ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Friday 23 October 2015

மறைக்கப்பட்ட உலகம் - வெங்கட் சாமிநாதன்

இந்தக் கட்டுரை திண்ணையில் வெளியானது. 

நிறுவனப் போராளிகள், சான்றளிக்கப்பட்ட எழுத்தாளர்கள், கட்சிகள், குழுக்கள் சார்ந்த எழுத்துத் தொண்டர்கள் உண்மையில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறார்கள் என்பதை எந்தப் பூச்சும் இன்றிச் சொல்லியிருக்கிறார் மறைந்த வெங்கட் சாமிநாதன் அவர்கள். உண்மை கசக்கும் என்பதை அவருக்கு இருந்த எதிர்ப்பின் வீச்சில் கண்டு கொள்ளலாம். அஞ்சலிக் கட்டுரைகளிலும் ஊடகங்கள் வஞ்சனை செய்கின்றன. ஆங்கிலத்தில் ஒரு மாதிரியாகவும் தமிழில் வேறு மாதிரியாகவும் எழுதி அரசியல் சரித்தன்மையை உறுதி செய்யும் இந்தப் போக்கைக் கடுமையாகக் கண்டித்தவர் வெங்கட் சாமிநாதன். அவருக்கு நம் உளமார்ந்த அஞ்சலிகள்.

Thursday 10 September 2015

தமிழ் நாட்டின் விழிப்பு - மஹாகவி பாரதியார்


கும்பகர்ணன் தூங்கினானாம். இலங்கையில் சண்டை நடக்கிறது. மூன்று லோகமும் நடுங்குகிறது. "ராமராவண யுத்தத்திற்கு ராமராவண யுத்தமே நிகர்' என்று முன்னோர் சொல்லியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சண்டையின் அதிர்ச்சியிலே கூட, கும்பகர்ணனுடைய தூக்கம் கலையவில்லை. ஆயிரக்கணக்கான ஆடுமாடுகுதிரைகளின் காலில் கூர்மையான கத்திகளைக் கட்டி அவன் மேலே நடக்கச் சொன்னார்கள்; தூக்கம் கலையவில்லை. ஏழெட்டு மேகங்களை அவன் காதுக்குள்ளே போய் இடியிடிக்கச் சொல்லி " ராவணன் கட்டளையிட்டானாம்; மேகங்கள் போய் இடித்தனவாம்; கும்பகர்ணன் குறட்டை நிற்கவே யில்லை.

மேற்படி கும்பகர்ணனைப்போலே சில தேசங்கள் உண்டு. அண்டங்களத்தனையும் இடிந்து விழுந்தாலும் காதுகேட்காத செவிடர் வாழும் தேசங்கள் சிலவுண்டு. அந்த தேசங்களிலே வாஸம் செய்வோர் மஹா பாவிகள். மாதுர் துரோகம், பிதுர் துரோகம், சகோதரத் துரோகம், தெய்வத் துரோகம், சுதேசத் துரோகம் முதலிய பெரிய பாதகங்கள் செய்து சீரழிந்த மானிடர் அப்படிப்பட்ட தேசங்களில் வாழ்கிறார்கள்.

ஆனால், ஹிந்து தேசம் அப்படி................யில்லை! இங்கு தமிழ் நாட்டைப்பற்றி முக்யமாகப் பேச வந்தோம்; தமிழ் நாடு மேற்படி மஹா பாதக ஜாப்தாவைச் சேர்ந்த தன்று, அன்று!





ராமலிங்க சுவாமிகளும், 'சுதேசமித்திரன்' சுப்பிரமணிய அய்யரும், இவர்களைப்போன்ற வேறு சில மகான்களும் தமிழ் நாட்டின் புதிய விழிப்புக்கு ஆதிகர்த்தாக்களாக விளங்கினர். ஹிந்து தர்மத்தின் புதுக் கிளர்ச்சிக்கு விவேகாநந்தர் ஆரம்பம் செய்தார். அவரைத் தமிழ் நாடு முதலாவது அங்கீகாரம் செய்துகொண்ட பிறகு தான், வங்கம், மாஹாராஷ்ட்ரம் முதலிய ஹிந்து தேசத்து மாகாணங்கள் அவருடைய பெருமையை உணர்ந்தன.

பூமண்டல முழுதிலும் பெரிய விழிப்பொன்று வரப் போகிறது. அதற்காதாரமாக ஹிந்துஸ்தானம் கண்ணை விழித்து இருபதாண்டுகளாயின. ஹிந்துஸ்தானத்துக்குள் தமிழ் நாடு முதலாவது கண் விழித்தது. ஆனால், இன்னும் புத்தி சரியாகத் தெளியாமல் கண்ணை விழிப்பதும் கொட்டாவி விடுவதுமாக இருக்கிறது.

Thursday 2 July 2015

மணிபத்ரபுரி @ மாணா - பாரதத்தின் கடைசிக் கிராமம்

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று பீற்றித் திரியும் அரசியலார், தமிழ் பிழைப்பாளர்கள் கெடுத்த தமிழகத்தில் வெளியூர்த் தமிழனே ஏமாற்றப்படும் அவலம் அடிக்கடி நடப்பது. அப்படி இருக்கையில் மொழி தெரியாத வேற்று மாநிலத்தவர், வேற்று நாட்டார் நிலை?

ஆனால், வடக்கே நிலை வேறு. பத்ரிநாத்துக்கு அருகில் இருக்கிறது அப்பகுதியின் பாரதத்தின் கடைசிக் கிராமமான மணிபத்ரபுரி என்கிற மாணா. நவீன வசதிகள் மிகச் சிலவே எட்டிப் பார்த்திருக்கும் அங்கே இந்த வந்தாரை வாழவைக்கும் மனப்பாங்கைக் கண்கூடாகக் கண்டோம்.

Saturday 7 February 2015

சமூகத்தினொரு பாகன்

இன்றைய தினங்களில் ஒரு வரைமுறை இல்லாமல் அமீபாவின் உருவம் போல வரையறுக்கப்படுவது தனிமனித உரிமை எனும் கோட்பாடு. ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைப் பற்றி மட்டுமே சிந்தித்துத் தன் நலனை என்பதை மட்டுமே யோசித்துப் பேசப்படுவதாகவே தனிமனித உரிமை, தனிநபர் சுதந்திரம் என்ற பெயர்களால் அழைக்கப்படும் கோட்பாடு உள்ளது. மனிதன் ஒரு சமுதாய விலங்கு என்பதில் சமுதாய என்ற சொல்லைப் பலர் வசதியாக மறந்துவிட்டு தனிமனித உரிமை பேசுவது வேடிக்கை.


சிலர் புரியாது செய்கிறார்கள், சிலர் ஒரு உள்நோக்கத்தோடு செய்கிறார்கள், சிலர் இப்படிச் சிந்திக்கப் பயிற்றுவிக்கப்பட்டதால் மாற்றுச் சிந்தனை வழியறியாது இதைச் செய்தபடி தற்குறியாகத் திரிகிறார்கள். இத்தனை நாட்களாக இல்லாத எதிர்ப்பு ஏன் இப்போது என்ற கேள்வி நியாயமானதே. இத்தனை நாட்களாக இருந்த எதிர்ப்பு வெளியே தெரியவரவில்லை. காரணம், ஊடகங்களில் நிரம்பி வழியும் சில உள்நோக்கர்கள், அவர்களால் பயிற்சியளிக்கப்பட்ட பலர், மற்றும் சில ஒத்து வாழ்வோர். இவர்களைத் தாண்டி இவர்களுக்கு எதிரான கருத்துக்கள் இவர்கள் நிரம்பியிருக்கும் ஊடகங்களில் வரும் என்று எதிர்பார்ப்பது இந்தி படிக்காமல் இருந்தால் தமிழ் வளரும் என்று நம்புவதைவிட முட்டாள்தனம்.