ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Saturday 23 February 2013

விசுவரூபம் - சாமானியனின் விமர்சனப் பார்வை.

கதை:

விஸாம் என்ற இந்திய இராணுவ வீரனை தாலிபான் - அல் காயிதா நடவடிக்கைகளைக் கண்காணிக்க சிஐஏ உதவியுடன் ஆஃபக்னிஸ்தான் அனுப்பி வைக்கிறது இந்திய உளவு அமைப்பு ரா. அங்கே அவர் பல தகவல்களை உளவறிந்து அனுப்புகிறார். ஆனால் அவர் முல்லா உமரால் அடையாளம் காணப்பட்டதும் விஸ்வநாத் என்ற ஹிந்துவாகச் சித்தரித்து நியூயார்க்கில் குடியமர்த்துகிறார்கள். அங்கும் தாலிபான் - அல்காயிதாவை அவர் உளவு பார்க்கிறார். அங்கே நியூயார்க்கில் அதே முல்லா உமர் கும்பல் வைக்கும் அணுகுண்டை புற்றுநோயியல் அணுசக்தி ஆராய்ச்சியாளரான தன் மனைவியின் உதவியுடன் செயலிழக்கச் செய்து உலகைக் காப்பாற்றுகிறார்.

Thursday 21 February 2013

முள்ளிவாய்க்கால்: இரத்தக் கால்வாய்?

எனக்கு விடுதலைப் புலிகள் என்ற தீவிரவாத இயக்கத்தின் மீது எள்ளளவும் மரியாதை கிடையாது. விடுதலைப் போராட்டத்திற்காகத் துவக்கப்பட்ட இயக்கம் ஒரு தனிமனிதனின் பேராசைகளுக்கு முக்கியத்துவமளித்தது. இன விடுதலைக்காகக் களம் கண்ட மாத்தையா உள்ளிட்ட பல முக்கியத் தளபதிகளைக் கொன்ற வரலாறுடையவர்கள் விடுதலைப் புலிகள். இந்த இயக்கம் ஆதரிக்கத் தக்கதன்று. அமிர்தலிங்கம் தொடங்கி நீலன் திருச்செல்வம் வரை இவர்களுக்கு இணக்கம் காட்டாத தமிழர்களைக் கொன்று போட்டதில் விடுதலைப் புலிகள் செய்த குற்றங்கள் ஏராளம். இவர்களை நம்பிய ஈழத்து மக்கள் பரிதாபத்துக்குரியவர்கள். அவர்களுக்கு நல்லதோர் தலைவன் இன்று வரை கிட்டவில்லை.

Tuesday 19 February 2013

அஃப்சல் குரு - மெத்தனமிக்க அரசும் கெட்ட அரசியலும்

தமிழ்தாமரையில் வெளிவந்த என் கட்டுரை இது.

கடந்த 2001ஆம் ஆண்டு நமது பாராளுமன்றத்தின் மீது லஷ்கர் ஏ தய்யபா மற்றும் ஜெய்ஷ் ஏ மொகம்மது ஆகிய ஜிஹாதி அமைப்புகள் கொலை வெறித்தாக்குதல் நடத்தின. தாக்குதலுக்கு வந்தவர்களை முதலில் அடையாளம் கண்டவர் கமலேஷ் குமாரி என்ற பாராளுமன்றக் காவலர்.
இவர் உஷார்படுத்தியதில் நம் காவல் படையினர் பதிலடி கொடுக்கத் தொடங்கினர். இந்தப் பெண் அந்தத் தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்தார். கமலேஷ் குமாரி சுட்டதில் தற்கொலைப் படையினரில் ஒருவனது உடம்பில் இருந்த குண்டு  வெடித்தது. அந்தப் பெண் காவலர் உட்பட 7 காவலர்கள் கொல்லப்பட்டனர். 18 பேர் காயமடைந்தனர். ஜிஹாதிகளில் இறந்த 5 பேர் இன்னும் தெளிவாக அடையாளம் காணப்படவில்லை.

Saturday 16 February 2013

டில்லி கற்பழிப்பும் கும்பமேளாக் கோடிகளும்!

நண்பர் பால.கௌதமன் எழுதிய கட்டுரை. இங்கே வெளியிடுகிறேன்....

இன்று காதலர் தினம்(பிப்ரவரி 14, 2013)! விதவிதமான கொண்டாட்டங்கள்!சில நகரங்களில் பூங்காக்கள்(park) இன்று மூடப்பட்டுள்ளதுஇதெல்லாம் ஒரு புறம் இருக்கஇன்று நூறு கோடியின் எழுச்சி (one billion rising) என்று ஈவ் என்ஸ்லெர் என்ற அமெரிக்க பெண்மணியின் அழைப்பை ஏற்றுபெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சம நீதி கோரி உலகம் முழுவதும் நூறு கோடி பெண்கள் 202 நாடுகளில் வீதிக்கு வரப்போகிறார்களாம்இந்தப் பெண்மணியை இந்த அறிவிப்பை செய்யத் தூண்டியது என்ன?

பலவந்தத்தின் மூலம்ஒத்துழைப்பில்லாமல் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டால்பெரும்பாலும் அந்தப் பெண் கர்பமாவதில்லை” என்று அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் திருடாட் அக்கின் அவர்கள் பொதுக்கூட்டத்தில் பேசியதே!

Saturday 9 February 2013

காந்திய அஹிம்சை - நிம்மதிக்கான வழி அல்ல

காந்திய அஹிம்சை என்று நாட்டில் இன்று போதிக்கப்படுவதும் அறிவுறுத்தப்படுவதும் துன்பமிகக் கொண்டு உழல்வதே சாலச்சிறந்த மனித வாழ்வு என்றும், குற்றமிழைத்தவனை மீண்டும் மீண்டும் மன்னித்துக் கொண்டேயிருப்பதே சாலச்சிறந்த மனிதத்தன்மை என்பதுமே. சுஹ்ரவர்தி முதலாக இப்படிப் பலரை மன்னித்தே இந்த தேசம் உருப்படாமல் போய்விட்டது. இந்த மீண்டும் மீண்டும் மன்னிப்பு என்ற பெரும்போக்கை முன் மற்றும் வழிமொழிவோரை காந்தியார் ஒரு போதும் மன்னிக்கமாட்டார் என்பது என் எண்ணம்.

Friday 8 February 2013

டோண்டு ஐயாவுடனான என் நேரங்கள்.

டோண்டு ராகவன் அவர்களின் மறைவு ஏற்படுத்திய சோகத்தில் இருந்து நான் முழுதும் மீளவில்லை. 6/2/13 அன்று சேதி கேட்டபின் அலுவலகத்தில் விட்டத்தை விழித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். மீட்டிங் என்றதும் வழக்கத்தை விட இரட்டிப்பாக 6 கருங்குளம்பியங்களை (Black Coffee) 2 மணி நேரத்தில் அருந்தினேன்.

Wednesday 6 February 2013

டோண்டு ராகவன் இறைவனடி சேர்ந்தார்.

டோண்டு என்று இணைய உலகில் குறிப்பாகத் தமிழ்ப் பதிவுலகில் பிரபலமான நரசிம்மன் ராகவன் இன்று நம்மிடையே இல்லை.  சூரியன் உதிப்பதோ மறைவதோ இல்லை என்ற உண்மையைக் கேள்விக்குறியோடு பார்ப்பது போலவே மனம் இந்த உண்மையையும் நம்ப மறுக்கிறது. பொறியாளார், பன்மொழி வித்தகர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், நூலகள் பல வாசித்தவர், உலக அனுபவம் மிக்கவர். அந்த அனுபவங்களைப் பிறரும் பயன் பெறத்தரும் வகையில் பதிவுகள் எழுதியவர். நல்ல நண்பர், சிறந்த ஆலோசகர், நேர்மையான வழிகாட்டி.

Saturday 2 February 2013

உலகநாயகன் ? ஒரு சாமானியனின் பார்வை

பார்த்தசாரதி என்கிற கமலஹாசன். 58 வயது. தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு கலைஞன் (ர் போட்டால் பாசத்தலைவனுக்குப் பாராட்டுவிழா நினைவுக்கு வந்து தொலைக்கும்). நல்ல நடிகர். சினிமா தொழில்நுட்பம் குறித்து அவருடைய அறிவு சிறப்பானது. சமீப காலமாக ஹாலிவுட் என்றறியப்படும் அமெரிக்கத் திரையுலகின் சிறந்த படங்களைத் தழுவிப் படமெடுத்த்தார். அவர்களது மேக்கப், கேமரா உள்ளிட்ட பல தொழில்நுட்ப விவரங்களைக் கற்றறிந்தோ அல்லது ஆள்கொணார்ந்தோ இங்கே அறிமுகப்படுத்தியவர்,