அனைத்து சாதியினரும் அர்ச்சகர் மாதிரி மாப்பிள்ளையும் ஆக மந்திரி ஆதரிப்பார்னு யோசிச்சிட்டான் போலருக்கு! வெளியே தெரிவதற்கு முன்பே பேசியிருக்க வேண்டுமே என்றால், மந்திரி கூட இருக்கிற ஆளுங்கதான் விஷயத்தை வெளியே விட்டிருப்பான். இந்த பஞ்சாயத்துல இந்தாள் சிக்கிட்டா அந்த மந்திரி இடத்துக்கு வரலாம்னு யோசிச்சிருப்பாங்க. Political killer instinct.
அரசியல், பொருளாதாரம், நிர்வாகம், சர்வதேச உறவுகள், நாட்டு நடப்பு, குறித்த என் எண்ணங்களையும், என் அனுபவங்களையும் இங்கே பதிவேன்!
Disclaimer
நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.
இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.
அன்புடன் என்றும்,
அருண்அம்பி. (@arunambie)
Monday, 13 September 2021
Tuesday, 5 November 2019
RCEPயும் நம் அரசின் நிலைப்பாடும்
RCEP கையெழுத்தாகவில்லை. ஏதோ தாங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக இது நடந்தது என்று காங்கிகள் புளுகுகிறார்கள்.
இதை ஆமோதித்து பல அறிவு சீவிகள் ஐயகோ பியூஷ் கோயல் தலைமையில் பேச்சுவார்த்தைக்கு ஒரு குழு போனதே அது மட்டும் வெற்றி பெற்றிருந்தால் நம் நாடு என்ன ஆகியிருக்கும் என்று கவலைப் படுகிறார்கள்.
கொஞ்சம் வரலாறு பார்ப்போமா?
RCEP நாடுகளுடனான நமது வணிக பற்றாக்குறை 2004ல் $7 பில்லியனாக இருந்தது. 2014ல் அது $78 பில்லியன் ஆனது. அதாவது இது நமது ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்குமான வித்தியாசம் டாலர் மதிப்பில். நம் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரித்து, நாம் இறக்குமதிக்குத் தரவேண்டிய பணம் பல மடங்கு உயர்ந்த போது எடுத்த நடவடிக்கை என்ன என்று காங்கிரசார் சொல்லவேண்டும். அந்தக் கால கட்டத்தில் ஆட்சியில் இருந்தது இராகுல காந்தியார் கட்சிதான். பொருளாதார மாமேதை மனமோகனச் சிங்கனார் தான் பிரதமர். சட்டமேதை, ஹார்வேர்ட் எம்பிஏ, இந்திராணி புகழ் பனாசினா நிதியமைச்சர்.
2010ல் ASEAN நாடுகளுடன் தடையற்ற வணிக ஒப்பந்தம் போடப்பட்டது. (மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா, பிலிப்பைன்ஸ், பர்மா, புருனே, வியட்னாம், லாவோஸ் ஆகிய 10 நாடுகள்)
2010ல் தென் கொரியாவுடன் தடையற்ற வணிக ஒப்பந்தம் போடப்பட்டது.
2011ல் மலேசியாவுடன் தடையற்ற வணிக ஒப்பந்தம் போடப்பட்டது. (ASEAN ஒப்பந்தம் இருக்கும் போது இது எதற்கு தனியாக?)
2011ல் ஜப்பானுடன் தடையற்ற வணிக ஒப்பந்தம் போடப்பட்டது.
2011-12ல் சீனாவுடன் தடையற்ற வணிகம் மற்றும் RCEP பேச்சுவார்த்தை நடத்தியே தீர வேண்டும் என்று பேச்சுவார்த்தை மேசைக்குப் போய் பிடிவாதமாக உட்கார்ந்து கொண்டது அன்றைய ஐமுகூ அரசு.
இதில் சேராவிட்டால் ஆசியாவில் தனிமைப்பட்டு நிற்போம் என்று காரணம் சொன்னவர்கள் பசியும் ம.மோ.சிங்கனாரும்.
சீனாவோ இந்தியா கையெழுத்துப் போட்டால் அதை வைத்து மற்ற சிறு குறு நாடுகளையும் மிரட்டி தன்னிடம் தேங்கியுள்ள பொருட்களை தள்ளிவிடலாம் என்று இருந்தது. அமெரிக்காவுடனான வணிகச் சண்டையில் சீனாவுக்கு பலத்த அடி.
ட்ரம்ப் MAGA என்று சொல்லி தொழில்கள் அமெரிக்காவுக்கு வரவேண்டும், அங்குள்ளோருக்கு வேலை வேண்டும் என்கிறார். மோடி Make in India என்று கம்பெனிகளை உள்ளே அழைக்கிறார்.
ஆனால் இன்று:
சீனம் தன் இளவட்டத் தலைமுறையை இழந்து வருகிறது. இனி அடித்து வேலை வாங்க அங்கே ஆள் குறைவு. ராணுவமா, கம்பெனி வேலையா என்று இளவயதினருக்குச் சொல்ல வேண்டிய நிலை அரசுக்கு. வெளிநாடுகளை மிரட்டி ரவுடித்தனம் செய்ய இனி முடியாது. ட்ரம்ப் போடா என்கிறார். மோடி இளநீர் எல்லாம் கொடுத்து கிளம்புங்க என்கிறார்.
இன்று தாய்லாந்து போய் பேசி கையெழுத்தெல்லாம் கிடையாது என்று சொல்லிவிட்டு, நான் சொல்லும் விவரங்களைப் பேசி எல்லா நாடுகளுக்கும் நல்லதாக முடிக்கப் பார்க்கலாம். இல்லாவிட்டால் பேச்சும் இல்லை வார்த்தையும் இல்லை. என் சந்தையில் நீ வியாபாரம் செய்ய நான் சொல்கிறபடி வா. நீ சொல்வதை அப்படியே நிறைவேற்ற வேறு ஆளைப்பார் என்று சொல்லியிருக்கிறார் மோடி.
சந்தை வேண்டும் என்போர் வருவார்கள்.
ஆனாலும் நாம் மிகுந்த எச்சரிக்கை கொள்ள வேண்டிய தருணம் இது. சீனம் தன் வணிகத்தை முன்னெடுக்க எதுவும் செய்யும். எதுவும்! என்ன ஏதென்று தெளிவில்லாமல் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் நம்மூரில் அதிகம்.
கடல்சார் பாதுகாப்பு பலப்பட வேண்டும். இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட சிறு நாடுகள் வழி வரும் சரக்கு போக்குவரத்து தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். சீனன் சுற்றிக் கொண்டு வர வாய்ப்புண்டு.
சீனச் சொம்புகள் பத்திரிகைகள் வாயிலாக ஏற்படுத்தும் இரைச்சலுக்கு தக்க பதிலடிகள் தரப்பட வேண்டும்.
இன்னும் ஆட்டம் அதிக்கரிக்கும் என்றே தெரிகிறது. ஆகட்டும் பார்க்கலாம். ஆட்டத்தின் முடிவிலே!
Monday, 31 December 2018
இரண்டு புள்ளி பூஜ்ஜியம் - ஒரு பார்வை
கதை என்ன என்றால் பெரிதாக ஏதுமில்லை. இந்தியன், அந்நியன் உள்ளிட்ட சங்கர் படங்களின் அடிப்படை. தான் விரும்பும் நேசிக்கும் ஒரு விஷயத்தை சமூகம் மதிக்காது போக கோபத்தில் வன்முறை கொண்டு தன் நியாயத்தை நிறுவ முற்படும் போராளியின் கதை. இதிலே கொஞ்சம் ஆவி விஷயங்களுக்கு ஆரா, மைக்ரோ ஃபோடான் என்று அறிவியல் சார்ந்த பெயர்களைக் கொடுத்துக் கதை விட்டிருக்கிறார்கள்.
சென்னையில் (மட்டும்) திடீர் திடீரென்று செல்ஃபோன்கள் பறந்து காணாமல் போகின்றன. மக்கள் கூட்டம் கூட்டமாக காவல்துறையில் புகார் தருகிறார்கள். மந்திரி செல்ஃபோனும் பறந்து காணாமல் போகிறது. ஆனால் இது எல்லாம் சென்னையில் மட்டுமே நடக்கிறது. ஆந்திரா எல்லை என்ற போர்டைத் தாண்டி எதுவும் இல்லை. விழுப்புரத்துக்குத் தெற்கேயும் ஒன்றுமில்லை. செல்ஃபோன் கதிரியக்கமுமா என்று கேட்கலாம். பதில்?
அரசு, முந்தைய எந்திரன் படத்தில் சிட்டி ரோபோவை உருவாக்கிய டாக்டர் வசீகரன் (ரஜினி) உள்ளிட்ட பல விஞ்ஞானிகளை அழைத்து விவரம் கேட்கிறது. (அவர் தன் அழகிய ரோபோ உதவியாளினி நிலாவுடன் (எமி ஜாக்சன்) மீட்டிங்கிற்கு வருகிறார்). முந்தைய எந்திரன் படத்தில் சிட்டி ரோபோவை வில்லனாக்கி சிட்டி கையாலே மாண்ட வில்லன் விஞ்ஞானியின் மகன் எதோ குடும்ப பிசினஸ் போல அப்பா செத்ததும் அதே அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் சீனியர் டைரக்டர் ஆகிறார் என்பது கருணாநிதி குடும்பம் திமுக தலைமைக்கு வருவது போலவே இருக்கிறது. அதிலும் வசீகரன் ஐஎஸ்ஆர்ஓ டேட்டா, நாசா ரிப்போர்ட் என்றெல்லாம் பேசி சிட்டியை மீண்டும் கொண்டு வர உத்தேசிக்கிறார். வில்லன் விஞ்ஞானியின் மகன் விஞ்ஞானி சிட்டியால் பிரச்சினை வரும் என்று சொல்லி சிக்கல் செய்கிறார். அப்பா சாவுக்கு பழி வாங்குவேன் என்கிறார். உள்துறை மந்திரியும் சிட்டியை மீண்டும் கொண்டுவர மறுக்கிறார்.
அந்நியன் படத்தில் வரும் கருட புராண தண்டனைகள் போலவே இந்தப் படத்திலும் குரூரமாக சிலர் இறக்கிறார்கள். ஆனால் செல்ஃபோன் மூலமாக மட்டுமே. வேறு வஸ்துக்கள் படத்தில் கொலைபாதகம் செய்வதில்லை. மந்திரி உத்தரவுப்படி ராணுவம் வருகிறது. ஆனால் எதுவும் செய்ய முடியவில்லை. தொலைபேசித்துறை மந்திரியும் கொடூரமாக இறந்தவுடன் உள்துறை மந்திரி சிட்டியை உயிர்பிக்க உத்தரவு தருகிறார். இல்லை, இல்லை.... வசீகரனிடம் கெஞ்சிக்கூத்தாடி தாஜா செய்கிறார். சிட்டி ரோபோ மீண்டும் வருகிறது. சம்பந்தப்பட்ட ஃபோன் கூட்டத்தோடு சண்டை போடுகிறது.
இந்த செல்ஃபோன் பறவை சிட்டியுடனும் ராணுவத்துடனும் சண்டையிடும் கட்டங்களில் காட்ஜில்லா படத்தில் ராணுவம் காட்ஜில்லாவை துரத்த ஆனால் காட்ஜில்லா ராணுவ தளவாடங்களைச் சுக்குநூறாக்கும் காட்சிகள், மாற்றுப்பாதைகளில் புகுந்து வந்து ராணுவ வண்டிகளை சிதறடிக்கும் காட்சிகள் நினைவுக்கு வருவது என் நினைவுத் திறனை மெச்சிக் கொள்ளத் தோன்றுகிறது. அதே நேரம் சூடு அதிகம் தெரிகிறது. கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் சுட்ட சூட்டைச் சற்றே குளிர்வித்திருக்கலாம். குளிர் கால ரிலீஸ் என்பதால் சூட்டோடு விட்டுவிட்டார்களோ என்னவோ! சென்னையில் போருரிலும் டி நகரிலும் நடக்கும் இந்தச் சண்டைக் காட்சிகளை திடீரென்று ஆளரவமற்ற ஒரு பகுதிக்குக் கொண்டு போய் ஒரு ஆளில்லா அணு ஆராய்ச்சி மையத்தில் சிட்டிக்கு பேட்டரி டவுன் என்று நிறுத்துகிறார்கள். வில்லப்பறவை அங்கிருக்கும் ஒரு சிக்னல் எமிட்டர் கதிர்களுக்குப் பயந்து பறந்துவிடுகிறது. அந்த இடம் செக்டார் டூ என்று நொய்டா, சண்டிகட் பக்கம் காட்டுகிறார்கள். சைஃபை என்ற விளம்பரத்தோடு வந்தாலும் தமிழ்ச்சினிமா அப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது.
அந்தப் பறவை சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளை ஆராய்ந்து அது ஒரு மனிதனின் சக்தி என்று வசீகரன் கண்டுபிடிக்கிறார். அந்த இடம் விண்வெளிக்கு சிக்னல் அனுப்பும் இடம் என்கிறார்கள். The Battleship படம் நினைவுக்கு வருகிறது. பாசிடிவ் சிக்னல் மட்டுமே அனுப்பி விண்வெளியில் உள்ள பாசிடிவ் சக்திகளை மட்டும் பூமியின் பக்கம் ஈர்ப்பதே நோக்கமாம். விஞ்ஞானம் பேசுவார்கள் என்று பார்த்தால் ரெய்கி, பிராணிக் ஹீலிங், ஃபெங்ஷுய் வகையறா ஆட்களைப் போல அந்த விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானியைப் பேச வைத்துள்ளார்கள். இந்த பாசிடிவ் நெகடிவ் சக்திகளை மைக்ரோ ஃபோடான் என்று ஒரு பெயர் சொல்லி எமிட்டர் மூலம் பறவையின் எதிர்மறை சக்தியை சமன் செய்ய முடிவெடுக்கிறார் வசீகரன். சிட்டி உதவியுடன் சமன் செய்ய போராடும் போது ஃப்லாஷ்பேக் போட்டு ஏன் இப்படி என்று சொல்கிறார்கள்.

பறவைகள் மீது மிகுந்த அன்பு கொண்ட ஒருவர் பறவையியல் பேராசிரியராக இருக்கிறார். பக்ஷிராஜன் என்று பெயர். திருக்கழுகுன்றத்தில் வசிப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் ஏதோ மலைப் பிரதேசத்தில் வசிப்பது போல எந்நேரமும் ஸ்வெட்டர் போட்டுக் கொண்டே இருக்கிறார். ஆழ்வார் பாசுரத்தில் ஒரு வரி சொல்கிறார். அதையே வைத்து மாணவர்களுக்கு பறவையியல் வகுப்பு நடத்துகிறார். அதிலும் பெரிதாக எந்த விளக்கமோ விவரமோ இல்லை, பாசுரம் குறித்தும் பறவைகள் குறித்தும். சிட்டுக்குருவி வீட்டுக்குள் வரவில்லை, வேடந்தாங்கலுக்குப் பறவைகள் வரவில்லை போன்ற கவலைகளை மாணவர்கள் சொல்லும் போது சோகமாக பேசாமல் இருக்கிறார்.
செல்ஃபோன் வந்த பிறகுதான் பறவைகளின் எண்ணிக்கை குறைகிறது. அதை சரிசெய்ய செல்ஃபோன் டவர்கள் 90%தை ஏறக்கட்ட வேண்டும் என்று செமினார் நடத்துகிறார். செல்ஃபோன் சேவை வழங்கும் கம்பெனி வாசலில் பறவைகளைக் கொல்லாதே என்று அட்டை பிடித்துக் கோஷம் போடுகிறார். செல்ஃபோன் விற்கும் கடை வாசலில் ஒவ்வொரு ஃபோனும் குருவியின் சவப்பெட்டி என்று கூவுகிறார். வியாபாரிகள் இவரைத் துரத்திவிடுகிறார்கள். நிலத்தில் செல்ஃபோன் டவர் வைக்கவிடும் விவசாயியிடம் பறவைகளைக் கொல்பவர்களுக்கு இடம் தருகிறாயே என்று சண்டை போடுகிறார். ஒரு eccentric நிலையில் இருந்தே இந்த விஷயத்தை அணுகியும் பேசியும் வருகிறார். நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு அங்கே இவரது வாதங்களுக்கு அறிவியல் பூர்வமான நிரூபணங்களோ, குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களோ இல்லை என்று வழக்கில் தோற்கிறார். நம்மாழ்வார் பாசுரத்தின் அதே ஒரு வரியைச் சொல்லியபடி செல்ஃபோன் டவரில் தூக்கில் தொங்கிவிடுகிறார்.
வசனம் எழுதியது மூன்று பேர் (ஜெயமோகன், சங்கர், தொழில்நுட்ப விஷயங்களுக்கு கார்க்கி) என்ற நிலையில் வசன உச்சரிப்பிலாவது ஜெயமோகன் கொஞ்சம் உறுத்துக் காட்டியிருக்கலாம். குறைந்தது அந்த நம்மாழ்வார் பாசுரம் ஒரே ஒருவரி சொல்வதில் மட்டுமாவது டப்பிங் பேசியவரை உச்சரிப்பு விஷயத்தில் வேலை வாங்கியிருக்கலாம்.
இறந்த உடலில் இருந்து நெகடிவ் ஆரா மட்டும் வரும். உயிருடன் இருக்கும் உடல்களில் பாசிடிவ் ஆரா மட்டும் இருக்கும். எதிர்மறை ஆராவை மைக்ரோ ஃபோடான்+ கதிர்களைக் கொண்டு சமன் செய்யலாம், இது விஞ்ஞானம் என்று சொல்கிறார்கள். அடக்கப்பட்ட ஆவியை (ஆரா) எந்திரன் படத்தில் இறந்துபோன வில்லன் விஞ்ஞானியின் மகன் விஞ்ஞானி திறந்து விடுகிறார். அது வந்து வசீகரனின் உடலில் புகுந்து கொள்கிறது.
செத்தவர்களின் நெகடிவ் ஆரா இப்படி உயிருள்ளவர்களின் உடல்களில் புகுந்துகொள்ள விஞ்ஞான விளக்கம் ஏதும் தருவார்களா என்று பார்த்தால் எருமைப் பால் அடர்த்தி அதிகம், கேனின் கீழே இருக்கும்; பசும்பால் அடர்த்தி கம்மி, கேனின் மேலே இருக்கும், ஆக ஒரே கேனில் ரெண்டு பால் என்று கவுண்டமணி முன்பொரு படத்தில் பேசிய விஞ்ஞான ரீதியிலான விளக்கம் கூட தரவில்லை.
இந்நிலையில் டி.நகரில் அந்நியன் படத்தில் அம்பி அந்நியன் மாறி மாறி வரும் காட்சியை வசீகரன் பக்ஷிராஜன் மாறி மாறி வருவது போல வைத்து கொஞ்ச நேரம் ஓட்டுகிறார்கள். சிட்டியை பார்ட் பார்ட்டாகக் கழட்டி வீசுகிறது வசீகரன், பக்ஷிராஜன் கூட்டணி. சிட்டியின் கால்களைப் பிய்த்துப் போட்டு யுவர் கால் இஸ் டிஸ்கனெக்டட் ஹெஹ்ஹெஹ்ஹே என்று மொக்கை போடுகிறார் பக்ஷிராஜன் (ஜெயமோகன்? சங்கர்? கார்க்கி?). நிலா ரோபோ சிட்டி ரோபோவை மறுபடியும் பழைய வில்லத்தனமான ரெட் சிப் வைத்து அசெம்பிள் செய்து ஆக்டிவேட் செய்கிறது. மேலும் பல சிட்டிக்களைச் செய்து எந்திரன் படம் போலவே கும்பலாக சிட்டி ரோபோக்கள் வருகின்றன.
விடுவிக்கப்பட்ட பக்ஷிராஜன் ஆவி(ஆரா) ஒரு ஸ்டேடியத்தில் புகுந்து அங்கிருக்கும் மொத்தப் பேரையும் செல்ஃபோன் ரேடியெஷன் வைத்துக் கொல்லப்போவதாக மிரட்டுகிறது. சாம்பிளுக்கு தன்னை விடுவித்த வில்லனை கொன்றுவிடுகிறது. மற்றவர்களைக் கொல்வதற்குள் சிட்டி அங்கே வந்து சேரந்து வசீகரன் உடலை வெளிப்படுத்தும் பக்ஷிராஜன் ஆவியை (ஆராவை) எந்திரன் படத்தின் மேஏஏஏ மேனரிசத்துடன் எதிர்கொள்கிறது சிட்டி.
அங்கேயும் பக்ஷிராஜனுடன் சண்டை போடும் போது சிட்டிக்கு பேட்டரி போய்விடுகிறது. இவ்வளவு கோடிகள் செலவு செய்து எடுத்த படத்தில் சிட்டி ரோபோவுக்கு ஒரு ட்யூரசெல் பேட்டரி வாங்கி மாட்டிவிட்டிருக்கலாம். சார்ஜ் கூடக் கொஞ்ச நேரம் வந்திருக்கும். அடுத்த படத்திலாவது சங்கர் யோசிப்பாராக. இல்லை என்றால் கடிகாரங்களுக்கு வருவது போல அணு சக்தி பேட்டரி மாட்டிவிடலாம். கூடங்குள உதயகுமார் கோர்டுக்குப் போகாமலிருக்க வேண்டும்.
3.0 குட்டி என்று ஒரு மினியேச்சர் ரோபோ காட்டுகிறார்கள். புறாக்களின் மீது பறந்து வந்து புறாவைக் கொல்வேன் என்று பக்ஷிராஜனை மிரட்டி சிட்டிக்கு சார்ஜ் போடுகிறது. பிறகு அதுவும் பல மினியேச்சர் ரோபோக்களைக் கூட்டமாகச் சேர்த்துக் கொண்டு செல்ஃபோன் வடிவெடுத்து ப்க்ஷிராஜன் கட்டுப்பாட்டில் உள்ள செல்ஃபோன்களை வெடிக்க வைக்கிறது. சண்டையில் சிட்டி துப்பாக்கியால் சுட பக்ஷிராஜன் ஆவி (ஆரா, ஆரா) வசீகரன் உடலை விட்டுவிடுகிறது. சென்னை ஸ்டேடியத்தில் இருந்து திடீரென்று முன்பு போன செக்டார் டூ போய் பாழடைந்த முன்னாள் அணு உலை, வேற்றுக்கிரகவாசிகளுக்கு சிக்னல் அனுப்பும் இடத்தில் சிட்டி ரோபோ நுழைந்து அங்கிருக்கும் ஆபீசரை அடித்துப் போட்டுவிட்டு பக்ஷிராஜனை அடக்குகிறது.
திரைப்படத்தின் இறுதியில் எழுத்துப்போட்டு முடிப்பதை வசீகரன் அட்வைஸ் செய்யும் காட்சிகளுக்கு நடுவே செய்கிறார்கள். சரி முடிந்தது என்று எழுந்தால் எந்திர லோகத்து சுந்தரியே என்று ஒரு பாட்டுப் போடுகிறார்கள். (எமி ஜாக்சனை ஒரு பாட்டுக்காவது ஆடவிடாமல் விட்டால் எல்லிஸ் டங்கன் குற்றமாகுமோ!?) பிறகு சாவகாசமாக 3.0 குட்டியை வசீகரனுக்கு சுய அறிமுகம் செய்யவைத்து படத்தை முடிக்கிறார்கள், ஒரு வழியாக.
2.0 படத்தில் அந்நியன் படத்தின் தாக்கம் சற்றே தூக்கலாக இருக்கிறது. வேறு சில படங்களின் தாக்கமும் அப்பட்டமாகத் தெரிகிறது. சங்கர் வேறு களம் யோசிக்கலாம் அல்லது அறிவியல் தெரிந்தவர்களைக் கொண்டு கதை செய்யலாம். ஆவி சம்பந்தப்பட்ட சமாச்சாரங்கள் நல்லெண்ணம், நல்ல நோக்கம் எல்லாம் பேசினாலும் நிம்மதி தராது என்பது அடிநாதமாக ஒலிக்கிறது. நேரடியாகச் சொல்ல முடியாமல் ஆரா பூரா என்று பீலா விட்டிருக்கிறார்கள்.
வைரமுத்து என்று ஒரு மந்திரிக்குப் பெயரிட்டு மலையாள வாடையுடன் தமிழ் பறைய விட்டிருக்கிறார்கள். என்ன கோபமோ? ஆண்டாளுக்கே வெளிச்சம்!! தமிழ் டிவிக்களின் சகலகலா விவாத நிபுணர் மயில்சாமி மந்திரிக்குப் பிஏவாக இந்தப் படத்தில் வருகிறார். அடுத்த படத்தில் மந்திரி பிரமோஷன் கிடைக்க வாழ்த்துக்கள்.
ஆங்காங்கே எடுத்தாண்ட மணிரத்னம் பட வசனம், வடிவேலு காமெடி வசனம் ஆகியவற்றுக்கு ஒரு நன்றி அட்டை காட்டியிருக்கலாம். எழுத்தாவது ஓட்டியிருக்கலாம். சுஜாதா இல்லாத குறை நன்றாகத் தெரிகிறது. திரைக்கதை சுவையற்ற ஜவ்வுமிட்டாய், வசனம் மொக்கை, கதை.... விட்டிருக்கிறார்கள். படமெடுத்த மூன்றாண்டுகளில் நிறைய விடுமுறைகள் எடுத்திருப்பார்கள் போலத் தெரிகிறது. ஆனால் கடந்த இரு பா.ரஞ்சித் குதறல்களை benchmark என்று கொண்டால் ரஜினிக்கு 2.0 வானளாவிய பரவாயில்லை ரகம்.
முதல் பாதி முரட்டு ரசிகர்களுக்கானது. இரண்டாவது பாதி குழந்தை அறிவுடன் பார்த்தால் குதூகலிக்கலாம்.

Saturday, 13 May 2017
வாழ்க்கை வாழ்வதறகே!
+2 தேர்வு எழுதி முடிவுகள் தெரியப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 10ஆவது, +2 வெற்றி, தோல்வி என்பது கவலைப்படத்தக்க ஒரு விஷயமில்லை என்பதை நீட் தேர்வு நிரூபித்துவிட்டது. இங்கே தொண்ணூறு தொட்டவன் அங்கே திணறி நிற்கிறான். நீட் பற்றி நிறையப்பேர் நிறையச் சொல்லிவிட்டார்கள். ஆகவே அது பற்றி நான் ஏதும் பேசப் போவதில்லை.
கல்வித்திட்டம், பாடங்கள் கற்றுத்தரப்படும் விதம் இவற்றில் குறைகள் எண்ணிலடங்காது இருந்தாலும் இங்கே அடுத்த கட்ட நகர்வுக்கு குறைந்த பட்சத் தேர்ச்சி ஒரு அச்சாரம் என்பதை மனதில் கொள்ளுங்கள். தேர்ச்சி தேவை. முதல் முயற்சியில் வந்தால் மகிழ்ச்சி. வராவிட்டால் மேலும் சற்றே முயன்று பெற்றுவிடலாம். கம்பசூத்திரம் இல்லை நம் பாடத்திட்டம்.

Monday, 9 May 2016
சலுகை - செலவு - வரவு
இருசக்கர வாகனங்களின் விற்பனை சரிந்துவருகிறது. முன்பு போல இரு சக்கர வாகனங்களின் மீதான ஈர்ப்பு குறைந்து வருகிறது. கார்கள் வசதிக்கும் குடும்பத்துடன் செல்வதற்கான ஒப்பீட்டளவிலான கூடுதல் பாதுகாப்பும் கொண்டிருக்கின்றன என்று மக்கள் மத்தியில் ஒரு கருத்து பரவி வருகிறது.
மேலும் பலர் high end எனப்படும் உயர்தர இருசக்கர வாகனங்கள் பக்கம் செல்கின்றனர். அதற்கு பெருமை உள்ளிட்ட பல காரணிகள் உண்டு.
ஆக இந்த ஸ்கூட்டி, ஆக்டிவா போன்ற சாதாரண ஸ்கூட்டர் வகையறாக்கள் மெல்லச் சரியத் தொடங்கிவிட்டன் என்பதேசந்தை நிலவரம் .
இதை எல்லாம் மீறி உற்பத்தி செய்துவரும் low end வாகனங்களை விற்றுத் தள்ள நிறுவனங்கள் செய்யும் சந்தைப்படுத்தல் உத்திதான் “ஸ்கூட்டர் வாங்க மானியம்” என்று பிகாரிலும் தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் செய்திருக்கும் அறிவிப்பு என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
இதில் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏதுமில்லை. பிரஷாந்த் கிஷோர் பிஹாரில் கொடுத்த திட்டம் இது என்பது உலகறிந்த ரகசியம். பிரஷாந்துக்கும் பிரச்சினையில்லை. அரசியல் கட்சியிடமும் நிறுவனங்களிடமும் ஆலோசகருக்கான கட்டணம் பெற்றுக் கொண்டு போய்விடுவார்,
நாட்டுப் பொருளாதாரம் மேலும் மேலும் இலவசங்களைத் தாங்குமா என்பதே இப்போதைய கவலைக்குரிய விஷயம்.
கேட்பவர்கள் இதைத்தான் கேட்டார்கள் நான் என்ன செய்ய என்று பிரஷாந்தும் மக்கள் இதையே விரும்புகிறார்கள் அதனால் கொடுத்தோம் என்று அரசியல் கட்சிகளும் பேசிக் கொண்டிருப்பார்கள்.
கிரேக்கம் சலுகைக்கான செலவுகளுக்குத் தன் நாட்டின் தீவுப் பகுதிகளை விற்றது போல நாமும் சலுகைகளுக்கான செலவுகள் கட்டுப்படியாகவில்லை என்று எதையாவது விற்கலாம் என்றால் கச்சத்தீவு கூட நம்மிடமில்லையே விற்பதற்கு!!

Saturday, 7 May 2016
தமிழக சட்டசபைத் தேர்தல் 2016 - ஒரு பார்வை
2016 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான ஓட்டத்தில் விலை பேசப்பட்ட, சரியான அடிப்படை இல்லாத பல்வேறு கருத்துக் கணிப்புகள் மக்களைக் குழப்பியிருப்பது உண்மை.
15 சீட் தேறினால் பெரிய விஷயம் என்றிருந்த திமுக ஒரு 30 - 35 சீட் தேற இது உதவும். அசுர பல மெஜாரிட்டி என்றிருந்த அதிமுக சிலபல சீட்கள் குறையவும் இது உதவலாம். இலவசம் பொங்கி வழிந்தோடும் தேர்தல் அறிக்கை தொங்கு சட்டசபை என்ற திரிசங்கு சொர்க்கத்தைத் தடுக்க உதவ வாய்ப்புண்டு.
எதிர்க்கட்சிகள் எதுவுமே ஆளுங்கட்சிக்கு எதிராக உருப்படியான ஒரு பிரச்சினையைக் கிளப்பி ஆட்சியின் மீதான அதிருப்தியைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே anti incumbencyஐ முக்கியமாக எதிர்கொள்ளும் அதிமுகவின் பலம்.

Monday, 18 April 2016
ஆநிரை பேணலும் அறவழி நிற்றலும்
பசு மாடு சிறு வயதிலிருந்து பழகிய ஜீவன். நடுவே சிலகாலம் டச் இல்லை. பள்ளிக்கூட நண்பர்களைப் போல. விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு இராஜபாளையம் செல்கையில் எங்கள் வீட்டுப் பசுவைக் கண்டு குசல விசாரிப்புகள் முடித்துத் தான் வீட்டுக்குள்ளேயே போவேன். அந்தப் பசு கன்று ஈன்ற போது அதைப் பார்ப்பது பார்வதி-பரமேஸ்வரனை நேரில் தரிசிப்பது போல என்று சொல்லக்கேட்டு ஒருமணி நேரத்துக்கு ஒரு முறை கொட்டிலுக்குப் போய்ப் பார்த்துவிட்டுக் கணக்கு வைத்துக் கொண்டிருந்தேன். பிறகு சீம்பாலின் சுவை குறித்து யாரோ சொல்லத் தொடங்க தரிசனக் கணக்கு மறந்துவிட்டது!
Subscribe to:
Posts (Atom)