ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Monday, 17 January 2011

ஹிந்து தீவிரவாதமும் கடமை தவறாத சட்டமும்!

2007ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி பானிபட் நகருக்கு அருகில் ஸம்ஜௌதா எக்ஸ்பிரஸ் (Friendship Express என்ற ஆங்கில மொழியாக்கத்தை நட்பு விரைவுத் தொடர்வண்டி என்று தமிழாக்கலாம்) தொடர்வண்டியில் பயங்கரமான குண்டு வெடித்தது. 68 பேர் இறந்து போனார்கள், 50 பேர் காயமடைந்தார்கள். லஷ்கர் எ தய்யிபா, ஜய்ஷ் எ மொஹமது போன்ற அமைப்புகளும் அவர்களுடன் சேர்ந்த பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கங்களும் காரணம் என்று நம் அரசு அறிவித்தது.
இந்தியா பாகிஸ்தான் இரு நாட்டு அரசுகளும் குண்டு வெடிப்பைக் கடும் சொற்களால் கண்டித்தன. பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு ஒரு நாள் முன்பு இந்தக் கொடூரம் நிகழ்ந்தது. அன்றைய ரயில்வே மந்திரி லல்லு குண்டு வைத்தவர்களைக் கண்டித்துவிட்டு பாதிக்கப்பட்டவர்க்குப் பணம் தருவதாகச் சொன்னார்.

பிரதமர் மன்மோகன்சிங் கவலையும் கடுந்துயரமும் கொண்டார். பாஜக பாகிஸ்தான் 2004ல் கொடுத்த வாக்கின் படி எல்லை தாண்டிய பயங்கரவாத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் படி மத்திய அரசை நிர்பந்தித்தது. முஷரஃப் வழக்கம் போல "இது போன்ற தாக்குதல்கள் நட்பு பாராட்ட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வலு சேர்க்கின்றன" என்றார். (இது பிள்ளையைக் கிள்ளி விட்டுத் தொட்டிலையும் ஆட்டும் பாகிஸ்தானிய அனிச்சைச் செயல்.)

இதில் காயமடைந்த பாகிஸ்தானியர் 10 பேரை அழைத்துச் செல்ல பாகிஸ்தானின் விமானப்படை விமானம் வந்தது. 10ல் 3 பேரைத் திடீரென்று காணவில்லை. இதில் பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் பற்றி ஒரு பாகிஸ்தானியர் புலம்பினார். 5 பிள்ளைகளைப் பறிகொடுத்த சோகத்தில் இருப்பவனிடம் பரபரப்புக்காக கதை கேட்டார்கள் என்றும், இந்திய அதிகாரிகள் விசாரணை என்று டார்ச்சர் கொடுத்தனர் என்றும். இந்திய அதிகாரிகள் வரைந்து வைத்த படங்களைக் காட்டித் தெரியுமா தெரியுமா என்று கேட்டர்கள் என்றார். இது நம்மூரில் பழகிப் போன வழக்கம்தான். (பாகிஸ்தானில் மட்டும் என்ன வாழ்கிறது?)

போலீஸ் விசாரணையில் குண்டை நானே எறிந்தேன் என்று ஒப்புக்கொண்டார் ஒரு பாகிஸ்தானி. ஆனால் அவன் குடிகாரன், விடிந்தால் போய்விடும் அவன் பேச்சு நீதிமன்றத்தில் எடுபடாது என்றார் ஹரியாணா காவல்துறை அதிகாரி. அதுவும் ஒரு கேஸ், அங்கேயே கிடக்கிறது என்ற வகையில் மார்ச் 2007லிருந்து இருந்துவந்தது இந்த வழக்கு. ஸம்ஜௌதா எக்ஸ்பிரஸில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ATM (Anti-Terror Mechanism) என்று குழு அமைத்து இரு அரசுகளும் செயல்பட்டன.

மார்ச் 26, 2008ல் சிமி அமைப்பின் தலைவனும், லஷ்கர் எ தய்யிபா பணியாளுமான ஸஃப்தர் நகோரி என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டு ஸம்ஜௌதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்புக்கு தானே பொறுப்பு என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளான். கர்நாடகத்திலும் மத்தியப்பிரதேசத்திலும் காடுகளில் முகாம் அமைத்து தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளித்துள்ளான் இந்த நகோரி.

நவம்பர் 2008ல் ஸ்ரீகாந்த் புரோகித் என்ற இராணுவ அதிகாரி இந்த குண்டு வெடிப்புக்கு உதவி செய்த்ததாகக் கைது செய்யப்பட்டார். இவர் அபிநவ் பாரத் எனும் ஹிந்து தேசியவாதக் குழுவின் உறுப்பினரும் ஆவார். விசாரணை தொடர்ந்தது. 2009 ஜூலையில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நிதித்துறையும், ஐ.நா. பாதுகாப்ப்பு சபையும் லஷ்கர் எ தய்யிபாவுக்கு தடை விதித்ததோடு அரிஃப் கஸ்மானி என்ற நபரை குண்டு வெடிப்பில் முக்கியப் பங்காற்றியவர் என்று அறிவித்தது.

விக்கிலீக்ஸ் வெளியீடுகளில் டேவிட் ஹெட்லி இந்த ஸம்ஜௌதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்புக்குக் காரணமானவர் என்று ஆதரங்களைத் தந்தது. நமது தேசிய விசாரணை முகவம் லஷகர் எ தய்யிபா பங்கை உறுதி செய்தது. இந்த இரு விஷயங்களிலும் வழக்கம் போல மெத்தனம்.

ஆனால் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் இராணுவ அதிகாரி புரோகித் குறித்த விவரங்களை இந்தியா மறைக்கிறது என்று குற்றம் சாட்டினார். இராணுவ அதிகாரி புரோகித் பாகிஸ்தானிய தீவிரவாதிகளை விலைக்கு வாங்கி குண்டு வெடிப்பைச் செய்தார் என்றும் மாலிக் குற்றம் சாட்டினார்.


ஆனால், ஸஃப்தர் நகோரி narco பரிசோதனையில் இராணுவ அதிகாரி புரோகித்துக்கும் ஸம்ஜௌதா குண்டு வெடிப்புக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லியிருக்கிறான். அவனது கூட்டாளிகளான கம்ருதீன் நகோரியும், ஆமிர் பர்வேசும் narco பரிசோதனையில் இதை உறுதி செய்தனர். மேலும் ஸம்ஜௌதா குண்டு வெடிப்புக்கு தானும் தன் அமைப்பினரும் துணை போனது முதற்கொண்டு குண்டு வைத்த வழிமுறைகள் வரை வாக்குமூலம் அளித்தனர்.

இது போக மும்பை, ஹைதராபாத், அஜ்மீர் ஆகிய இடங்களில் நடந்த வன்முறைகளுக்கும் இவர்கள் பொறுப்பேற்றனர். மாலேகான் குண்டு வெடிப்பு, கொல்கத்தா அமெரிக்க உதவித் தூதரகத் தாக்குதல் இதிலே எல்லாம் தமக்கிருந்த பங்கை இந்த சிமி தலைவர்கள் ஒப்புக் கொண்டனர். 

டேவிட் ஹெட்லியின் முன்னாள் மனைவியும் அவனுக்கும் ஸம்ஜௌதா குண்டு வெடிப்புக்கும் இருக்கும் சம்பந்த்தத்தை உறுதி செய்தார். இந்நிலையில் ரஜாக் என்பவன் பற்றியும் அவன் பாகிஸ்தானியருக்குச் செய்த உதவிகள் பற்றியும் விலாவாரியாக விவரித்துள்ளனர், சிமி குழுவினர். இந்த ரஜாக்குக்கு பாகிஸ்தானில் பல சொந்தபந்தங்கள் இருப்பதாகவும் நகோரி குழுவினர் சொல்லியிருக்கிறார்கள்.

இப்படி இருக்கையில் "எல்லாம் கிடக்க கிழவி சமைஞந்தாளாம்" என்ற கதையாக சுவாமி அஸீமானந்த் என்பவரை ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்பு போலீஸ் கைது செய்தது. இந்திரேஷ் குமார் என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்களில் ஒருவர் குற்றம் சாட்டப்பட்டார். இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ராஷ்ட்ரிய முஸ்லிம் மோர்ச்சா என்ற பிரிவின் தலைவர். அயோத்தி உள்ளிட்ட பல பிரச்சினைகளில் சிறுபான்மையினருடனான கருத்து வேறு பாடுகளைக் களைய இந்தப்  பிரிவு செயலாற்றுகிறது.

சுவாமி அஸீமானந்த் வனவாசி கல்யாண் ஆஷ்ரம் என்ற அமைப்பின் செயல்பாடுகளில் முக்கியப் பங்காற்றியவர். ஒரிஸ்ஸாவில் கொலை செய்யப்பட்ட சுவாமி லக்ஷ்மணானந்தா இந்த அமைப்பின் முக்கியஸ்தர் தான். இந்த அமைப்பின் செயல்பாடு பாரதத்தின் பழங்குடி இன மக்களைத் தம் மண்ணின் பாரம்பரியப் பண்பாட்டில் இருந்து வழுவி தென் அமெரிக்க்கர்கள் போல சுயஅடையாளம் அழிந்து போகாமல் காப்பாற்றுவது.

இந்த சுவாமி அஸீமானந்த் வழக்கில் ஓட்டைகள் பல. அரசுத்தரப்பு பல சிக்கலான கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். அவற்றில் சில:
  • சுவாமி அஸீமானந்தின் வாக்குமூலம் நகோரியின் வாக்குமூலத்தை நகலெடுத்தது போலவே ஓரெழுத்தும் பிசகாமல் இருப்பது எப்படி?
  • Narco பரிசோதனையில் தாங்கள் தான் குண்டு வைத்ததாக நகோரியின் கும்பல் ஒப்புக்கொண்டதே? அந்த வாக்குமூலத்தின்  நிலை என்ன?
  • சுவாமி அஸீமானந்த் வாக்குமூலத்தை 164 CrPCன் கீழ் பதிவு செய்ய தேசிய விசாரணை முகவம் (NIA) காட்டிய அவரசத்துக்கு என்ன காரணம்? மறுநாள் வாய்தா இருக்கும் போது முந்திய நாளே அவசரப்படுத்தியதை நீதிபதி ஏற்கவில்லை.அவரது வழக்கறிஞர் வற்புறுத்தி வாக்குமூலம் வாங்கப்பட்டது என்கிறார். இதுவரை NIA அதை மறுக்கவில்லை.
  • சுவாமி அஸீமானந்த் தன் சகோதரருக்கு எழுதிய கடிதம் அவர் வாக்குமூலம் வற்புறுத்தலில் பெறப்பட்டதில்லை என்பதற்கு அதாரமாகக் காட்டப்படுகிறது. டிசம்பர் 18, 2010ல் சுவாமி அஸீமானந்த் வாக்குமூலம் கொடுத்தார் என்று அரசுத் தரப்பு சொல்கிறது. அவர் சகோதரருக்கு எழுதிய கடிதம் டிசம்பர் 20, 2010 தேதியிட்டது. வாக்கு மூலம் கொடுத்தபின் உண்மையைச் சொல்ல விழைவதாக இந்திய-பாகிஸ்தான் ஜனாதிபதிகளுக்கு அவர் கடிதம் எழுத வேண்டிய அவசியம் என்ன? வாக்குமூலம் கொடுத்து 2 நாட்களுக்குப் பிறகு எழுதிய கடிதம் எப்படி வாக்குமூலத்துக்கு ஆதாரமாகும்?
  • கைது செய்து கண்காணிப்பில் வைத்திருக்கும் ஒருவர் எழுதிய கடிதத்தை அவரது சகோதரரின் வீட்டில் போய் ஏன் எடுக்கவேண்டும். சிறை அதிகாரிகள் அந்தக் கடிதத்தை எப்படி வெளிச்செல்ல அனுமதித்தனர்?
  • டேவிட் ஹெட்லிக்கு இந்தியாவில் நடந்த குண்டு வெடிப்புகளில் பங்கு இருப்பது பற்றி அவனது முன்னாள் மனைவி கொடுத்த வாக்குமூலத்தின் மீது என்ன நடவடிக்கை எடுத்தனர்?
  • சுவாமி அஸீமனந்த் மற்றும் இந்திரேஷ் குமார் குறித்த வாக்குமூலம் ஆதாரங்கள் உள்ளிட்ட வழக்கின் முக்கிய விஷயங்கள் நீதிமன்றத்துக்கு வருமுன் ஊடகங்களுக்கு ஊட்டப்படுவது ஏன்? 
சட்டப்படி இந்தக் கேள்விகளுக்கு தக்க பதில்களை அரசுத் தரப்பு அளித்துவிட்டால் சட்டம் தன் கடமையைச் சரிவர ஆற்றுகிறது என்பதை ஒப்புக் கொள்ளலாம். பதில் இல்லாத வரையில் சுவாமி அஸீமனந்த் மீதான் நடவடிக்கை மண்ணின் பாரம்பரியத்தை நிலைநாட்டுவது பொறுக்காத அந்நிய சக்திகளின் கைக்கூலிகளின் கைவேலை என்றே கொள்ளவேண்டும்!

தாய் மண்ணே வணக்கம்!!

4 comments:

எல் கே said...

இவர்கள் புலன் விசாரணை செய்யும் லட்சணம் தெரியாதா ?? யாரையோ திருப்தி செய்ய இவை செய்யப் படுகிறது

Arun Ambie said...

நல்வரவு எல் கே!

CBIன் லட்சணம் தெரிந்ததே! சோனியாவின் சொம்புகள் அவர்கள். சுவாமி அஸீமானந்த் விஷயத்தில் ஹிந்துக்கள் வாயடைத்துப் போயிருக்கிறார்கள் என்று ஒரு காங்கிரசுக்கரர் பிதற்றக் கேட்டேன். பதிவுலகில் பல செக்கு(லர்)மாடுகள் அவ்வாறே குதூகலிக்கக் கண்டேன். அதை மறுக்கவே இந்தப் பதிவை எழுதினேன்.

எல் கே said...

பலர் இங்கு அப்படிதான். நீங்கள் என்ன எழுதினாலும் மாறமாட்டார்கள். மாறாக உங்களையும் தீவிரவாதி என்றே சொல்லுவர் :) . இதை எல்லாம் படித்து சிரித்துவிட்டு செல்லவேண்டும்.

Arun Ambie said...

சிரிக்கவேண்டும். அதோடு மறக்காது தேர்தலில் வாக்களிக்கவும் வேண்டும் நண்பரே!