ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Sunday, 4 November 2012

காதல் கசக்குதய்யா (முழுக்க முழுக்க அரசியல் பதிவு)

பரபரப்பான குற்றச்சாட்டுகளை அவ்வப்போது கூறி குற்றம் சாட்டியவரிடமே துணிவிருந்தால் என்மீது மானநஷ்ட வழக்குப் போடு என்று தெனாவட்டாய் சவால் விடுவது திரு. சுப்பிரமணிய சுவாமி மட்டுமே. சோனியா காந்தியின் கதை என்று அவர் சொன்னதை எழுதினால் முழுநீள மர்மநாவல் ஒன்று தயார். ஆனால்  தற்போது அவரது குற்றச்சாட்டுகளுக்கு வலுச் சேர்க்கும் வகையில் ரகோத்தமன் என்ற முன்னாள் ஸிபிஐ விசாரணை அதிகாரி பரபரப்பான குற்றச்சாட்டை வைத்துள்ளார்.



முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில் இவர் நேரடியாக ஈடுபட்டவர். ராஜீவ் கொலை சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான ஒளிப்பதிவு அன்றைய உளவுத்துறைத் தலைவர் எம்.கே.நாராயணன் வசம் இருந்தது. அதை விசாரிக்கிறோம் என்று அன்றைய பிரதமர் சந்திரசேகருக்கு நாராயணன் கடிதம் எழுதினார். அந்த ஒளிநாடா ஒழிந்தே போனது. முக்கியமான தடயத்தை அழித்து முழுமையான விசாரணையை முடக்கினார் நாராயணன் என்பது ரகோத்தமனின் குற்றச்சாட்டு.

நாராயணன் நாணயஸ்தராக இருந்தால் இந்நேரம் துடிதுடித்துப் போய் கடமை தவறியவன் என்ற கடுங்குற்றம் சாட்டிய ரகோத்தமனை ஆதாரங்களுடன் மறுத்து நீதிமன்றத்துக்கு இழுத்திருக்கவேண்டும். ஆனால் நாரயணனோ சிறிதும் கவலையின்றி,“ரகோத்தமன் புத்தகம் விற்பதற்காகச் சொல்கிறார். முழு விசாரணையும் தான் முடிந்துவிட்டதே.” என்று மட்டும் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

ரகோத்தமனின் குற்றச்சாட்டு மட்டுமல்ல, தம் மீதான எந்தக் குற்றச்சாட்டையும் சோனியா காந்தியும் அவர் சார்ந்த மக்களும் மிகவும் இலகுவாக எடுத்துக் கொண்டு விடுகிறார்கள். ஒன்று பதிலே அளிப்பதில்லை, அல்லது அதெல்லாம் சும்மா என்று மட்டும் சொல்லிவிட்டுப் போய் விடுகிறார்கள்.

திரு. சுப்பிரமணிய சுவாமி தம் ஜனதா கட்சி இணையதளத்தில் சோனியாவைப் பற்றி எழுதி வைத்துள்ளவை மிகவும் தீவிரமான குற்றச்சாட்டுகள். சோனியா ஐஎஸ்ஐ உதவியுடன் கேஜிபி அமைப்பால் இந்திரா குடும்பத்துக்குள் அனுப்பப்பட்ட  ஏஜண்ட் என்றும் இராஜீவுடனான காதல் இந்திரா குடும்பத்தில் கால் பதிக்க நடத்தப்பட்ட நாடகம் என்றும் சொல்லியிருக்கிறார் சுவாமி. இன்னும் யூடியூபில் வலம் வரும் காணொளிகளில் பல குற்றச்சாட்டுகளை அள்ளிவீசி துணிவிருந்தால் மானநஷ்ட வழக்குப் போடு என்று சவால் விட்டுள்ளார். ஆனால் இன்று வரை மானநஷ்ட வழக்கு என்ன ஒரு நியூசென்ஸ் கேஸ் கூட இல்லை சுவாமி மீது.

சற்றே ஊன்றி கவனித்தால் நடக்கும் விஷயங்கள் சில சுவாமியின் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் விதமாகவே இருக்கின்றன.
  1. ராஜீவ் இறந்தால் ஆதாயம் சோனியாவுக்கு (இரண்டரை மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் பல கோடிகள் பணம்). 
  2. கேஜிபி, ஐஎஸ்ஐ இரண்டும் பாரத நாட்டை அடக்கியாள எண்ணும் சக்திகள். அவற்றின் காரணம் உலகறிந்ததே. இவ்விரண்டின் கையாளாக சோனியா செயல்படுகிறார்.
இவை சுவாமியின் மிக முக்கியக் குற்றச்சாட்டுகள்.

இவற்றுக்கு வலுச் சேர்க்கும் விவகாரங்களில் சிலவற்றை இப்போது பார்ப்போம்.
  • ராஜீவ் இறந்த பின் ராஜீவ் காந்தி ஃபவுண்டேஷன் அமைப்புக்கு அரசு நிதி (மக்கள் பணம்) அள்ளி வழங்கப் படுகிறது. அதற்குத் தணிக்கை பற்றிப் பேசினால் மறுத்துத் திமிராக பதில் வருகிறது. 
  • ராஜீவ் கொலை சம்பந்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட பெரும்பாலோர்  மன்னிக்கப்படுகிறார்கள். மரண தண்டனை விதிக்கப்பட்டோர்க்குக் கருணை காட்டப்படுகிறது. ராஜீவின் மகள் அவர்களைச் சந்தித்துப் பேசிவிட்டு சிரித்த முகத்துடன் வருகிறார். என்ன சேதி என்றால் பதில் இல்லை.
  • ராஜீவ் கொலை வழக்கு விசாரணை பலவித முட்டுக்கட்டைகளுக்குப் பின் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. பிரபாகரனும் பொட்டு அம்மனும் முக்கியக் குற்றவாளிகள். அவர்களை வலைவீசித் தேடுகிறோம் என்று அறிவித்தார்கள். முக்கியக் குற்றவாளிகளைப் பிடிக்க என்ன செய்யப்பட்டது என்று மாண்டவரின் மனைவி கூட நீதிமன்றப் படியேறவில்லை. 

  • ராஜீவ் இறந்தபின் சிலகாலம் வாளாவிருந்த சோனியா அரசியலுக்கு வருகிறார். இந்திரா காந்தி காலத்தில் நடந்தது போலவே காங்கிரசுக் கட்சி அவர்களே எதிர்பாராத அபார வெற்றி பெறுகிறது. (என்ன உள்குத்து என்று விசாரிக்கவேண்டும்)
  •  ராஜீவ் கொலை சம்பந்தப்பட்ட சந்தேகத்துக்கிடமான அதிகாரிகள் முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தப் படுகிறார்கள். (எ.கா: எம்.கே நாராயணன் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்) 
  • பாகிஸ்தான் நம் மீதான பல தாக்குதல்கள் நடத்தினாலும் நம் அமைச்சர்கள் தார்மீகக் கோபம் கூட இல்லாமல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கிளம்பிவிடுகின்றனர். பாகிஸ்தான் திமிராகப் பேசுவதற்கெல்லாம் தலையாட்டிவிட்டு வருகின்றனர். 
  • அட்மிரல் கோர்ஷ்கோவ் என்ற ரஷ்யப் போர்க்கப்பலை வாங்கப் போடப்பட்ட ஒப்பந்தம் மீண்டும் மீண்டும் அதிகப் பணத்துக்கு நீட்டிக்கப்படுகிறது. ரஷ்யாவின் தாமதம் இதற்குக் காரணமாகக் காட்டப்படுகிறது. இப்படி ஒரு வணிக ஒப்பந்தம் இருந்தால் இந்நேரம் முறிக்கப்பட்டு உன் கப்பலும் வேண்டாம் உன்னோடு வியாபாரமும் வேண்டாம் என்று சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்ப்பார்கள். ஆனால் நம் அரசு பல்லாயிரம் கோடிகளை மீண்டும் மீண்டும் ரஷ்யாவிடம் கொடுத்து அவர்கள் செய்யும் தாமதத்துக்கு நாம் அபராதம் செலுத்துவது போலச் செயல்படுகிறது. ரஷ்யாவுக்கு அபராதம் விதிக்க வழியிருந்தும் ஐந்தாண்டு கால தாமதத்துக்குப் பின்னும் நாம் ஏதும் செய்யவில்லை.
இதையெல்லாம் வைத்துக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் திரு. சுப்பிரமணிய சுவாமி சொல்லும் குற்றச்சாட்டுகள் உண்மை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது.

ஆக ராஜீவ்-சோனியா காதல் முழுக்க முழுக்க அரசியல் சித்து விளையாட்டு. சோனியாவின் ஆட்சியில் பாரத தேசத்தின் மீதான காதல் கூடாச் செயலாகிறது.

ஆக காதல் கசப்பானது என்ற பொது வாதம் இவ்வாறு நியாயப் படுத்தப்படுகிறது. தேசமுத்துமாரி என்ன திருவுளம் கொண்டுள்ளாளோ தெரியவில்லை.

No comments: