நேபாளத்தின் இப்போதைய தன்னெழுச்சியான “இளசுகள்” போராட்டத்தை முன்னின்று நடத்தியது “ஹமி நேபாள்” என்ற NGO. இந்த அமைப்பின் தலைவர் சுடங் குருங் என்பவர்.
இவரது NGOக்கு நிதி அளித்து ஆதரிப்பவர்கள் பட்டியலில் Infinity Holdings என்ற ஆயுத வியாபார நிறுவனத்தின் தலைவர் தீபக் பட்டா முதன்மையானவர். இவர் மீது இத்தாலிய நிறுவனத்திடம் நேபாள போலீசுக்கு துப்பாக்கி வாங்கியதில் ஊழல் செய்ததாக வழக்கு உள்ளது.
கொரோனா காலத்தில் நேபாளத்தில் தெர்மாமீட்டர் பதுக்கி அதிகவிலைக்கு விற்ற குற்றவாளி சாஹில் அகர்வால் என்பவர் ஹமி நேபாளுக்கு நிதியளிப்பவர்களில் மற்றொருவர்.
டாக்டர் சந்துக் ருயிட் எனும் மகசேசே விருது பெற்ற கண் மருத்துவர் மற்றொரு சர்வதேச ஆதரவு, நிதி திரட்டும் ஆள்.
இப்படியாகத்தான் நேபாளத்தின் தன்னெழுச்சியான போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
நேபாளத்தில் செப்டம்பர் 10ஆம் தேதி இரவு 10 மணி முதல் ராணுவம் களமிறங்கியுள்ளது. இதன் மூலம் குறி வைத்துத் தாக்கப்பட்ட இந்திய வணிகர்கள் (மார்வாடிகள்) பாதுகாப்பு ஓரளவுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேபாளத்தில் 2006ல் மன்னர் பிரேந்திராவைக் கொன்றுவிட்டு நீ மன்னனாகு என்று அவரது மகனை ஏற்றிவிட்டு மகனையும் கொன்று போட்டார்கள். மறைந்த மன்னரின் தம்பி ஞானேந்திரா குடும்பத்தோடு வெளிநாட்டுக்கு ஓடுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அவர் மன்னராகி நாட்டை வழிநடத்த முனைந்தார். ஞானேந்திராவை அமெரிக்கத் தூதர் மிரட்டிப் பதவி விலகச் செய்தார்.
இப்போதும் கலவரத்தை ஆயுத வியாபாரிகள் ஆதரவில் தன்னெழுச்சி என்ற போர்வையில் நடத்துகிறார்கள். பின்னணியில் சிஐஏ என்று விவரமறிந்த குழந்தையும் சொல்லும். ஐனநாயகம் என்று அமெரிக்கா ஏற்படுத்தினால் அது படுத்தவே பயன்படும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
இப்போது சுசீலா கர்கி என்ற அம்மையார் நேபாளத்தின் இடைக்காலப் பிரதமாராகிறார். இவர் நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் படித்தவர்.
இவர் பேசியது:
பாரதமும் நேபாளமும் அரசு எல்லைகளால் பிரித்து வைக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் ஒரே தன்மையினர்.
அதன் மோடிஜியை மதிக்கிறேன், வணங்குகிறேன். பாரத மக்கள் என்னை சகோதரியாகப் பார்ப்பவர்கள். என் முதல் பணி சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துவது.
இது தவிர ஊழலற்ற ஆட்சி என்பதற்கு அங்கே பலரும் பிரதமர் மோடியின் ஆட்சியையே உதாரணம் காட்டுகின்றனர். இதைச் சிலர் எதிர்த்தாலும் மோடி ஆட்சி போல இங்கே வேண்டும் என்ற கோஷம் வலுக்கிறது. இது அமெரிக்காவுக்குப் புதிய தலைவலி. முன்னாள் காத்மாண்டு மேயர் இந்திய எதிர்ப்பு மனநிலையில் இருக்கும்
இது தவிர பதவியிறக்கப்பட்ட க்ம்யூனிஸ்ட் பிரதமர் கேபி சர்மா ஒளி சீனப் பழக்கப்படி லிபுலேக் பகுதி நேபாளத்தோடு சேர்ந்தது என்று ஆரம்பித்தார். எல்லையைத் தாண்டிக் கால் வைத்தால் நடப்பது வேறு என்று நம் அரசு சொல்லிவிட்டது. இவர் ராமர் நேபாளத்தில் பிறந்தார் என்று சொன்னதால் மோடியின் உளவுத்துறை என்னைத் திட்டமிட்டுப் பதவியில் இருந்து தூக்கிவிட்டது என்று பேசியிருக்கிறார். நேபாள மக்களோ அவரது கம்யூனிஸ்டு கட்சிக்காரர்களோ கூடக் கண்டுகொள்ளவில்லை.
கலவரத்தில் சிக்கிய ஒரு கலகக்காரனின் அறையில் 2500 அமெரிக்க டாலர்களும், 5 லட்சம் உள்ளூர்ப் பணமும், ஆயுதங்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராணுவம் விசாரிக்கும் என்றாலும் பின்னின்று நடத்தியவர்கள் சிக்குவார்கள் என்று நம்புவதற்கில்லை.
இது போன்ற இளசுகள் (GenZ) என்ற பெயரில் 2024லிருந்து இதுவரை 6 கலவரங்கள் நடைபெற்றுள்ளன.
1. கென்யா இளசுகள் புரட்சி:
2024 ஜூனில் கென்யாவில் இறுதிப் புரட்சி என்று பெயரிட்டு கலவரம் நடத்தப்பட்டது. அந்நாட்டில் வரிகள் அதிகரிக்கப்படும் அறிவிப்பு வரவிருந்த போது இளசுகள் என்றறியப்படும் 18-21 வயதுடைய மக்கள் போராட்டங்கள் செய்து அதை எதிர்த்தனர். இது கலவரமாக மாறி பாராளுமன்றத்தில் நுழைந்து அடிதடியில் ஈடுபட்ட போது, ராணுவம் வந்து கலவரத்தை அடக்கியது. மேற்கத்திய ஊடகங்கள் ஐயோ பாவம் போராளிகள் என்று எழுதின. ஆனால் இறந்த 60 இளசுகள் கலவரக்காரர்கள் அல்ல. கலவரத்தை நடத்திய கூலிப்படையினர் தப்பிவிட்டனர்.
2. ஜார்ஜியா இளசுகள் கலவரம் - இல்லை இல்லை புரட்சி:
2024 மே மாதம் ஜார்ஜியா நாட்டில் வெளிநாட்டு நிதி பெறும் ஊடகங்கள், NGOக்கள் தங்கள் வரவுசெலவில் 20%க்கு மேல் வெளிநாட்டுப் பணம் வந்தால் வெளிப்படையாக வெளிநாட்டு உதவியைச் சொல்லிப் பதிவு செய்யவேண்டும் என்று சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஊடகத்தின் குரல்வரளை நெறிக்கப்படுகிறது என்று தொடங்கி இளசுகள் கோஷமிட்டுக் கொடிபிடித்த வேளையில் உள்ளே புகுந்த கூலிப்படையினர் புடினைக் காப்பியடித்த சட்டம் என்று சொல்லிப் பல இடங்களைக் கொளுத்தியும் சுதந்திரமான இளசுகள் என்ற பெயரில் 40 வயதுக்கு மேற்பட்ட கூலிப்படையினர் அட்டகாசம் செய்தனர்.
3. வங்க தேச இளசுகள் புரட்சி:
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசு ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு, குறிப்பாக 1971 போரில் பங்கேற்ற முக்தி பாஹினி ஆட்களின் வாரிசுகளையும் சேர்த்து, 30% இடஒதுக்கீடு அறிவித்தது. இதை எதிர்த்து இளசுகள் களம் கண்டனர். இந்தச் சட்டம் பிரதமர் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு ஆதாயம் தரும் என்று கூச்சலிட்டனர். “விடுதலை வீரர்களுக்கு இல்லை என்றால் ரஜாக்கர்களுக்கா இட ஒதுக்கீடு தரமுடியும்?” என்றார் ஹசீனா. ரஜாக்கர்கள் 1971ல் வங்காளிகளைக் கொன்றுகுவித்த பாகிஸ்தானி கூலிப்படையினர்.
ஆனால் அங்கே இருந்த அமெரிக்க கலவர ஏற்பாட்டாளர்களுக்கு அது போதுமானதாக இருந்தது. ஐஎஸ்ஐயில் இருந்து ஆள் கொண்டு வந்து மர்மத்துக்கு மர்மம் என்று பேசிக் கலவரத்தில் இறங்கினார்கள். இளசுகள் பின் தள்ளப்பட்டு போராட்டம் முழுதாகத் தொழில்முறை ரௌடிகளின் கைக்குச் சென்றது. அப்புறம் நடந்த கோரமான நிகழ்வுகளில் ஹசீனா தப்பி ஓடினார். வங்கதேசத்தின் தந்தை என்று போற்றப்பட்ட முஜிபுர் ரகுமானின் சிலைகளை வங்கதேசிகளே உடைத்தெறிந்தனர். ஒரு கட்டத்தில் கலவரம் நிறுத்தப்பட்டு அமெரிக்கத் தலையாட்டி பொம்மை யூனிஸ் தலைமை ஆலோசகர் என்று அமர்த்தப்பட்டார்.
4. இலங்கை இளசுகள் புரட்சி:
Go home Gota என்ற கோஷத்துடன் தொடங்கியது போராட்டம். இலங்கைப் பொருளாதாரம் வீழ்ச்சி நோக்கிப் போவதைத் தடுக்கத் தவறியதற்காக இந்தப் போராட்டம் என்று சொல்லப்பட்டது. கோத்தபய ராஜஹக்ஷ அமைச்சரவையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தவிர அத்தனை மந்திரிகளும் ராஜினாமா செய்தனர். ஜனாதிபதி கோத்தபய ராஜினாமா செய்யமாட்டார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கலவரம் வெடித்தது. புத்த பிக்குகள் கலவரக்காரர்களைச் சமாதானப்படுத்த வந்த போது பொதுமக்கள் அவர்களை தயவுசெய்து போங்கள் என்று அனுப்பினர். ஆனால் சிலர் அவர்களை அடிக்கப் பாய்ந்தனர். அந்த சிலர் இன்று வரை இலங்கையில் காணக்கிடைக்கவில்லை என்று தகவல்.
ராஜபக்ஷ குடும்பம் அமெரிக்கா, இங்கிலாந்து என்று போக முயன்று அந்த நாடுகள் விசா தராததால் மாலத்தீவுகளுக்குப் போய் அங்கிருந்து ஜூலையில் ராஜபக்ஷ குடும்பம் நாட்டைவிட்டு வெளியேறியதும் மே 2022ல் பிரதமராக நியமிக்கப்பட்ட ரனில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் வெளியேற வேண்டும் என்று கலவரக்காரர்கள் கோஷத்தை மாற்றினர். பல பொதுச் சொத்துக்கள் கொளுத்தப்பட்டன. லண்டன், லாஸ் ஏஞசலிஸ், ஆஸ்திரேலியா என்று இலங்கைத் தூதரகத்தின் முன் போராட்டங்கள் நிகழ்ந்தன. இலங்கை ஜனாதிபதி மாளிகையில் புரட்சிக்காரர்கள் புகுந்து சேதம் விளைவித்தனர்.
ராஜபக்ஷ குடும்பம் வெளியேறிய பிறகு பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜனாதிபதியான ரனில் கலவரத்தை கட்டுப்படுத்திப் பொருளாதாரத்தை முன்னேற்ற நடவடிக்கைகள் எடுத்தார். பிறகு தேர்தல் நடந்து கடந்த செப்டம்பர் 2024ல் அனுரா திஸ்ஸநாயக என்ற கம்யூனிஸ்ட் ஜனாதிபதி ஆனால்.
இன்றைய நிலையில் 1.5 கோடி ரூபாய் திருடிவிட்டார் என்ற குற்றச்சாட்டில் ரனில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது கூடுதல் தகவல்.
5. மியான்மர் கலவரம் (புரட்சி என்று சொல்கிறார்கள்)
நவம்பர் 2020ல் தேர்தல்கள் முடிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாரளுமன்றத்தை பிப்ரவரி 2021ல் ராணுவம் அங்கீகரிக்க முடியாது என்று சொல்லி ஜனாதிபதி வின் மிண்ட், பிரதான ஆலோசகர்/சட்டவல்லுநர் ஆங் சான் சூ சி உள்ளிட்டோரைக் கைது செய்து சிறை வைத்தது. கொரோனா உச்சத்தில் இருந்த போது நடந்த இந்த ராணுவப் புரட்சியை எதிர்த்துப் பெரிய அளவில் மக்கள் களம் காண்பது இயலாது போனது. ஆனால் சமூக வலைத்தளங்களில் விவகாரம் விரிவாகப் பேசப்பட்டது. ராணுவப் புரட்சியை எதிர்த்து அரசு ஊழியர்கள், மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்டோர் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கினர்.
110 மருத்துவமனைகளில் போராட்டம் தொடங்கிய மருத்துவ ஊழியர்களோடு சேர்ந்து தொழிலாளர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் என்று பலரும் சேர்ந்துகொண்டனர். நாடு ஸ்தம்பித்தது. இதை செல்லாது என்று அறிவித்தது ராணுவம். பிப்ரவரி 25 அன்று ராணுவ வியாபாரப் புறக்கணிப்பைத் தொடங்கினர். Mytel எனும் ராணுவத்தின் தொலைத்தொடர்பு சாதன வணிகம் தொடங்கி மியான்மர் பியர், மாண்டலே பியர், டகோன் பியர், பல டீ காஃபி கம்பெனி ஊழியர்கள் ராஜினாமா செய்தனர்.
ராணுவம் இணையத்தை முடக்கி, வியாபாரிகளைக் கைது செய்து, சமூகவலைத் தளங்களைத் தடை செய்து, பல அரசியல் தலைவர்களைக் கைது செய்து போராட்டத்தை கட்டுப்படுத்தியது. ஆனால் மக்கள் பாதுகாப்புப் படை என்று ஒரு பிரிவினர் ஆயுதம் ஏந்திப் போர் புரிந்தனர். இதில் பர்மிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுதப் பிரிவான மக்கள் விடுதலைப் படை முக்கியப் பங்காற்றியது. இவர்களோடு இனக்குழுக்கள் பலவும் ஆயுதம் தாங்கிப் போரிடத் தொடங்கினர். இவர்களுக்கான ஆயுதங்கள் வெளியில் இருந்து குறிப்பாக சீனா அமெரிக்கா போன்ற நாடுகள் வழங்கின. ஓரளவு ராணுவக் கட்டுப்பாட்டில் மியான்மர் இருந்தாலும் இன்னமும் ஆயுதப் போராட்டம் தொடர்கிறது. இதனால் நம் நாட்டுக்கும் மணிப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயுதக் குழுக்கள் நடமாட்டம் அதிகரித்துக் கலவரமாகித் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பாரதத்தில் போராட்டம் - இல்லை கலவரம்:
இப்படிச் சுற்றிப் பல நாடுகளிலும் ஆட்சி மாற்றத்தைக் கலவரம் செய்து கொண்டு வரத் திட்டமிட்டு முடிக்கும் சக்திகள் (Deep State உள்ளிட்டவை) பாரதத்தில் இன்னமும் முயற்சிகள் மேற்கொள்கின்றனர். ராகுல் காந்தி சொன்னது போல மண்ணெண்ணை கொட்டி பற்ற வைக்க ஒவ்வொரு முறை முயன்றும் தோற்கின்றன. ஷஹீன் பாக் கலவரம் தொடங்கி, போலி விவசாயிகள் போராட்டம், CAA-NRCக்கு எதிரான நாடு தழுவிய கலவரங்கள், 2021ல் தில்லி செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியேற்றியது, மணிப்பூர் மெய்தி-குக்கி கலவரம், 2022ல் பஞ்சாபில் கலவரக்காரர்களை அடக்காமல் மாநிலப் போலீஸ் வேடிக்கை பார்த்து அதனால் பிரதமர் மோடியைப் பாலத்தின் மீது 20 நிமிடங்கள் நிறுத்தி வைத்துப் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது உள்ளிட்ட பல முயற்சிகள் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர முனைந்து செய்யப்படுகின்றன. இனியும் வெல்லாது இந்தத் தீய சக்திகளை விரட்டுவது நம் கடமை. வந்தே மாதரம்.
No comments:
Post a Comment