ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Saturday, 6 September 2025

டாலர் ஆதிக்கம் விழும் - ஸ்டான்ஃபோர்டு பே

 Matteo Maggiori. இவர் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியர். குறிப்பாக geo-economics நிபுணர்.  6500 பொருளாதார ஆராய்ச்சிக் கட்டுரைகளில் எழுதியோ, மேற்பார்வை செய்தோ, வழிகாட்டியோ சம்பந்தப்பட்டவர். இவர் ட்ரம்புக்கு ஒரு பாடம் எடுக்க முனைந்திருக்கிறார். டரம்புக்கு ஏறாது. நாம் பார்ப்போம். 


உலக அளவில் ஆதிக்கம் என்பது இரு வகைப்படும். சிறுகூறுகளில் ஆதிக்கம். பேரளவிலான ஆதிக்கம். 

சிறுகூறுகளிலான ஆதிக்கம் என்பது சில துறைகள் சார்ந்த ஆதிக்கம். உதாரணமாக செமி கண்டக்டர், தாதுக்கள், மருந்துகள், ஆயுதங்கள் போன்றவை.

பேரளவிலான ஆதிக்கம் என்பது பல துறைகளில் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த வகையில் ஆதிக்கம் செலுத்துவது. உதாரணம்: நிதி, சொத்துப் பாதுகாப்பு, உலக வர்த்தகம் போன்றவை. இதனால் தான் அமெரிக்கா தன் விருப்பப்படி பொருளாதாரத் தடைகள், சொத்து முடக்கம் என்று போக்கிரித்தனம் செய்கிறது. 

உலகில் டாலரில் எந்த நிதிப் பரிவர்த்தனை நடந்தாலும் அதில் SWIFT செயலியின் மூலமே செய்ய வைத்து அதில் கமிஷன் அடிக்கிறது. SWIFTஐக் கண்டுபிடித்த பெல்ஜியமும் அமெரிக்காவுக்குச் செயலியை விற்றுவிட்டதால் கமிஷன் கொடுத்தாக வேண்டிய நிலை. 

அந்நியச் செலாவணியை உலக நாடுகள் பெரும்பாலும் டாலரில் வைப்பதால் நினைத்தால் டாலர் கணக்குகளை முடக்கி நம் காசையே நாம் தொட முடியாதபடிக்கு தெள்ளவாரித்தனம் செய்கிறது அமெரிக்கா. 


இப்போது அரிய தாதுக்கள் சீனாவிடமிருப்பது கண்டு கேட்டதைக் கேட்டபோது கேட்ட விலைக்குத் தரவேண்டும், இல்லையென்றால் 200% வரி என்கிறார் ட்ரம்ப். போடா ஜாட்டான் என்கிறார் ஜின் பிங். சூயஸ் கால்வாயின் பராமரிப்பு, போக்குவரத்துக் கட்டுப்பாட்டை சீனக் கம்பெனி குத்தகைக்கு எடுத்துள்ள நிலையில் அதில் வரும் காசு பற்றிக் கணக்குத் தெரிந்து ட்ரம்புக்குப் பற்றி எரிகிறது. 

இது தவிர மலாக்கா ஜலசந்தியைக் கண்காணிக்க சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளோடு பாரதம் ஒப்பந்தம் போடுவது ட்ரம்புக்கு உச்சி மண்டையில் கிர்ர்ர் என்கிறதாம். இந்தியப் பெருங்கடலில் இராணுவ ஆதிக்கம் செலுத்த பாரதம் எப்படி முனையலாம் என்று கொதிக்கிறார்கள் வெள்ளைக்காரர்கள். 

இது தவிர செமி கண்டக்டர், ஏஐ, கடலடிக் கேபிள்கள், டேடா செண்டர்கள் என்று அமெரிக்க ஏகபோகத்தில் இருந்த பல தொழில்நுடப விஷயங்களைச் சீனா ரகசியமாகச் செய்கிறது, பாரதம் வெளிப்படையாகச் செய்கிறது. ரஷ்யா செய்தால் என்ன செய்வாய், செய்யாவிட்டால் என்ன செய்வாய் என்கிறது.

ட்ரம்புக்கும் மற்ற கிழட்டு அமெரிக்க/ஐரோப்பிய அரசியல்வாதிகளுக்கும் இந்த மாற்றத்தைச் சீரணிக்க முடியவில்லை. இந்த வயிற்றெரிச்சல் தான் “இந்தியாவை உடைங்கடா, நம்மபய ராகுலைப் பிரதமராக்குங்கடா என்றும், நாலு இடத்தில வரி போட்டா எவனும் வழிக்கு வருவான் என்றும், ஐயமாருங்க ரஷ்ய எண்ணை வாங்கி லாபம் பாக்கறாங்க” என்றும் உளற வைக்கிறது. 

இவர்களுக்கு ரஷ்யா எண்டால் ஒரு ப ப பயம். சீனா சந்தையைக் கெடுத்து லாபத்தில் கைவைத்து ஐரோப்பிய/அமெரிக்க ஆடம்பரக் கம்பெனிகளின் வயிற்றில் ஓங்கிக் குத்திய நிலையில் இவர்கள் சீனா சம்பந்தப்பட்ட வரையில் ஓட்டைகள் ஒன்பதும் மூடியிருப்பதை உறுதி செய்வதில் முனைந்துள்ளனர்.

இந்த UPI என்ற பணப் பரிவர்த்தனைச் செயலி இந்திய ₹ மட்டுமில்லாது மற்ற நாட்டுப் பணங்களிலும் செயல்படும் வகையில் மாற்றித்தந்து பயன்பாட்டுக்குப் பணம் வசூலிக்கிறது பாரதம். பணப்பரிமாற்ற முறையும் உள்ளதால் வேறு நாடுகளிலும் பணமற்ற வரவு-செலவு என்பது சாத்தியமாகிறது. இதை வெனிசூலா, நேபாளம், இலங்கை, ஈரான், மாலத்தீவு, சில அரபு நாடுகள் என்று உபயோகிக்கத் தொடங்கியுள்ளன. வேறு பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. 

சீனாவும் இப்படி ஒரு செயலியைக் களத்தில் இறக்கியுள்ளது. இவ்விரண்டையும் இணைத்து ஒரு பொதுச் செயலியை உருவாக்கி BRICS நாடுகள் பயன்படுத்தத் தொடங்கினால் அமெரிக்க டாலர் முக்கியத்துவம் இழக்கும்.  

காரணம் நம்பகத்தன்மை. சீனாவைவிட பாரதத்தை நம்பலாம். UPIஐ வைத்துக்கொண்டு நாடுகளின் பணத்தையோ சொத்தையோ முடக்காது என்று நம்பலாம். BRICS என்று வந்துவிட்டால் சீனா மட்டும் ஆதிக்கம் செலுத்தாது. கூட்டமைப்புக்கு அதிகாரம் என்று போகும். அதனால் அமெரிக்கா செய்வது போல முடக்கு, அடக்கு என்று போக வாய்ப்பில்லை. 

இப்போதே தரவுகளின்படி ஒவ்வொரு நாடும் தங்களுக்கிடையே பிராந்திய ஒத்துழைப்பு, வட்டார வணிக ஒத்துழைப்பு, தடையற்ற வணிக ஒப்பந்தங்கள் என்று தொடங்கிவிட்டனர். இதனால் டாலர் இன்றியமையாதது எனும் நிலை 40% வரை குறைந்துள்ளது. அந்நியச் செலாவணி இருப்பு என்ற வகையில் 71% டாலர் வைத்திருந்த நாடுகள் 57% என்ற அளவுக்கு டாலர் கையிருப்பைக் குறைத்துள்ளன. 

10% உலக வணிகம் டாலரில் இருந்து வேறு பணத்துக்கு மாறினாலும் அமெரிக்காவின் ஆதிக்கம் சீட்டுக்கட்டு மாளிகை போலச் சரியத் தொடங்கும். இது விரைவில் நிகழும் என்கிறார் பேராசிரியர் மத்தியோ மேக்கியோரி.

No comments: