சாதி என்பது ஒரு அடையாளம் என்பதாகத்தான் சிறு வயது முதல் எனக்குப் பழக்கம். டேய் ஐயரே.. டேய் தேவரே.. டேய் கோனாரே என்று சகஜமாக விளித்து விளையாடிய பள்ளிப்பருவம் என்னுடையது. என் ஆப்த நண்பன் ஒரு அந்தணன் அல்ல. ஆனால் அவன் வீட்டில் நானோ என் வீட்டில் அவனோ வேறுபாடுகள் சிறிதுமின்றிப் பழகியிருக்கிறோம்.
ஒன்பதாம் வகுப்பில் தான் சாதியின் திராவிட அரசியல் முகம் என்பது எனக்கு அறிமுகமானது. திமுக காரரான தமிழாசிரியர் ஒருவர் “ப்ராமணனாகிய உன்னை உட்கார்த்தி சூத்திரன் நான் பாடம் நடத்துகிறேனே இதுவே திராவிட இயக்கங்களின் சாதனை” என்றார். இதை நான் வீட்டில் சொல்ல எங்கள் குடும்ப நண்பர் ஒரு வழக்கறிஞர் சொன்னார்,” வெட்டித்தனமா பேசப்படாது. தமிழ்த் தாத்தா உவேசாவுக்கு மீனாக்ஷி சுந்தரம் பிள்ளைவாள் பாடம் நடத்திய போது திராவிட இயக்கம் என்ற எண்ணம் யாருடைய மனதிலும் கருக்கொள்ளக்கூட இல்லை”.
இதை நான் தமிழய்யாவிடம் கேட்க,’இதுக்கு தான் ஐயரே வேண்டாம்னு சொன்னார் பெரியார்’. ’வாத்தியாரை எதிர்த்துப் பேசுறியே, இதுதான் ஐயருக்கு அழகா’ என்றார். நான் தமிழய்யாவிடம் அடிவாங்குவது கண்ட தலைமை ஆசிரியர் விசாரித்து ’பசங்ககிட்ட ஜாதி பேசாதீங்க’ என்று அவரைக் கண்டித்தார்.
என் ஆப்த நண்பன் மறுநாள் தமிழய்யா சாதி ஒழிப்பு பற்றிய பாடத்தை நடத்தும் போது இப்பப் பாருடா என்று எங்களிடம் சொல்லிவிட்டு, ’அதெல்லாம் ஒழியாதுன்னு எங்க சீயான் சொன்னாரு ஐயா’ என்று சொல்ல ‘எதிர்த்து பேசாதே’ என்ற தமிழய்யாவுக்கு கிட்டிய பதில் “ஐயர்மகன் தானேய்யா எதித்து பேசக்கூடாது... நான் பேசுனாலுமா தப்பு!!”
மேற்கொண்டு பேசினால் அந்தச் சீயான் வந்து வெட்டுவாரோ என்ற அச்சமோ என்னவோ தமிழய்யா என் நண்பனைச் சீண்டியதில்லை. அப்போதிருந்தே எனக்கு எதிர்த்து நின்றால் சற்றேனும் சீண்டல் குறையும், நம்மைக் குறித்த அச்சம் சற்றே மரியாதையும் தரும் என்று புரிந்தது.
என் உபநயனத்துக்கு விடுப்பு எடுத்த போது பூணூல் போட்டுகிட்டு என் வகுப்புக்கு வரக்கூடாது என்று தமிழய்யா மிரட்ட, சரித்தான் போய்யா என்று சொல்லிவிட்டேன். விஷயம் மீண்டும் வகுப்பாசிரியர், தலைமை ஆசிரியர் என்று போனது. என்னை மன்னிப்புக் கேட்கச் சொன்னார்கள். தலைமை ஆசிரியரிடம் மன்னிப்புக் கேட்டேன். தமிழய்யாவிடம் கேட்க மறுத்தேன். வற்புறுத்திய போது டிசி கொடுங்கள் நான் போகிறேன் என்றேன். (கொடுத்திருந்தால் என்ன செய்திருப்பேன்?)
அதன்பிறகு சத்ய சாயி பாபா சமிதி, ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம், வள்ளலார் சன்மார்க்க சங்கம், சிருங்கேரி மடம் என்று ஆண்டுகள் ஓடின. இங்கெல்லாம் சாதி என்பது புழக்கத்தில் இருக்கும் பெயர் போலப் பயன்பட்டது. வேறுபாடுகள் அறவே இருந்ததில்ல்லை. பணியிடங்களில் சாதிகள் தாக்கம் அதிகம் இருந்ததில்லை.
தமிழ் வலையுலகில் பிரவேசித்த பின் தாக்கியது சாதியின் கோர முகம்,. ஆனால் ஆங்கில வலையுலகில் இந்த அளவுக்கு சல்லித்தனமாக சாதியையோ மதத்தையோ வைத்து விளையாட மாட்டார்கள். பேசும் விஷயத்துக்குத் தக்க பதில் வரும். அவ்வளவே. தமிழ் வலையுலகில் பிழைப்பற்ற திராவிடக் கம்பெனி(கட்சி) ஆட்கள் கூச்ச நாச்சமில்லாமல் கூச்சலிடவே இருக்கிறார்கள். எதைச் சொன்னாலும் சொன்னவன் சாதி பார்த்த பிறகே அதற்கேற்ற கருத்து வருகிறது.
சமீபத்திய ஸ்ரீரங்கம் ப்ராமணாள் கபே விவகாரத்துக்குப் பிறகு ஒரு எண்ணம் தோன்றியது. ஐயன்சொல் என்று ஒரு அடையாளத்துடன் இருக்கும் நம் வலைப்பூவுக்கு ‘ப்ராமணாள் வலைப்பூ’ என்று அடைமொழி மாதிரி வைத்தால் என்ன என்று. என் ப்ளாக், என் இஷ்டம், நான் என்ன பெயர் வேண்டுமனாலும் வைப்பேன். எவன்/ள் கேட்பது? Proud to be Hindu (Brahmin) என்று badge அணிந்து தெருவில் நடமாடுவேன். என்ன செய்வீர்கள் திராவிடக் குஞ்சுகளே!!
வன்முறைக்கு அந்தணர் அஞ்சிய காலம் இப்போது இல்லை. இஃதொரு ப்ராமணன் நடத்தும் வலைப்பூவே. ஆகவே இது ப்ராமணாள் வலைப்பூ என்று சொல்லப்படுவதற்கு முழுத் தகுதி பெற்றதாகிறது. எனக்குப் இவ்விதப் பெயர் போரடிக்கும் வரை அப்படித்தான் இருக்கும்.
அரசியல், பொருளாதாரம், நிர்வாகம், சர்வதேச உறவுகள், நாட்டு நடப்பு, குறித்த என் எண்ணங்களையும், என் அனுபவங்களையும் இங்கே பதிவேன்!
Disclaimer
நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.
இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.
அன்புடன் என்றும்,
அருண்அம்பி. (@arunambie)
48 comments:
அருமை அருமை நண்பரே சரியான செருப்படி அந்த திராவிட மாயவிகளுக்கு
good
வெளுத்து வாங்குங்க அருண்.. we are with you..
DIRAVIDAN'S ARE 'reprobate'-
பின்னூட்டமிட்ட அன்பர்கள் ராம்பிரசாத், சுப்புஜி, பாலசுப்பிரமணியன், நாரயணன் சுவாமிநாதன், பாலாஜி வெங்கட்ராமன் அனைவருக்கும் நன்றிகள் பல. முகநூலில் இன்னும் கடுமை காட்டு என்று கருத்துக்கள் வந்தன. வினைகளுக்கேற்ற எதிர்வினை செய்வோம்.
டோண்டு இராகவன் 'பிராமணாள் கஃபே' என்ற பதிவில், முரளி ஐயரின் "பிராமணாள் கஃபே" பலகையை ஈவெராவின் ஆட்கள் அழிக்கவேண்டுமென போராட்டம் நடத்த முரளி ஐயர் தன் குருவான காஞ்சி சங்கராச்சாரியாரிடம் சென்றாராம். சங்கராச்சாரியார் பிராமணாள் கஃபே பலகையை எடுத்துவிடும்படி ஆலோசனை சொன்னாராம்.
இதைப்போல நீங்களும் உங்கள் குருவிடம் சென்று ஆலோசனை கேட்டீர்களா? கேட்டால் ஒரு நல்ல பதிலை அல்லது ஆலோசனையை அவர் கொடுத்திருந்திருப்பார். அது மற்றவருக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்குமே!
அருமை நண்பரே,
நமக்கு பெற்றோர் சூட்டும் பெயர்களைப் போல, ஜாதி கூட ஓர் அடையாளம்தான்.
நான் சப்பாத்தி விரும்பி சாப்பிடுவேன்.
இன்னொருவர் இட்லி விரும்பி சாப்பிடுவார்.
அதற்காக இட்லி சாப்பிடுபவர் சப்பாத்தியையும், சப்பாத்தி சாப்பிடுபவர் இட்லியையும் குறை கூறுவது தவறு.
ஜாதி, மதம், இனம் இவற்றையும் அவரவருக்குப் பிடித்த உணவு மெனு என பார்க்கப் பழகிவிட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை.
அருமை நண்பரே,
நமக்கு பெற்றோர் சூட்டும் பெயர்களைப் போல, ஜாதி கூட ஓர் அடையாளம்தான்.
நான் சப்பாத்தி விரும்பி சாப்பிடுவேன்.
இன்னொருவர் இட்லி விரும்பி சாப்பிடுவார்.
அதற்காக இட்லிக்காரர் சப்பாத்தியையும், சப்பாத்திக்காரர் இட்லியையும் குறை கூறுவது தவறு.
ஜாதி, மதம், இனம் இவற்றையும் அவரவருக்குப் பிடித்த உணவு மெனு என பார்க்கப் பழகிவிட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை.
@ குலசேகரன்:
முரளி ஐயரின் “ப்ராமணாள் கஃபே” முன் ஈவெரா போராட்டம் நடத்தினார். மக்கள் விழிப்புணர்வு சற்றே குறைவாக இருந்தமையால் ஈவெராவின் வியாபாரம் நன்றாக நடந்தது. முரளி ஐயருக்கு ”முரளி கஃபே-ப்ராமணாள் உணவகம்” வாழ்வாதாரம். ஆகவே தன் வியாபாரம்/வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என்று முரளி ஐயர் குருவிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம். அச்சமிருக்கும் போது ஏன் போராடுகிறாய் பேசாதிரு என்று காஞ்சிப்பெரியவர் சொல்லியிருக்கலாம்.
இப்போது மக்களுக்கு விழிப்புணர்வு அதிகம். சும்மா ஐயகோ தமிழா என்று கூவி அசந்த போது தமிழனையே கொள்ளையடிக்கும் பகுத்தறிவு செல்லுபடியாகாது. ஓங்கிச் சத்தமிட்டால் ஓசையின்றி ஓடிப்போகும் இந்தத் திராவிடக் கம்பெனிக் குஞ்சுகளை என் குருநாதரிடம் போய் ஆலோசனை கேட்குமளவுக்குப் பொருட்டாக மதிக்கத் தேவையில்லை.
வழிகாட்டுதல்கள் என்பது One size fits all போன்ற விஷயம் இல்லை. அவரவர்க்குத் தேவையான விஷயங்களில் அவரவர் தான் ஆலோசனை கேட்கவேண்டும். குருநாதர் எனக்குத் தரும் ஆலோசனை எல்லோருக்கும் பொருந்திவர வாய்ப்பில்லை.
அதுசரி குலசேகரரே! உமது ப்ரோஃபைல் ஏன் மறைபொருளாக இருக்கிறது?
சரி...ஆலோசனை எதற்கு கேட்கவேண்டுமென்பது அவா அவா விருப்பம். எனினும், சேம் சைஸ் ஃபிட் ஆல் என்பது இங்கு பொருத்தமா என்பது வியப்பே. ஏனென்றால், ஒருவேளை ஏதோ ஒரு பிரச்சினைக்காக நீங்கள் உங்கள் குருவிடம் போய்க் கேட்கிறீர்கள். அவரும் ஒன்றைச்சொல்லி உங்களை அதன் வழி நடக்க என்று சொல்லியதைப் பதிவில் போட்டுவிட்டீர்கள். ஒரு பத்தாயிரம் பேர் உங்கள் பதிவைப்படிக்கலாம். அவர்களுள் ஓரிருவருக்கு அதே பிரச்சினை வேறுவிதமாக வந்திருக்கலாம். அவர்கள் பயன்பெறலாமென்பது என் அபிப்பிராயம். மேலும், அப்பிரச்சினையில்லாத என் போன்ற அதிகப்பிரசிங்கிகளும் மூக்கை நுழைத்து அஃது என்ன பிரச்சினை நம்ம அம்பிக்கு ? அதற்கென்ன அறிவுரை குரு சொன்னார் என்ற ஆர்வலமிருப்பதில் தவறேதுமில்லை. இயற்கைதான். கற்றாரைக்கற்றாரே காமுருவர் அன்றோ! (என்னைக்கற்றார் எனச்சொல்லிக்கொண்டதற்கு மன்னிக்கனும். மாத்தியெழுதிக்கிறேன்:பூவோடு சேர்ந்த நாறும் மணக்குமென்பாரன்றோ!)
நிற்க. குலசேகரன் ஒருவேளை அந்தத்திராவிடக்குஞ்சு ஆளாகவும் இருக்கலாம். பெருமாளுக்குத்தான் தெரியும்!. குலசேகரன் என்ற பேரையும் படத்தையும் போட்டு என்ன நாடகம்? இல்லையா சார்?
ராமபிரசாத் ராஜராமன் சொன்னது மாதிரி குலசேகரன் போன்ற திராவிடப்பொய்யர்களையும் புரட்டர்களையும் நிற்க வைத்துச் செருப்பாலடிக்க வேண்டும்.
//**
சமீபத்திய ஸ்ரீரங்கம் ப்ராமணாள் கபே விவகாரத்துக்குப் பிறகு ஒரு எண்ணம் தோன்றியது. ஐயன்சொல் என்று ஒரு அடையாளத்துடன் இருக்கும் நம் வலைப்பூவுக்கு ப்ராமணாள் வலைப்பூ என்று அடைமொழி மாதிரி வைத்தால் என்ன என்று. என் ப்ளாக், என் இஷ்டம், நான் என்ன பெயர் வேண்டுமனாலும் வைப்பேன். எவன்/ள் கேட்பது? Proud to be Hindu (Brahmin) என்று badge அணிந்து தெருவில் நடமாடுவேன். **//
உங்களை நீங்கள் பிராமணன்-னு சொல்றதால மத்தவங்கள நீங்க இழி பிரவிகள்-னு சொல்ற மாதிரி அர்த்தமாகுமே.. இது உங்களுக்கு பாவமா தெரியலயா..!!??
பிரவி என்ற தமிழ்ச்சொல்லுக்கு என்ன பொருள்?
Birth என்று ஆங்கிலத்தில் அறியப்படுவதைச் சொல்கிறீகள் என்றால் அது பிறவி.
முதலில் பிழையின்றித் தமிழ் எழுதப் பழகிக்கொள்ளுங்கள் அன்பு.
ஈவெரா கக்கியதை நக்கி விழுங்கி குமட்டி வாந்தி எடுப்பது தவிர உங்களுக்குச் சொந்தமாக யோசிக்கத் தெரியவில்லை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. மொழியையாவது சரியாக எழுதப் பழகுங்கள்.
திராவிட பகுத்தறிவு குரைக்க ஆரம்பிக்கும் முன்னால் எந்த ஒரிஜினல் தமிழறிஞரோ சமய அறிஞரோ அப்படிச் சொல்லவில்லை. அப்படியென்றால் ப்ராமணனைத் தவிர மற்றவர் எல்லாம் இழிபிறவி என்று திராவிட பகுத்தறிவு தான் கற்பிக்கிறதா?
ம்ம்ம் நடத்துங்கள், ஜமாயுங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவையங்கார்
டோண்டு ஐயா! மிக்க நன்றி. உங்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டு தற்போது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளேன். உங்களைப் போன்ற பெரியோர் ஆசிகளுடன் புகுந்து விளையாட விழைகிறேன்.
Good one arun. We should start serving food to DK at free of cost with the name holding 'Brahmanal Cafe'. Useless Veeramilla mani bark like that. At some point, we need reiterate them. - Sriram Iyer.
//** பிரவி என்ற தமிழ்ச்சொல்லுக்கு என்ன பொருள்? Birth என்று ஆங்கிலத்தில் அறியப்படுவதைச் சொல்கிறீகள் என்றால் அது பிறவி. முதலில் பிழையின்றித் தமிழ் எழுதப் பழகிக்கொள்ளுங்கள் அன்பு.**//
ஏதோ கவனக் குறைவு.. தவறாக எழுதிவிட்டேன்.. தமிழில் தப்பே இல்லாம எழுதற அளவுக்கு எனக்கு தமிழறிவு இல்ல..
இருப்பினும் தங்களின் அறிவுரைக்கு நன்றி..
//** ஈவெரா கக்கியதை நக்கி விழுங்கி குமட்டி வாந்தி எடுப்பது தவிர உங்களுக்குச் சொந்தமாக யோசிக்கத் தெரியவில்லை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. **//
சரி, என்னோட கேள்விக்கு நீங்க எப்படி பதில் சொல்லியிருக்கலாம்...
என்னோட புரிதல் தவறானது-னு சொல்லி அதற்க்கான விளக்கத்தை கொடுத்திருக்கலாம்.
இல்லையா..!
உங்களுக்கு சரியான புரிதல் இல்லை அப்டினு சொல்லி, யாரிடமாவது அறிவுரை கேட்டு தெரிஞ்சுக்க சொல்லியிருக்கலாம்..
ஆனால்,
தேவையே இல்லாம எனக்கான பதிலுரையில் என்னையும் சேர்த்து அருவருக்கத்தக்க வகையில் தனிநபர்[ஈ.வே.ரா] விமர்சனம் ஏன்..!!?
மேலும் எனக்கு சுயமாக சிந்திக்க தெரியவில்லைனும் சொல்லியிருக்கீங்க.. அது எப்படினு கொஞ்சம் விளக்க முடியுமா..!!?
வார்த்தைகளில் இவ்வளவு கடுகடுப்பு ஏன்..!?
@அன்பு:
நான் பதில் சொன்ன முறையில் அருவெறுக்கத்தக்க வகையில் தனிநபர் விமர்சனம் இருந்தது என்றீர்கள்.
அருவெறுக்கத்தக்க ஈவெராவைப் பற்றிப் பேசுகையில் அப்படித்தானே பேச முடியும். அந்த ஆள் செய்தது எல்லாம் தனிநபர் தாக்குதல். இந்து மத எதிர்ப்பு.
உங்கள் கேள்வி இப்படி இருந்திருக்கலாம்.
உங்களை நீங்கள் பிராமணன்-னு சொல்றதால மத்தவங்கள நீங்க இழி பிரவிகள்-னு சொல்ற மாதிரி அர்த்தமாகும் என்று ஈவெரா சொல்லியிருக்கிறாரே...என்று கேட்டிருக்கலாம்.
ஏதோ ஈவெரா சொன்ன அந்த வாதம் முற்றுமுச்சூடும் சரி என்பது போலவும் அது பாவம் என்று எனக்குப் புரியவில்லை என்பது போலவும் கேட்டீர்கள்.
இந்து மதத்தை மட்டும் தாக்குவதும் அதிலும் எதிர்வினை வன்முறையாக வராது என்ற நிலையில் இருக்கும் ப்ராமணார்களை ஈவெராவும் அந்த ஆளது அடிப் பொடிகளும் தனிநபர் அநாகரிகத் தாக்குதல் செய்வதும் வெறுக்கத்தக்க நிலைப்பாடு.
அது முற்றிலும் சரி என்பது போல உங்கள் கேள்வி இருந்ததால் உங்களுக்குச் சுயமாகச் சிந்திக்கத் தெரியாது, திராவிட பகுத்தறிவுக் குட்டையில் ஊறிய மட்டை என்று முடிவு செய்தேன்.
ஈவெரா சொன்னதை ஏற்றுக் கொள்வோரிடம் நான் கடுகடுப்பாகத் தான் பேசுவேன்.
நாட்டில் மக்கள் தொகையில் மிக மிக சொற்ப சாதியினர் எப்படி எல்லோரும் கல்வி கற்று இருக்கிறார்கள், மற்றவர்கள் ஏன் கற்கவில்லை என்று சொல்லுங்கள்?
நீங்கள் சொல்லும் சாதியினர் இந்த சமுதாயத்துக்கு செய்த கொடுமையை விட வேற ஏதும் பெரிது இல்லை நண்பா.
சாதியை விட்டு வெளியே வாருங்கள்... மக்களோடு இணைந்து வாழப்பழகுங்கள், மற்றவர்கள் உங்களை மதிப்பார்கள். இல்லையென்றால் வசவுகள் தான் வரும்....
@ஜீவானந்தம்:
இதுதான் கண்மூடித்தனமான ஈவெரா பற்று, வெறி.
// நாட்டில் மக்கள் தொகையில் மிக மிக சொற்ப சாதியினர் எப்படி எல்லோரும் கல்வி கற்று இருக்கிறார்கள், மற்றவர்கள் ஏன் கற்கவில்லை என்று சொல்லுங்கள்?//
நீதிக்கட்சி என்று ஆரம்பித்தார்களே ராவ் பகதூர்கள் பலர் சேர்ந்து அவர்கள் எல்லாம் ப்ராமணர்களா? முன்காலத்தில் கல்வி என்பது ஆங்கிலேயர் வகுத்துவைத்தது அல்ல. எல்லோரும் தமிழ் கற்றிருந்தார்கள். ப்ரமணரல்லாத பிற சாதியினர் பலரும் புலவர்களாகவும் அறிஞர்களாகவும் இருந்திருக்கிறார்கள். கூகிளில் தேடிப்பாருங்கள்.
//நீங்கள் சொல்லும் சாதியினர் இந்த சமுதாயத்துக்கு செய்த கொடுமையை விட வேற ஏதும் பெரிது இல்லை நண்பா. //
தனக்கு எதிர்ப்பு வராது என்பதால் ஈவெரா கக்கி வைத்த விஷம் இது. தன் சாதிக்காரரான் கோபலகிருஷ்ண நாயுடு தன் பண்ணையில் பணிசெய்த மனிதர்கள் கூலி உயர்வு கேட்டார்கள் என்று உயிரோரு கொளுத்தியபோது கம்யூனிஸ்டுகளைத் தாக்கி அறிக்கை விட்டார்.வரலாறு என்பது ஈவெரா கக்கி வைத்த வாந்தி அல்ல. அதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு பேசுங்கள். ப்ராமணர்களும் ஈவெராவை மிரட்டியிருந்தால் அவர் அடங்கியிருப்பார். அன்று மிரட்டி அடக்காதது இமாலயத்தவறு.
//சாதியை விட்டு வெளியே வாருங்கள்... மக்களோடு இணைந்து வாழப்பழகுங்கள், மற்றவர்கள் உங்களை மதிப்பார்கள். இல்லையென்றால் வசவுகள் தான் வரும்....//
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் கூட்டம் இது. சாதியை விட்டு வெளியே வந்தாலும் பேசுவார்கள், வராவிட்டாலும் பேசுவார்கள். பேசவேண்டும் என்ற முடிவுடன் இருப்பவர்கள். என்னை மாற்றிக் கொண்டால்தான் என்னோடு பழகுவேன் என்போர் எனக்குத் தேவையில்லை. அப்படிப்பட்டது நட்பும் அல்ல. என்னை நான் இருப்பது போல ஏற்றுக் கொண்டு பழகுவோர் நட்பு எனக்குப் போதும்.
வசவுகள் வந்தால் வந்தது போலவே திருப்பித் தருவேன்.
We are with you Arun, we are not 1970's generation. we are IT generation and we wont tolerate attacks on our culture and tradition.
Kind Regards
Raghav
பெயர் மட்டும் வைச்சிட்டா போதாது. தொடர்ந்து எழுதணும்.
அதாகப்பட்டது, தாங்களும் இதுநாள் வரையில் தங்களுடைய வலைப்பூவில் இவ்வாறு பெயர் இட வேண்டும் என நினைத்து இருக்கவில்லை, ஆனால் இப்போது ஒரு வீம்பிற்காக பெயரிடுகிறீர்கள். அருமை. ஆரம்பமே அசத்தல்.
இது போன்ற ஒரு பின்புலத்துடன் உள்ள ஒரு செயல் என்ன விளைவை ஏற்படுத்தும்? திரு. ஈ. வெ. ரா. அவர்களது செயல்பாட்டு முறைக்கும் இதற்கும் ஏதும் வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.
நேர்மறையாக, ஒரு காரணமேனும் இதற்கு இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.
தாங்கள் ஏன் எதிர்வாதங்களின் வசை மொழிகளை வடிகட்டி விட்டு, அதனில் ஏதும் உண்மை/யதார்த்தம் உள்ளதா என்று காண முயற்சிக்கக்கூடாது. அதற்க்கு என்ன தீர்வு என்றும், (மேலும் ஒரு ப்ராஹ்மணராக) அதை செயல்படுத்தவும் கூடாது?
மாற்றத்தினை முயற்சித்துப்பாருங்கள், பிறகு நான் சொல்ல வருவதன் கடினம் புரியக்கூடும்.
எப்படியாயினும் முயற்சிக்கு வாழ்த்துக்கள். எங்கு சுற்றினும் ரங்கனைச் சேரனும்!!
//நேர்மறையாக, ஒரு காரணமேனும் இதற்கு இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.//
ப்ராமணாள் என்ற பெயரை மட்டும் எதிர்க்க நேர்மறையான காரணம் தேவையில்லை எனும் போது முள்ளை முள்ளால் எடுக்க முனைவது தவறா?
//தாங்கள் ஏன் எதிர்வாதங்களின் வசை மொழிகளை வடிகட்டி விட்டு, அதனில் ஏதும் உண்மை/யதார்த்தம் உள்ளதா என்று காண முயற்சிக்கக்கூடாது. //
வசைபாடினால் எதிர்வினையாற்ற முடிந்த போதும் தாங்கிக் கொள்ள நான் துறவு பூணவில்லை. கருத்துச் சொல்பவருக்கு நம்மீது அக்கறை இருந்து ஒரு சொன்னால் பரவாயில்லை, அதில் கடுமைகளை வடிகட்டி கருத்தை எடுத்துக் கொள்ளலாம். ஈவெராவின் அடிவருடிகள் காரணமற்ற வெறுப்புடன் சொல்லும் கருத்துக்களை சிரமேற்கொண்டு சுயபரிசோதனை செய்வதெல்லாம் நேரவிரயம்.
//எங்கு சுற்றினும் ரங்கனைச் சேரனும்!!//
ரங்கனை விட்டால் தானே சேரணும். எங்கு சுற்றினும் நண்பன் எப்பவும் மனசில இருக்கானே!
// அதற்க்கு என்ன தீர்வு என்றும், (மேலும் ஒரு ப்ராஹ்மணராக) அதை செயல்படுத்தவும் கூடாது?// தெருவில் நடந்து போகும் போது நாய் குரைக்கிறது, கையை ஓங்கி அதை விரட்டுகிறோம். அது ஏன் குரைக்கிறது என்று பார்த்து அதைச் சரி செய்யலாமே என்கிறீர்கள். நாய்க்கு வேலை இல்லை ஆனால் நிற்க நேரமில்லை என்பார்கள். எனக்கு நிறைய வேலை இருக்கிறது. குரைக்கும் நாய்களை கை ஓங்கி விரட்டி விட்டு வேலையைப் பார்க்கப் போகிறேன். அவ்வளவே! No offenses meant at you iTTiAM!
@ உயிர்நேயம்: சரியான கருத்து. சரியாகப் புரியும் படி சொல்லியிருக்கிறீர்கள். நன்றி நண்பரே!
@Raghs99: Cheers Raghav! Let us rock :)
முதலில் நான் சொன்னதைத் திருப்பிச் சொல்கிறேன்.
இப்படி என் ஜாதியைக் காப்பேன் என்பது உங்கள் விடாக்கருத்து. அதற்காக ஒரு சென்சேஷனல் பெயரில் ஒரு வலைப்பூ. இதில் நீங்கள் செய்த தவறென்னவென்றால் உங்கள் குருவில் போட்டோக்களைப்போட்டது. அவர் உங்கள் குரு மட்டுமன்று; ஆயிரக்கணக்காவரின் கூட. அவர்களில் எத்தனை பேர் உங்கள் செயலை ஏற்றுக் கொள்வார்கள்? அப்போட்டோக்கள் உங்கள் குரு உங்கள் செயலுக்கு உடன்படுவார் என்ற விபரீத எண்ணத்தை அல்லவா உருவாக்கும்? நீங்கள் இப்படி செய்யலாமா?
மேலும், நீங்கள் உங்கள் குருவிடம் போய் இப்படி வலைப்பூ தொடங்குவதைச் சொல்லி அவரின் அருளாசியைப்பெற்று விடுவீர்களானால் நன்று. ஏனென்றால், அவர் அப்படி தரமாட்டாரென்பது திண்ணம். இப்படியெல்லாம செய்யாதீர்கள் என்று சொல்லி உங்கள் எண்ணத்தை வேறு சாத்வீகமான நல்வழிகளில் செய்து காட்டலாமே என்பார். உடனே போய்க் கேளுங்கள்.
உங்கள் ஜாதியை பிறமக்கள் மதிக்க நீங்கள் விழைவீகளென்றால் ஜாதிப்பெயரை தலைப்பாக வைத்து சமூக சேவை செய்யுங்கள். ராமு சொன்னதைப்போல பிராமணாள் கஃபே தொடங்கி ஏழை, எளியவர்கள், பசியால் துடித்து தெருவில் மடிவோர் போன்றோருக்கு இலவச உணவு வழங்கி அவர்களுயிர்களைக்காத்தீர்கள் என்றால், பிராமணாள் என்ற பெயருக்கு உங்களால் முடிந்த புனிதத்தை நல்கிறீர்கள். இதை சூசகமாக ஒருவர் சுட்டிக்காட்டுகிறார்; அதாவது நேர்மறையாகச் செய்யுங்கள் என்கிறார்.
தில்லியில் ஒரு இயக்கமிருக்கிறது. அவர்கள் பெரிய கலியாணங்கள் நடக்கும்போது அக்கலியாண வீட்டாரை மிச்சமான உணவு வகைகளை தூரப்போடாமல் எங்களிடம் கொடுத்துவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டு கலியாணப்பந்தி முடிந்தவிடத்தில் வந்து தங்கள் வேனை நிறுத்தி எச்சங்களை அள்ளிச்செல்வார்கள். இப்படி கலியாண சீசனின் செய்வார்கள்.
பின்னர் அவ்வெச்சங்களில் நல்ல உணவுகளைப் பொறுக்குவார்கள். அதைத் தனித்தனி அண்டாக்களில் வைத்து வேனில் குட்டரோகிகள் காலனிக்கும் மற்ற காலனிக்கும் செல்வார்கள். இவர்கள் வேனைப் பார்த்தவுடன் அவர்கள் ஓடி வருவார்கள். வயிற்றுக்குச் சாப்பாடு மட்டுமன்றி, தங்கள் இதுவரை காணாத அல்லது சுவைக்காத, அல்லது அந்த வாய்ப்பு தங்கள் கனவிலும் கிட்டாதென்று உணர்ந்த, அம்மக்கள் அன்று சாப்பிடுவார். இதைச் ஜெயின் அசோசியேசன் என்ற அமைப்பும், சீக்கிய அமைப்பும் செய்கின்றன.
இதைப்போல உங்கள் பார்ப்பன ஐடி நண்பர்களை அழைத்துக்கொண்டு ஒரு வேனை வாங்கிச் சென்னையில் செய்யுங்கள். வேனின் பெயர் பிராமணாள் கஃபே.
ஏன் ஐடி நணபர்கள் என்றேனென்றால், உங்கள் சப்போர்ட்டர்களில் ஒருவர் இங்கே, நம் ஜாதி ஐடிக்காரார்க்ள் இணைந்து ஈவெரா ஆட்களைத் தாக்குவோமென்றெழுதியிருக்கிறாரல்லவா? அவரிடமே என் ஆலோசனையைச் சொல்லுங்கள்.
சுருங்கச்சொல்லின், எதற்கும் இரு பக்கங்கள் உண்டு. பாசிட்டிவ், நெகட்டிவ். ஒருவர் சொன்னது போல பாசிட்டிவ் செய்யுங்கள் என்று நான் சொல்லமாட்டேன். பாசிட்டிவையும் செய்யப்பாருங்கள். பிராமணாள் கஃபே உண்மையில் மணக்கும் உங்களுக்கு மட்டுமல்ல. எல்லாருக்கும்.
இன்னொன்றையும் சொல்லிவிடுவது நன்று: உங்கள் ஜாதிக்கெதிராக இருவகை விமர்சகர்கள் உண்டு. 1. ஈவெராவின் ஆட்கள். 2. இன்னொன்று மற்றவர்கள்.
மற்றவர்கள் சொல்வதை சகட்டுமேனிக்குத் தள்ளாதீர்கள் என்று உங்கள் சப்போர்ட்டர்களில் ஒருவர் இங்கெழுதியிருக்கிறார். Just have a glance at that.
@குலசேகரன்:
இவ்வலைப்பூவில் வரும் கருத்துக்கள் நான் சார்ந்துள்ள இயக்கங்களின் அதிகாரப்பூர்வ கருத்துக்கள் அல்ல என்று disclaimer கொடுத்துள்ளேன். என் குருநாதர் சொல்லாத பல கருத்துக்களை அவர் சொன்னதாக பொய் சொன்னார் திக வீரமணி. அதை என்ன ஏதென்று ஆராயாமல் துறவி என்ற மரியாதை சிறிதுமின்றி திட்டினர் சிலர். ஆக, திட்டவேண்டும் என்ற முடிவுடன் வருவோர் என்ன செய்தாலும் திட்டுவர். அவர்களைப் பற்றிக் கவலைப்படுவது நேர விரயம்.
சமூக சேவை குறித்த உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி.
ஒரு குறிப்பிட்ட சாதியை காழ்ப்பு வெறுப்பு கொண்டு ஒரு கும்பல் திட்டலாம். அதைக் கண்டுகொள்ளமாட்டேன், ஆனால் பாதிக்கப்பட்டோர் எதிர்வினை ஆற்றினால் மட்டும் வந்து உபதேசிப்பேன் என்று இருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ராமசாமி நாயக்கர் சொன்னதை வைத்து அந்தண ஜாதியை மட்டும் அசிங்கமாய்த் திட்டும் கும்பலிடமும் நேர்மறை அணுகுமுறை குறித்து உங்கள் கருத்துக்களை வைப்பீர்கள் என்று நம்புகிறேன். பார்க்கலாம்.
உலகில் ஓசியில் போதுமெனும் அளவுக்கு மேலேயே கிட்டும் ஒரே விஷயம் உபதேசம் என்று அனுபவ பூர்வமாக உணர்த்தியமைக்கும் நன்றிகள்.
இன்றைய நிலையில் ஒருவருமே பிராமணன் இல்லை.
இதில் என்ன "proud to be a hindu(brahmin)" என்று ஒரு வறட்டு வீம்பு?
ராம் கணேஷ்: உங்களுக்காக மட்டும் பேசுங்கள். ஒருவருமே இல்லை என்று சொல்வதும் வரட்டு வீம்பு தான்.நீங்கள் கண்டவரை இல்லை என்றால் யாருமே இல்லையா?
சமூகத்தை வழி நடத்தும் தகுதியுடன் இருப்போரே பிராமணன். அதற்காக பல கட்டுப்பாடுகளோடு தூய்மையான வாழ்க்கை நடத்துபவருக்கே அப்படி அழைத்துக் கொள்ள தகுதி உண்டு.
இன்றைய நிலையில் நாம் அனைவருமே மற்றவருக்கு சேவகமோ அல்லது வேறு ஏதேனும் தொழிலோ செய்து கொண்டு - நாம் நம் குடும்பம் என்றுதான் வாழ்கிறோம்.
ஆகவே நமக்கு பிராமணன் என்று சொல்லிக்கொள்ள தகுதி கிடையாது.
//சமூகத்தை வழி நடத்தும் தகுதியுடன் இருப்போரே பிராமணன். அதற்காக பல கட்டுப்பாடுகளோடு தூய்மையான வாழ்க்கை நடத்துபவருக்கே அப்படி அழைத்துக் கொள்ள தகுதி உண்டு.//
ராம் கணேஷ்! உங்களுக்கு அந்தத் தகுதி இல்லை என்று சொல்லுங்கள். உங்கள் சுதந்திரம் அதுவரைதான். பிறரையும் சேர்த்துச் சொல்ல உங்களுக்கு உரிமையோ அருகதையோ இல்லை. நீங்கள் தகுதியற்றவர் என்றால் எல்லோரும் தகுதியற்றவர்களே என்று ஈவெராத்தனமாகப் பேத்தாதீர்கள்.
Men who are intellectually mediocre speak because they have the urge to say something என்பதை மெய்பிக்கிற வகையில் பேசுகிறீர்கள்.
விவாதப் பொருள் என்ன என்று படித்து தெளிந்த பிறகு பதில் சொல்லுங்கள். யார் முழுத்தகுதி மிக்க ப்ராமணன் என்ற விவாதம் இங்கே நடக்கவில்லை.
உங்களை எதிர்த்து வருண் இட்ட பதிவில் நான் இட்ட பின்னூட்டம்:
//இந்த தளத்தைக்கூட நீங்க அர்த்தமா "பிராமனாள் கஃபே"னு பேரு வச்சி இருக்கலாம். எதுக்கு இப்படி "டோண்டு" அது இதுனு தமிங்கிலிஷ்ல அர்த்தமில்லாமல்???//
நீங்கள் எனக்கு சொன்ன ஆலோசனைதானே மேலே சொன்னது?
அருண் அம்பி அதைச் செய்துள்ளார்.
உமக்கு இப்போது என்ன பிரச்சினை?
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு ஐயா! நன்றிகள் பல. சரியான பதிலடி தந்துள்ளீர்கள், வழக்கம் போல.
செருப்பில்லாமல் பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை பார்த்தால் அவர்கள் சூத்திரர் ஆக இருந்தாலும் செருப்பு வாங்கித்தருவீர்களா தோழரே ? அவ்வாறு நீங்கள் செய்வீர்கள் என்றால் இணையத்தில் நீங்கள் என்ன பெயரை வைத்துவேண்டுமானாலும் வலைப்பூ நடத்துங்கள்..
@செந்தழல் ரவி: உங்கள் கருத்துப்படி சமூக சேவை செய்துவிட்டால் போதும் என்ன பெயரிலும் வலைப்பூவோ தளமோ நடத்தலாமோ?
நிற்க. செருப்பு அணியாமல் அக்ரஹாரம் வழியே யாரும் செல்வது இல்லை. இது எந்தத் தெருக்களில் நடக்கிறது என்பது ஊரறிந்த விஷயம்.
கருணாநிதித்தனமாகப் பேசமல் தம் தெருவில் செருப்பணிந்து பிறர் நடக்கக்கூடாது என்று பேசும் சாதியினரிடம் போய் செருப்பு வாங்கித் தருவார்களா என்று கேளுங்களேன். அங்கே கேட்கத் துணிவிருந்தால் நீங்கள் எங்கும் இது போலக் கேட்கலாம்.
அதை விடுத்து கேள்வி கேட்டால் அடிக்கும்/வெட்டும் சாதியினரிடம் பொத்திக் கொண்டு இருப்பதும், ப்ராமணனைக் கண்டால மட்டும் சாதிமறுப்பு உணர்வு பொத்துக் கொண்டு வருவதுமாக நீங்கள் இருந்தால் எங்குமே கேள்வி கேட்க தார்மீக உரிமை அற்றவர்.
அம்பி அய்யரே,
ப்ராமணாள் கஃபேன்னு பேரு வச்சிண்டு சூத்ராள் திரட்டில ஏன் பதிஞ்சு வைக்கறேள்? அதுக்கும் ஒரு ப்ராமணாள் திரட்டி தேடிக்கலாமோன்னோ?
**
நிற்க. செருப்பு அணியாமல் அக்ரஹாரம் வழியே யாரும் செல்வது இல்லை. இது எந்தத் தெருக்களில் நடக்கிறது என்பது ஊரறிந்த விஷயம்.
**
ஓஹோ, அப்புறம் எதுக்கு உங்களவா எங்களுக்கும் ஒதுக்கீடு வேணும்னு குதிக்கறா?
பேர் சொல்லத் துணிவோ துப்போ இல்லாத அனானி...எந்தத் திரட்டியிலுமே சூத்திராள் திரட்டி என்று போடவில்லையே. ப்ரமணாள் பதியப்படாது என்றும் சொல்லவில்லையே. அப்படி முதலில் சொல்லட்டும். பிறகு பார்ப்போம்.
congrats ambie. nalla varuvinga
Thanks Anbazhagan :)
Thanks Anbazhagan :)
//ஓஹோ, அப்புறம் எதுக்கு உங்களவா எங்களுக்கும் ஒதுக்கீடு வேணும்னு குதிக்கறா?// செருப்பு அணிந்து தெருவில் போவதற்கும் இட ஒதுக்கிட்டுக்கும் என்னய்யா சம்பந்தம்? சம்பந்தமில்லாமல் கேள்வி கேட்கும் உங்கள் பகுத்தறிவை வியக்கிறேன். இன்னும் எத்தனை நாட்களுக்கு முட்டாளகளாகவே இருந்துகொண்டு மற்றவர்களும் அப்படியே இருக்கவேண்டும் என்று மெனக்கெடப் போகிறீர்கள்?
வோய்,
செந்தழல் கேட்டதுக்குச் சம்பந்தமில்லாம செருப்பை வைத்து வாதஞ் செய்தது நீர்.
இதுதான் நீர் கண்ட பகுத்தறிவோ?
இன்னிக்கும் செருப்பில்லாம நடக்கறவனுக்கு இட ஒதுக்கீட்ட அனுபவிக்க விடாமத் தடுக்கறது யாரு வோய்?
அய்யா பெயரில்லப்பூச்சி!
செருப்பில்லாமல் நடக்கும் பிள்ளைகளுக்குச் சூத்திரர் என்றாலும் செருப்பு வாங்கித்தந்தால் நான் எந்தப் பெயரிலும் வலைப்பூ நடத்தலாம் என்றார் செந்தழல் ரவி. அதற்கு நான் சாதி காரணமாகச் செருப்பில்லாமல் தெருவுக்குள் நடக்கும் பழக்கம் எங்கே வழக்கமாக இருக்கிறது என்று நான் கேட்டேன்.
கம்பியூட்டரும் தமிழ் சாஃப்ட்வேரும் இருக்கிறது, பொழுது போகவில்லை என்று தட்டிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு கொஞ்சம் பதிவையும் பின்னூட்டங்களையும் படித்துவிட்டுக் கருத்துப் பேசினால் என் நேரம் மிச்சமாகும்.
பெயர் சொல்லத் துணிவில்லாத தொடை நடுங்கி....
//இன்னிக்கும் செருப்பில்லாம நடக்கறவனுக்கு இட ஒதுக்கீட்ட அனுபவிக்க விடாமத் தடுக்கறது யாரு வோய்?// செருப்பில்லாமல் நடக்கிறவனுக்கு இவ்வளவு சதவிகிதம் என்று இட ஒதுக்கீடு இல்லை. கொஞ்சம் தெளிவாகப் பேசக் கற்றுக் கொள்ளவும்.
சாதி வேண்டாம் சாதி வேண்டாம் என்று சொல்பவர்கள் எல்லாம் மறைமுகமாக பிராமண ஜாதியை மட்டுமே குறி வைத்தார்கள் அப்போது. இப்போதோ நேராகவே தாக்குகிறார்கள்.
Post a Comment