ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Monday 13 September 2021

நாடகக்காதல் உலகில் நாம் நலம் வாழ வழி

 அனைத்து சாதியினரும் அர்ச்சகர் மாதிரி மாப்பிள்ளையும் ஆக மந்திரி ஆதரிப்பார்னு யோசிச்சிட்டான் போலருக்கு! வெளியே தெரிவதற்கு முன்பே பேசியிருக்க வேண்டுமே என்றால், மந்திரி கூட இருக்கிற ஆளுங்கதான் விஷயத்தை வெளியே விட்டிருப்பான். இந்த பஞ்சாயத்துல இந்தாள் சிக்கிட்டா அந்த மந்திரி இடத்துக்கு வரலாம்னு யோசிச்சிருப்பாங்க. Political killer instinct. 

அப்பன்ங்கிற கோணத்தில யோசிச்சா பொண்ணை மாடர்னா வளர்க்கிறேனாக்கும்னு பேசுற அப்பனுங்களுக்கு இதுதான் கதி. நம்ம பாரம்பரியம், நம்ம குடும்பம், நம்ம வாழ்க்கை முறை இதெல்லாம் சொல்லிக்கொடுத்து அடிப்படையை பலமானதா வெச்சிட்டு படி, ஊர்சுத்து ஆனா உன் எல்லைக் கோடுகளில் கவனம் வைன்னு அனுப்பணும். ஆனாலும் கண்காணிக்கணும், ஏன்னா நம்ம தெளிவா இருந்தாலும் பேசிக் கரைச்சு மாத்தித் தூக்கிட்டுப் போகன்னே ஒரு கும்பல் அலையும். 

மந்திரி சேகர் பாபு failed as a father. 

ஆனால் இன்னின்ன சாதிப் பெண்களை இன்ன சாதி ஆள் ‘காதலித்துத் திருமணம செய்தால் ஊக்கத் தொகை கொடுப்போம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். சொத்தே இல்லாத குடும்பமானாலும் இன்னின்ன சாதிப்பெண்ணைத் தூக்கிவந்து திருமணம் செய்தால் சர்க்கார் காசு 60000₹, அரை பவுன் தங்கம், பாதுகாக்க கூட்டம் என்றெல்லாம் ஆசைகாட்டித் தூண்டிவிட்டார்கள். நாடகக் காதல் வேண்டாம் என்பவனும் ஆசைப்படும் வகையில் வாக்குறுதிகள் வீசப்பட்டன. அதற்கு சேகர்பாபுவும் உடந்தை. பெண்ணைப் பெற்ற எத்தனை பெற்றோரின் மனம் எவ்வளவு பதறியிருக்கும்? இன்னமும் பதற்றத்திலேயே இருப்பவர் எத்தனைபேர்?

(வேறு யார் வீட்டில் இப்படி நடந்திருந்தாலும் சமூக நீதி காக்க கிளம்பி வந்திருப்பார்கள் இந்த திராவிடப் புள்ளிங்கோ. இந்த சம்பவத்தில் சமூகநீதி பேசினால் சிக்கலாகும் என்று அடக்கி வாசிக்கிறாரகள்.)

ஏன் என்ற கேள்வி எழாமல் இல்லை. புள்ளிகளை இணைத்துப் பார்த்தால் நாடகக்காதல் கும்பல் திமுகவின் கட்டுப்பாட்டில் இருப்பது என்பது ஒரு தோற்ற மயக்கம் என்று புலப்படும். அவர்களை இயக்குவது அமைதியும் அன்பும் அரிதாரமான மரபுகள் என்பது புலப்படும். இவ்விரண்டும் அடித்துக்கொள்ளாத இடம் உலக வரலாற்றில் மிகக் குறைவு. பாரத மண்ணில் இவற்றுக்குப் பொது எதிரி இந்த மண்ணின் தொல்லறம். 

அவை ஒரளவு வளரும் வரை பொது எதிரியை சமாளிக்க ஆள் வேண்டும். கம்யூனிஸ்டுகள் வர்க்க பேதம் வளர்த்து உதவினார்கள். இந்த மண்ணின் மக்கள் தங்கள் முன்னோர் பற்றிப் புரிந்துகொள்ளாது இருக்க அறிவை மழுங்கடிக்கும் பணியில் கல்விச்சாலைகளை ஆக்கிரமித்த இடதுசார் அறிவுசீவிகள் கைகொடுத்தார்கள். திராவிடக் கும்பல் சாதி/மொழி பேதங்களை வளர்த்து உதவியது.

முறைகெட்டு வளர்த்த கடா மட்டுமல்ல கடா வளர்ப்பு என்ற முறைமையே முறையற்றுச் செய்தால் மார்பில் முட்டி வீழ்த்தும் என்ற பாடம் இதன் மூலம் படிக்கப்படுவதே யதார்த்தத்தை ஏற்பதாக இருக்கும். இதில் நம் வீட்டுப் பெண்பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றிய கேள்வி வருகிறது. 

காப்பானா கள்ளனா என்றால் கள்ளனுக்கே அனுகூலம் அதிகம் என்பது நடைமுறை உண்மை. அப்படியானால் காத்துக் கொள்ள என்னதான் வழி? 

நம் குழந்தைகளுக்குச் சிறு வயதில் இருந்தே நம் அறம் சார்ந்த விஷயங்களைச் சொல்லித்தர வேண்டும். குடும்பம் பாரம்பரியம் உள்ளிட்ட விஷயங்கள் கற்றுத்தரப்பட வேண்டும். 


இடதுபுறம் பேசுவோரைக் கண்டால் நீ

கேட்டுக்கொள்ள லாகாது பாப்பா

இகழ்வாகப் பெரியோரை ஏசும் அவரை

இகழ்நதாலும் குற்றமில்லை பாப்பா


என்று மனதில் பதியவைப்பது சிறப்பு. 

நான் யார் பெண்ணையும் கையைப் பிடித்து இழுக்கவில்லை. என் பெண்ணை எவனும் கையைப் பிடித்து இழுக்க மாட்டான் என்று யாரும் எண்ணினால் அவர் போல முட்டாள் எவருமில்லை. நீங்கள் சைவர் என்பதால் காட்டுப்புலி உங்களைத் தின்னாமல் இருக்காது. மனிதன் சமூக விலங்கு என்பதை மறந்துவிட வேண்டாம். 

இராணுவத்தில் learn to fight alone என்று கற்றுத்தருவார்கள். யாரும் வராவிட்டாலும் நமக்காக நாம் நின்று போராடத் துணிய வேண்டும். அஃதிலார் இருத்தலின் இல்லாமை நன்று. 

No comments: