ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Saturday 8 September 2012

விடுதலையின் வக்கிரமும் அரவிந்தன் நீலகண்டனின் சகோதர பாசமும்

சென்னைக்கு விஜயம் செய்து சாதுர்மாஸ்ய சமயத்தில் சீடர்களுக்கு வேதாந்தக் கருத்துக்களை உபதேசித்து அருள் பாலித்து வரும் ஸ்ருங்கேரி ஜகத்குரு அனந்தஸ்ரீ விபூஷித பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் அவர்களை கல்கி பத்திரிக்கையில் சிறு பேட்டி கண்டு வெளியிட்டனர்.  சுயஜாதி அபிமானியும் ப்ராமணத்வேஷியுமான ஈரோடு ராமசாமி நாயக்கரின் சொத்தை ஏகபோகமாக பரம்பரை பாத்தியதையுடன் அனுபவித்து வரும் கி.வீரமணி தன் விடுதலை பத்திரிக்கையில் யார் இந்த சிருங்கேரி சங்கராச்சாரியார்கள்? என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். வழக்கம் போலவே வடிகட்டிய பொய்யை தம் வழக்கமான பாணியில் ஆதாரம் காட்டுவதாகக் கூறி புனைந்து வைத்துள்ளார். இதோ:


தமது குருநாதரான ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தர் பற்றி சும்மா விளாசித் தள்ளி இருக்கிறார். அந்தக்குருநாதர் எப்படிப்பவட்டவர் தெரியுமா? ‘The Hindu Ideal’ எனும்  நூலை சிருங்கேரி மடம் வெளியிட்டுள்ளது. அதன் 23 ஆம் பக்கம் இவ்வாறு கூறுகிறது:
‘The Panchama asked to be at a distance because of the inborn impurity of his body. Any amount of washing of the body with the best available soaps and any clothing and decoration of it in the best uptodate style cannot remove from it its inlaid flith that has originated from the deep rooted contamination of filthy inheredity. ’
என்று அந்நூலில் கூறப்பட்டுள்ளது. 

உலகத்தில் உள்ள எந்த உயர்ந்த சோப்பைப் போட்டுக் குளிப்பாட்டினாலும், நவீன ஆடை அணிமணிகளால் அலங்கரித்தாலும் கூட பஞ்சமர்கள் என்று சொல்லப்படும் தாழ்த்தப்பட்டவர்கள் மீது படிந்த அந்தத் தீட்டு - அழுக்கு பரம்பரைப் பரம்பரையாக ஆழமாக வேர் பிடித்து அவர்களின் பிறப்பிலேயே தொடர்ந்து வந்துள்ளதால் இதனை நீக்கவே முடியாது என்று சொன்னவர்தான் - இல்லை, இல்லை - திருவாய் மலர்ந்தருளியவர்தான் இவரின் குருநாதர்.

இது அடிப்படை ஆதாரமற்ற வழக்கமான திராவிடர் கழகத்தின் பராமணத்வேஷ, ஹிந்து விரோத பாரம்பரியத்தின் வெளிப்பாடு. The Hindu Ideal என்ற புத்தகம் குருமஹாஸந்நிதானம் ஸ்ரீ ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸாமிகள் எழுதியதோ அல்லது அவர் ஆசீர்வதித்து வெளியிட்டதோ அல்ல. இதோ இதற்கான சுட்டி. விடுதலையின் சுட்டி கிடைத்த போது கோபம் வந்தலும் ஞாயிறு கண்டு ஞமலி குரைப்பதற்கெல்லாம் எதிர்க்குரல் தருவது மனிதச் செயல் அல்ல என்பதால் எதிர்வினை ஏதும் எழுதவில்லை. 

நிற்க.
The Hindu Ideal 
இது  சிருங்கேரி மடத்தின்பால் பற்றுக் கொண்டிருந்த ராமச்சந்திர ஐயர் என்ற வழக்கறிஞர் ஒருவர் 1901ஆம் வருடம் முதல் 1920 வரை திருநெல்வேலி உள்ளிட்ட பல ஊர்களில் பேசிய பேச்சுக்களும் எழுதி வைத்த கட்டுரைகளும் அடங்கிய தொகுப்பு. இவர் 1921ஆம் ஆண்டு சந்நியாசம் பெற்றுக் கொண்டு ஸ்ரீ ராமானந்த சரஸ்வதி ஆனார். அவர் சிருங்கேரியில் இருப்பதாக ஒரு படம் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

புத்தகத்தை சிருங்கேரி மடத்தின் 33ஆவது பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ சச்சிதானந்த சிவாபிநவ ந்ருஸிம்ஹ பாரதி ஸ்வாமிகளின் சிஷ்யர்களுக்கு ஆசிரியர் அர்ப்பணித்துள்ளார்.  இவர் குருமஹாஸந்நிதானம்
ஸ்ரீஸ்ரீஅபிநவவித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் பரம குருநாதர். புத்தகத்தின் முன்னுரையில் சாதி பற்றிய தம் கருத்துக்கள் பலருக்கு ஏற்புடையதாகாது எனினும் தம் கருத்துக்களைச் சிந்தித்துப் பார்த்து ஏற்பதோ விடுப்பதோ செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார் ஸ்ரீ ராமானந்த ஸரஸ்வதியார். இந்தப் புத்தகத்தை சிருங்கேரி மடம் வெளியிடவும் இல்லை, மடத்தின் எந்த ஆச்சார்யரும் அதை ஆசீர்வதித்து ஸ்ரீமுகம் எதுவும் தரவும் இல்லை.


இதைத் திரித்து இக்கருத்து குருமஹாஸந்நிதானம் ஸ்ரீஸ்ரீஅபிநவவித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் உபதேசம் என்பது போல வீரமணி பொய்யுரைத்தது ஆச்சரியமில்லை. அதைச் சரிபார்க்காமல் பாலசுப்பிரமணியன் சரஸ்வதி என்பவர் முகநூலில் பகிர்ந்ததும் அவசரக் குடுக்கைத் தனம் என்று விட்டுவிடலாம். ஆனால் அதில் தரம் மிகக்குறைவான வார்த்தைகளால் குருமஹாஸந்நிதானம் ஸ்ரீஸ்ரீஅபிநவவித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளை ஏசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வெள்ளத்தனைய மலர் நீட்டம் என்று இதையும் புறந்தள்ளிவிடுகிறேன். போகட்டும்.

ஆனால் நீருக்கு மேல் ஓங்கி முகிழ்ந்து மணம் பரப்பும் மலர் ஒன்று நீருக்குள் மூழ்கி எழுவது விந்தையாக இருக்கிறது. மிக வேதனையான விஷயம் யாதெனில் புத்திஜீவியாக பவனி வரும் அரவிந்தன் நீலகண்டன் இத்தகைய ஒரு பதிவை சகோதரனின் நியாயமான ஆதங்கம் என்ற தலைப்பில் பகிர்ந்திருப்பது. அது அவரது தகுதிக்கு நேரானதல்ல. பல புத்தகங்கள் எழுதி, பல நல்ல விஷயங்களை உலகோர் அறிய அளித்து வரும் அரவிந்தன், கிடைத்த தகவலை cross verify  செய்யாமல் தம் முகநூல் பக்கத்தில் ”கடுமையான வார்த்தைகளின் பின்னால் இருக்கும் நேர்மையான நியாயமான வேதனையை புரிய முடிகிறதா? கூடவே நம்முடைய சாதிய வக்கிரத்தையும் நம்மால் உணரமுடிகிறதா?” என்ற கேள்வியுடன் பாலசுப்பிரமணியன் சரஸ்வதி அவர்களின் வக்கிரத்தைப் பகிர்ந்துள்ளார். வெட்கக் கேடு இது.



மூத்த பத்திரிக்கையாளர் திரு. சுப்பு அவர்கள் எழுதிய திராவிட மாயை புத்தகத்தில் பக்கம் 112ல் சாதி வித்தியாசம் பாராட்டுவோர் தண்டிக்கப்பட வேண்டும் என்று சிருங்கேரி ஆச்சார்யர்கள் சொல்லியிருப்பதை ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார். அரவிந்தன் இதை வாசித்திருக்கவில்லையா அல்லது சகோதர பாச மாயையில் இதை கவனத்தில் கொள்ளவில்லையா அல்லது திராவிடத்தின் வழமை போன்றே வசதியாக மறந்துவிட்டாரா தெரியவில்லை. 

dravidian      பண்பாட்டைப் பேசுதல்      

அரவிந்தன் நீலகண்டன் முக்கியஸ்தராக இருக்கும் தமிழ்ஹிந்து தளத்தில் வேத வேதாந்தக் கல்வி பயின்று துறவு நெறியில் பயணிக்க விழைந்த பறையர் சமுதாயத்தைச் சேர்ந்த உயர்திரு சிவானந்த  சர்மா சிருங்கேரி மடத்தின் பாட சாலையில் பயிற்சிக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டது குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது.

அதே தமிழ்ஹிந்து வெளியிட்ட பண்பாட்டைப் பேசுதல் என்ற புத்தகத்தில் ஸம்ஸ்க்ருதம் சில கேள்விகள் என்ற கட்டுரையில் (எழுதியவர் திராவிட மாயை சுப்பு அவர்கள்) சம்ஸ்க்ருதம் ப்ராமணருக்கான மொழி என்பது தர்ம விரோதம் என்ற சிருங்கேரி ஆச்சார்யரின் அறிவுரையை ஆதாரமாக வைத்துள்ளார். இதெல்லாம் தெரியவில்லையா அல்லது தெரிந்தும் கவனக்குறைவா அல்லது கர்ணனுக்கு நேர்ந்தது போல் தக்க சமயத்தில் தக்கதை மறக்கும் நிலையா அரவிந்தன் நீலகண்டனுக்கு என்று புரியவில்லை.

குருமஹாஸந்நிதானம் ஸ்ரீ ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் சொல்லாத ஒரு கருத்துக்கு இத்தனை அசிங்கமான ஆர்ப்பாட்டம் ஏன் என்று ஆராயப் போந்தால் நியாயமான காரணம் கிட்டவில்லை. திராவிடர் கழகத்தின் ப்ராமணத்வேஷத்தையும் ஹிந்து விரோதத்தையும் பகிரும் பலரில் இவர்களும் அடங்குவர் என்றே முடிவுக்கு வர வேண்டியுள்ளது. ஒருவர் ஒன்று சொன்னார் என்று தகவல் வந்தால் தகவலைச் சொன்னவர் யார், தகவல் உண்மையா, திரிபுகள் ஏதும் உளவா என்று பார்த்த பிறகே அதைப் பற்றி ஒரு முடிவுக்கு வரவும் ஆதரித்தோ எதிர்த்தோ கருத்துக் கூறவும் வேண்டும் என்பது அடிப்படை அறிவு. 

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

இனியாவது அரவிந்தனும் அவர் சகோதரரும் மெய்ப் பொருள் காணும் திறத்துடன் செயலாற்றுவர் என்று நம்புவோம். சிலரது அபிப்பிராயங்கள் போல “ப்ராமண  சந்நியாசிதானே! ஏசினால் என்ன செய்துவிடுவர்” என்ற எண்ணம் அரவிந்தனுக்கு இல்லை என்பது இன்றளவும் திண்ணம். அதே நேரம்  பால சுப்பிரமணிய சரஸ்வதியார் எண்ணத்தின் வண்ணம் குறித்து எனக்கேதும் தெரியவில்லை. ஆனால் சொல்லாத கருத்துக்களுக்காக ஒரு துறவியைத் தகாத வார்த்தைகளில் திட்டுவது நல்ல பெற்றோரால் நல்ல விதமாக வளர்க்கப்பட்டோர் செய்யும் செயல் அல்ல.

மேலும் இந்தக் கருத்துள்ள புத்தகம் எரிக்கப்படவேண்டியது என்று அநீ கருத்துக்கூறியதாக அறிகிறேன். உண்மையாக இருப்பின் அது பெருங்குற்றம். கருத்தைக் கருத்தால் எதிர்கொண்டு வெல்லும் தர்க்கத் திறமற்றோர் செய்யும் எதிர்க்கருத்துப் பிரசுரங்களை அழிக்கும் பிழைப்பு அறிவிஜீவிகளுக்கானது அல்ல. அப்படிச் செய்வோர் அறிவுஜீவிகளாய் வலம் வருவது சமுதாயத்து எக்காலத்திலும் உகந்த நிலையும் அல்ல. இது போன்ற அறிவீனங்களை ஆதரித்துக் கொண்டு, சகோதர பாசத்தால் வழுக்கி விழாதிருக்க அவர் மனதிற்கினிய புத்தபிரான் அரவிந்தன் நீலகண்டனுக்கு அருள்வராக.
சிவோஹம். சிவோஹம்..

11 comments:

ஹரன்பிரசன்னா said...

சிருங்கேரி மடத்தின்பால் பற்றுக்கொண்டிருந்த ஐயர் எழுதிய கருத்தைப் பற்றிய உங்கள் கருத்தையும் பதிந்திருந்தால் முழுமை கிட்டியிருக்கும். மேலும் இதையொத்த கருத்துகளைச் சொல்லியிருக்கும் குருமார்களைப் பற்றிய உங்கள் கருத்து என்ன என்பதையும் சொல்லியிருக்கலாம். அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துல சனி.

ஓகை said...


திரு அருண்பிரபு,

அரவிந்தன் நீலகண்டனுடைய கண்டனங்கள் முழுவதுமே சொல்லப்பட்ட கருத்துக்களுக்குத்தான் என்பது முதல் பார்வையிலேயே புரிந்துவிடும். அந்தப் புத்தகத்தின் மேற்கோள் காட்டப்பட்ட வரிகள் மனித நேயமுள்ள எவருக்குள்ளும் அமிலம் ஊற்றும் வரிகள். ஒரு தவறான நபரின் மேல் செய்யப்பட்ட கண்டனம் உங்களுக்கு இவ்வளவு கரிசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அதில் எள் மூக்களவு கரிசனத்தையும் நீங்கள் மதிக்கும் குருவை மதித்து தன் புத்தகத்தை அர்பனிக்கும் ஒருவருடைய கருத்தால் கொந்தளிப்புறும் இந்துக்களிடம் காட்டவில்லை. ஒரு சிறிய தவறை, இந்து சமுதாயத்துக்கு மிகப்பெரிய தொண்டாற்றிவரும் அரவிந்தன் அவர்களுக்கு சுட்டிக்காட்டுவதோடு நின்றிருக்க வேண்டியதை இவ்வளவு தூரம் வளர்த்தியிருப்பது மிகவும் மிகவும் வருத்தமளிக்கிறது.

Arun Ambie said...

@ஹபி: சிருங்கேரி மடத்தின் பாலும் அதை வழிநடத்துகின்ற ஆச்சார்யர்களின் பாலும் பல ஐயர்கள், பிள்ளைகள், கவுண்டர்கள், பறையர்கள் உள்ளிட்ட பல சாதிகளைச் சேர்ந்தவர்கள் பற்றுக் கொண்டுள்ளனர். அவர்கள் தமக்கென்று சிலபல கருத்துக்களைக் கொண்டிருப்பர். வசதியும் வாய்ப்பும் அமையப் பெற்றவர்கள் தம் கருத்துக்களைப் புத்தகமாகப் பதிப்பிக்கின்றனர். அதைத் தாம் மதித்துப் போற்றும் பெரியோர்க்கு சமர்ப்பணம் செய்கின்றனர்.


1901 முதல் 1921 வரை தியசாஃபிகல் சொசைட்டி உள்ளிட்ட பல அமைப்புகளில் பற்றுக்கொண்டிருந்த வழக்குரைஞர் ஒருவர் எழுதிய புத்தகம் இது. இதில் கூறப்பட்ட கருத்துக்களை என் குருநாதர் அனந்தஸ்ரீ விபூஷித பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளோ அவருக்கு முன் சிருங்கேரி பீடத்தை அலங்கரித்த நிறை ஞானியர் யாருமோ ஏற்றதில்லை.

என் குருநாதர் ஏற்காத ஒரு கருத்தை கவனத்தில் கொண்டு பரிசீலித்துக் கருத்துச் சொல்வது என்னைப் பொறுத்த வரை காலத்தையும் சக்தியையும் விரயமாக்குதல். என் குருநாதர் ஏற்காத ஒரு விஷயத்தை குப்பை என்று தாண்டிச் செல்வதே என் பழக்கம்.

அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துல சனி: ஆனால் இந்தச் சனித் திருவிளையாடல் நன்மைக்கே என்பேன். அடிசறுக்கிய அநீ இனி விழிப்புடனிருப்பார். நன்றி.

Arun Ambie said...

// ஒரு தவறான நபரின் மேல் செய்யப்பட்ட கண்டனம் உங்களுக்கு இவ்வளவு கரிசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அதில் எள் மூக்களவு கரிசனத்தையும் நீங்கள் மதிக்கும் குருவை மதித்து தன் புத்தகத்தை அர்பனிக்கும் ஒருவருடைய கருத்தால் கொந்தளிப்புறும் இந்துக்களிடம் காட்டவில்லை.//

@ ஓகை:கருத்தைக் குறித்துப் பேசிய கதை இருக்கட்டும். ஒருவர் சொல்லாத கருத்துக்கு அவரை ஏசி பாலசுப்பிரமணிய சரசுவதி பயன் படுத்திய சொற்களோடு ஒப்பிடுகையில் என்னுடைய நல்ல பெற்றோர் கருத்து கண்ணியக் குறைவில்லை.

பொய்யை அடிப்படையாகக் கொண்ட அக்கருத்தை ’இந்து சமயத்துக்கு அருந்தொண்டாற்றிய’அரவிந்தன் நீலகண்டன் உண்மை என்பது போல வழிமொழிந்தது பெருந்தவறு. அடிசறுக்கல் அனைவருக்கும் நடக்கும். புரிகிறது.

காலகாலமாக சாதி வேற்றுமை பாராட்டாது சகல மனிதரையும் சமமாக நடத்துவது சிருங்கேரி சங்கராச்சார்யர்கள் என்பது வரலாறு. அதைத் திரிக்க வீரமணிசெய்யும் சதிக்கு இவர்களின் கருத்து உதவும் வகையில் இருக்கிறது. அந்தக் கருத்தை எதிர்த்தே நான் பதிவிட்டேன்.

அரவிந்தன் பேசினால் கருத்தை எதிர்ப்பது, நான் பேசுவது ஆளை எதிர்ப்பது என்பது போன்றிருக்கும் உங்கள் நிலைப்பாடு எனக்குப் புரியவில்லை. விளக்குவீர்களா?

Anonymous said...

ஸ்ஸ்ஸ்வாமி,

அ. ராமானந்த சரஸ்வதி பஞ்சமர் பற்றி சொன்ன கருத்தை சிருங்கேரி சங்கராச்சாரியார் ஏற்றுக்கொள்கிறாரா?

ஆ. அக்கருத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

Arun Ambie said...

அஅஅனானி,

1901 முதல் 1921 வரை தியசாஃபிகல் சொசைட்டி உள்ளிட்ட பல அமைப்புகளில் பற்றுக்கொண்டிருந்த வழக்குரைஞர் ஒருவர் எழுதிய புத்தகம் இது. இதில் கூறப்பட்ட கருத்துக்களை என் குருநாதர் அனந்தஸ்ரீ விபூஷித பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளோ அவருக்கு முன் சிருங்கேரி பீடத்தை அலங்கரித்த நிறை ஞானியர் யாருமோ ஏற்றதில்லை.

என் குருநாதர் ஏற்காத ஒரு கருத்தை கவனத்தில் கொண்டு பரிசீலித்துக் கருத்துச் சொல்வது என்னைப் பொறுத்த வரை காலத்தையும் சக்தியையும் விரயமாக்குதல். என் குருநாதர் ஏற்காத ஒரு விஷயத்தை குப்பை என்று தாண்டிச் செல்வதே என் பழக்கம்.

இவ்விஷயத்தில் மேற்கூறியதே என் கருத்து.... உங்கள் இரு கேள்விகளுக்கும் இதில் பதில் இருக்கிறது...
மேற்கொண்டு சந்தேகம் இருந்தால் கேட்கவும்.

Anonymous said...


நன்றி. அப்புறம் இன்னொன்னு.

அந்த புத்தகத்தில் 23ஆம் பக்கத்தில் இந்தக் கருத்து இருக்கா? நான் தேடிப் பாத்த வரையில் காணோம் அதான் கேட்டேன்.

Arun Ambie said...

23,123,223 ஏதோ ஒரு பக்கத்தில் இருக்கட்டுமே.... வீரமணி ஒரு கருத்தைச் சொன்னதும் கிடைத்தது சாக்கு என்று ஒரு துறவியின் பிறப்பை முதற்கொண்டு ஏசும் ஒரு யோகாசன எக்ஸ்பர்ட், அதை அப்படியே வழிமொழியும் ஒரு இந்து சமயத்துக்கு அருந்தொண்டாற்றிய மேதாவி அவர்களுக்கு சொம்படிக்கும் ஒரு சிலர்...பொய்ப்பொருள் காணும் அறிவற்றிருக்கும் இவர்களால் இந்து மதத்துக்கு மட்டுமல்ல இவர்களைச் சார்ந்தும் சேர்ந்தும் இருப்போருக்கும் ஒரு பயனுமில்லை.

Anonymous said...

ஸ்ரீராமச்சந்திர ஐயர் @ ஸ்ரீராமானந்த சரஸ்வதிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சொல்கிறீர்களா?

->23,123,223 ஏதோ ஒரு பக்கத்தில் இருக்கட்டுமே.... வீரமணி ஒரு கருத்தைச் சொன்னதும் கிடைத்தது சாக்கு என்று ஒரு துறவியின் பிறப்பை முதற்கொண்டு ஏசும் ஒரு யோகாசன எக்ஸ்பர்ட், அதை அப்படியே வழிமொழியும் ஒரு இந்து சமயத்துக்கு அருந்தொண்டாற்றிய மேதாவி அவர்களுக்கு சொம்படிக்கும் ஒரு சிலர்...பொய்ப்பொருள் காணும் அறிவற்றிருக்கும் இவர்களால் இந்து மதத்துக்கு மட்டுமல்ல இவர்களைச் சார்ந்தும் சேர்ந்தும் இருப்போருக்கும் ஒரு பயனுமில்லை.<-

//
ஒருவர் ஒன்று சொன்னார் என்று தகவல் வந்தால் தகவலைச் சொன்னவர் யார், தகவல் உண்மையா, திரிபுகள் ஏதும் உளவா என்று பார்த்த பிறகே அதைப் பற்றி ஒரு முடிவுக்கு வரவும் ஆதரித்தோ எதிர்த்தோ கருத்துக் கூறவும் வேண்டும் என்பது அடிப்படை அறிவு.
//

இது உங்களுக்குப் பொருந்தாதா?

//என் குருநாதர் ஏற்காத ஒரு கருத்தை கவனத்தில் கொண்டு பரிசீலித்துக் கருத்துச் சொல்வது என்னைப் பொறுத்த வரை காலத்தையும் சக்தியையும் விரயமாக்குதல். என் குருநாதர் ஏற்காத ஒரு விஷயத்தை குப்பை என்று தாண்டிச் செல்வதே என் பழக்கம்.

இவ்விஷயத்தில் மேற்கூறியதே என் கருத்து.... உங்கள் இரு கேள்விகளுக்கும் இதில் பதில் இருக்கிறது...
மேற்கொண்டு சந்தேகம் இருந்தால் கேட்கவும்.
//

உங்கள் பதிலை வைத்து அக்கருத்து உங்களுக்கு ஏற்புடையதில்லை என்று எடுத்துக் கொள்வதா இல்லை கண்டும் காணாமல் செல்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்வதா என்று குழப்பமே மிஞ்சுகிறது. தெளிவாக்க முடியுமா?

Anonymous said...

http://www.gnananandabharathi.org/ramananda.html

Born on : 14.Dec.1867
Poorvashrama Name : Sri G. Ramachandra Aiyer
Sannyasa : July 1922
Sannyasa Yoga Patta : SRI RAMANANDA SARASWATHI SVAMINAH
Samadhi : 25.12.1936
Place : Kolli Hills (near Viswambal Samudram)

Sri G Ramachandra Iyer was a well known advocate practicing in Tirunelveli in Tamil Nadu, India. He was known for his forthright strong views upholding Hindu Dharmas (Sanatana and Varnasharma Dharmas). He had participated in many conferences of sanatanists and opposed strongly legislations which were brought in by political bodies to amend the original Hindu Law based on Smritis of various Rishis.

He was exceptionally devoted to H.H. Sachidananda Siva Abhinava Narasimha Bharati Swaminah, the 33rd Pontiff of Sri Sarada Peetam, Sringeri (1879-1912) and his successor H.H. Chandrasekhara Bharathi Swaminah (1912-1954). He developed deep vairagya and took Sannyasa in Sringeri in July 1922, in the holy presence of Jagadguru H.H. Chandrasekhara Bharathi Swaminah and was initiated into by Sri Kamalananda Narasima Bharati Swaminah of Nelamau Mutt. He became a Parivrajaka in accordance with the shastric tenets and moved about on foot along the banks of River Cauveri in the erstwhile bigger Trichy District. At last, he climbed the Kolli Hills and led a lonely life in the dense forest in deep meditation till his Kaivalyam on 25th Dec. 1936.

His Adhistanam is on the river bank in Viswambal Samudram village and another Mrithika Adhistanam (near his Guru Sri Kalamanandar’s adhistanam) is in Mahadanapuram, Trichy Dist. Regular poojas are being performed by the devotees from in and around Mahadhanapuram at the adishtanam. Every year, Aradhanai is being conducted at the adhistanam in Mahadanapuram during the Tamil Month of Karthigai, Trieyodasi (Nov-Dec). Daily poojas and annual aradhana are also being conducted by the Devotees at
Viswambal Samudram village.

//இதில் கூறப்பட்ட கருத்துக்களை என் குருநாதர் அனந்தஸ்ரீ விபூஷித பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளோ அவருக்கு முன் சிருங்கேரி பீடத்தை அலங்கரித்த நிறை ஞானியர் யாருமோ ஏற்றதில்லை. //

எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்? எதுவும் சொல்லாமலிருப்பது கமுக்கமாக ஏற்றுக் கொற்தல் என்றும் புரிந்து கொள்ளலாமல்லவா?

Arun Ambie said...

என் குருநாதர் அங்கீகரிக்காத விஷயம் என் வரையில் குப்பை. குப்பைகள் குறித்து எனக்குக் கருத்து எதுவும் கூறுவதற்கில்லை.