ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Friday, 17 May 2013

அழியும் நிலையில் 13 தலைமுறைக்கு முந்தய சிவன் கோவில் ..!


அழியும் நிலையில் 13 தலைமுறைக்கு முந்தய சிவன் கோவில் ..! செய்தியை பகிர்ந்து கொண்டு தடுக்க முயல்வோம் வாருங்கள் நண்பர்களே ...!

தேசிய நெடுஞ்சாலை துறையில் நான்கு வழி பாதை திட்டத்தினால், 1300 வருட சிவன் கோவில் அபாயத்தில் உள்ளதாக முகப்புத்தக நண்பர்கள்  எழுதியுள்ளார். பகிர்வையும் தினமலர் சுட்டியையும் படித்த போத இதை நடக்க விடக்கூடாது என்ற வைராக்யம் தோன்றுகிறது.


 விரிவாக்கம் என்ற பெயரில் கலாசாரச்சின்னங்களை அழிப்பது எதிர்காலத்துச் சந்ததியினருக்கு நம் கலாசார வேர்கள் தெரியாமலே அழிந்துபட்டுப் போக வாய்ப்பாகும். இது யாருக்கு லாபம் என்று பார்த்தால் நம்மைச் சிறுமைப்படுத்தி வைத்துக் கொழித்துக் கொண்டிருக்கும் அந்நிய சக்திகளும் அவர்களது அடிவருடிகளுமே கண்ணுக்குத் தெரிகிறார்கள்.


திருப்புறாவார் பனங்காட்டீஸ்வரர் கோவில் பனையபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது. திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட இத்திருக்கோவில் விக்கிரவாண்டி - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை "பறவைபுறம்" என்றும் அழைக்கிறார்கள்.

பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோவில் மூலவர் மீது, சித்திரை மாதத்தில் ஏழு நாட்கள் தொடர்ந்து சூரிய ஒளி விழும் அற்புதம் நிகழ்ந்து வருகிறது. சித்திரை மாதத்தில் முதல் ஏழு நாட்கள் தொடர்ந்து மூலவர் பனங்காட்டீஸ்வரர், மெய்யாம்பிகை மீது, சூரிய உதயத்தின் போது ஒளி விழும் அற்புதம் நிகழ்ந்து வருகிறது.

                               

தேவார பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்களில் இது 20வது தலம்.

விண்ணமர்ந்தன மும்மதில்களை வீழவெங்கணை யால்எய்தாய்விரி
பண்ணமர்ந்தொலி சேர் புறவார் பனங்காட்டூர்ப் பெண்ணமர்ந்தொரு
பாகமாகிய பிஞ்ஞா பிறை சேர்நுதலிடைக் கண் அமர்ந்தவனே கலந்தார்க்கு
அருளாயே.
-திருஞானசம்பந்தர்

நெடுஞ்சாலை துறையினரின், சாலை விரிவாக்கத் திட்டத்தின் படி, கோவிலின் சுற்றுச் சுவர் மற்றும் அதன் உட்புறத்தைப் பாதிக்கும் வண்ணம் குறியீடுகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்த விரிவாக்க திட்டம் நடந்தேறினால், கோவிலில் உள்ள சத்யாம்பிகை தேவி மற்றும் கோவில் பிரகாரங்கள் இடிக்கப்படும் அபாயம் உள்ளதாக அறிகிறோம். இதனை அடுத்து பனையபுரம் மற்றும் சுற்றுப்புற‌த்தை சேர்ந்த 4000 மக்கள் ஒன்று சேர்ந்து கலெக்டரிடம் மணு கொடுத்துள்ளனர்.

கோவிலின் சிறப்பை குறித்தும், நெடுஞ்சாலை துறையின் திட்டம் குறித்தும் இந்த சுட்டியை படித்து தெரிந்துக் கொள்ளலாம்.

நாமும் இது குறித்து விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்துவோம்.
முடிந்தால் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அவர்களிடம் இந்த செய்தியையும், நம் கவலையையும் தெரியப்படுத்துங்கள்.

Thiru V Sampath IAS
District Collector Collectorate, Villupuram - 605 602
Phone: 04146-222470 (O)
04146-222480 (R)
Fax: 04146-222470
E-Mail: collrvpm@nic.in

அனைவருக்கும் இதை முடிந்தவரை பகிருங்கள். இச்செய்தி சில தின‌ங்களுக்கு முன் தினமலரிலும் வெளிவந்துள்ளது.

எத்தனையோ பாடுபட்டு கட்டிய நம் கோவில்களை காப்பாற்ற, இந்த சிறு கடமையை (பகிர்தல்) செய்தல் அவசியம் அல்லவா ? இதை பகிரும் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

No comments: