ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Wednesday, 19 January 2011

'சோ'காப்பர்: ஈழச் சொல்லிழுக்கு

நடந்து முடிந்த துக்ளக் ஆண்டுவிழாவில் சோ வழக்கம் போல கலக்கிவிட்டார். கருணாநிதியின் நிர்வாகத்திறம் பற்றிய அவரது கருத்து நெத்தியடி. "எல்லா வேலைகளையும் தானே செய்பவன் நிர்வாகியே அல்ல". இதற்கு அவருக்கே உரித்தான நகைச்சுவை கலந்த விளக்கம் (தோண்டுப்பா, மண்ண அள்ளுப்பா). ஜெயலலிதா பற்றிய அவரது கருத்துக்கள் வழக்கம் போல ஜெயலலிதாவின் குணாதியங்களைச் சிறப்பித்து இருந்தன.


பல ஊழல் விஷயங்களில் லஞ்சம் வாங்குவதற்காக காங்கிரசை அவர் வாங்கு வாங்கென்று வாங்கினார். CWG, 2G ஆகியவற்றின் பிறகும் காங்கிரஸ்காரர்கள் அல்ப சந்தோஷிகள் என்று அவர் சொன்னது ஏற்புடையதாகவே இருந்தது. பெரும் பணம் சோனியாவுக்குப் போனது, திமுக மீதியை எடுத்துக் கொண்டார். காங்கிரஸ் கட்சியின் சாதாரணத் தொண்டன் வாழைப்பழம் வாங்கக்கூட முடியாத அளவு விலைவாசி இருக்கிறது. ஆனாலும் கலைஞர் உத்தமர், சோனியா நல்லவர் என்கிறார்களே.

சற்றே நெருடியது சோவின் ராஜபக்ஷே குறித்த கருத்து. புலிகளை ஒடுக்கியது ராஜபக்ஷேவின் சாதனை. தமிழர்களுக்கு மீள்குடியேற்றங்கள் நடக்கின்றன. புலிகளை இங்கும் வடிகட்ட வேண்டும் என்றார் சோ. புலிகளை ஒழித்ததால் மட்டுமே ராஜபக்ஷே பாராட்டுக்குரியவர் என்பது போல் அவர் பேசியது ஏற்கவியலாதது. ஈழத்தில் தமிழர்கள் இன்னும் normal life பெறவில்லை. அதற்கு நம் அரசு கடிதம் எழுதுவது தவிர எதுவும் செய்து விடவில்லை.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், நோயால் பீடிக்கப்பட்டவர்கள், சொந்தங்களை இழந்து தனியே நிற்பவர்கள் என்று பலரும் தவிக்க புலிகள் என்ற போர்வையில் அந்தப் பிரச்சினையை மேலோட்டமாக பார்த்துவிட்டு சரிதான் என்று போவது மனிதாபிமானமல்ல. பார்வதியம்மாள் சிகிச்சைக்கே அரசியலாக்குவார்கள் என்பது தான் எதிர்ப்பின் முக்கியக் காரணம். நிகழ்வுகளை அநியாயத்துக்கு அரசியலாக்குபவர்களை அடக்கத் துப்பில்லாத அரசு என்பதால் மனிதாபிமானத்தைப் புறந்தள்ளுவது நியாயம் என்று பேசுவது அநியாயம்.


புலிகள் பயங்கரவாதிகள் என்பதும் அவர்கள் நம்பத்தகாதவர்கள் என்பதும் அமிர்தலிங்கம் முதல் மாத்தையா, நீலன் திருச்செல்வம் வரை கொன்று குவித்ததில் நிரூபணமானது. தனக்குப் போட்டியாக யாரும் இருக்கக் கூடாது என்ற தனிமனிதப் பேராசை ஒரு இனத்தின் வாழ்வாதாரப் போராட்டத்தை வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றது. அதற்காக அந்த இனத்தின் அப்பாவி மக்களையும் சந்தேகக் கண் மட்டுமே கொண்டு பார்ப்பது neither humanitarian nor politically correct.

ஒரு வழியாக யுத்தம் முடிந்தது என்று தம் மண்ணுக்குத் திரும்பிய மக்கள் பெரும்பாலும் கண்டது வெ(ற்)றியாளர்களின் கொக்கரிப்பை மட்டுமே. புலிகளையும் மக்களையும் பிரித்துப் பார்த்துப் பரிவுகாட்ட வேண்டிய இடத்தில் பரிவும், கோபம் காட்ட வேண்டிய இடத்தில் மட்டும் கோபமும் காட்டவில்லை சிங்களர்கள். புலிகள் அப்படி அவர்களை ஆக்கி வைத்தனர் என்ற வாதம் சரி. ஆனால் பரிந்து செயலாற்ற வேண்டிய நாமும் பயம் காட்டுவது என்ன நியாயம்?

இதனால் நமக்கு என்ன பயன்? இவர்கள் நாடு திரும்பினால் அகதிகளுக்குச் செலவு செய்யும் பணம் மிச்சம் என்ற கணக்கு பொருளாதார ரீதியில் சரிதான். ஆனால் இராணுவ ரீதயில் மிகத் தவறு. இந்த மக்களின் ஆதரவு நமக்குத் தேவை. சிங்களர்கள் சீனர்களுக்கு சொம்பு தூக்குவது நமக்குப் பாதுகாப்புச் சிக்கல். சீனர்கள் அருணாசலப் பிரதேசம், காஷ்மீர் என்று துவங்கி இன்று இந்தப் பக்கமும் பாரதத்தை நெருக்குகிறார்கள்.

இலங்கை நமக்குப் பாதகமாய்ச் சீனாவுடன் சேர்வது நமக்கு நல்லதல்ல. ஈழத்தமிழர் நலனில் நாம் காட்டும் அக்கறையும் சீனத்தின் ஆசியோடு நடக்கும் சின்னத்தனங்களைத் தடுக்கச் செய்யும் உதவிகளுமே அங்கே நமக்கொரு support base தரும். ராஜபக்ஷே நமக்குப் பாதகமாய்ச் செயல்பட மிகவும் யோசிப்பார். 

காசு பார்க்க மட்டும் பாரதம் மற்றவற்றுக்கு சொந்த நாடு என்றிருக்கும் ரோமாபுரிப் பிரதிநிதியின் அடிமைகள் இதைக் கண்டும் காணாதிருப்பது சரி. முன்பு KGB இப்போது MSS என்று சம்பளம் பெற்றுச் சொம்படிக்கும் செங்கொடிச் செம்புநக்கிப் பத்திரிகைகளுக்கும் ஒரு நியாயம் இருக்கிறது. படியளக்கிற மகராசனுக்கு பரிந்து தான் பேசவேண்டும் அவர்கள். இப்படியொரு strategic goof up நடப்பதற்கு சோவும் தீவிரவாத எதிர்ப்பு என்ற பெயரில் துணை போவது சோகமான உண்மை. நம் பாதுகாப்பு நலன் கருதியாவது ஈழத்து மக்களை ஆதரிப்பது நம் கடமையல்லவா?

யூதர்களைப் பார்த்தாவது புத்திவர வேண்டாமா? உலகெங்கும் யூதர்க்கொரு துன்பம் என்றால் இஸ்ரேல் பொங்குகிறது. ஆனானப்பட்ட வாத்திகனையே மிரட்டி பாலஸ்தீனம் பற்றிப் பேசாதே என்கிறது. நாஜிக்களை ஆதரித்த பிஷப்பை பதவி நீக்கு என்கிறது. Pope Pius XII புனிதராக்கப்பட்டால் பொறுக்க மாட்டோம் என்கிறது. கிறிஸ்தவ உலகமே உட்கார்ந்து யூதர்களுக்கு விளக்கமளிக்கிறது. (டோண்டு ராகவன் இந்தப் பத்திக்காகவே என்னை ஆதரிப்பார்!)

நாம்? தீவிரவாதத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் அதையும் உருப்படியகச் செய்யாமல், சிங்களரையும் விலக்கிவைத்து ஈழத்தமிழரையும் தூரம் நகர்த்தியிருக்கிறோம். விளக்கெண்ணைய்த் தனமான வெளியுறவுக் கொள்கை. ராஜதந்திர சொதப்பல் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். (இது தான் ஈழத்தமிழர் விஷயத்தில் நம் சிறப்பு). இந்தச் சுண்டைக்காய் ஸ்ரீலங்காவை சீனாவிடம் தாரை வார்த்துவிட்டு, இனத்தால் மொழியால் நம்மவராயிருக்கும் மக்களைப் பயங்கரவாதி என்று பழிக்கிறோமே, இது நீதியா?

இவர்களால் பைசா தரமுடியாது, ஆகவே இவர்கள் பிரச்சினைக்குக் கடிதத்துக்கு மேல் எதுவும் தேவையில்லை என்று தானைத் தலைவர் மஞ்சக்கலரு சிங்குசா என்று அமர்ந்துவிட்டார். சோவின் பாணியில் சொன்னால் திட்டவேண்டும் ஆனால் திட்டக்கூடாது, கோபிக்கவேண்டும் ஆனால் கோபிக்கக்கூடாது, கேட்கவேண்டும் ஆனால் கேட்கக்கூடாது என்ற கதியில் வழவழவென்று ஒரு கடிதம். புரியவேண்டும் ஆனால் புரியாது!

ஈழப் பிரச்சினையில் புலிகளைப் புறந்தள்ளிவிட்டு அவர்கள் சொதப்பிய ராஜதந்திர விஷயங்களில் சற்றே முனைந்திருந்தால் நாம் தெற்காசியாவில் நிஜமாகவே பெரியண்ணன் ஆகியிருப்போம். அந்த மக்களும் மகிழ்வுடன் வாழ்ந்திருப்பார்கள். ஆனால், இலங்கையிடமும் முறையாகப் பேசாமல், பிரச்சினையின் ஆணிவேரையும் பிடுங்காமல் அதை வைத்து ஓட்டு வாங்கவே நம் தமிழினத் தலைவர்கள் முனைந்தனர். ஈழப் பிரச்சினையில் புலிகள் ஒழிந்ததும் ஈழத்து மக்களை ஆதரிப்பது என்று ஜெயலலிதா சரியான முடிவெடுத்தார். புலிகளைத் தவிர்த்து சாதாரண மக்கள் நம்மவர் என்று உறுதியாகச் சொன்னார்.




சோ இந்த விஷயத்தில் சறுக்கிவிட்டார். ஈழச் சொல்லிழுக்குக்கு அவர் சோகாக்க வேண்டும். It is sad that a brilliant thinker goofs up in such an
important strategic issue. ஈழம் தவிர மற்றவற்றில் சோ: brilliant as always!

3 comments:

Unknown said...

NCC la konja naal irundhutta military pathi romba pesuviyada?
Aanaalum... puliya thorathittu makkala paakanumnu solriye... nee THAMIZHENDA!

Anonymous said...

//ஈழப் பிரச்சினையில் புலிகளைப் புறந்தள்ளிவிட்டு அவர்கள் சொதப்பிய ராஜதந்திர விஷயங்களில் சற்றே முனைந்திருந்தால் நாம் தெற்காசியாவில் நிஜமாகவே பெரியண்ணன் ஆகியிருப்போம்.//

உங்களுடைய இந்தக் கருத்துடன் நான் முழுமையாக உடன்படுகிறேன். தவிர, சைப்ரஸில் துருக்கியர் நலனுக்காக துருக்கி எத்தகைய நடவடிக்கை எடுத்ததோ அதே போன்றதொரு நிலைப்பாட்டை இந்தியா எடுத்திருக்க வேண்டுமென்பது என் எண்ணம்.

Arun Ambie said...

நல்வரவு SK! உங்கள் கருத்துக்களை அமோதிக்கிறேன்