ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Thursday, 31 January 2013

தீவிரவாத நிறப்பிரிகை

இது தமிழ்தாமரை இதழில் வெளிவந்த என் கட்டுரை.


நமது மாண்புமிகு உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே சில தினங்களுக்கு முன் நடந்த காங்கிரசு சிந்தனைக் கூட்டத்தில் பாஜக ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் தொண்டர்களிடையே தீவிரவாதத்தை வளர்க்கின்றன என்று உளறினார். அந்த உளறல் குறித்த கருத்துக்கள், வேதனைகள், கவலைகளை கருத்தில் கொள்ளுமுகமாக சங்க பரிவார அமைப்புகள் போராட்டம், கண்டனம் என்று ஆரம்பித்தார்கள்.

Wednesday, 30 January 2013

விஸ்வரூபம் எடுப்பது தமிழன் ஆட்சியா தாலிபான் ஆட்சியா? - பால கௌதமன்

நண்பர் பாலகௌதமன் எழுதிய கட்டுரை இது. தினமணி வலைப்பூ பகுதியில் வெளிவந்தது. 
வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது நியதி. ஆனால் நாம் கற்றுக் கொள்ளவும் இல்லை; நம்மால் மறந்துவிடவும் முடியவில்லை. அதே பிரச்சனைதான் மீண்டும் மீண்டும் வருகிறது. படித்தவுடன் சோடா பாட்டில் போல் சீறுகிறோம். பின்னர் காலி பாட்டில் போல் அமிழ்ந்து விடுகிறோம்

Wednesday, 16 January 2013

25 கோடிக்கும் 100 கோடிக்கும் சோடி போட்டுக்கிருவோமா?

ஐதராபாத் வில்லன் அக்பருதீன் ஒவைசி பேசிய வெறுப்புப் பேச்சின் இந்த மொழிபெயர்ப்பை முதலில் நான் வெளியிட விரும்பவில்லை.  MIM கட்சியின் வரலாறு கொள்கை ஆகியவற்றை சற்றே விரிவாக அலசி இந்தக் கும்பலின் இந்து வெறுப்புக்கான காரணத்தை தமிழ்தாமரை இணைய இதழின் வெறுப்பும் பேச்சும் என்ற கட்டுரையில் சொல்லியிருந்தேன்.

இதுதான் இவர்கள். உஷாராக இருங்கள் பந்தங்களே என்று எச்சரிக்கை செய்வதோடு நிறுத்திக் கொள்ளலாம், வெறுப்பு உமிழும் விஷப் பேச்சை மொழிபெயர்த்து வெளியிட வேண்டாம் என்றே எண்ணியிருந்தேன். ஆனால் முகநூலில் ராஜீவ் மல்ஹோத்ரா அவர்கள் ஒரு படத்தைப் பகிர்ந்திருந்தார். அதைப் பார்த்ததும் அடங்கமாட்டார்கள் இந்தப் பதர்கள் என்று தோன்றியது. வெறுப்பின் உச்சத்தைக் காட்டிய விஷப்பேச்சை மொழிபெயர்த்து வெளியிடும் முடிவுடன் இறங்கிவிட்டேன்.

Friday, 11 January 2013

தே.சி.க - இதென்ன புதுக் கழகம்!

கழகம் என்ற பெயர் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. தமிழக மக்களின் சிந்தனையை மழுங்கடித்த ஈவெரா துவக்கிய திராவிடர் கழகம். அந்த மழுங்கிய சிந்தனையில் தொடங்கி மானாட மயிலாட நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகம். கணக்குக் கேட்டுப் பிரிந்து கணக்கற்ற ஓட்டுக்களில் வென்று கணக்காகப் பதின்மூன்றாண்டுகள் கருணாநிதியை நிரந்தர எதிர்க்கட்சித் தலைவராக முடக்கிவைத்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

Friday, 4 January 2013

வேதிக்காயடிப்பு வேலைக்கு ஆகாது

நாட்டில் தினவெடுத்த தடியர்கள் மிகவும் அதிகமாகியுள்ளனரோ என்று ஐயப்பாடு எழுந்துள்ளது. இல்லை பலருக்கும் தினவு அதிகமாகிவிட்டது என்பதாக அரசு எந்திரம் நினைக்கிறது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துவிட்டன என்கிறார்கள். கிராமங்களில் பேசும் போது ”இதெல்லாம் முந்திக்காலத்தில இல்லாததா. நம்ம புள்ளைகள நாம பாத்துக்கிட்டோம். தடிப்பசங்க பொத்திகிட்டு போனாய்ங்க. இப்ப அது இல்லை” என்கின்றனர்.

Thursday, 3 January 2013

மின் பற்றாக்குறை: யாரும் யோக்கியரில்லை!

கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஒரு சொற்பொழிவில் சொன்னார்..."தொட்டால் ஷாக்கடிக்கும் மின்சாரம்... தொடாமலே ஷாக்கடிக்கும் சம்சாரம்" என்று. இன்று கம்பியைப் பிடித்துக் கொண்டு தொங்கினாலும் ஷாக்கடிக்காத வகையில் இருக்கிறது மின்சாரத்தின்  நிலை. இருந்தால் தானே.... எங்கள் ஊரில் 10 மணி நேரம் மின்சாரமின்றிப் போகிறது. இன்வெர்டர் வாங்கி வைக்கலாமே என்றால் அது சார்ஜ் ஆக மின்சாரம் மரத்திலா காய்க்கிறது என்றார் என் தந்தை. குறைந்தது 4 மணி நேரம் சார்ஜ் ஆகவேண்டும். பல ஊர்களில் 4 மணி நேரம் மின்சாரம் தொடர்ச்சியாக இருப்பது கிடையாது.

Wednesday, 2 January 2013

மதம் பரப்ப வாரீர்: விதிகள் விலக்கி வலைவிரிக்கும் அரசு

ஒரு நாட்டுக்கு அந்த நாட்டைச் சாராத ஒருவர் போகவேண்டுமென்றால் நுழைவாணை எனப்படும் விசா தேவை. சொந்த நாட்டில் அடையாளப்படுத்தித் தரப்படும் கடவுச்சீட்டு எனும் பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே நுழைவாணை தரப்படும். இல்லையென்றால் அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு மட்டும் சென்று வர அனுமதி பெறலாம்.