ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Thursday, 1 January 2026

புள்ளிங்கோ கலாச்சாரம் - கொலை, தாக்குதல் - காரணம் என்ன?

 கோவையில் கொலை, திருத்தணியில் திமிருக்கு நடந்த தாக்குதல் இதெல்லாம் சட்டம் ஒழுங்குத் தோல்வி என்ற வகையில் தான் அடங்கும். பெற்றோரின் வளர்ப்புத் தோல்வி, ஆசிரியர்களின் கண்டிப்புத் தோல்வி எல்லாமே அரசின் தலையில் தான் விடியும். 


காரணம்?


ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது பிறந்தது முதல் ஐந்து வயது வரை மனதில் பதிவதே நிற்கும், ஐம்பது வயதில் கற்கத் தொடங்கினால் நிற்பது கடினம் என்பதே. ஐந்து வயது வரை பிள்ளை தாயிடமே ஒன்றி வளரும். அப்போது தாய் சொல்லித்தரும் நெறிகளே மனதில் பதியும். ஏதும் சொல்லித்தரவில்லை என்றால் தற்குறி. தாய் நடத்தை கண்டு பின்பற்றித் தீயன பதிந்தால் தீயவன். தாய் நடத்தையும் கற்பித்ததும் கொண்டு நல்லன பதிந்தால் நல்லவன். நெறிப்படுத்துதல் அங்கே தோற்றால் வாழ்க்கை புள்ளிங்கோ வாழ்க்கை தான். ஆனால் அந்தத் தாயும் திராவிட மாடலில் ஆல்பாஸ் மாணவியாக இருந்தால் ஒன்றும் தெரியாமல்தான் இருப்பாள். சட்டியில் இருந்தால் தானே ஆப்பையில் வரும்?


ஆசிரியர்கள் மாணவர்களைக் கண்டிக்கக்கூடாது என்ற உத்தரவு சீரழிவின் தொடக்கப்புள்ளி. கண்டிக்கும் ஆசிரியரின் மீது பிசிஆர், பாலியல் வழக்குகள் பாய்வதும் ஆசிரியர்கள் கைவிட்டதற்கு முக்கியக் காரணம். தவிர பெற்றோர் வந்து என் பிள்ளை மீது கை வைக்க நீ யாருய்யா என்று ஆசிரியரிடம் பிள்ளைகளை வைத்துக்கொண்டே எகிறுவதும், கண்டித்தால் என் பையன் அப்செட் ஆயிருவான் என்று கோழி போல் அடைகாக்கும் பெற்றோரும் ஆசிரியரின் கண்டிப்பின்மைக்குக் காரணம். 


நீதிபோதனை என்பது தேவையற்ற வகுப்பு என்பது தொடங்கி, நன்னூல் நாலடியார் உள்ளிட்ட நீதிநூல்களை நீக்கிவிட்டு திராவிடக் கட்சியினரின் கதை கட்டுரை கவிதைகளை பாடத்தில் வைத்தது மூலகாரணம். 

படித்தாலும் படிக்காவிட்டாலும் 8ஆவது வரை ஆல்பாஸ் என்றால் ஏன் பள்ளிக்கூடமும் ஆசிரியரும் தேவை? பிறந்தவுடனே பிறப்புச் சான்றிதழோடு பின் தேதியிட்ட 8ஆம் வகுப்புச் சான்றிதழையும் கொடுத்துவிட்டு நேரடியாக 9ஆம் வகுப்பில் பள்ளிச் சேர்க்கை அறிவிக்கலாமே? அப்படிச் செய்தால் அடிப்படைப் படிப்பு? இப்போது என்ன வாழ்கிறது?


சரி… அடுத்தது அரசு என்ற கட்டமைப்பின் நிலை: 


தண்டனை பயம் இருந்தால் மட்டுமே குற்றம் குறையும். தண்டனை கிடையாது எப்படியும் தப்பிக்கலாம் என்றால் குற்றம் நடக்கத்தான் செய்யும். சட்டம் ஒழுங்கு என்பது பதிவான புகார்களை வைத்துக்கொண்டு மற்ற இடங்களை விடக் குறைவு என்று மார்தட்டுவது அல்ல. பதிவாகாத குற்றங்களை வேர் தேடிப்பிடித்து வெந்நீர் ஊற்றுவது.


இது செய்யாதவரை குற்றங்கள் குறையாது.



மேற்சொன்ன அனைத்திலும் அரசின் பொறுப்பு இருக்கிறது. கல்வி என்பதில் பாடத்திட்டம் அரசு முடிவு செய்வது. ஆசிரியர்கள் நியமனம் அரசு செய்வது. அவர்களது செயல்பாடுகள் அரசு முடிவு செய்வது. மாணவர் செயல்பாடுகள் (படிப்பது, ஊர்மேய்வது) அரசு கொள்கை முடிவுகள் சார்ந்தது. பள்ளி மாணவர்கள் பள்ளி நேரத்தில் வெளியே சுற்றினால் விசாரித்து விவரம் கேட்டு நடவடிக்கை எடுக்க ஆசிரியருக்கோ போலீசுக்கோ அதிகாரமில்லை. அவர்களைக் கண்காணித்து செயல்பாடுகளில் மாற்றம் தெரிந்தால் விவரம் சேகரித்து உரிய நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. கண்காணிப்பு இருந்தாலே மாணவர்கள் ஓரளவு கட்டுப்பாட்டில் இருப்பர். ஆசிரியர் கண்டிப்பு இன்னும் நெறிப்படுத்தும். 


இது ஏதுமில்லாது வளர்ந்தால் புள்ளிங்கோ கலாசாரம் தான். எதிர்காலத்தில் धोबी का कुत्ता न घर का न घाट का என்ற நிலையில் நாகரிக சமூகத்தில் இணையவும் முடியாது வயதானதால் புள்ளிங்கோவாகத் தொடரவும் முடியாது திண்டாடுவார்கள்.

ஆட்சி மட்டுமல்ல, கட்டமைப்பும் மாற வேண்டும். Wokeism பேசினால் புறந்தள்ளத் தயங்காத ஆட்சியாளர் வேண்டும். கண்டிப்பான காவலும், குற்றவாளிகளிடம் இரக்கமற்ற நடவடிக்கைகளும் தேவை. இருந்தால் உருப்படலாம். பெற்றோர் மனமாற்றம், குழந்தை வளர்ப்பு, குடும்பப் பிணைப்பு எல்லாம் அடிப்படை சரியாகாமல் சாத்தியமில்லை.

No comments: