், பிள‌க்க முடியுமா நம் தர்மத்தை ? பாகம் 3


இந்தியாவை குறித்து ஆராய்ச்சி செய்த பல வெளிநாட்டு அறிஞர்கள், குறிப்பாக அகஸ்த் வில்ஹம், ஆர்தர் மற்றும் ஹெர்ன் வில்ஹெம் ஆகியோர் அதன் வேத இலக்கியங்களையும், கோட்பாடுகளையும், தத்துவ ஆழத்தையும் கண்டு வியப்போடு பாராட்டினர்.. ஆனால் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இந்திய துனைக்கண்ட ஆராய்சியாளர்கள் என்ற பெயரிலும் சரித்திர ஆய்வாளர்கள் என்ற பெயரிலும் இந்தியாவுக்கு நுழைந்தது பெரும்பாலும் கிறிஸ்துவ மிஷநரி கும்பல்கள்தான். இவர்களின் முக்கிய பணியே தாங்கள் பிடித்து வைத்திருக்கும் அடிமை நாட்டின் மீது கிறிஸ்துவத்தை திணிப்பது தான்.

Sunday 7 April 2013

பிளந்து விட்டார்கள் பாரதத்தை, ஆனால், பிள‌க்க முடியுமா நம் தர்மத்தை ? பாகம் 2

ஆங்கிலத்தில் "வல்லவனே நல்லவன்" என்று ஒரு பழமொழியுண்டு. அது சரித்திரத்தை பொறுத்தவரை உண்மை. எவன் வல்லவனோ அவனே சரித்திரத்தை தீர்மானிக்கின்றான். அதாவது சரித்திரத்தை தன்னை ஆராதிக்கும் வகையில் மாற்றி எழுதுகிறான். மனித வாழ்வில் இப்படித்தான் பல சரித்திரங்கள் புரட்டி போடப் போடுகின்றன. பொருள் சார்ந்த இன்றைய உலகில் சரித்திரத்தை படிக்கும் ஆர்வம் கொண்டவர்கள் குறைகின்றனர். எந்த நாடு தன் சரித்திரத்தை காக்கிறதோ, எந்த நாட்டு மக்கள் சரித்திரத்தை மறக்காமல் அதன் பாடங்களை மனதில் பதிந்துக் கொள்கிறார்களோ. அவர்களுக்கு அழிவே இல்லை. அத்தகைய மக்கள் சாம்பலில் இருந்து உயிர்தெழும் பிணிக்ஸ் பறவைகளாய் மீண்டும் மீண்டும் உயிர்த்து எழுவார்கள். யூதர்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணம். தங்கள் சரித்திரத்தை மறந்து தரம் குறைந்து திரிபவர்கள் முன்னேறுவது கடிணம். இந்தியர்கள் அதற்கு நல்ல உதாரணம். அதனால்தான் இத்தனை வளங்கள் இருந்தும் இந்த நாடு தன்னுடைய சக்திக்கு ஏற்ப இன்னும் வளர்ச்சி பெறவில்லை.

Thursday 4 April 2013

பிளந்து விட்டார்கள் பாரதத்தை, ஆனால், பிள‌க்க முடியுமா நம் தர்மத்தை ? பாகம் 1

முகநூலில் Enlightened Master அவர்கள் எழுதிய அற்புதமான தொடர். என் வலைப்பூவில் வெளியிடுவதில் பெருமிதமே.

நம் தேசத்தையும் கலாசாரத்தையும் பிரித்து ஒற்றுமையைப் பிளக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியம் செய்த சதிகளும் அதற்குப் பலியான நம் முன்னோர்களின் அறியாமையையும் ஆராய்ந்து நாம் விழிப்படைய ஏதுவாக விளக்கங்கள் தரும் வியாசம் இது,.