ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Monday, 27 August 2012

வேதாந்தம் படும் பாடு - பாகம் 2

கீழே உள்ளது இதன் தொடர்ச்சி....

உனக்கெப்படித் தெரியும் என்று கேள்வி வரும். முதலிலேயே சொல்லிவிடுகிறேன் நான் வேதாந்தியோ மெய்ஞ்ஞானத் தேடல் உள்ளவனோ அல்ல. கொஞ்சம் விவாதம் செய்வேன். அதற்காகவும் அதன் மூலமும் கொஞ்சம் கற்பேன். என் குருநாதர் போற்றுதற்குரிய நிறைஞானி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் அவர்கள் வேதாந்தம் கற்க அடிப்படைத் தேவை என்னென்ன என்று தம் அருளுரை ஒன்றில் சொல்லியிருக்கிறார்.

வேதாந்தம் படும் பாடு - பாகம் 1

நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.  அவர் அலுவலகத்தில் வேலை செய்வார். பொழுது போக்க சினிமா, டிவி என்று பார்த்துக் கொண்டிருப்பார். கோவிலுக்குக் கூட அதிகம் போகமாட்டார்.  திடீரென்று என்னிடம் ”நான்  இப்ப பக்கா ஆன்மீகவாதி ஆயிட்டேன் தெரியுமா?” என்றார். ”அப்படியா! ரொம்ப  சந்தோஷம்”, என்றேன்.  “நீ நம்பலை. இரு.” என்று சொல்லிவிட்டுப் போனார். ஒரு ஏழோ எட்டோ சான்றிதழ்களுடன் வந்தார்.

Thursday, 16 August 2012

அண்ணா இருந்த உண்ணாவிரதம்

அண்ணா என்ற சொல் பொதுவில் மூத்த சகோதரரைக் குறிக்கும். பகுத்தறிவு(??!!) கும்பலைப் பொறுத்தவரை அது கண்ணீர்த்துளிக் கூட்டம் என்று ராமசாமி நாயக்கரால் சுட்டப்பட்ட குழுவுக்குத் தலைமை ஏற்று திமுக கண்ட முன்னாள் முதல்வர் C.N. அண்ணாத்துரை அவர்களைக் குறிக்கும். சற்றே சமீபகாலமாக அந்தச் சொல் ராலேகாவ்ன் சித்தி என்ற மராட்டிய கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் அண்ணா ஹசாரே அவர்களைக் குறிக்கிறது.

Sunday, 29 July 2012

டெசோ - அரசியலில் பிழைத்திருக்க திமுகவின் ஆயுதம்!

(நிஜமாகவே) சமீப காலமாக டெசோ வருகிறது. விழுப்புரத்தில் இருக்கிறது. விக்கிரவாண்டி தாண்டிவிட்டது, செங்கல்பட்டு வந்துவிட்டது. ஆகஸ்டு 12ல் சென்னை வந்து சேரும் என்று பலவிதமான அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அது போலவே ஈழம் காண்பதே லட்சியம் என்று முழங்கி, ஈழம் லட்சியம் தான் ஆனால் இப்போது லட்சியம் செய்யவேண்டியது ஈழத்தமிழர் நல்வாழ்வு மட்டுமே என்று இறங்கி, தனி ஈழம் கோரித் தீர்மானம் என்று தீர்மானித்து, சிதம்பர ரகசியத்தால் தனி ஈழத்தீர்மானத்தைத் தீர்மானமாகத் தீர்த்துக் கட்டி தனி ஈழம் லட்சியம் வாழ்வாதாரம் நிச்சயம் என்று நைச்சியம் பேசி ழப் போர் நிறுத்த உண்ணாவிரதப் புகழ்  மு. கருணாநிதி குட்டிக்கரணங்கள் பல அடித்து வருகிறார்.

Saturday, 14 July 2012

மெய்வருத்தக் கூலியும் செயலின் முழுப்பலனும்

ஸ்ருங்கேரி மஹா ஸந்நிதானம் ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் சென்னை வந்த அன்று அருளிய அனுக்ரஹ பாஷணத்தில் ஒரு கருத்தைச் சொன்னார். "குருவருளும் திருவருளும் இன்றி எவ்வளவு திறமை கொண்டு என்ன செய்தாலும் உரிய பலன் கிட்டாது" என்றார். அதற்கு எல்லாம் குருவருளும் இறையருளும் தான். நான் எதுவும் செய்யவில்லை என்று கர்வப்படக்கூடாது என்று விளக்கம் சொல்லிக் கொண்டேன். சற்றே யோசித்த போது ஒரு கேள்வி எழுந்தது.

Tuesday, 26 June 2012

கலைமகளின் உறைவிடம் அலைமகளின் உதவியைக் கேட்கிறது!

பழம்பெருமை மிக்க சென்னை ஸம்ஸ்க்ருதக் கல்லூரி பாரதத்தின் பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பதில் முன்நிற்கும் நிறுவனம். கலைமகளின் உறைவிடமான அந்தக் கல்விக்கூடம் அலைமகளின் ஆசியை வேண்டுமெனக் கேட்கும் நிலையில் இருக்கிறது. தமிழகத்தின் பழமையான ஒரு ஸம்ஸ்க்ருத மொழியாராய்ச்சி நிறுவனம் ஸ்ரீ குப்புஸ்வாமி ஸாஸ்த்ரி ஸம்ஸ்க்ருத ஆராய்ச்சி மையம். இது அரசு தரும் நிதியும் பெற்றுச் செயல்பட்டு வந்தது. தற்போது  சிலபல காரணங்களால் அரசு உதவி தடைப்பட்டு நிற்கிறது. அதனால் இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் மந்தநிலை அடைந்துள்ளன.

Monday, 25 June 2012

வர்ணாஸ்ரம விதாயினீ - ஒரு பாமரனின் புரிதல்

சமீபத்தில் இணைய விவாதம் ஒன்றில் ஒரு புத்திசாலியால் மடத்தனமான கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. தமிழ் இணைய வெளியில் விவரமாகச் சிந்திப்பவர் என்று பொதுவாக அறியப்படும் நபர் அவர். தெளிவான புரிதல் இல்லாமல் பேசமாட்டார் என்று பொதுவாக அவர் பற்றியொரு கருத்து உண்டு. அவருக்கு என்ன அழுத்தங்களோ நெருக்குதல்களோ தெரியவில்லை. சற்றே சறுக்கிவிட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆனைக்கே சறுக்குமாம். அவருக்குச் சறுக்கக் கூடாதா?