ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Thursday, 16 August 2012

அண்ணா இருந்த உண்ணாவிரதம்

அண்ணா என்ற சொல் பொதுவில் மூத்த சகோதரரைக் குறிக்கும். பகுத்தறிவு(??!!) கும்பலைப் பொறுத்தவரை அது கண்ணீர்த்துளிக் கூட்டம் என்று ராமசாமி நாயக்கரால் சுட்டப்பட்ட குழுவுக்குத் தலைமை ஏற்று திமுக கண்ட முன்னாள் முதல்வர் C.N. அண்ணாத்துரை அவர்களைக் குறிக்கும். சற்றே சமீபகாலமாக அந்தச் சொல் ராலேகாவ்ன் சித்தி என்ற மராட்டிய கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் அண்ணா ஹசாரே அவர்களைக் குறிக்கிறது.

Sunday, 29 July 2012

டெசோ - அரசியலில் பிழைத்திருக்க திமுகவின் ஆயுதம்!

(நிஜமாகவே) சமீப காலமாக டெசோ வருகிறது. விழுப்புரத்தில் இருக்கிறது. விக்கிரவாண்டி தாண்டிவிட்டது, செங்கல்பட்டு வந்துவிட்டது. ஆகஸ்டு 12ல் சென்னை வந்து சேரும் என்று பலவிதமான அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அது போலவே ஈழம் காண்பதே லட்சியம் என்று முழங்கி, ஈழம் லட்சியம் தான் ஆனால் இப்போது லட்சியம் செய்யவேண்டியது ஈழத்தமிழர் நல்வாழ்வு மட்டுமே என்று இறங்கி, தனி ஈழம் கோரித் தீர்மானம் என்று தீர்மானித்து, சிதம்பர ரகசியத்தால் தனி ஈழத்தீர்மானத்தைத் தீர்மானமாகத் தீர்த்துக் கட்டி தனி ஈழம் லட்சியம் வாழ்வாதாரம் நிச்சயம் என்று நைச்சியம் பேசி ஈழப் போர் நிறுத்த உண்ணாவிரதப் புகழ்  மு. கருணாநிதி குட்டிக்கரணங்கள் பல அடித்து வருகிறார்.

Saturday, 14 July 2012

மெய்வருத்தக் கூலியும் செயலின் முழுப்பலனும்

ஸ்ருங்கேரி மஹா ஸந்நிதானம் ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் சென்னை வந்த அன்று அருளிய அனுக்ரஹ பாஷணத்தில் ஒரு கருத்தைச் சொன்னார். "குருவருளும் திருவருளும் இன்றி எவ்வளவு திறமை கொண்டு என்ன செய்தாலும் உரிய பலன் கிட்டாது" என்றார். அதற்கு எல்லாம் குருவருளும் இறையருளும் தான். நான் எதுவும் செய்யவில்லை என்று கர்வப்படக்கூடாது என்று விளக்கம் சொல்லிக் கொண்டேன். சற்றே யோசித்த போது ஒரு கேள்வி எழுந்தது.

Tuesday, 26 June 2012

கலைமகளின் உறைவிடம் அலைமகளின் உதவியைக் கேட்கிறது!

பழம்பெருமை மிக்க சென்னை ஸம்ஸ்க்ருதக் கல்லூரி பாரதத்தின் பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பதில் முன்நிற்கும் நிறுவனம். கலைமகளின் உறைவிடமான அந்தக் கல்விக்கூடம் அலைமகளின் ஆசியை வேண்டுமெனக் கேட்கும் நிலையில் இருக்கிறது. தமிழகத்தின் பழமையான ஒரு ஸம்ஸ்க்ருத மொழியாராய்ச்சி நிறுவனம் ஸ்ரீ குப்புஸ்வாமி ஸாஸ்த்ரி ஸம்ஸ்க்ருத ஆராய்ச்சி மையம். இது அரசு தரும் நிதியும் பெற்றுச் செயல்பட்டு வந்தது. தற்போது  சிலபல காரணங்களால் அரசு உதவி தடைப்பட்டு நிற்கிறது. அதனால் இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் மந்தநிலை அடைந்துள்ளன.

Monday, 25 June 2012

வர்ணாஸ்ரம விதாயினீ - ஒரு பாமரனின் புரிதல்

சமீபத்தில் இணைய விவாதம் ஒன்றில் ஒரு புத்திசாலியால் மடத்தனமான கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. தமிழ் இணைய வெளியில் விவரமாகச் சிந்திப்பவர் என்று பொதுவாக அறியப்படும் நபர் அவர். தெளிவான புரிதல் இல்லாமல் பேசமாட்டார் என்று பொதுவாக அவர் பற்றியொரு கருத்து உண்டு. அவருக்கு என்ன அழுத்தங்களோ நெருக்குதல்களோ தெரியவில்லை. சற்றே சறுக்கிவிட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆனைக்கே சறுக்குமாம். அவருக்குச் சறுக்கக் கூடாதா?

Friday, 15 June 2012

சிருங்கேரி மஹாஸந்நிதானம் சென்னை வந்தார் - மகிழ்ந்து கூவியது மைக்

மாமனிதர்கள் வருகைக்காக மாங்கங்கள் காத்திருப்பதில் வியப்பில்லை. சென்னை நகரத்து அடியார்கள் 17 ஆண்டுகளாய்க் காத்திருந்தனர். இவ்வாண்டு கோடம்பாக்கம் மீனாக்ஷி கல்லூரி சாரதாம்பாள் கோவில் கும்பாபிஷேகம் உட்பட பல விசேஷங்களுக்காக சென்னை வர சங்கல்பம் செய்து உறுதி சொன்னார் தவமுனிவர். ஏற்பாடுகள் கோலாகலமாக செய்யப்பட்டிருந்தன. வழிமேல் விழிவைத்து என்பர். வழியெல்லாம் மனம் வைத்து அவரது விஜய யாத்திரையை மனதால் பின்தொடர்ந்து கொண்டிருந்த மாந்தர் பலர்.


Monday, 9 April 2012

புதிய த​லைமு​றை 'தமிழன்' விருதுகள் குறித்த செல்​லையா முத்துசாமியின் வயிற்றெரிச்சல்

செல்லையா முத்துசாமி என்கிற "பிரபல பதிவர்" புதிய தலைமுறை தமிழன் விருதுகளில் பார்ப்பானுக்கு விருதுகள் வழங்கி விட்டார்களே என  வயிறெரிந்து பொரிந்து தள்ளியிருக்கிறார் தன் இந்தப் பதிவில். தனக்கேதும் கிடைக்கவில்லையே என்கிற ஆத்திரமும், என்ன முயன்றும் அந்தணர்கள் வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லையே என்கிற ஆற்றாமையும் தவிர இதற்கு வேறு காரணங்கள் தேடினாலும் கிடைக்கவில்லை.