அரசியல், பொருளாதாரம், நிர்வாகம், சர்வதேச உறவுகள், நாட்டு நடப்பு, குறித்த என் எண்ணங்களையும், என் அனுபவங்களையும் இங்கே பதிவேன்!
Disclaimer
நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.
இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.
அன்புடன் என்றும்,
அருண்அம்பி. (@arunambie)
Monday 15 April 2013
பிளந்து விட்டார்கள் பாரதத்தை, ஆனால், பிளக்க முடியுமா நம் தர்மத்தை பாகம் 5
நண்பர்களே, இது மிக முக்கியமான பகுதி அனைவருக்கும் பகிருங்கள்.
அடுத்து இந்த மதவியாபாரிகள் சொன்ன முக்கிய விடயம் என்னவென்றால் ஆரியர்கள் இரும்பை கையாளும் நுட்பத்தை தெரிந்து வைத்திருந்தார்கள், அதனால் அவர்களால் திராவிடர்களை வெல்ல முடிந்தது எனும் கூற்று. வேதத்தில் ஆயுதங்களை "அயாஸ்" என்று குறிப்பிடுவதை இவர்கள் இரும்பு என மொழிமாற்றம் செய்தார்கள். மற்றுமொறு காரணம் இந்து சமவெளி நாகரீகத்தில் இரும்பின் உபயோகம் கண்டுப் பிடிக்காதது தான்.
ஆனால் மற்ற இந்தோ-ஐரோப்பிய மொழிகளில், "அயாஸ்" என்பது செம்பு மற்றும் வெங்கலத்தை குறிக்கிறது. பின்னர் அயாஸ் எனப்படும் உலோகம் தங்கத்தை தவிர மற்ற உலோகங்களை குறிப்பிடும் ஒரு பொதுவான பெயர் என்று மொழி ஆய்வாளர்களால் அறியப்பட்டது. மேலும் எந்த தசயுக்களை இவர்கள் திராவிடர்களாக சித்தரித்து எழுதினார்களோ, அந்த தசயுக்களும் அயாஸ் எனப்படும் உலோகத்தை உபயோகித்த குறிப்புக்கள் வேதங்களில் நிறைய உள்ளது. ஆகையால் இந்து இரும்பை வைத்து ஆரியன் எனும் இனம் திராவிடத்தை வென்றது எனும் கூற்றும் தவிடு பொடியானது.
அடுத்து மதவியாபாரிகள் கட்டவிழ்த்து விட்ட பொய் என்னவென்றால் வேள்விகளை குறித்தது. ஆரியர்களே வேள்விகளை செய்யும் வழக்கம் உடையவர்கள் என்றும் ஹராப்பா நாகரீகத்தை சேர்ந்த திராவிடம் என்னும் இனத்திற்கு அது பழக்கமில்லை என்றார்கள். ஆனால் ஹரப்பாவில் வேள்விகள் செய்யப்பட்டதற்கான பல ஆதாரங்கள் பிற்காலத்தில் கிடைக்க தொடங்கின. "பி.பி லால்" என்பவரால் இந்திய அகழ்வாய்வு துறை, கலிபங்கன் எனும் இடத்தில் முதன் முதலாய் இவற்றை ஆதார பூர்வமாக கண்டு பிடித்தது. ஆரிய பழக்கங்கள் என்றும் திராவிட பழக்கங்கள் என்று எப்படி வெள்ளைய மத வியாபாரிகள் நம்மை பிரித்து போட்டுள்ளனர் என்பதை இந்த கண்டுப் பிடிப்புகள் நிரூபித்தன.
மற்றுமொரு முக்கிய விடயம் என்ன வென்றால் வேதங்களில் வெளி நாட்டில் இருந்து, இந்தியாவுக்கு படையெடுத்து வந்ததையோ, ஆண்டதையோ குறித்து எந்த குறிப்பும் இல்லை. வேத காலத்தில் ஏழு நதிகளை கொண்ட பகுதியை (சப்த சிந்து) குறித்தே அதிகம் கவனம் செலுத்தினர். புராணங்களோ, வெளி நாடுகளுக்கு புலம் பெயர்ந்த மக்களை பற்றியும், மத்திய கிழக்கு நாடுகளில் சமஸ்கிருத பெயர்கள் உடைய இந்திய அரசர்கள் செய்த ஒப்பந்தங்கள் குறித்துமே குறிப்பிடுகிறது. ஆனால் இதை வெள்ளைய மதவியாபாரிகள், ஆரியர்கள் அங்கிருந்து வந்ததாய் திரித்து விட்டு விட்டனர்.
கிறிஸ்துவ மதவியாபாரிகள் இந்து சமவெளியை திராவிடம் எனும் இனமே ஆண்டு வந்தனர் என்று சொன்னார்கள். அப்படி ஆரியர்கள் படையெடுத்து திராவிடர்களை விரட்டி இருந்தால், ஏன் சமய ரீதியாக ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் வித்தியாசம் இல்லை ? அவர்களின் புனித நூல்களில் ஏன் இதை பற்றி குறிப்பிடப்படவில்லை ? அவர்களின் சரித்திர ரீதியான பழக்க வழக்கங்களில் ஏன் மாற்றமில்லை ? வடக்கிற்கு, தெற்கிற்கும் ஏன் எந்த பிணக்கமும் இல்லை ? வெள்ளையனின் வருகைக்கு முன் அவர்கள் இருவரும் அமைதியாகத்தானே இருந்தார்கள் ? மொழி ரீதியான போர்கள் ஒன்றையாவது குறிப்பிட முடியுமா ? அப்படி இருந்திருந்தால் இந்த திராவிட மலங்கள் அவற்றை கிண்டி கிளறி பெரிது படுத்தி இருக்குமே ? மிகப்பெரும் ஆசார்யர்களான ஆதிசங்கரர், ஸ்ரீமத் இராமானுஜர், மத்வாச்சாரியார், வல்லபர், நிம்பகர் என எல்லோருமே தெற்கில் இருந்து வந்துதானே வடக்கில் மிகவும் மரியாதையாக வணங்கப் படுகிறார்கள். இவர்களை ஹிந்து மதத்தின் பிற்கால ஆதாரம் என்றே சொல்லலாமே ? தெற்கிலிருந்து ஆதி காலத்திலேயே போதாயன மகரஷியும், ஆபஸ்தம்பர் எனும் தர்ம சூத்திரங்களுக்கு ஆதாரத்தை தந்தவரும் தெற்கிலிருந்து வந்தவர்கள் ஆயிற்றே. கைலாயத்தில் இருந்து தமிழை கொண்டு வந்ததாக குறிப்பிடப்படும் அகஸ்திய மகரிஷியோ வடக்கிலிருந்து தெற்கிற்கு வந்தவர் ஆயிற்றே ? வடக்கில் இருந்து திராவிடம் எனும் இனம் விரட்டி அடிக்கப்பட்டது என்று ஒருசிறு குறிப்பு கூட எங்கும் இல்லையே ? என்ன சூழ்ச்சியடா இது ? எதை வைத்தடா நாடகம் போடுகிறீர்கள் ? வெள்ளையன் போட்டு சென்ற மலத்தை இன்னும் எத்தனை நாளைக்குதான் தின்று கொண்டிருப்பீர்கள், திராவிட மலத் தமிழர்களே ?
படையெடுப்பை பற்றி எழுதியவர்கள் இந்து சமவெளியில் சிவனையே வழிப்பட்டார்கள் எனக் குறிப்பிட்டு அது திராவிடர்களாக தான் இருக்கும் என்றார்கள். ஆனால் வேத கலாச்சாரத்திற்கோ, சிவன் என்பது அந்நியமானதல்ல. அது தெற்கிற்கு மட்டுமே உரித்தானதல்ல (தெண்ணாடு உடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி) சிவன் என்கிற வார்த்தையே, சமஸ்க்ருத வேர் சொல்களான "சி" எனும் மங்களகமான, அருள்நிறைந்த, உதவக் கூடிய என்கிற பொருள் கொண்டது. அதோடு மட்டும் இல்லாமல் சைவர்களின் மிக புனித நகரங்களான பரமசிவன் உறையும் கைலாய மலையும், காசி விஸ்வநாதர் ஆலயமும் வடக்கில்தான் உள்ளது. ரிக் வேதம் சிவனுக்கும், மற்றொரு பெயரான ருத்ரனுக்கும் மிக முக்கிய இடத்தை தந்துள்ளது.
ஆக சிவன் தெற்கில் உள்ள திராவிடர்கள் என்று சொல்லப்படுகிறவர்களின் கடவுள் மட்டுமே அல்ல. அவர் வேதங்களில் குறிப்பட படாதவரும் அல்ல. எப்படி பார்த்தாலும் பிரிக்க முடியாத இறைவனாகவே பரமசிவன் இருக்கிறார்.
ஆங்கிலேய மதவியாபாரிகள் பிரிக்க வேண்டும் எனும் சூழ்ச்சியை இலக்காக வைத்துக் கொண்டு அதற்கு ஏற்ப எதை எப்படி திரித்துக் கொடுத்தால் அதை ஆதாரத்தோடு சொல்வது போல் செய்யலாம் என்று திட்டமிட்டு செய்துள்ளனர். ஆனால் ஆயிரக்கணக்கான வருடமாய் அனைத்தையும் கடந்து, அனைத்தையும் உடைத்து, பெரு வெள்ளமாய் ஓடிக் கொண்டிருக்கிறதே தர்மம், அதை அடக்கத்தான் முடியுமா ?
இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல் ஆரிய படையெடுப்பு சித்தாந்தத்தை, சவப்பெட்டியில் வைத்து கிறிஸ்துவ மதவியாபாரிகளுக்கே திருப்பி தரும் வகையில், பலம் பொருந்திய கடைசி ஆணியாக சரஸ்வதி நதியின் இருப்பை பற்றிய ஆதாரங்கள் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் நமக்கு கிடைத்தது.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
no matter how much we explain, these cretins will repeat the same song.. you can fight reason with reason.. but not these dravidian regurgitators..
Post a Comment