அவாவறுத்தல் என்பது மிகக் கடினமான செயல். அவா எனப்படுவது மிகவும் மெல்லிய உணர்விழை. ஆனால் பட்டு நூலிழை போன்று அறுக்கக் கடினமானது. உயர்ந்த பொருள் இப்படிப் போனதே என்று பட்டு நூலை அறுத்தால் மனம் அடித்துக் கொள்ளும். அதே போல ஆசை விடுப்பது சுலபம் எனினும் மனம் தான் எண்ணியது ஈடேறவில்லை என்று துவளும். பல பணிகளுக்கு ஊறு செய்யும்.
அரசியல், பொருளாதாரம், நிர்வாகம், சர்வதேச உறவுகள், நாட்டு நடப்பு, குறித்த என் எண்ணங்களையும், என் அனுபவங்களையும் இங்கே பதிவேன்!
Disclaimer
நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.
இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.
அன்புடன் என்றும்,
அருண்அம்பி. (@arunambie)
Sunday, 30 September 2012
Saturday, 8 September 2012
விடுதலையின் வக்கிரமும் அரவிந்தன் நீலகண்டனின் சகோதர பாசமும்
சென்னைக்கு விஜயம் செய்து சாதுர்மாஸ்ய சமயத்தில் சீடர்களுக்கு வேதாந்தக் கருத்துக்களை உபதேசித்து அருள் பாலித்து வரும் ஸ்ருங்கேரி ஜகத்குரு அனந்தஸ்ரீ விபூஷித பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் அவர்களை கல்கி பத்திரிக்கையில் சிறு பேட்டி கண்டு வெளியிட்டனர். சுயஜாதி அபிமானியும் ப்ராமணத்வேஷியுமான ஈரோடு ராமசாமி நாயக்கரின் சொத்தை ஏகபோகமாக பரம்பரை பாத்தியதையுடன் அனுபவித்து வரும் கி.வீரமணி தன் விடுதலை பத்திரிக்கையில் யார் இந்த சிருங்கேரி சங்கராச்சாரியார்கள்? என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். வழக்கம் போலவே வடிகட்டிய பொய்யை தம் வழக்கமான பாணியில் ஆதாரம் காட்டுவதாகக் கூறி புனைந்து வைத்துள்ளார். இதோ:
Saturday, 1 September 2012
திராவிடஇயக்கத்தினரின் வெட்டி வாதங்களை வேரறுப்பது எப்படி?
ஆகஸ்டு 19 ஞாயிறன்று தேசிய சங்கப் பலகையின் பயிலரங்கம் நடைபெற்றது. மூத்த பத்திரிகையாளர் சுப்பு அவர்கள் முகநூலில் தெரிவித்த தகவலின் மூலம் விண்ணப்பித்துப் போயிருந்தேன். திருக்குறளும் சிலப்பதிகாரமும் விவாதிக்கப்படும், அந்தப் புத்தகங்களைக் கொண்டு வருதல் சிறப்பு என்று சொல்லியிருந்தார்கள். தமிழய்யாக்களின் சொல்பேச்சுக் கேட்பது பள்ளிப்பருவத்தில் இருந்தே பழக்கத்தில் இல்லாததால் குறிப்பெழுதிக் கொள்ள ஒரு சிறு ஏட்டை மட்டும் எடுத்துக் கொண்டு போனேன்.
Labels:
அரசியல்,
அறிவுரை,
குறள்,
சிலம்பு,
திராவிட மாயை,
தேசியம்,
நாட்டுநடப்பு,
பாரதம்
Monday, 27 August 2012
வேதாந்தம் படும் பாடு - பாகம் 2
கீழே உள்ளது இதன் தொடர்ச்சி....
உனக்கெப்படித் தெரியும் என்று கேள்வி வரும். முதலிலேயே சொல்லிவிடுகிறேன் நான் வேதாந்தியோ மெய்ஞ்ஞானத் தேடல் உள்ளவனோ அல்ல. கொஞ்சம் விவாதம் செய்வேன். அதற்காகவும் அதன் மூலமும் கொஞ்சம் கற்பேன். என் குருநாதர் போற்றுதற்குரிய நிறைஞானி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் அவர்கள் வேதாந்தம் கற்க அடிப்படைத் தேவை என்னென்ன என்று தம் அருளுரை ஒன்றில் சொல்லியிருக்கிறார்.
உனக்கெப்படித் தெரியும் என்று கேள்வி வரும். முதலிலேயே சொல்லிவிடுகிறேன் நான் வேதாந்தியோ மெய்ஞ்ஞானத் தேடல் உள்ளவனோ அல்ல. கொஞ்சம் விவாதம் செய்வேன். அதற்காகவும் அதன் மூலமும் கொஞ்சம் கற்பேன். என் குருநாதர் போற்றுதற்குரிய நிறைஞானி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் அவர்கள் வேதாந்தம் கற்க அடிப்படைத் தேவை என்னென்ன என்று தம் அருளுரை ஒன்றில் சொல்லியிருக்கிறார்.
வேதாந்தம் படும் பாடு - பாகம் 1
நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் அலுவலகத்தில் வேலை செய்வார். பொழுது போக்க சினிமா, டிவி என்று பார்த்துக் கொண்டிருப்பார். கோவிலுக்குக் கூட அதிகம் போகமாட்டார். திடீரென்று என்னிடம் ”நான் இப்ப பக்கா ஆன்மீகவாதி ஆயிட்டேன் தெரியுமா?” என்றார். ”அப்படியா! ரொம்ப சந்தோஷம்”, என்றேன். “நீ நம்பலை. இரு.” என்று சொல்லிவிட்டுப் போனார். ஒரு ஏழோ எட்டோ சான்றிதழ்களுடன் வந்தார்.
Thursday, 16 August 2012
அண்ணா இருந்த உண்ணாவிரதம்
அண்ணா என்ற சொல் பொதுவில் மூத்த சகோதரரைக் குறிக்கும். பகுத்தறிவு(??!!) கும்பலைப் பொறுத்தவரை அது கண்ணீர்த்துளிக் கூட்டம் என்று ராமசாமி நாயக்கரால் சுட்டப்பட்ட குழுவுக்குத் தலைமை ஏற்று திமுக கண்ட முன்னாள் முதல்வர் C.N. அண்ணாத்துரை அவர்களைக் குறிக்கும். சற்றே சமீபகாலமாக அந்தச் சொல் ராலேகாவ்ன் சித்தி என்ற மராட்டிய கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் அண்ணா ஹசாரே அவர்களைக் குறிக்கிறது.
Sunday, 29 July 2012
டெசோ - அரசியலில் பிழைத்திருக்க திமுகவின் ஆயுதம்!
(நிஜமாகவே) சமீப காலமாக டெசோ வருகிறது. விழுப்புரத்தில் இருக்கிறது. விக்கிரவாண்டி தாண்டிவிட்டது, செங்கல்பட்டு வந்துவிட்டது. ஆகஸ்டு 12ல் சென்னை வந்து சேரும் என்று பலவிதமான அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அது போலவே ஈழம் காண்பதே லட்சியம் என்று முழங்கி, ஈழம் லட்சியம் தான் ஆனால் இப்போது லட்சியம் செய்யவேண்டியது ஈழத்தமிழர் நல்வாழ்வு மட்டுமே என்று இறங்கி, தனி ஈழம் கோரித் தீர்மானம் என்று தீர்மானித்து, சிதம்பர ரகசியத்தால் தனி ஈழத்தீர்மானத்தைத் தீர்மானமாகத் தீர்த்துக் கட்டி தனி ஈழம் லட்சியம் வாழ்வாதாரம் நிச்சயம் என்று நைச்சியம் பேசி ஈழப் போர் நிறுத்த உண்ணாவிரதப் புகழ் மு. கருணாநிதி குட்டிக்கரணங்கள் பல அடித்து வருகிறார்.
Subscribe to:
Posts (Atom)
