RCEP கையெழுத்தாகவில்லை. ஏதோ தாங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக இது நடந்தது என்று காங்கிகள் புளுகுகிறார்கள்.
இதை ஆமோதித்து பல அறிவு சீவிகள் ஐயகோ பியூஷ் கோயல் தலைமையில் பேச்சுவார்த்தைக்கு ஒரு குழு போனதே அது மட்டும் வெற்றி பெற்றிருந்தால் நம் நாடு என்ன ஆகியிருக்கும் என்று கவலைப் படுகிறார்கள்.
கொஞ்சம் வரலாறு பார்ப்போமா?
RCEP நாடுகளுடனான நமது வணிக பற்றாக்குறை 2004ல் $7 பில்லியனாக இருந்தது. 2014ல் அது $78 பில்லியன் ஆனது. அதாவது இது நமது ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்குமான வித்தியாசம் டாலர் மதிப்பில். நம் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரித்து, நாம் இறக்குமதிக்குத் தரவேண்டிய பணம் பல மடங்கு உயர்ந்த போது எடுத்த நடவடிக்கை என்ன என்று காங்கிரசார் சொல்லவேண்டும். அந்தக் கால கட்டத்தில் ஆட்சியில் இருந்தது இராகுல காந்தியார் கட்சிதான். பொருளாதார மாமேதை மனமோகனச் சிங்கனார் தான் பிரதமர். சட்டமேதை, ஹார்வேர்ட் எம்பிஏ, இந்திராணி புகழ் பனாசினா நிதியமைச்சர்.
2010ல் ASEAN நாடுகளுடன் தடையற்ற வணிக ஒப்பந்தம் போடப்பட்டது. (மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா, பிலிப்பைன்ஸ், பர்மா, புருனே, வியட்னாம், லாவோஸ் ஆகிய 10 நாடுகள்)
2010ல் தென் கொரியாவுடன் தடையற்ற வணிக ஒப்பந்தம் போடப்பட்டது.
2011ல் மலேசியாவுடன் தடையற்ற வணிக ஒப்பந்தம் போடப்பட்டது. (ASEAN ஒப்பந்தம் இருக்கும் போது இது எதற்கு தனியாக?)
2011ல் ஜப்பானுடன் தடையற்ற வணிக ஒப்பந்தம் போடப்பட்டது.
2011-12ல் சீனாவுடன் தடையற்ற வணிகம் மற்றும் RCEP பேச்சுவார்த்தை நடத்தியே தீர வேண்டும் என்று பேச்சுவார்த்தை மேசைக்குப் போய் பிடிவாதமாக உட்கார்ந்து கொண்டது அன்றைய ஐமுகூ அரசு.
இதில் சேராவிட்டால் ஆசியாவில் தனிமைப்பட்டு நிற்போம் என்று காரணம் சொன்னவர்கள் பசியும் ம.மோ.சிங்கனாரும்.
சீனாவோ இந்தியா கையெழுத்துப் போட்டால் அதை வைத்து மற்ற சிறு குறு நாடுகளையும் மிரட்டி தன்னிடம் தேங்கியுள்ள பொருட்களை தள்ளிவிடலாம் என்று இருந்தது. அமெரிக்காவுடனான வணிகச் சண்டையில் சீனாவுக்கு பலத்த அடி.
ட்ரம்ப் MAGA என்று சொல்லி தொழில்கள் அமெரிக்காவுக்கு வரவேண்டும், அங்குள்ளோருக்கு வேலை வேண்டும் என்கிறார். மோடி Make in India என்று கம்பெனிகளை உள்ளே அழைக்கிறார்.
ஆனால் இன்று:
சீனம் தன் இளவட்டத் தலைமுறையை இழந்து வருகிறது. இனி அடித்து வேலை வாங்க அங்கே ஆள் குறைவு. ராணுவமா, கம்பெனி வேலையா என்று இளவயதினருக்குச் சொல்ல வேண்டிய நிலை அரசுக்கு. வெளிநாடுகளை மிரட்டி ரவுடித்தனம் செய்ய இனி முடியாது. ட்ரம்ப் போடா என்கிறார். மோடி இளநீர் எல்லாம் கொடுத்து கிளம்புங்க என்கிறார்.
இன்று தாய்லாந்து போய் பேசி கையெழுத்தெல்லாம் கிடையாது என்று சொல்லிவிட்டு, நான் சொல்லும் விவரங்களைப் பேசி எல்லா நாடுகளுக்கும் நல்லதாக முடிக்கப் பார்க்கலாம். இல்லாவிட்டால் பேச்சும் இல்லை வார்த்தையும் இல்லை. என் சந்தையில் நீ வியாபாரம் செய்ய நான் சொல்கிறபடி வா. நீ சொல்வதை அப்படியே நிறைவேற்ற வேறு ஆளைப்பார் என்று சொல்லியிருக்கிறார் மோடி.
சந்தை வேண்டும் என்போர் வருவார்கள்.
ஆனாலும் நாம் மிகுந்த எச்சரிக்கை கொள்ள வேண்டிய தருணம் இது. சீனம் தன் வணிகத்தை முன்னெடுக்க எதுவும் செய்யும். எதுவும்! என்ன ஏதென்று தெளிவில்லாமல் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் நம்மூரில் அதிகம்.
கடல்சார் பாதுகாப்பு பலப்பட வேண்டும். இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட சிறு நாடுகள் வழி வரும் சரக்கு போக்குவரத்து தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். சீனன் சுற்றிக் கொண்டு வர வாய்ப்புண்டு.
சீனச் சொம்புகள் பத்திரிகைகள் வாயிலாக ஏற்படுத்தும் இரைச்சலுக்கு தக்க பதிலடிகள் தரப்பட வேண்டும்.
இன்னும் ஆட்டம் அதிக்கரிக்கும் என்றே தெரிகிறது. ஆகட்டும் பார்க்கலாம். ஆட்டத்தின் முடிவிலே!