ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Saturday 17 November 2012

வன்காதல் திருமணங்களால் சாதி ஒழியுமா?

சாதி ஒழிப்பு என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. மதசார்பற்ற நம் அரசு சாதிகளை ஒழிக்கவே எங்கெங்கு நோக்கிலும் சாதிகளைக் கேட்பதாகச் சொல்கிறது. காலகாலத்துக்கும் சாதியைக் கேட்டுக்கொண்டே இருந்தால் அது இருந்துகொண்டே தானே இருக்கும்? அப்புறம் எப்படி ஒழிப்பதாம்? சரி... அரசு தான் அறிவிலிகளின் கையில் சிக்கிச் சீரழிந்து போனது. சமூகநலத்தில் அக்கறை கொண்ட கல்வியாளர்கள் சிந்தனையாளர்கள் சரியான திசையில் மக்களை வழிநடத்தலாமே?


ஆகா! செய்யலாமே!! சமூக சிந்தனையாளர்களின் சற்றே வித்தியாசமாக தேசியப் பிடிப்புக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் அதிகாரத்தில் உள்ளோர்க்கு அஞ்சாமல் உருப்படியான கருத்துக்களைச் சொல்கிறார்கள். வழக்கம் போல திராவிட திராபைவாதம் அக்கருத்துக்களைத் தம் பலமான ஊடகக் கரம் கொண்டு புறந்தள்ளும் செயலும் நடந்துவருகிறது. ஆனால் சமூகச் சிந்தனையாளர்களும் சறுக்குமிடம் ஒன்று உள்ளது. கற்றோர் பலரும் தடுமாறும் தருணங்களே அவை.

 

தெளிந்த சிந்தனை இல்லாது உணார்ச்சி வசப்பட்டு முடிவுகள் எடுப்பது ஒருவகை. பிறர் உணர்சியைத் தூண்டி அதில் குளிர்காய்ந்து தான் பெரிய மனிதன் என்று பேரெடுக்க விழைவது மற்றோர் வகை. நம் நாட்டில் பெரிய தலைவர்கள் சிந்தனையாளர்கள்  என்றறியப்படும் பலரும் இரண்டாவது வகையைச் சார்ந்தோரகவே இருக்கிறார்கள். சற்றே விரிவாகப் பார்போம்.

தற்போது இணையத்தில் முகநூலில் ஒரு சாதி ஒழிப்பு விவாதம் நடக்கிறது. சாதி ஒழிப்பு குறித்து அதில் சொல்லப்பட்ட கருத்துக்கள் நடைமுறைக்கு ஒவ்வாத ஜல்லிகள். அந்த ஜல்லி ரோடு போடக்கூட லாயக்கில்லை.

தலித் இளைஞர்கள் திட்டமிட்டுப் பிற (மேல்/ஆதிக்க) சாதிப் பெண்களைத் திருமணம் செய்யவேண்டும் என்றும் இதுவரை அப்படிச் செய்யாதவர்கள் உடனே செய்யுங்கள் என்றும் ஒரு மேதாவி கருத்துப் பேசியிருக்கிறார்.  

புத்திஜீவி என்றால் சுற்றிலும் சில தஞ்சாவூர் பொம்மைகள் இருப்பர். அவர்களில் ஒருவர் சொன்ன கருத்து “தலித்கள் எவ்வளவு கடுமையாக நடந்து கொண்டாலும் அதை பொறுத்து அவர்களை மேல்நிலைக்குக் கொண்டு வர வேண்டிய கடமை மற்ற தரப்பினருக்கு உண்டு.” 

முற்றிலும் முரணான பக்கவாத்தியம் இது. தலித்கள் கீழ் நிலையில் இருக்கிறார்கள் என்றும்  அவர்களை மேலே கொணர்வது பிறர் கையில் இருப்பது போலவும் சொல்கிறார். தான் அடைய வேண்டிய இலக்கை வேறொருவானை நிர்ணயிக்க விடுபவன் இலக்கை அடைவது குதிரைக் கொம்பு.  தலித்கள் முன்னேற அவர்களே முயலவேண்டும். உதவிகள் தேவைப்பட்டால் செய்வது கடமை. கைபிடித்து வழிநடத்துவது என்பது பெருமைக்குப் பிறர் மார்தட்டிக் கொள்ள உதவுமேயன்றி தலித் மக்களுக்கு எள்முனையளவும் உதவாது.

இதுகுறித்த ஏரணம் சார் கேள்விகள் பலவற்றுக்கும் சாதி ஒழிப்பு வாதம் செய்யும் இந்தப் புத்திஜீவிக்குப் பதிலளிக்க இயவில்லை. கேட்கப்பட்ட சில கேள்விகள் இதோ:  
  • ஒரு இதயம் சாதி பார்த்து இந்த சாதி ஒரு காலத்தில் என் சாதியை ஆதிக்கம் செலுத்தியது, ஆகவே இச்சாதிப் பெண்ணை நான் மணமுடிப்பேன் என்ற முன்முடிபுடன் களமிறங்குவதைக் காதல் என்று எப்படி ஏற்பது?
  • ஏன் தலித் ஆண்கள் உயர்/ஆதிக்க சாதிப் பெண்களை வன்காதல் செய்து மணப்பதை மட்டும் ஊக்குவிக்கிறீர்கள்? தலித் பெண்கள் பிற சாதி ஆண்களை மணமுடிப்பது குறித்து ஏன் சிந்திப்பதே இல்லை?
  • ஏன் உயர்/ஆதிக்க சாதி ஆண்கள் தலித் பெண்களை மணமுடிப்பதைப் பற்றிப் பேசவில்லை. அப்படிச் செய்தால் சாதி ஒழியாதா?
  • தலித்களைக் கொண்டுவர வேண்டிய மேல்நிலை என்பது என்ன? அந்நிலை என்னென்ன விவரங்கள் கொண்டு நிர்ணயிக்கப்பட்டது
  • இத்தனை ஆண்டுகளாக சாதி மறுப்பு/சாதிக்கலப்புத் திருமணங்கள் நடந்தனவே! ஏன் சாதி ஒழியவில்லை? இந்த வகை வன்காதல் திருமணங்களால் சாதி ஒழியும் என்று என்ன உறுதி?
இது பெண்களைத் தூக்கி வந்து உன் திமிரை அடக்குகிறேன் என்ற ஆணாதிக்க மனோபாவம். உனக்குச் ஒருவனுடன் பிணக்கு என்றால் அவன் வீட்டுப் பெண்களைத் தூக்கிவா என்பது முன்காலப் போர் வழக்கம். அதைப் படித்தோர் என்று பாரிலறியப்படும் பலரும் ஆணாதிக்கம் என்று கண்டித்திருக்கிறார்கள்.

ருக்மணியைக் கிருஷ்ணன் கரம் பிடித்தானே. ருக்மணி ராஜகுமாரி, கிருஷ்ணன் மாட்டிடையன்... அவன் செய்யலாம் அதைப் பிறருக்கு உபதேசிக்கக்கூடாதா என்று கேட்டார் அந்த மேதாவி.  

ராஜகுமாரி மாட்டிடையனைக் காதலித்தாள், அவனும் ராஜகுமாரியைக் காதலித்தான். அவளது அண்ணன் இந்த இருமனமொப்பிய இக்காதலைப் பிரித்து அவளை வேறொருவனுக்கு மணமுடிக்க எண்ணினான். காதலனாகிய மாட்டிடையன் தன் காதலியாகிய ராஜகுமாரியை கரம்பற்றிக் கொண்டுபோனான். இதுவே பாகவதத்தில் வரும் கிருஷ்ண - ருக்மணி வரலாறு.

மாட்டிடையன் திட்டமிட்டு சாதியை ஒழிக்கிறேன் பேர்வழி என்று காதல் வலை வீசி ராஜம்குமாரியைத் தூக்கிக் கொண்டு போகவில்லை. சிசுபாலன் அப்படித்தான் திட்டினான் என்று சொல்லித் தோற்றவனின் பொறுமலை வரலாறாகத் திரிக்கும் வேலை இது. தான் சொன்னது சரிதான் என்று வரலாற்றைத் திரித்துக் கூறியாவது நிரூபிக்க விழையும்
ஈவெரா முத்திரை பெற்ற மூர்க்கத்தனம் தவிர வேறெதுவும் காணக் கிடைக்கவில்லை.

சரி.. இருக்கட்டும்..... அதென்ன வன்காதல். கொடுமையில் கொடியது வன்கொடுமை. அதே போல காதலில் கொடியது வன்காதல்.  அதென்ன கொடிய காதல். திட்டமிட்டு ஒரு பெண்ணைக் காதல் வலையில் வீழ்த்துவது. அதுவும் சாதி அடிப்படையில் பழிவாங்கும் நடவடிக்கை போல காதலைச் செய்வது கற்றவன் செய்யும் காரியங்களில் அடங்காது. ஆனால் புத்திஜீவிகள் என்று உலாவரும் சிலர் இதை அறிவுறுத்துகிறார்கள். காலக் கொடுமை!?

பண்பு நிறைய உடையவர்களே மேலோர். பெண்களைக் காதல் வலை விரித்துத் தூக்கிவா என்று அறிவுறுத்துவது என்ன விதமான பண்பு என்பது புரியவில்லை. அதை ஆமோதிப்பவர்கள், அதற்குப் பல கோணங்களில் விளக்கமளிப்பவர்கள் தம் வீட்டில் இப்படியொரு செயல் நடந்தால் சாதி ஒழிந்ததே என்று மகிழ்வார்களா? இல்லை என்ற முடிவுக்கே இதுவரை நிகழ்ந்துள்ள சாதி தொடர்புடைய பல நிகழ்வுகள் இட்டுச் செல்கின்றன.
தான் பேசப்படுவதற்காக எதுவும் சொல்லி, பிறகு அதை முழுதும் மறுத்தோ அல்லது திசைதிருப்பியோ தன்னை முன்னிலைப்படுத்தி விளம்பரம் தேடும் சராசரி அரசியல்வாதியின் செயல் இங்கு நடந்திருப்பது. குறிப்பிட்ட முகநூல் விவாதம் தற்போது காதல் திருமணம் மூலம் சாதி ஒழிப்பு என்ற கோணத்தில் மட்டும் அலசப்படுகிறதாம். முதலில் அறிவுறுத்திய வன்காதல் குறித்து என்ன முடிவு? அது அவ்வளவுதான்... ஓசையின்றிப் பின் வாங்கிவிட்டார் போலும்.
கூட்டத்திற் கூடிநின்று
கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்திற் கொள்ளாரடீ - கிளியே
நாளில் மறப்பாரடீ.
நிற்க.
தான் முன்னேற வேண்டும் என்ற சுயமுனைப்பு இருந்தால் மட்டுமே முன்னேற்றமோ உயர்வோ சாத்தியம். அதற்கு உதாரணம் நாடார் சமூகம். அவர்கள் முன்னேற முனைந்த காலத்தில் யாரும் எந்த விதமான இட ஒதுக்கீடும் தரவில்லை. சலுகைகள் ஏதுமின்றித் தன் முனைப்பில் முன்னேறியவர்கள் அந்தச் சமூகத்தவர்கள். இவர்களை உதாரணமாகக் கொண்டு தலித்களை முன்னேறுங்கள் என்று சொல்வது புத்திசாலித்தனம். அறிவார்ந்த சிந்தனை. உண்மையான அக்கறை.

தன் தகுதியை உயர்த்திக் கொண்டு சமூகத்தில் தனக்கான மரியாதையைப் பெறுவதே காலங்களைக் கடந்து நிலைத்திருக்கும் நற்பெயரைத் தரும். தகுதி உயர மரியாதை உயரும். பொம்பளை பொறுக்கினால் சாதி ஒழிந்து நீயும் மரியாதை பெறலாம் எனச் சொல்லும் முட்டாள்தனத்தை நம்பி  பெண்கள் பின்னால் அலைந்தால் எந்தச் சமூகமும் உருப்பட வாய்ப்பே இல்லை. 

7 comments:

Unknown said...

அட இன்னாப்பா இது படா பேஜாரா கீது! ருக்மினிய லவுட்டிக்குனு வரஸொல்ல கிஸ்னன் இன்னா ருக்மினி வூட்டாண்ட மாடு மேச்சுக்கினு இருந்த சாதாரண ஆளா, ஆ? அது இன்னாவோ வம்ஸம்னு ஸொல்வாங்களே.... இன்னா அது? ஆ... யதுகுல வம்ஸம்!

அந்த வம்ஸத்து அர்ஸன்பா கிஸ்னன்! ஒரு அர்ஸன் ஒரு இளவர்ஸிய தூக்கிகினு போய், அதுவும் ரெண்டு பார்டியும் ஒருத்தருக்கு ஒருத்தரு லவ் பண்ண ஸொல்ல, கண்ணாலம் கட்டிக்கினாரு, அவ்ளோதான் வாத்யாரே!

நீ ஸொல்றாப்போல கிஸ்னன் இன்னா சாதிய ஒயிக்கவா அத்த செஞ்சாரு? இல்ல ஆர்னாச்சும் தூண்டி வுட்டு ருக்மினிய தூக்கிக்கினு வந்தரா?

விதிவெலக்கு அல்லாத்தையும் பொதுவாக்குறது சில அறிவுசீவிங்க வேல, அ ஆங்! வுட்டு தள்ளு நைனா..... வேலைய பாப்போம்.

இன்னா வர்டா?

Arun Ambie said...

கரீட்டு வாத்யாரே... கிஸ்னரும் ராஜ பரம்பர தான். அது நம்ம இஸ்டிரி தான். இல்லாகாட்டியுமே ரெண்டு பேரு லவ்ஸ் வுட்டுக சொல்லோ அது கன் மேட்டரு.... நாயமா பஞ்சாயத்து வெக்க சொல்லோ சேத்து வெப்பாங்க.... இன்னொரு மேட்டரு கவன்சியா தல..... அந்தக் காலத்துல எல்லா சாதிக்கும் ஒரு தலீவன் இருந்துகிறான். அவன் அந்தப் பேட்டைக்கி பிஸ்தா கணக்கா இருப்பான்.... அவன் தான் மன்னன், அரசன் இப்புடி.... இவுங்க அல்லாரும் ஒரு பெரிய பிஸ்தாவுக்கு ரிப்போர்டிங்கு.. அவுரு மாமன்னன், பேரரசன். இப்டிகா ஒண்ணு மண்ணா தான் இருந்துகிறாங்கோ....இந்த செட்டப்ப காலி பண்டா நம்ம நாட்டவும் மெக்சிகோ கணக்கா கலீஜு பண்லாம்னு வெள்ள அங்கிக்காரன் ப்ளானு... உசாரா கண்டி இல்லேன்னு வையி... நீ அர்சு தமிழு இல்ல ஹேரி இங்கிலீசு, நான் அருண் பிரபு இல்ல ஆரோன் பீட்டருன்னு மாத்திருவானுங்கோ....

Arun Ambie said...

RAADHU SPEAKS has left a new comment on your post "வன்காதல் திருமணங்களால் சாதி ஒழியுமா?":

நன்று அருண் . சிறப்பான பதிவு. உங்களுக்கு ஆதிக்க சாதிக்காரன் என்று விரைவில் பட்டம் கொடுத்து விடுவார்கள் . ஜாக்கிரதை
-------------------------------------
ஏன் என்று தெரியவில்லை. இந்தப் பின்னூட்டம் திடீரென்று காணவில்லை. பிறகு மீண்டும் வெளியிட்டால் முடியவில்லை. ஆகவே இப்படி வெளியிடுகிறேன்.

nativethoughts said...

கிருஷ்ணன் மாட்டிடையன் அல்ல.. அவன் யது குலத்தை சேர்ந்தவன்.. யது குலம் சத்திரிய வம்சம்..

நந்த குலம் தான் மாட்டிடையர்கள்.. கம்சனின் கொடுமைக்கு பயந்து மாட்டிடையர்களிடம் கிருஷ்ணன் வளர்ந்தான்..

Unknown said...

சத்தியமான உண்மை. ஜாதி ஒழிய தேவையானதை தெளிந்த சிந்தனையுடன் தெரிவித்துள்ளீர். அருமை. தொடருங்கள்.

Anonymous said...

கிருஷ்ணர் பிறந்து வளர்ந்தது யது குலம் என்னும் யாதவ குலத்தில். கிருஷ்ணர் சந்திர குலத்தை சேர்ந்த க்ஷத்ரியர்

srinivasan said...

கிருஷ்ணர் பிறந்து வளர்ந்தது யது குலம் என்னும் யாதவ குலத்தில். கிருஷ்ணர் சந்திர குலத்தை சேர்ந்த க்ஷத்ரியர்