புலமைபித்தன் தமிழக அரசியலில் எழுதிய (வழமையான) ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பால.கௌதமன் அவர்களின் தெளிவான பதில்.
_____________________________________________________________________________
நடுநிலையாளராக
விமர்சிப்பதற்கு நாணயம் தேவை. ஈ.வே.ராவின் தொண்டன் என்பதால் மட்டுமே நீங்கள் நடுநிலையாளராகி
விட முடியாது. ஐயா புலமைப்பித்தன் அவர்களே, மோடி அவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்தத்தில்
உறுதியாக உள்ளவர் என்றும் தாங்கள் ஈ.வே.ராவின்
கொள்கையை ”அணு அளவும் பிசகாமல் ஏற்றுக் கொண்டவர்”
என்றும் 16.04.2014 தமிழக அரசியலில் எழுதி உள்ளீர்கள். இதில் தாங்கள் வைக்கும் குற்றச்சாட்டு
காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ் என்பது. காந்தி கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் உங்களால்
சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் வீர சாவர்கர்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உச்சநீதிமன்றம்
தீர்ப்பளித்த பின்னும் பொய்யுரைத்து மெய்ப்பிக்கும் கோயாபல்ஸ் தத்துவத்தை நீங்கள் பின்பற்றலாமா?
நீங்கள் இம்மியளவும் பிசகாமல் பின்பற்றும் ஈ.வே.ராவின் தத்துவமும் பொய்யின் அடிப்படையிலானது
தானோ?