ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Tuesday 11 January 2011

சுய புராணம்

எனக்கு ஊர் இராஜபாளையம். சற்றே மீதமிருக்கும் பசுமை படர்ந்த மலைகள் சூழ்ந்த எளிய அழகிய சிறுநகரம் அது. இறக்குமதியான நவநாகரிகம் ஆங்காங்கே தலைகாட்டினாலும் பாரம்பரியப் பாசத்தை தம்மகத்தே இன்னும் கொண்டிருக்கும் மக்கள் எமர்.



என் தந்தை ஓய்வு பெற்ற அரசு ஊழியர். ஓய்வுக்காலத்தை அறப் பணிகளில் கழிக்கிறார். தாய் குழந்தைகளுக்கு அறநெறி, நீதிக்கதைகள், இறைபக்தி ஆகியவற்றைப் பல்லாண்டுகளாகக் கற்பிக்கிறார். இறைவனடி சேர்ந்துவிட்ட எம் பாட்டனார் ஓய்வு பெற்ற ஆசிரியர். 60 ஆண்டுகள் இடைவிடாது சபரி மலைக்கு யாத்திரை சென்ற குருசுவாமி. இழை பிரியாத இறை நம்பிக்கையை வாழ்வின் அடிநாதமாகக் கொண்ட பரம்பரை எமது.


இராஜபாளையத்தின் நீர் ஆதாரத்தை பாதுகாத்து எமர் வாழ்வு சிறக்க வழிசெய்யும் நீர் காத்த ஐயன் எமது குல தெய்வம். அவர் 'வடிவுடைநாயகர்' என்பது நேரிலும் புகைப்படத்திலும் கண்டோர் கூறும் கருத்து. அவர் வரப்பிரசாதி என்பதற்கு வாழ்வோர் சாட்சி.

சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தைச் சிறப்பிக்கும் ஆச்சார்ய மஹா சந்நிதானம் ஸ்ரீ பாரதி தீர்த்தர் எம் குரு. BPO துறையில் பணி எனக்கு. Service Delivery Manager. மேலும் Lean, Six Sigma வல்லுனன். அரசியல் கூர்நோக்கன், பொருளாதாரம் கற்றவன், ஆன்மிகம் அறிந்தவன் (இன்னும் அதில் தெளியவில்லை), தமிழ் ஆர்வலன், இன்னும் இன்னபிற ஆர்வங்கள் பல கொண்டவன்.

___________________________________________________________________________
http://hmsjr.wordpress.com/ எனும் தளத்தில் எண்ணங்களைப் பதிந்து கொண்டிருந்தேன்.  Bloggerல் இருக்கும் பல வசதிகள் அதில் கிடைப்பதில்லை என்பதனால் இங்கே மாறிவிட்டேன்.
___________________________________________________________________________
முதுகுடுமிப் பெருவழுதி பாண்டிய மாமன்னன். சிறந்த சிவபக்தன். பல முன்னேற்றப் பணிகள் பல செய்தவன். பாண்டிய நாட்டின் உள்கட்டமைப்புகள், கோவில்கள், வணிகம் ஆகியவற்றுக்கு அவன் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து ஆண்டான் என்பது வரலாறு. அவனை எனக்குப் பிடிக்கும்.
___________________________________________________________________________
 படங்கள் உதவி: Google. Sharadha Peetam Website

1 comment:

Anonymous said...

Τhanks iin support of shаring such a nice thinking, pаragraph
is nice, thats why i have гead it fully

Check оut mmy ωebpage; Betsson Mobile