ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Saturday 2 March 2013

நயம் ஆன்மீகத்தால் செய்யப்பட்ட சுத்தமான பிரச்சாரம் (அல்ல)

இன்று காலை 10 மணிக்கு வழக்கமான மின்வெட்டு துவங்கியது. 2 மணி நேரங்கள் மின்சாரமிருக்காது. வாசற் கதவைத் திறந்து வைத்து ஒரு நாற்க்காலி போட்டு அமர்ந்துகொண்டேன். சமீபத்தில் வாங்கிய "Grit Guts & Gumption" என்ற புத்தகத்தைப் படிக்க அமர்ந்தேன். பாரத ஸ்டேட் வங்கியில் மாற்றங்களைக் கொண்டு வந்து வெற்றிகரமாகச் செயல்படுத்தியது குறித்த புத்தகம். ஒரு பக்கம் கூடப் படிக்கவில்லை வாசலில் நிழலாடியது.



இரு பெண்கள் “Excuse me, Sir!"  என்றனர்.

கல்லூரி மாணவிகள் போலிருந்தது. பாழ் நெற்றி. முகத்தில் சோகம். ஏதாவது சொந்தபந்தங்களின் மருத்துவச் செலவுக்கு உதவி கேட்டு வந்திருப்பார்களோ என்று எண்ணிய படி “Yes." என்றேன்.

"ஒரு விஷயம். உங்களுக்கு விருப்பமிருந்தால் invitation தருகிறோம்" என்றனர்.

”விஷயம் என்ன?”

“நீங்கள் ஏசுநாதாரை நம்புகிறீர்களா?”

“அவருக்கும் எனக்கும் பழக்கமே கிடையாது”

ஒரு பெண் “வாடி போயிரலாம், இவரு நக்கலடிக்கிறாரு” என்றாள்.

மற்றொருத்தி விடாமல் “அவர் கடவுள் சார். எல்லாருக்கும் அவரோடு பழக்கம் இருக்கும்.” என்றாள்.

“விவேகானந்தரைத் தெரியுமா?”

"வேணாண்டி வந்துரு” என்று உடன் வந்த தோழி எச்சரிக்கை விடுத்தபடியே இருந்தாள்.

“தெரியும் சார். இப்ப அவரோட 150ஆவது பிறந்தநாள் விழா நடக்குது. டிவில சிஎம் பேசினாங்க. பாத்தோம்”


“அந்த விவேகானந்தருக்கு இராமகிருஷ்ணர் என்று ஒருவர் குரு”

”தெரியும் சார்.”

”அந்த இராமகிருஷ்ணர் கடவுளை நேரில் பார்த்தவர். அவர் விவேகானந்தருக்குக் கடவுளை நேரில் காட்டினார். அதுக்குப் பிறகு தான் விவேகானந்தர் இறைவனை உணர்ந்து கொண்டார்.”

”ஜீசஸ் தான் சார் கடவுள்”

“பொறும்மா! இராமகிருஷ்ணர் விவேகானந்தருக்கு நேரில காட்டின மாதிரி நீ எனக்கு ஜீசஸைக் காட்டு. அப்புறம் நான் அவரு கடவுள் அப்படின்னு ஒத்துக்கறேன்”.

(என் வாதத்தை சுலபமாக முறியடித்திருக்க முடியும். ஆனால் அவர்களுக்கு அது தெரியவில்லை போலும்.)

”சார். ஜீசஸோட மரண தினம் மார்ச் 26ஆம் தேதி வருது சார்.”

”ம்.”

”அதுக்கு ஒரு ஃபங்க்‌ஷன் இருக்கு. உங்களுக்கு விருப்பம் இருந்தா வரலாம். இதுல மதம் சம்பந்தமா எதுவும் இல்ல சார். கடவுளை வேண்டிக்கப் போறோம் அவ்வளவுதான்”

“ஒரு நிமிஷம்”

”ஓ.கே சார்”

“ மார்ச் 10ஆம் தேதி சிவராத்திரி விழா நடக்குது. இங்கே விஜயகணபதி கோவில்ல. நீங்க அதுக்கு வாங்களேன். அதுவும் மதம் சம்பந்தப்பட்டது இல்லை. கடவுள்கிட்ட நம்ம நன்மைக்காக வேண்டிக்கப் போறோம்.”

”இல்ல சார் ஏசு தான் கடவுள். இதுல நிறைய கடவுள வெச்சு பிரிவு எதுவும் கிடையாது”

“ அவருதான் கடவுள் அப்படின்னா அவர கண்ல நேரடியா காட்டுங்க. ஒத்துக்கறேன்.”

”நீங்க சர்ச்சுக்கு வந்தா பாக்கலாம் சார்.”

“எந்த சர்ச்சு? ஆர்.சி, ப்ரொடெஸ்டன்ட், பெந்த கோஸ்தே, சிரியன், செவந்த் டே அட்வெண்டிஸ்ட் அப்படின்னு எக்கச்சக்கத்துக்கு இருக்கே? அதுல எது?”

இருவரும் பேந்தப் பேந்த விழித்தனர்.

“ ஒரே ஒருத்தர சாமினு வெச்சுகிட்டே இம்புட்டு பிரிவு இருக்கு. என்னமோ பிரிவே கிடையாதுன்னு சொன்னீங்களே?”

“ நீஙக் வரலைன்னா விட்ருங்க சார்”

இருவரும் வேகமாகப் போய்விட்டனர்.

“நான் அப்பவே சொன்னேன். இந்த ஆளு வில்லங்கமா பேசுறாருன்னு. ஒன்ன யாருடி பேச்ச வளக்க சொன்னது?” என்று முதலிலேயே ஓடிவிட எத்தனித்த ஒருத்தி மாடிப்படி இறங்கும் போது மற்றொருத்தியைக் கடிந்து கொண்டாள்.

சற்றே விவரமாகக் கேள்வி கேட்டால் அடியற்ற மரம் போல வீழும் பிரச்சாரமே இவர்களது. நம் மக்கள் விழிப்புடன் விவரமாக இருந்தால் ஊதித் தள்ளிவிடலாம்.

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹ...ஹா... நல்ல கேள்விகள்...

gujjan said...

நீங்கள் அவர்களை போக யத்தனித்த போது மறித்து இன்னும் சில பல‌ கேள்விகள் கேட்டிருக்க வேண்டும் ...

jana said...

Netthiyadi ! Sabaash Arun sir.

Arun Ambie said...

நன்றி தனபாலன் அவர்களே!

Arun Ambie said...

குஜ்ஜன் அவர்களே! இருவரும் சிறு பெண்கள். யாரோ சாவி கொடுத்து அனுப்பி வைத்த பொம்மைகள். அவர்களிடம் போய் மேன்மேலும் வாதாடுவது தேவையில்லை. சாவி கொடுப்போர் வரட்டும். பேசலாம்...

Arun Ambie said...

நன்றி ஜனா அவர்களே!!

hayyram said...

சாவி கொடுப்பவன் வரமாட்டான். பொம்மைங்க தான் வந்து போகும். ஒரிஜினல் சாவி வாட்டிகன் ல தானே இருக்கு.

Cinema Virumbi said...

என் வலைப்பூவில் பின்னூட்டமிட்டதற்கு நன்றி அருண் அம்பி!

அலுவலகத்தில் ஒரு வருடமாகத் தலைக்கு மேல் வேலை! அதனால்தான் வலைப்பூ பக்கத்தில் கூட வர முடியவில்லை!

சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.in

Cinema Virumbi said...

"என் வாதத்தை சுலபமாக முறியடித்திருக்க முடியும்"

எப்படி? இப்படியா?!

"நீங்கள் விவேகானந்தரும் இல்லை! நாங்கள் இருவரும் ராமகிருஷ்ண பரமஹம்சரும் இல்லை".

நன்றி!

சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.in