காலையில் எழுந்ததும் தலைவலியாக இருந்தது. ஹேங் ஓவரெல்லாம் இல்லை. வேலை மட்டுமே... தூக்கம் வேறு சரியில்லை. லைட்டான உணவாக சாப்பிடலாம் என்று 4 இட்லி சாப்பிட்டுவிட்டு நெட்டில் இட்லிவடையை மேய்ந்தேன். மிளகாய் பொடி சற்றே தூக்கலாக இட்லியும் காரச்சட்னியுடன் வடையும் இருந்தது. சரி காரசாரமான விஷயத்தைக் கொண்டு நூலோர் தொகுத்தவற்றுள் தலையானதைச் செய்கிறேன்.
இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல் என்று சொன்னால் நம்மில் பலருக்குப் புரியாது. 2G ஊழல் என்றால்தான் புரியும். (செம்மொழியான தமிழ்மொழியாம்) இல்லையென்றால் தகத்தகாய சூரியன் ஆவன்னா ராசா ஊழல் எனலாம். சட்டென்று புரியவேண்டும் என்றால் கனிமொழி திகார் போன ஊழல் என்றால் புரியும்.
அதில் கலைஞர் டிவிக்கு இருநூற்றுச் சொச்சம் கோடிகள் வந்த கதையும் அதன் தொடர்ச்சியாக தயாளு அம்மாள் அறிவாலயம் வந்து விசாரணையைச் சந்தித்ததும், சரத்குமார் ரெட்டி உள்ளிட்டோர் உள்ளே போனதும் சமீப காலத்திய திமுக வரலாறு. இந்த ஊழலைப் பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உட்படுத்த பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரின.
அவ்விசாரணையில் பல முட்டுக்கட்டைகள் போட்டு முக்கி முனகித் தொடர அனுமதிக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி. அப்படிக் கடும் அவதிகளுக்கிடையே தொடர்ந்துவரும் விசாரணையில்அந்த 200 கோடி எப்படி வந்து எப்படிப் போனது என்பதை மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes) படம் போட்டுக் காட்டியுள்ளது. அதில் பல கம்பெனிகள் விளம்பரத்துக்காக அட்வான்ஸ் கொடுத்தது என்று பல கோடிகள் தேறுகிறது.
CBDT on Kalaignar TV payoffs (CBDT to JPC 18 July 2012)
ஸஃபையர் மீடியா, மைண்ட் ஸ்பேஸ் ஹெச் ஆர், ஜெமினி சினிமா கம்பெனி என்று பல நிறுவனங்கள் பல லட்சங்கள் கொடுத்ததாகவும் அவை மூலம் இந்தப் பணம் அஞ்சுகம் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்குச் சென்றதாகவும், அங்கிருந்து KTV வழியாக சினியுக் நிறுவனத்துக்கு 230 கோடி திரும்பச் செலுத்தப்பட்டதாகவும் சொல்கிறது CBDT. இதில் ஜெமினி சினிமா கம்பெனி கொடுத்த பணம் மன்மதன் அம்பு திரைப்படத்தின் வசூல் உள்ளடக்கியதாம்.
உதயநிதி ஸ்டாலின் ஏன் தான் தயாரித்த படத்தை ஜெமினி நிறுவனத்துக்கு விற்றார் என்ற பழைய கேள்விக்கு இங்கே பதில் வருகிறது. பணத்தை சுற்றிவிட்டு ஓடாத படம் ஓட்டமாய் ஓடியதாகக் கூறி சில கோடிகள் கணக்குக் காட்டப்பட்டுள்ளது. விஞ்ஞான ஊழல்டா சாமி!!
இது விஷயமாக தமிழ் ஊடகங்களில் சன் குழுமமோ கலைஞர் டிவி வட்டாரமோ வாய் திறக்காது. ஜெயா டிவி ஏன் மௌனம் காக்கிறது? மற்ற ஊடகங்கள் ஏன் வாளாவிருக்கின்றன? மத்திய பாஜக ’தலை’ தப்புமா என்ற கவலையில் உள்ளது. மாநில பாஜக ஏன் பேசாதிருக்கிறது? இது குறித்து செய்திக்குறிப்பு கூட இல்லை எனும் போது ஊழல் ஊடகங்களுக்கும் பழகிவிட்டதோ என்ற ஐயம் எழுகிறது.
அரசியல், பொருளாதாரம், நிர்வாகம், சர்வதேச உறவுகள், நாட்டு நடப்பு, குறித்த என் எண்ணங்களையும், என் அனுபவங்களையும் இங்கே பதிவேன்!
Disclaimer
நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.
இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.
அன்புடன் என்றும்,
அருண்அம்பி. (@arunambie)
Saturday, 10 November 2012
மன்மதன் அம்பு படமும் 2G ஊழல் விசாரணையும்
Labels:
2G,
ஊழல்,
கலைஞர் டிவி.,
திராவிட மாயை,
நாட்டுநடப்பு,
மன்மதன் அம்பு,
விளம்பரம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment