ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Monday 9 April 2012

புதிய த​லைமு​றை 'தமிழன்' விருதுகள் குறித்த செல்​லையா முத்துசாமியின் வயிற்றெரிச்சல்

செல்லையா முத்துசாமி என்கிற "பிரபல பதிவர்" புதிய தலைமுறை தமிழன் விருதுகளில் பார்ப்பானுக்கு விருதுகள் வழங்கி விட்டார்களே என  வயிறெரிந்து பொரிந்து தள்ளியிருக்கிறார் தன் இந்தப் பதிவில். தனக்கேதும் கிடைக்கவில்லையே என்கிற ஆத்திரமும், என்ன முயன்றும் அந்தணர்கள் வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லையே என்கிற ஆற்றாமையும் தவிர இதற்கு வேறு காரணங்கள் தேடினாலும் கிடைக்கவில்லை.
 பார்ப்பான் தமிழனா என்ற கேள்விக்கு பதில் " சங்ககாலம் முதல் தமிழ்மொழியைத் தாய்மொழியாய்க் கொண்டு வாழும் அந்தணர்கள் தங்களின் தமிழத்தன்மையை  கன்னடக்கார் ஒருவரின் பெருவிரல்சப்பிகளுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை" என்பதே.

தமிழைத் தமிழ் என்று ழகரம் உச்சரிக்க நா எழாதவர்கள் பிறரைத் தமிழனா என்று கேட்க என்ன அருகதை இருக்கிறது? விருது வாங்கியவர்களில் யாரும் தகுதிக்கு மீறி வாங்கிவிடவில்லை. தகுதி பற்றிக் கேட்போரைக் கொன்றுவிட்டுப் பட்டம் 'வாங்கி' இன்புறும் கொடுங்கோலர்கள் அந்தணர்கள்  இல்லை. (அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் இயக்கத் தலைவர் உதயகுமாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.)

கூடங்குளம் அணு உலைகளால் ஆபத்து இல்லை என்று டாக்டர் சாந்தா அவர்கள் பேசியது குற்றம் என்று சொல்கிறார் செல்லையா முத்துசாமி. போராட்டத்தில் இருக்கும் உதயகுமார் நாளுக்கு நாள் அடிக்கும் பல்டிகள் படுத்துவதைவிட அணு உலைக்கெதிரான போராட்டத்தை யாரும் கொச்சைப் படுத்திவிட முடியாது.  உதயகுமார் செய்வது பெருமை... டாக்டர் சாந்தா அவர்களின் மருத்துவரீதியான கருத்துக்கள் குற்றம் என்கிறார்... அடப்பகுத்தறிவே!!  யார் சமாதியில் மலர்வளையம் வைத்தால் இது விளங்கும்?

எம்.எஸ். சுவாமிநாதன் கோதுமை சாகுபடியில் செய்த அறிவியல் புதுமைகளால்  வடமாநிலங்களில் கோதுமை விளைச்சல் அதிகரித்துள்ளது. உலகில் பல நாடுகளில் இவரது ஆராய்ச்சியின் பலனாக அரிசி உற்பத்தி  பெருகியது. பஞ்சாப் விவசாயிகள் பெரும் செல்வந்தர்கள் ஆனதற்கு அவரது ஆராய்ச்சியும் வழிகாட்டுதலும் காரணம். தமிழகத்தில் அவர் தமிழரா இல்லையா என்று பொருளற்ற ஆராய்ச்சியில் ஈடுபட்ட செல்லையா முத்துசாமிக் கும்பல் கூக்குரலிட்டதன் விளைவே இன்று விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிக் கொண்டிருக்கின்ற கொடுமை.

ஆனால் எங்கே எது நடந்தாலும் ஐயோ பார்ப்பான் என்று கூக்குரலிட்டு கும்மியடிப்பார்கள் செல்லையா முத்துசாமி போன்ற வயிற்றெறிச்சல்காரர்கள். சீர்தூக்கிப் பார்த்துப் பகுத்தாய்ந்து முடிவெடுக்கத் தெரியாது அவர்களுக்கு. அவர்கள் விளைந்த லட்சணம் அவ்வளவே.

கண்ணதாசன் சொன்னது மாதிரி "கானல் நீரில் விண்மீனை வேட்டையாடுவது போல இல்லாத ஒன்றில் எல்லாவற்றையும் சுட்டிக்காட்டும் பழக்கம்" இது. முற்றிலும் கற்பனையான ஆரிய திராவிடக் கோட்பாட்டைப் பிடித்துக் கொண்டு தொங்கும் மதியீனம். எது நடந்தாலும் பார்ப்பானைத் திட்டிவிட்டால் போதும் என்று சில மதியீனர்கள் விதைத்த மாயை தந்த விளைவே இது.

அந்தணர்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்லும் கும்பலுக்குத் தலைமை வகிப்போரைப் பாருங்கள்... கன்னடியர், தெலுங்கர் என்றே இருக்கிறார்கள். இந்தப் பிற மொழிக்காரர்களே தம் இனமானத் தலைவர்கள் என்று ஏற்றுக் கொள்ளும் செல்லையா முத்துசாமிகள் பரிதாபத்துக்குரியவர்களே! முதலில் தமிழை மனித பாஷை என்று மதிக்கும் தமிழர்களைத் தலைவர்களாக ஏற்றுக் கொண்டுவிட்டு பிறரைப் பார்த்து தமிழனா இங்கிலீஷ்காரனா என்று கேட்கட்டும்.

பாவம் செல்லையா முத்துசாமி... தகுதியை வளர்த்துக் கொண்டு தளராது செயல்பட்டால் பாராட்டும் பட்டங்களும் தானாகவே வரும்... வயிறெறிந்து புலம்பினால் வயிற்றில் புண்ணும் தூக்கமின்மையுமே வரும் என்பதை இவர் போன்றோர் எப்போது புரிந்து கொள்வார்களோ தெரியவில்லை.

செல்லையா முத்துசாமியோ அவர் தலைவர்கள் என்று ஏற்றிருக்கும் யாருமோ தரும் சான்றிதழுக்கும் அங்கீகாரத்துக்கும் ஏங்கியும் வீங்கியும் இருப்போரில்லை அந்தணர்கள்.  வேட்டியை இறுக்கிக் கட்டிக் கொண்டு 'செல்லையா'...

6 comments:

dondu(#11168674346665545885) said...

இம்மாதிரி வயிற்றெரிச்சல் பேர்வழிகளுக்கு என்ன சொன்னாலும் உரைக்காது எனப்து உண்மைதான் என்றாலும் சொல்லாமல் இருக்க முடிவதில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

hayyram said...

"சொல்லாமல் இருக்க முடியவில்லை" என்ற டோண்டு சாரின் வாக்கு உண்மை. சொல்லிச் சொல்லி நூற்றில் ஒருவனாவது சிந்தக்கவாவது துவங்குவானா எனப் பார்ப்போம்!

Arun Ambie said...

டோண்டு ஐயா!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். நீங்கள் சொல்வது சரி. சிலருக்கு எப்படிச் சொன்னாலும் உரைக்காது. விளைச்சல் சரியில்லாத பயிர்கள்!!

Arun Ambie said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் ராம். Facebookல் பகிர்ந்தமைக்கும் நன்றி.. இந்தக் கும்பல் சரியாகச் சிந்திப்பதற்குச் சில தலைமுறைகள் ஆகும். கற்றுக் கொண்ட கொள்கையும் ஏற்றுக் கொண்ட தலைவனும் ஏறுக்கு மாறு! என்ன செய்ய!

jana said...

அருண் ஐயா , பின்னி எடுத்து விட்டீர்கள் ! நன்றி. நன்றி !!

Anonymous said...

செல்லையா முத்துசாமி. நீங்களும் ஜோரா செஸ் விளையாடுங்க. உங்களுக்கும் பச்சை தமிழனிடம் சொல்லி ஒரு விருது கொடுக்க சொல்வோம் என்கிற என் பின்னூட்டத்தை முத்துசாமி முழுங்கிட்டார். அதனால் அந்த பின்னூட்டத்தை இங்கே தருகிறேன்.