பழம்பெருமை மிக்க சென்னை ஸம்ஸ்க்ருதக் கல்லூரி பாரதத்தின் பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பதில் முன்நிற்கும் நிறுவனம். கலைமகளின் உறைவிடமான அந்தக் கல்விக்கூடம் அலைமகளின் ஆசியை வேண்டுமெனக் கேட்கும் நிலையில் இருக்கிறது. தமிழகத்தின் பழமையான ஒரு ஸம்ஸ்க்ருத மொழியாராய்ச்சி நிறுவனம் ஸ்ரீ குப்புஸ்வாமி ஸாஸ்த்ரி ஸம்ஸ்க்ருத ஆராய்ச்சி மையம். இது அரசு தரும் நிதியும் பெற்றுச் செயல்பட்டு வந்தது. தற்போது சிலபல காரணங்களால் அரசு உதவி தடைப்பட்டு நிற்கிறது. அதனால் இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் மந்தநிலை அடைந்துள்ளன.
அரசியல், பொருளாதாரம், நிர்வாகம், சர்வதேச உறவுகள், நாட்டு நடப்பு, குறித்த என் எண்ணங்களையும், என் அனுபவங்களையும் இங்கே பதிவேன்!
Disclaimer
நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.
இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.
அன்புடன் என்றும்,
அருண்அம்பி. (@arunambie)
Tuesday, 26 June 2012
Monday, 25 June 2012
வர்ணாஸ்ரம விதாயினீ - ஒரு பாமரனின் புரிதல்
சமீபத்தில் இணைய விவாதம் ஒன்றில் ஒரு புத்திசாலியால் மடத்தனமான கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. தமிழ் இணைய வெளியில் விவரமாகச் சிந்திப்பவர் என்று பொதுவாக அறியப்படும் நபர் அவர். தெளிவான புரிதல் இல்லாமல் பேசமாட்டார் என்று பொதுவாக அவர் பற்றியொரு கருத்து உண்டு. அவருக்கு என்ன அழுத்தங்களோ நெருக்குதல்களோ தெரியவில்லை. சற்றே சறுக்கிவிட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆனைக்கே சறுக்குமாம். அவருக்குச் சறுக்கக் கூடாதா?
Friday, 15 June 2012
சிருங்கேரி மஹாஸந்நிதானம் சென்னை வந்தார் - மகிழ்ந்து கூவியது மைக்
மாமனிதர்கள் வருகைக்காக மாங்கங்கள் காத்திருப்பதில் வியப்பில்லை. சென்னை நகரத்து அடியார்கள் 17 ஆண்டுகளாய்க் காத்திருந்தனர். இவ்வாண்டு கோடம்பாக்கம் மீனாக்ஷி கல்லூரி சாரதாம்பாள் கோவில் கும்பாபிஷேகம் உட்பட பல விசேஷங்களுக்காக சென்னை வர சங்கல்பம் செய்து உறுதி சொன்னார் தவமுனிவர். ஏற்பாடுகள் கோலாகலமாக செய்யப்பட்டிருந்தன. வழிமேல் விழிவைத்து என்பர். வழியெல்லாம் மனம் வைத்து அவரது விஜய யாத்திரையை மனதால் பின்தொடர்ந்து கொண்டிருந்த மாந்தர் பலர்.
Monday, 9 April 2012
புதிய தலைமுறை 'தமிழன்' விருதுகள் குறித்த செல்லையா முத்துசாமியின் வயிற்றெரிச்சல்
செல்லையா முத்துசாமி என்கிற "பிரபல பதிவர்" புதிய தலைமுறை தமிழன் விருதுகளில் பார்ப்பானுக்கு விருதுகள் வழங்கி விட்டார்களே என வயிறெரிந்து பொரிந்து தள்ளியிருக்கிறார் தன் இந்தப் பதிவில். தனக்கேதும் கிடைக்கவில்லையே என்கிற ஆத்திரமும், என்ன முயன்றும் அந்தணர்கள் வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லையே என்கிற ஆற்றாமையும் தவிர இதற்கு வேறு காரணங்கள் தேடினாலும் கிடைக்கவில்லை.
Friday, 9 December 2011
சேட்டன்களின் சென்னைச் சில்மிஷங்கள்??
முல்லைப்பரியாறு அணையின் வலு குறித்த பிரச்சினையே கேரள அரசால் உருவாக்கப்பட்டு பெரிதாக்கப்பட்டு பயங்காட்டப்படும் ஒரு அரசியல் நாடகம் என்ற உண்மை பலரால் பல விதங்களில் சொல்லப்பட்டு வந்தாலும் அறிவு ஜீவிகளின் மேடையாகக் கருதப்படும் ஆங்கில நாளிதழ்கள் நடுவுநிலை என்ற பெயரில் கேரள சார்புடன் (இடது பக்கம் போய்விட்டு left of the center என்று வெட்கமில்லாமல் சிலர் பேசுவது போல) எழுதிவருகின்றன. கேரள அரசின் தவறுகள் மூடி மறைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தி இருவரும் சமாதானமாக இருக்கும்படி எழுதுகின்றன.
Saturday, 26 November 2011
26/11 கொடுமையும் இந்திய-இஸ்ரேல் நட்புறவும்
கடந்த 2008 நவம்பர் 26 அன்று மும்பை நகரில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 200க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். அதில் காவல்துறை கைது செய்த கசாப் இன்றும் மும்பை சிறையில் சகல வசதிகளுடன் இருக்கிறான். தீவிரவாதிகள் தாக்குதலுக்குத் தேர்வு செய்த இடங்கள் வணிக முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், மத இன பேதமற்று அனைத்து மக்களும் அதிகம் கூடும் இடங்கள். ஒரு தொடர்வண்டி நிலையம், ஒரு தேநீர் விடுதி, இரண்டு நட்சத்திர விடுதிகள், ஒரு யூத சமூக மையம் ஆகிய இடங்கள் தாக்குதலுக்கு உள்ளாயின.
Thursday, 20 October 2011
கூடங்குளம்... சில உண்மைகள்... என் பார்வை
கூடங்குளம் பிரச்சினை சிக்கலானதே! மின்சாரம் கிடைக்கும் என்பது தவிர
வேறெந்தப் பெரிய பயனும் இருக்காது. அணு உலை அமைக்கப்பட்ட போதே எழுந்த
எதிர்ப்புகள் பூர்ஷ்வாயிசம், பழமைவாதம் என்று முத்திரை குத்தப்பட்டு
புறந்தள்ளப்பட்டன. முத்திரைக்கு மை தடவிக் கொடுத்த பெருமை இடது சாரிகளையே
சாரும். ஏனென்றால் கூடங்குளம் அணு உலை சோவியத் ரஷ்யத் தயாரிப்பு. அதைக்
குறை கூறுவது தெய்வக் குற்றம்... சீ... இல்லை இல்லை அதையும்
தாண்டி........... பிற்போக்குவாதம். (நீங்களும் உங்க உருப்படாத
முற்போக்கும் ___________போக)...
Subscribe to:
Comments (Atom)