ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Sunday 19 September 2021

பாகிஸ்தான் தலைநகரில் இரத்தச்சிவப்பு மசூதி

 இந்தப் படத்தில் உள்ள கட்டடம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள லால் மஸ்ஜித். இங்கு உள்ள ஜாமியா ஹஃப்ஸா என்ற மதரசாவில் ஆண், பெண், குழந்தைகள் உள்ளிட்ட பலர் படிக்கிறார்கள். அவர்கள் மாணவர்கள் என்பதால் தாலிப் என்று அழைக்கப்படுகிறார்கள். ஆஃப்கன் ஆட்களிடமிருந்து வித்தியாசம் காட்ட பாகிஸ்தானி தாலிபான் என்பார்கள்.

இவர்கள் 2007ல் மூன்று பெண்களைக் கடத்தி அவர்கள் விபச்சாரம் செய்தார்கள் என்று குற்றம் சுமத்தி கல்லால் அடித்து கொல்ல வேண்டும் என்றார்கள். சீனத் தூதுவர் தலையிட்டதும் ஏதும் சொல்ல முடியாமல் பாகிஸ்தான் அரசு போலீஸை அனுப்பி அவர்களை மீட்டது.

இதில் கோபம் கொண்ட 'மாணவர்கள்’ பக்கத்தில் இருந்த ஒரு அமைச்சகக் கட்டிடத்தைக் கொளுத்திவிட்டார்கள். போலீஸ் உள்ளே புகுந்து உதை வாங்கித் திரும்பியது. ரேஞ்சர் படையினர் வந்ததும் சிலர் சரணடைந்தார்கள். பலர் கொஞ்சம் யோசித்துச் சரணடைவோம் என்றார்கள்.
இந்த மசூதியின் தலைமை போதகர் அப்துல் அசீஸ் என்பவர் தன் தம்பி அப்துல் ரசீதை அரசுடன் பேச்சு வார்த்தைக்கு அனுப்பினார். பலமுறைகள் சரணடையக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. பெண் பிள்ளைகள் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். ஆனாலும் சில பெண்கள் துப்பாக்கி ஏந்தி ரேஞ்சர்களைச் சுட சண்டையில் சில பெண்கள், ஆண்கள் உள்ளிட்ட ’மாணவர்கள்’ கொல்லப்பட்டனர். ரேஞ்சர்கள் சிலர் காயம்.
முஷரஃப் கோபப்பட்டு ஜூலை 7ஆம் தேதி எல்லோரும் சரணடையக் கெடு விதித்தார். ராணுவத்தின் சிறப்புக் கமாண்டோ படை தயாராக இருந்தது. மசூதித தலைவர் அப்துல் அசீஸ் பர்தா போட்டு பெண்களோடு பெண்ணாகத் தப்பி ஓட முயலகையில் பிடிபட்டார். பேச்சு வார்த்தையில் இருந்த அவர் தம்பி அப்துல் ரசீது எல்லா ‘மாணவர்களுக்கும்’ பாதுகாப்பு, பொது மன்னிப்பு, தலைக்கு 5000₹ பணம் எல்லாம் கொடுத்தால் தாங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுச் சரணடைவோம், அதோடு கல்வியில் கவனம் செலுத்த மட்டுமே செய்வோம் என்றார்.
உன் அண்ணன் ஒத்துக்கொள்வாரா என்ற கேள்விக்கு ரசீதிடம் பதில் இல்லை. போலீஸ் கைதியாக இருந்த அண்ணன் அசீஸ் வாய் திறக்க மறுத்தார்.
இதற்கிடையே பலுசிஸ்தானுக்கு வெள்ளச் சேதத்தைப் பார்க்க முஷரஃப் விமானம் ஏறினார். விமானம் ராவல்பிண்டியில் பறக்கும் போது ‘மாணவர்கள்’ ஒரு வீட்டுக் கூரையில் நின்றபடி ராக்கெட் லாஞ்சர், விமான எதிர்ப்பு ஏவுகணை என்று விட்டு அடித்தார்கள். விமானமும் முஷரஃபும் தப்பிவிட்டனர் என்று ஏக வருத்தம் அந்த ‘மாணவர்’களுக்கு.
இந்தத் தாக்குதல் காரணமாக ஐரோப்பிய நாடுகள் சில தங்கள் தூதரகங்களை தற்காலிகமாக மூடின. பாகிஸ்தானுக்கு வேதனை, அவமானம், வெட்கம் என்று துடித்தார் முஷரஃப். ஆனால் ‘மாணவர்கள்’ கவலையே படவில்லை. ஒழிந்தான் ஐரோப்பியன் என்று கொண்டாடினார்கள்.
இஸ்லாமாபாத் திரும்பிவந்த முஷரஃப் ட்ரோன் மூலம் மசூதியைக் கண்காணிக்கச் சொன்னார். உள்ளே 100 பெரிய ஆள் தீவிரவாதிகள், 300 பெண்கள் (’மாணவிகள்’), 500 ‘மாணவர்கள்’ இருப்பதாகத் தகவல் வந்தது. இது தவிர சில குழந்தைகளும் உள்ளே இருந்தார்கள்.
மசூதிக்கும் மதரசாவுக்கும் பாதிப்பு வந்தால் அரசுக்கு விழும் அடிக்குத் தாம் பொறுப்பில்லை என்றார் அப்துல் ரசீது. இரண்டு நாட்கள் பல்வேறு முக்கியக் கமாண்டோ குழுவினரைச் சேர்த்து மசூதியைத் தாக்கப் பாக் ராணுவம் திட்டமிட்டது. திட்டத்துக்கு 10ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஒப்புதல் அளித்தார் முஷரஃப்.
உள்ளே புகுந்த ராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தியதில் மசூதி, மதரசாவை வளைத்துக் கட்டப்பட்டிருந்த நெடிய நீண்ட காம்பௌண்ட் சுவர் இடிக்கப்பட்டது. அப்துல் ரசீது ஒரு மாதத்துக்குத் தேவையான உணவும் ஆயுதங்களும் இருக்கின்றன, நாங்கள் ராணுவத்தை ஒரு கை பார்ப்போம் என்றார்.
நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாக் ராணுவ கமாண்டோக்கள் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி காத்திருந்தது. தேர்ந்த ராணுவம் முற்றுகையைச் சமாளிப்பது போலச் சமாளித்தார்கள் ‘மாணவர்கள்’. அவர்களிடம் இருந்த ஆயுதங்களும் கையாண்ட தாக்குதல் முறைகளும் பயத்தைக் காட்டின பாக் கமாண்டோக்களுக்கு.
எவனாக இருந்தாலும் சுட்டுக் கொன்று சிக்கலை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் என்று சொன்ன முஷரஃப், பாக் அரசின் மத விவகார மந்திரியை பேச்சு வார்த்தையில் இருந்து நீக்கி வீட்டோடு வைத்தார். ராணுவம் முழுக்கட்டுப்பாட்டைக் கையில் எடுத்தது.
உள்ளே போனால் ராணுவ பங்கர்கள் போல அங்கே பல இருந்தன. மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து அதன் பின்னே பதுங்கியிருந்து சுட்டார்கள். மசூதியின் கூம்பு வடிவக் கூரையில் இருந்து சுட்டார்கள். பெண்களை நிறுத்தி வைத்து ராணுவம் சுடாமல் தடுத்தார்கள்.
கடும் சண்டைக்குப் பிறகு தரைத் தளத்தைக் கைப்பற்றினர் கமாண்டோக்கள். முதல் தளம் கூரை என்று போனால் முன்னேற முடியாமல் சுட்டுக் கொண்டே இருந்தனர் ‘மாணவர்கள்’. ஒரு வழியாக ஒவ்வொரு தளமாகப் பிடித்து ஜூலை 11 அன்று மசூதியையும் மதரசாவையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது ராணுவக் கமாண்டோ படை. ஒரு கர்னல், ஒரு ரேஞ்சர் படைக் கமாண்டர், 30 ரேஞ்சர்கள், 10 கமாண்டோக்கள் பலியானார்கள். பலர் காயப்பட்டனர்.
தரைத் தளத்துக்குகீழே பதுங்கியிருந்த அப்துல் ரசீது தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்றும், துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த தன் தாய்க்குச் சிகிச்சை அளிக்க மாட்டார்கள் என்றும் சாட்டிலைட் ஃபோனில் டிவிக்காரர்களிடம் புலம்பினார். அவரது தாயை ராணுவம் பத்திரமாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பியது. சரணடைய வந்த ரசீது ராணுவத்தை எச்சரிக்க அவர் ஆட்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானார். சரணடைய ஒப்புக்கொண்டதால் அண்ணன் அசீசே தம்பி ரசீதைக் கொல்ல உத்தரவிட்டார் என்றும் தகவல் உண்டு.
மாணவர்கள் இருந்த கல்வி பயிலும் இடம், பங்கர்கள், காவல் மாடங்கள் என்று சோதனை போட்டதில் கிடைத்த ஆயுதங்கள்: RPG rockets, anti-tank and anti-personnel landmines, suicide bombing belts, three to five .22-caliber rifles, RPD, RPK and RPK-74 light machine guns, Dragunov Sniper Rifles, SKS rifles, AK-47s, pistols, night vision equipment, and more than 50,000 rounds of various calibre ammunition, three crates of gasoline bombs prepared in green soft drink bottles, gas masks, recoilless rifles, two-way radios, large plastic buckets containing homemade bombs the size of tennis balls, as well as knives. (http://www.thenews.com.pk/top_story_detail.asp?Id=8988)
இறந்த ‘மாணவர்கள்’ பட்டியலில் உஸ்பெகிஸ்தான், ஆஃப்கனிஸ்தான், எகிப்து உள்ளிட்ட பல வெளிநாட்டவர்கள் இருந்தனர் என்பது ஐஎஸ்ஐ சம்பவத்துக்குப் பிறகு பிணங்களை அடையாளம் கண்டபின் கண்டுபிடித்துச் சொன்னது.
இதில் சம்பந்தப்பட்ட அண்ணன் போதகர் அப்துல் அசீசை பாக் அரசு பின்னர் மன்னித்து விடுவித்தது. விடாட்டி விட்ருவமா என்று அவர் மீண்டும் லால் மஸ்ஜிதைத் தன் கையில் எடுத்துக்கொண்டார்.
இப்போது ஆஃப்கனில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மசூதியில் தாலிபான் கொடி ஏற்றிவிட்டார். தங்கள் தலைநகரில் தாலிபான் கொடியா என்று பாக் ராணுவமும் அரசும் பதறிப் போய் அவரிடம் கேட்க என்னைச் சுட்டுவிட்டு கொடியை இறக்குங்கள் என்று துப்பாக்கியோடு மசூதி வாசலில் உட்கார்ந்துவிட்டார்.


உலகின் தலைசிறந்த உளவுத்துறை என்று சொல்லிக் கொள்ளும் ஐஎஸ்ஐ அவரிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறது. இதுவரை ஆனதைப் பார்த்துக்கொள் என்று தெனாவட்டாக இருக்கிறார். ஆவது என்ன என்று நாமும் பார்ப்போம்.

No comments: