ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Friday 19 April 2013

பிளந்து விட்டார்கள் பாரதத்தை, ஆனால், பிள‌க்க முடியுமா நம் தர்மத்தை - பாகம் 6


ஹிந்துக்களின் புனித நதியான கங்கை, ரிக் வேதத்தில் ஒரே ஒரு முறைதான் சொல்லப்பட்டுள்ளது, ஆனால் சரஸ்வதி நதியோ குறைந்தது 60 முறை சொல்லப்பட்டுள்ளது. கிறிஸ்துவ மத வியாபாரிகள் இந்த நதியின் குறிப்பை ஏதோ கற்பனை என்று நினைத்தார்கள். இல்லை எங்கோ மத்திய ஆசியாவில் இந்த நதி இவர்களின் கற்பனை ஆரிய படையெடுப்பு சித்தாந்தப்படி ஓடிக் கொண்டிருக்கும் என்று நினைத்தார்கள்.



ஆனால், இப்பொழுது வரண்டு காணப்படும் இந்த நதி, ஹிமாலயத்திலிருந்து புறப்பட்டு, ராஜஸ்தானிய பாலைவணங்கள் வழியாக கடலுக்கு சென்று உள்ளது. டாக்டர் "வாகான்கர்" எனும் ஆராய்சியாளர் சரஸ்வதி நதி கி.மு. 1900 வருடத்தில், அது வரண்டு போவதற்கு முன், தன் வழியை நான்கு முறை மாற்றியுள்ளதை ஊர்ஜிதப்படுத்தியுள்ளார். செயற்கை கோள்கள் உதவியோடு செய்யப்பட்ட அகழ்வாராய்சிகள். ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சரஸ்வதி நதி, கி.மு. 3000 ஆண்டுகளிலேயே தன் நிலையான ஓட்டத்தன்மையை இழந்து விட்டதை காட்டியுள்ளது.



பாரீசை சேர்ந்த "பால் ஹென்றி ஃப்ரான்க்ஃபோர்ட்" எனும் அறிஞர் கூறுகிறார்.
"ஹரப்பா நாகரீகத்தை சேர்ந்த மக்கள் இங்கு இருக்கையில் மிகப்பெரும் நதி ஒன்று பல காலமாக ஒடிக் கொண்டிருந்ததை கண்டுப்பிடித்ததற்கு இந்தோ-ப்ரெண்சு கூட்டு ஆய்வுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்" என்று.

செயற்கை கோள்கள் சரித்திரத்திற்கு முந்தைய ஒரு நதி ஏழு கிலோமீட்டர் அகலத்திற்கு ஓடிக் கொண்டிருந்ததை ஊர்ஜிதப் படுத்துகிறது. அதுதான் ரிக் வேதத்தில் சொல்லப்பட்ட சரஸ்வதி நதி. இந்த வறண்ட நதியின் கரை ஓரங்களில் பல புராதான சின்னங்களும், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருந்தபடி கிடைத்தன. இமயமலையில் இருந்து புறப்பட்டு ஓடிய அந்த நதியின் காலத்தை "கி.மு. 3000 த்திற்கு முன்" என்று கணக்கிட்டு உள்ளனர். இதிலிருந்து ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வட இந்திய பகுதிகள் கி.மு 3000 க்கு முந்தியவை என்றும் ரிக் வேதம் கி.மு. 3500 க்கு முந்தையது என்பதையும் இது ஊர்ஜிதப்படுத்துகிறது.

இத்தனை ஆதாரத்தோடு கூடிய இந்த சரஸ்வதி நதி, ஆரியர்களுக்கு நன்கு பரிச்சயமான, அவர்களின் வாழ்க்கையில் இரண்டர கலந்திருந்தது என்பது உண்மையாகிறது. ஆக வேதங்கள், சரஸ்வதி நதியை அழியும் நதி என்று குறிப்பிட்டுள்ள மஹாபாரதத்தை விட மிகப் பழமையானது என்பதும், இதில் இருந்து தெரிகிறது.

இந்திய துனைக்கண்டத்தில் பல இனங்கள் இருந்து வந்தன என்பது அனைவருக்கும் தெரியும். மஹாபாரதத்திலேயே, பல இனங்களை குறித்து எழுதப்பட்டுள்ளது. அதில் வெள்ளைக்கார மத வியாபாரிகள், ஆரியம் திராவிடம் என்ற இரண்டை மட்டும் பொறுக்கி எடுத்து நம்முள் எப்படிப்பட்ட விஷத்தை விதைத்து விட்டு சென்றுள்ளார்கள் பாருங்கள்.

நண்பர்களே, ஆதாரத்தோடும், விளக்கங்களோடும் இந்த கட்டுரையை எழுதியுள்ளோம். இந்த கட்டுரை ஆரிய படையெடுப்பு எனும் புரட்டு சித்தாந்ததை பற்றி ஒரு நிஜமான கேள்விகளோடும் ஐயங்களோடும் இருப்பவர்களுக்கு மட்டுமே. ஆரிய-திராவிட பிரிவினையை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கும், மதம் மாற்றுபவர்களுக்கும் அல்ல. ஏனென்றால் அவர்கள் பேசுவது பிழைப்புக்காக, அவர்கள் பிழைப்பில் நாம் ஏன் மண் அள்ளி போட வேண்டும் ?

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு !!

இதைப் படித்த அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றிகள். முடிந்தவரை இதை அனைவருக்கும் சொல்லுங்கள். பகிருங்கள். கடைசியாக, சத்தியத்தை பற்றிய ரிக் வேதத்தின் ஒரு கூற்று உங்களுக்காக.

सा मा सत्योक्तिः परि पातु विश्वतो द्यावा च यत्र ततनन्नहानि च ।
विश्वमन्यन्नि विशते यदेजति विश्वाहापो विश्वाहोदेति सूर्यः ॥ १०.०३७.०२ ॥

எதனால் சுவர்கமும் பூமியும் ஆளப்படுகிறதோ, எதனால் இரவும் பகலும் நீள்கிறதோ, எதனால் படைப்புகள் அனைத்தும் தாங்கப்படுகிறதோ, எதனால் தண்ணீர் ஓடுகிறதோ, எதனால் சூரியன் உதையமாகிறதோ அந்த எங்கும் நிறைந்த சத்தியம் என்னை காப்பாற்றட்டும் 10.037.02:

No comments: