பசு மாடு சிறு வயதிலிருந்து பழகிய ஜீவன். நடுவே சிலகாலம் டச் இல்லை. பள்ளிக்கூட நண்பர்களைப் போல. விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு இராஜபாளையம் செல்கையில் எங்கள் வீட்டுப் பசுவைக் கண்டு குசல விசாரிப்புகள் முடித்துத் தான் வீட்டுக்குள்ளேயே போவேன். அந்தப் பசு கன்று ஈன்ற போது அதைப் பார்ப்பது பார்வதி-பரமேஸ்வரனை நேரில் தரிசிப்பது போல என்று சொல்லக்கேட்டு ஒருமணி நேரத்துக்கு ஒரு முறை கொட்டிலுக்குப் போய்ப் பார்த்துவிட்டுக் கணக்கு வைத்துக் கொண்டிருந்தேன். பிறகு சீம்பாலின் சுவை குறித்து யாரோ சொல்லத் தொடங்க தரிசனக் கணக்கு மறந்துவிட்டது!
அரசியல், பொருளாதாரம், நிர்வாகம், சர்வதேச உறவுகள், நாட்டு நடப்பு, குறித்த என் எண்ணங்களையும், என் அனுபவங்களையும் இங்கே பதிவேன்!
Disclaimer
நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.
இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.
அன்புடன் என்றும்,
அருண்அம்பி. (@arunambie)
Showing posts with label பண்பாடு. Show all posts
Showing posts with label பண்பாடு. Show all posts
Monday, 18 April 2016
Thursday, 2 July 2015
மணிபத்ரபுரி @ மாணா - பாரதத்தின் கடைசிக் கிராமம்
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று பீற்றித் திரியும் அரசியலார், தமிழ் பிழைப்பாளர்கள் கெடுத்த தமிழகத்தில் வெளியூர்த் தமிழனே ஏமாற்றப்படும் அவலம் அடிக்கடி நடப்பது. அப்படி இருக்கையில் மொழி தெரியாத வேற்று மாநிலத்தவர், வேற்று நாட்டார் நிலை?
ஆனால், வடக்கே நிலை வேறு. பத்ரிநாத்துக்கு அருகில் இருக்கிறது அப்பகுதியின் பாரதத்தின் கடைசிக் கிராமமான மணிபத்ரபுரி என்கிற மாணா. நவீன வசதிகள் மிகச் சிலவே எட்டிப் பார்த்திருக்கும் அங்கே இந்த வந்தாரை வாழவைக்கும் மனப்பாங்கைக் கண்கூடாகக் கண்டோம்.
ஆனால், வடக்கே நிலை வேறு. பத்ரிநாத்துக்கு அருகில் இருக்கிறது அப்பகுதியின் பாரதத்தின் கடைசிக் கிராமமான மணிபத்ரபுரி என்கிற மாணா. நவீன வசதிகள் மிகச் சிலவே எட்டிப் பார்த்திருக்கும் அங்கே இந்த வந்தாரை வாழவைக்கும் மனப்பாங்கைக் கண்கூடாகக் கண்டோம்.
Subscribe to:
Posts (Atom)