நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தில் தமிழைச் செம்மொழி ஆக்கிய கோமகனே என்று கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினர் திமுக கூட்டணியினர். 450 கோடி ரூபாய் செலவில் டாஸ்மாக் கடைகளை ஓவர்டைம் பணியாற்ற வைத்து திமுகவின் குடும்பம் குதூகலித்து மகிழ நடத்தப்பட்ட விழா அது என்பது ஊரறியும். அப்படிப்பட்ட விழா நடந்ததால் தமிழுக்கு என்ன பயன்? தமிழனுக்கு என்ன பயன்?
செம்மொழி அறிவிப்பு வந்தவுடன் தமிழனுக்கு என்ன பயன் என்ற கேள்விக்கு பதிலளித்த கவிஞர் அப்துல்ரகுமான் தமிழன் பாக்கெட்டுக்குப் பத்து ரூபாய் வருமா என்று பார்ப்பது தவறு. தமிழ் என்ற மொழியைக் கற்க ஆவலுடன் இருப்போர்க்கு இது பேருதவியாக இருக்கும். நன்மை பல கிடைக்கும். மொழி செம்மை பெறும். தமிழ்ப் பண்பாடு சிறப்பெய்தும் என்றெல்லாம் அடுக்கினார்.
நல்லதுதானே! நல்லமனிதர் சொல்கிறாரே என்று பலரும் ஏற்றோம். ஆனால் தமிழைச் செம்மொழியாக்கிய கோமகன் ஆளும் அரசு இயக்கும் பேருந்துகளில் திருக்குறள் எழுதிப்போட்டு வள்ளுவம் போற்றுதும் என்று மார்தட்டும் வேளையில் மற்ற விஷயங்களை எப்படி தப்பும் தவறுமாக எழுதி வைத்திருக்கிறார்கள் பாருங்கள்.
உலகச் செம்மொழியைப் (ஒருக்கால்) படித்துவிட்டு வரும் பிற மொழிக்காரர்கள் அல்லது பிற நாட்டவர், வாழும் வள்ளுவர் (இது வேற!) ஆளும் அரசு நடத்தும் பேருந்திலேயே இப்படி அவலமாகத் தமிழ் எழுதி வைத்திருப்பதைப் பார்த்து என்ன நினைப்பர்? தமிழ் தமிழ் என்று பேசி ஆட்சிக்கு வந்த இந்தக் கூட்டம் தமிழை வைத்தும் எப்படி சம்பாதிக்கலாம் என்பதிலேயே குறியாக இருக்கிறது. தமிழ் என்பது பதவியில் இருப்போருக்குப் பணம் தரும் ATM இயந்திரம் மட்டுமே என்றாகிவிட்ட நிலையில்...முருகா! ஞானபண்டிதா!! எமைக் காக்கும் ஷண்முகா!!! தமிழையும் தமிழரையும் தமிழகத்தையும் நீதான் காப்பாற்ற வேண்டும்.
தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்!! வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!!
3 comments:
You write to the depot manager. He will replace the board.
The board signs are not written by government officials. It is outsourced. The painters are not educated persons.
Such things happen everywhere.
To attack Karunanithi, you can take something more effective than this silly mistakes by uneducated painters.
டெப்போ மேலாளருக்கு எழுதினால் பலகையை மாற்றிவிடுவார் என்று உறுதியாகச் சொல்கிறீர்களே! சிரிப்புதான் வருகிறது...
தமிழுக்கு மாநாடு போட்டு 450 கோடி செலவு செய்து செம்மொழி என்று மார்தட்டிய மனிதர் தமிழ் தவறாக எழுதினால் சும்மா விடமாட்டார் என்று ஒரு அச்சம் அதிகாரிகளுக்கு இருக்கவேண்டும். என்ன குற்றம் நடந்தாலும் கட்டிங் கொடுத்தால் தப்பிக்கலாம் என்ற நிலை இவரது ஆட்சியில் இருப்பதாலேயே இந்த அவலம் என்பது அனைவரும் அறிந்த சிலர் ஒப்புக்கொள்ள மறுக்கும் உண்மை இரயன்!!
வணக்கம்
தங்கள் வலைப்பதிவு மிக அருமை.
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
,
என்றும் அன்புடன்
செழியன்
Post a Comment