ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து பாகிஸ்தானை அடக்கவேண்டும் என்று தான் முதலில் திட்டமிட்டார் பிரதமர் மோடி. ஆனால் அவருக்கும் தெரியும் அடங்கமாட்டார்கள் என. ஆனாலும் பக்கத்து நாடு, பகையோ உறவோ பிரச்சனை கொடுக்காமல் இருந்தால் சரி என்ற குருநாதர் கொள்கையில் யோசித்தார். அடங்க வாய்ப்பில்லை என்று அஜித் டோவல் உறுதி செய்ய என்ன செய்தால் நமக்கு நல்லது என்று திட்டமிட்டார்கள். திட்டங்களை விரிவாகப் பார்க்கலாம்.
நல்லுறவு பேணும் திட்டங்கள்:
2014ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாகிஸ்தானை அடக்கி வைப்பதில் என்னென்ன செய்யவேண்டும் என்று திட்டமிட்டார் பிரதமர் மோடி. நல்லுறவு என்று நவாஸ் ஷெரீஃபை பதவியேற்புக்கு அழைத்தார், விருந்துக்கு அழைத்தார். எல்லாம் சரி, ஆனால் மக்கள் செல்வாக்கு என்று இருந்தாலும் இந்த ஆளிடம் சரக்கில்லை. அதிகாரம் ராணுவத்திடம் மட்டுமே உள்ளது, இவரால் துரும்பைக் கூட அசைக்க முடியாது என்று முடிவாகச் சொன்னார் பாதுகாப்பு ஆலோசகர் டோவல். பாகிஸ்தனிகளின் ஆட்டத்தை ஆடினார்கள் நம்மவர்கள். நவாஸ் ஷெரீஃபின் பேத்தி கல்யாணத்துக்குப் போவது, பேரன் சுன்னத்துக்கு வாழ்த்துவது என்று நட்பு பாராட்டினார்கள். கடுப்பின் உச்சிக்குப் போன ராணுவம் ஷெரீஃபைக் கவிழ்த்துவிட்டது. அவரும் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு லண்டனிஸ்தான் போய்விட்டார்.
இதற்கிடையே பல சர்வதேச உறவுகள் சீரமைக்கப்பட்டன. பாரத அரசின் பேச்சுத் தன்மையே மாறிவிட்டிருந்தது. வியாபாரம் என்பதை இரு நாட்டு உறவுகளின் பாலமாக்கினார்கள். இதனால் என்ன இருந்தாலும் நம்மாளு என்றிருந்த அரபு நாடுகள் எண்ணை வற்றினால் வேறு தொழில் தேவை என்ற நிலையில் பாரதத்தோடு வியாபாரம் பேச முன் வந்தார்கள். இது பாகிஸ்தானை எரிச்சலடையச் செய்தது. நாடு நாடாகப் போய் சிறு குறு பெரிய பலமான என்ற பேதங்களின்றி உறவுகளைப் பேணினார் மோடி. சுஷ்மா ஸ்வராஜ் அம்மையாரும் அவர் போட்ட பாதையில் சிறப்பான தொடர் பேச்சுகளை நடத்தி உலக நாடுகளை நம் பக்கம் திருப்பினார். நாங்கள் அணு சக்தியாக்கும் என்று இறுமாந்திருந்த பாகிஸ்தானை ஓரமாப் போய் விளையாடுப்பா தம்பி என்றன உலக நாடுகள். பாகிஸ்தானோடு இருதரப்புப் பேச்சுவார்த்தை என்றோ Track 2, அமன் கி ஆஷா, புறா விடு தூது என்று எதுவும் 2015க்குப் பிறகு நடக்கவில்லை. இதை வைத்துக் கல்லா கட்டிக்கொண்டு நம் நாட்டில் வசதியாக வாழ்ந்த ஒரு கும்பல் வயிற்றிலடித்துக் கொண்டு புலம்பியது.
2016ல் ஒருநாள் இவர்களுக்கெல்லாம் மரண அடி காத்திருந்தது. நவம்பர் 16, 2016. இரவு 8மணிக்கு டிவியில் தோன்றினார் பிரதமர் மோடி. அன்றிரவு 12 மணியில் இருந்து 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். நோட்டுகளை மாற்ற வங்கியில் கொடுத்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என்றார். கள்ளப்பணம் வைத்திருந்த உள்நாட்டவர் பலரும் ஆடிப்போய் ஆடிட்டர்கள் சிண்டைப் பிய்த்துக்கொண்டிருந்த நிலையில் பாகிஸ்தானின் பொருளாதாரமே ஆட்டம் கண்டது. நம் நாட்டின் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் எந்திரத்தை ஏலம் எடுத்து நாம் காகிதம் வாங்கிய அதே வியாபாரியிடம் காகிதம் வாங்கி நம் நோட்டுகளை கச்சிதமாக அச்சடித்துக் கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விட்டுப் பிழைத்துக் கொண்டிருந்த பாகிஸ்தான் திகைத்தது. அச்சடித்து வைத்திருந்த நோட்டுகளை மாற்றலாம் என்றால் கணக்குச் சொல்ல வேண்டுமாமே? உள்ளூரில் எவனையாவது கேட்கலாம் என்றால் அவன் கணக்கே கணக்கில் வராமல் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருந்தது. பலர் பழைய நோட்டுகளை மாற்ற முடியாமல் மோடி ஒழிக என்று ஆரம்பித்துத் திட்டினார்கள். ஆனால் திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை பாகிஸ்தானுக்கு. மேலை நாடுகளிடம் போய் “அந்த நாட்டு நோட்டுகளை நான் கள்ள நோட்டாக அடித்து வைத்திருந்தேன். செல்லாதுன்னு சொல்றார். கொஞ்சம் பேசி மாத்தித் தரச் சொல்லுங்க” என்றா கேட்க முடியும்? புது நோட்டுகளை அச்சடிக்க எந்திரம் வேண்டுமென்றால் அது சிதம்பர ரகசியமாக இருந்தது.
இந்நிலையில் அமெரிக்காவில் ஆட்சி மாறி ட்ரம்ப் வந்து அதிரடிகள் காட்டினார். பரம்பரை வியாபாரியான ட்ரம்புக்கு இருநாட்டு வர்த்தக விஷயங்களில் சிறப்பாக வியாபாரம் பேசிய மோடியைப் பிடித்துப் போக வீராவேசம் பேசிய பாகிஸ்தானை ஒதுக்கித் தள்ளினார். அவர்களுக்கு ஆதரவான அமெரிக்க குழுக்கள் என்ன சொல்லியும் எடுபடவில்லை. சர்வதேச அளவில் மிரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த பாகிஸ்தானின் செல்வாக்கு சரியத் தொடங்கியது. 2017ல் நவாஸ் ஷெரீஃப் துரத்தப்பட்டு அப்பாசி என்ற ஷெரீஃப் குடும்பத்தின் ஆள் பிரதமரானார். 2018ல் ராணுவத்தின் ஆதரவில் பிரதமரான இம்ரான்கான் அமெரிக்கா இல்லாவிட்டால் சீனா என்று போக CPEC திட்டத்துக்குக் கொடுத்த பணத்துக்குச் சீனா கணக்குக் கேட்டது. கழுதை தருகிறேன், பெண் தருகிறேன் என்று பேசி சீனாவிடம் ஆயுதங்கள், பணம் என்று கொழித்தது பாகிஸ்தான்.
அடுத்த ஆயுதம் எடுத்தார் மோடி. கஷ்மீரத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது. கஷ்மீரத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது அரசியல் சாசனப் பிரிவை நீக்க வேண்டும் என்று பேசியபோது “கஷ்மீரம் இந்தியாவோடு இருக்கவேண்டுமா வேண்டாமா?” என்று கேட்டது வேறு யாருமல்ல நமது உச்சநீதிமன்றம். அங்கே நிலைமை அப்படித்தான் இருந்தது. 370ல் கைவைக்க மோடியாவது வேறொருவராவது யாராலும் முடியாது என்றார் ஃபரூக் அப்துல்லா. இந்தத் திமிர் எப்படி சாத்தியம் என்று சட்டத்தையும் இதுவரை ஆடப்பட்ட கள்ள ஆட்டங்களையும் ஆராயக் குழு அமைத்தார் மோடி. சட்டத்தில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் ஏதோ ஒன்று இடித்தது. கஷ்மீரத்தில் அரசு நூலகங்களில் ஆராய்ந்த போது அந்த இடிபாடு என்ன என்று புரிந்தது. கஷ்மீரத்தின் சட்டமன்றம் இல்லாத பட்சத்தில் கவர்னர் முடிவெடுக்கலாம், கஷ்மீரத்து அரசியல் நிர்ணய சபை இல்லாத நிலையில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தந்தால் சட்டத்தில் மாற்றங்கள் செய்யலாம் என்ற ஷரத்தை அழித்துவிட்டு சட்டத்தை புத்தகங்களாக்கி வெளியிட்டிருந்தார்கள். அந்த ஷரத்தோடு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகல்களை எடுத்துக் கொண்டு வந்து உச்ச நீதிமன்றத்தை அணுகாமலேயே குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் 370ம் 35Aவும் நீக்கப்பட்டது. 35A தான் இந்தியர்கள் கூட கஷ்மீரத்தில் இடம் வாங்கக் கூடாது என்று அநியாயமாகத் தடை செய்த பிரிவு.
ஒளித்து வைத்ததை எப்படிக் கண்டுபிடித்தார் மோடி என்று உள்நாட்டினர் புலம்பிய வேளையில் பாகிஸ்தான் கொதித்தது. ”இது சட்டப்படி செல்லாது, நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம்” என்று முழங்கியது. “அந்த நாட்டு சட்டத்தில் நடக்கும் மாற்றங்களை அங்கீகரிக்க நீ யார்?” என்று சர்வதேச சமூகங்கள் கேட்க பதில் சொல்ல முடியாமல் புழுங்கியது. அதிர்ச்சியில் இருந்து வெளிவராத அப்துல்லா, முஃப்டி குடும்பங்கள் பேச்சே இல்லாது போயின. அடுத்த அடியாக ஜம்மு-கஷ்மீரம் ஒரு யூனியன் பிரதேசம், லடாக் ஒரு யூனியன் பிரதேசம் என்று பிரித்தது மத்திய அரசு. நிர்வாக வசதிக்காகச் செய்தாலும் லடாக்கின் முன்னேற்றத்துக்கு இது சிறப்பான வழி வகுத்தது. லடாக் தனி யூனியன் பிரதேசமாகப் பிரிந்த பிறகும், ஜம்மு கஷ்மீரம் யூனியன் பிரதேசமான பிறகும் நிதி நிர்வாகம் துணை நிலை ஆளுநர்கள் கட்டுப்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது. கஷ்மீரத்தில் கல்லெறிதலுக்குக் காசு கொடுப்பது நின்று போனது. காசுக்குக் கல்லெறிபவர்கள் சோற்றுக்கு வேறு வேலை தேடினார்கள். அவர்களுக்கு கம்பளி, கைவினைப் பொருட்கள், ஸ்வெட்டர் என்று பல்வேறு பொருட்களைச் செய்து விற்பது, சுற்றுலா சம்பந்தப்பட்ட வேலைகள் என்று கொடுத்து அவர்களை மடை மாற்றியது பாரத அரசு. இதனால் பயங்கரவாதத்துக்கு பாரதப் பக்கத்தில் இருந்து ஆள் கிடைப்பது அரிதாகிப் போனது. அப்படிப் போனவர்கள் ராணுவத்தால் இரக்கமின்றி வேட்டையாடப்பட்டனர். அதனாலும் பயங்கரவாதிகள் குறைய ஆரம்பித்தனர். இது கஷ்மீரத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு வழி செய்து கொடுத்தது. இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள கஷ்மீரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் எதிர்க்கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர். கையறு நிலை பாகிஸ்தானுக்கு.
2020ல் பைடன் அமெரிக்க அதிபரானவுடன் ஆஃப்கனிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் அங்கிருந்த ஆயுதங்களை அப்படியே விட்டுவிட்டு வெளியேறினர். ஆஃப்கனிஸ்தான் தாலிபான் வசமானது. அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை. பாகிஸ்தான் ஐஎஸ்ஐ தலைவரை அனுப்பி சலாம் வைத்தது. ஆனால் அவர்கள் பாகிஸ்தான் பேச்சுக் கேட்கும் பொம்மைகளாக இருக்க மறுத்தார்கள். அவர்கள் பெயரைச் சொல்லிப் பணம் வாங்கிக்கொண்டு கொழித்த நிலை இனி இல்லை என்றானது. தாலிபான் எங்கள் நலன், எங்கள் வளர்ச்சி, எங்கள் மக்கள் என்று பாகிஸ்தானைப் புறந்தள்ளியது. சீனாவின் CPEC சாலைகளை பலோசிஸ்தான் விடுதலைப் படையினர் தகர்த்தனர். மேற்குப் பக்கம் பாகிஸ்தானின் அஸ்தமனம் ஆரம்பமானது. பலோசிஸ்தான் விடுதலைப் படையினர் யார்? பலோசிஸ்தான் என்பது பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடைப்பட்ட பகுதி. ஹிந்துக்கள் வசித்த நிலம். இன்னமும் ஹிந்துக்கள் வசிக்கிறார்கள். பொது ஆண்டு 654ல் இஸ்லாமிய ஆட்சிக்கு ஆட்பட்ட இந்தப் பகுதி கலத் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. 1947ல் அந்த நிலத்தை மீர் அஹமத் யார் கான் அஹமத்ஜாய் என்பவர் ஆண்டார். அவர் தனி நாடாக இருக்க விரும்பி தன் வழக்கை பிரித்தானிய கவர்னர் ஜெனரலிடம் வாதாட முகமதலி ஜின்னாவை நியமித்தார். ஜின்னா வாதாடி தனி நாடு பெற்றுக் கொடுத்தார். அஹமத் யார் கான் ஒரு கட்டத்தில் இந்தியாவிடமும் ஈரானிடமும் வணிகம் செய்யப் போக ஜின்னா என்னைக் கேட்காமல் எப்படி என்றார். சுதந்திர நாடு என்ற கானின் பேச்சு எடுபடவில்லை. சுற்றிலும் படைகளை நிறுத்தி பாகிஸ்தானோடு இணைகிறாயா இல்லை என்ன சங்கதி என்று மிரட்டினார். கான் இந்தியாவிடம் பேசினார். ஜவஹர்லால் நேரு ப்லோசிஸ்தான் இந்தியாவுடன் இணையும் கோரிக்கையை நிராகரித்தார். இதற்குள் ஜின்னா உள்ளுர் பஞ்சாயத்துகளில் தன் ஆட்களை நிரப்பி சிலரை மிரட்டியும் சிலருக்கு ஆசைகாட்டியும் தன் பக்கம் இழுத்தார். வேறு வழியின்றி “மக்கள் விருப்பம்” என்ற போர்வையில் பாகிஸ்தான் பலோசிஸ்தானை ஆக்கிரமித்துக் கொண்டது. 1948ல் தொடங்கி இன்று வரை மீண்டும் தனி நாடாக வேண்டும் என்று மக்கள் போராட்டம் தொடர்கிறது. தற்போது பிரம்மதாக் புக்தி என்பவர் தலைமையேற்றுள்ளார். ஆனால் அவர் பலோசிஸ்தானில் இருந்தால் பாகிஸ்தான் தன் உறவினர்களைக் கொன்றது போலத் தன்னையும் கொல்லும் என்ற அச்சத்தில் ஜெனிவாவில் அடைக்கலம் கேட்டு வசிக்கிறார். இது தவிர Baloch Liberation Army என்ற அமைப்பும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்த CPEC என்பதையும் பார்த்துவிடுவோம். சீனாவில் இருந்து முன்காலத்தில் சிந்துமாக்கடல் என்று வழங்கப்பட்ட தற்போதைய அரபிக்கடல் வரை தரைவழிப் பாதை இருந்தது. அது பட்டு ஏற்றுமதிக்குப் பயன்பட்டதால் Silk Route என்று அழைக்கப்பட்டது. இந்தப் பாதையைப் புதுப்பித்து தற்போதைய சீனக் குப்பைகளை ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் பாகிஸ்தான், இந்தியா, ஆஃப்கனிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைக் கட்டுப்படுத்த சீன ராணுவ நடமாட்டம் சீராக இருக்க என்று பல காரணங்களுக்காக இந்தச் சாலை போடப்பட்டு கவாதர் துறைமுகம் வரை செல்கிறது. கவாதர் துறைமுகத்தைக் குத்தகைக்கு எடுத்த சீனா அதை முழுக்கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பாகிஸ்தானியர்களையே உள்ளே விடுவதில்லை. அவர்கள் அடிமைகளாக வைக்கத் துடிக்கும் பலோச் மக்களை எப்படி மதிக்கும்? அதனால் அந்த மக்கள் விடுதலைப் படை சீனர்களைத் தாக்கி விரட்டியது. சீனா பாகிஸ்தானின் பாதுகாப்பை ஏற்காமல் சீனப் படைகளை அனுப்பியது. ஆனால் எதிர்ப்பும் அடியும் பலமாகவே சீனர்கள் வெளியேறினர். ஆனால் பாகிஸ்தான் இப்போது சீனா CPECக்காகக் கொடுத்த பணத்தைத் திருப்பித் தரவேண்டிய நிர்பந்தம். அங்கே பாகிஸ்தான் ராணுவத்தையும் அடிக்கிறார்கள். அடி என்றால் ராணுவத்தினர் வேறிடம் மாற்றுங்கள் அல்லது ராஜினாமா செய்வோம் என்று பேசும் அளவுக்கு உள்ளது. பாகிஸ்தானி போலீஸ் பலோசிஸ்தானில் அதிகாரம் செலுத்த முடியவில்லை. ஏன்? விடுதலைப் படை மட்டுமல்லாது மக்களும் விரட்டுகிறார்கள். ஆக பலோசிஸ்தான் பாகிஸ்தானின் கைவிட்டுப் போகிறது. R&AW அமைப்புதான் இதற்குக் காரணம் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்ட ஆதாரம் இருந்தால் கொடுங்கள், விசாரிப்போம் என்று அவர்கள் பதிலை அவர்களுக்கே சொன்னார் நம் வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர்.
இப்படி நாலா பக்கமும் சுற்றி அடித்து, பொருளாதாரமும் படுத்த நிலையிலும் பாகிஸ்தான் பயங்கரவாதம் வளர்த்தது. அதற்கு அடிப்படை போதைப் பொருள் வியாபாரம். அதை நம் அரசு கடுமையாகக் கண்காணித்தது. விவரம் அறிந்து கொண்டு கடத்தலின் ஆதாரத்தைத் தடுக்க ஆவன செய்வது முதல் பணி. அதன்படி லக்ஷத் தீவில் பல மாற்றங்கள் செய்து சுற்றுலா வளர்ச்சிக்கு வழி வகுத்து கடற்படை, கடலோரக் காவல் படை என்று கண்காணிப்பை அதிகரித்தது. இதனால் போதைக் கடத்தல் நம் நாட்டின் வழியே நடைபெற முடியவில்லை. குஜராத் ராஜஸ்தான் உள்ளிட்ட பல இடங்களில் வேட்டை தொடர்கிறது. இதுவும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு பண விஷயத்தில் அடி.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் கஷ்மீரம் அமைதியாக இருப்பது பொறுக்காமல் கடந்த ஏப்ரல் 22ல் பஹல்காமில் பயங்கரவாதிகளை அனுப்பி சுற்றுலாப் பயணிகளை மதம் கேட்டுச் சுடச் சொன்னது ஐஎஸ்ஐ. இதன் மூலம் இந்தியாவில் மதக் கலவரம் பெரிய அளவில் வரும் என்று எதிர்பார்த்தது. ஆனால் நம் அரசு “பதிலடி கொடுப்போம். எங்கே, எப்போது, எப்படி என்பதை நாம் முடிவு செய்வோம்” என்றது. பிரதமர் உலக நாடுகளுக்கு இதைக் கோடிட்டுக் காட்டினார். பிஹாரில் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் பேசிய பிரதமர் நடுவே ஆங்கிலத்தில் “பயங்கரவாத நடவடிக்கைகளை ஒருபோது பொறுத்துக்கொள்ள மாட்டோம். பதிலடி கண்டிப்பாகத் தருவோம்” என்றார். பிஹார் மக்களிடையே ஏன் ஆங்கிலம்? உலக நாடுகளுக்கு அது ஒரு குறிப்பு. அதே போல ராணுவத்தோடு திட்டமிட்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதத் தளங்களில் 21 துல்லியமாக அடையாளம் காணப்பட்டு முதல் கட்டமாக 9 அழிக்கப்பட்டன. அதிலேயே மசூத் அசர் என்ற உலக பயங்கரவாதியின் உறவினன் கொல்லப்பட்டான். அவன் நம் நாட்டில் 26/11 உள்ளிட்ட பல பயங்கரவாத நடவடிக்கைகளைத் திட்டமிட்டு நடத்தியவன். IC814 கடத்தலின் மூளையாகச் செயல்பட்டவன். அவன் அழிந்தது பயங்கரவாதச் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதில் சிக்கல் ஏற்படுத்தியது. டேனியல் பேர்ல் என்ற யூதப் பத்திரிகையாளரைக் கொன்றவனைக் கொன்றது பாரதம் என்று இஸ்ரேல் கொண்டாடுகிறது. இதில் முக்கியத் தகவல் அவர்கள் பாதுகாப்புக்காக சீனத்தின் HQ09 ரேடார் நிறுத்தப்பட்டிருந்தது. அங்கத்திய ஆள் ஒருவர் விடியோவில் சொன்னது போல வெடிச்சத்தம் கேட்டு பக்கத்து ஊரில் இருந்து பைக்குகளில் ஆட்கள் வந்துவிட்டார்கள், இது (HQ09)எனக்கென்ன என்று நிற்கிறது என்றார்.
பாகிஸ்தான் நம் நாட்டு ராணுவத் தளங்களைக் குறிவைத்து 15 ஏவுகளைகளை ஏவியது. அதில் ஒன்று கூடத் தரை தொடவில்லை. நம் S400 ரேடார் வானிலேயே கண்டு தடுத்து அழித்துவிட்டது. பின்னர் டில்லி நோக்கி ஒரு ஏவுகணை வந்தது. அதை ஹரியாணாவில் சிர்சாவில் மடக்கி வீழ்த்தினோம். இதற்கு பதிலடியாக நம் ராணுவம் 11 பாகிஸ்தானிய தளங்களைக் குறிவைத்தது. அவை முக்கியமான இடங்கள். ராவல்பிண்டி என்ற பாகிஸ்தான் ராணுவத் தலைமையகம் உள்ளிட்ட 11 இடங்கள் வைத்த குறி தப்பாது அடிக்கப்பட்டன. நேரம் இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணிக்குள்.
நூர்கான் விமானத்தளம் - ராவல்பிண்டி (ராணுவத் தலைமையகம்)
சர்கோதா விமானத்தளம் - பாக் அணுகுண்டு முதுகெலும்பு மண்டலம்
ஜாக்கபாபாத் விமானத்தளம் - F16கள் மற்றும் அணு ஏவுகணைகள் கிடங்கு உள்ள இடம்
அடித்த பிறகு அதிகாலை 1.44க்கு பூகம்பம் பதிவாகிறது. ரிக்டரில் 4.1 அளவு.
அதிகாலை 3.40க்கு ரிக்டரில் 5.7 என்ற கணக்கில் ஒரு பூகம்பம்.
ஆனால் புவியோட்டத்தில் பிழை கோடுகள் பதிவாகவில்லை. பூகம்பத்தின் போது அவை பதிவாக வேண்டும்.
ஆக அடித்த bunker buster ஒன்று ஏதோ ஒரு அணு குண்டை அசைத்திருக்கிறது. மொத்தமாக 137 குண்டுகள் அந்த பங்கரில் உள்ளன என்று பாகிஸ்தான் கணக்குச் சொல்ல “இமயமலை உருகிடும்டா எருமை” என்று கடுப்பான அமெரிக்க அணுசக்தி பாதுகாப்பு அமைப்பு கதிரியக்கத்தைக் கட்டுப்படுத்தும் கருவிகளோடும் ஆட்களோடும் விமானத்தை அனுப்பிவிட்டு ட்ரம்பிடம் தகவல் சொன்னது. பிறகு ட்ரம்ப் மோடியிடம் பேச “இன்னின்ன இடங்களில் அடித்தோம். குறிவைத்த விவரங்கள் சொல்லவா?” என்றார் மோடி. அணு உருகும் விவரங்கள் சொல்லி அடிப்பதை நிறுத்துங்கள் என்றார் ட்ரம்ப். “அவனை நம்ப முடியாது. நீங்கள் மத்தியஸ்தம் செய்வதையும் ஏற்கமுடியாது. என்னுடைய விதிமுறைகளின் படி மட்டுமே சமாதானம்” என்றார் மோடி. உடனே ஷாபாஸைக் கூப்பிட்டுப் பேசினார் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ. பாரதத்திடம் பேசுங்கள் என்று கட்டளை பறந்தது. “ராணுவம் நான் சொன்னால் கேட்காது சாமி” என்றார் ஷெரீஃப். அமெரிக்க உளவுத் தலைவி துளசியம்மாள் முனீரைக் கூப்பிட்டுப் பாரதத்திடம் பேசச் சொன்னார். அதற்குள் நம் DGMO எனப்படும் ராணுவச் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் மேஜர் ஜெனரலுக்குத் தகவல் போனது. விவரங்களைச் சோதித்துக் கொண்டு முடிவெடுங்கள் என்று அதிகாரம் தரப்பட்டது. பாகிஸ்தானில் இருக்கும் நம் உளவாளிகளும் “ஆமாம் கதிர்வீச்சு இருக்கும் போலிருக்கிறது. அமெரிக்க விமானமும் நைல் நதியில் இருந்து மணலும் வருகிறது” என்றார்கள். (ஆதாரம்: பின்னர் வரும். கிரிக்கெட் ஆட்டம் போல பந்து வருகிறது, அடிக்கிறார். சிக்சருக்குப் பறக்கிறது என்றெல்லாம் பேசிக்கொண்டே காணொளி நேரலை காட்ட முடியாது). எகிப்தில் நைல் நதியில் உள்ள மணலில் Boron என்ற தாது அதிகம். இது அணுக்கதிரைக் குளிர்வித்துக் கட்டுப்படுத்தும்.
இதன் பிறகு பாகிஸ்தான் DGMO நம்மவரிடம் பேசினார். அடிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்றார். நம்மவரும் நிபந்தனைகளோடு ஒப்புக் கொண்டார். “நீங்கள் அடித்தால் பதிலடி வரும். நாங்கள் தயாராகவே இருப்போம். பேச்சுவார்த்தை என்பதெல்லாம் எங்கள் சொல்படிதான் பேசமுடியும். இருதரப்பார் மட்டும் பேசவேண்டும். வேறாரும் வந்தால் பேச்சே கிடையாது.” மறுபேச்சில்லாமல் அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதனால் தான் அடிப்பதை நிறுத்தியிருக்கிறோம். போர் என்று அறிவித்துச் செய்தால் தான் போர் நிறுத்தம், ஜெனிவா ஒப்பந்தம், சர்வதேச சட்டம் எல்லாம் வரும். இது பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி. அடித்த அடியில் அடிப்படை ஆட்டம் கண்டதால் அமெரிக்கா தலையிட்டு போதுமய்யா என்றது. அவ்வளவே. 3 நாள் அடியில் பாகிஸ்தானின் 12% விமானப்படை துடைத்தெறியப்பட்டது. 52 பைலட்கள், உயரதிகாரிகள் செத்துப் போனார்கள். 15 விமானத் தளங்கள், ராணுவ மையங்கள் என்று சரிசெய்ய மாமாங்கம் ஆகும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இனி வாலாட்ட பாகிஸ்தான் யோசிக்குமா என்றால் இல்லை. அவர்கள் திருந்துவது என்பது குதிரைக்கொம்பு. நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இனி உள்நாட்டில் உள்ளடி வேலை செய்யும் 0.5 துரோகிகளைக் களையெடுப்பதில் கவனம் செலுத்தவேண்டும். வந்தே மாதரம்.
No comments:
Post a Comment