ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Sunday 7 April 2013

பிளந்து விட்டார்கள் பாரதத்தை, ஆனால், பிள‌க்க முடியுமா நம் தர்மத்தை ? பாகம் 2

ஆங்கிலத்தில் "வல்லவனே நல்லவன்" என்று ஒரு பழமொழியுண்டு. அது சரித்திரத்தை பொறுத்தவரை உண்மை. எவன் வல்லவனோ அவனே சரித்திரத்தை தீர்மானிக்கின்றான். அதாவது சரித்திரத்தை தன்னை ஆராதிக்கும் வகையில் மாற்றி எழுதுகிறான். மனித வாழ்வில் இப்படித்தான் பல சரித்திரங்கள் புரட்டி போடப் போடுகின்றன. பொருள் சார்ந்த இன்றைய உலகில் சரித்திரத்தை படிக்கும் ஆர்வம் கொண்டவர்கள் குறைகின்றனர். எந்த நாடு தன் சரித்திரத்தை காக்கிறதோ, எந்த நாட்டு மக்கள் சரித்திரத்தை மறக்காமல் அதன் பாடங்களை மனதில் பதிந்துக் கொள்கிறார்களோ. அவர்களுக்கு அழிவே இல்லை. அத்தகைய மக்கள் சாம்பலில் இருந்து உயிர்தெழும் பிணிக்ஸ் பறவைகளாய் மீண்டும் மீண்டும் உயிர்த்து எழுவார்கள். யூதர்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணம். தங்கள் சரித்திரத்தை மறந்து தரம் குறைந்து திரிபவர்கள் முன்னேறுவது கடிணம். இந்தியர்கள் அதற்கு நல்ல உதாரணம். அதனால்தான் இத்தனை வளங்கள் இருந்தும் இந்த நாடு தன்னுடைய சக்திக்கு ஏற்ப இன்னும் வளர்ச்சி பெறவில்லை.சரி, இந்த ஆரிய படையெடுப்பு எனும் விஷத்தை, வெள்ளையர்கள் உருவாக்கியதை விவரிக்கும் முன் ரோமானியர்களின் காட்டு தனக்களை தங்கள் குருதியில் கொண்ட ஐரோப்பியர்களை குறித்து எழுதியாக வேண்டும்.

ரோமானிய பேரரசு உடைந்து, சிதைந்து போனாலும் அதன் அடிப்படை பழக்கங்களான அப்பாவிகளை அடிமையாக்குவதும், அடிமைகளை விவரிக்க முடியாத சித்ரவதைக்கு உள்ளாக்குவதும், அவர்களை ஒரு பொருளாய் பாவிப்பதும், போர் செய்து ஒரு தேசத்தை கைப்பற்றாமல் நயவஞ்சக முறையிலும், கீழ்தரமான மதத் தினிப்புகளாலும் அதை செய்வதையும் அடிப்படையாக கொண்டிருந்தார்கள். இதற்கு ஒரு அருமையான உதாரணம் "கிறிஸ்டபர் கொலம்பஸ்" எனும் நயவஞ்சக கொலைப்பாதக அயோக்கியன். ஆம் இன்று வரலாற்றில் நாம் அமேரிக்காவை கண்டுப் பிடித்தவன் என்று ஆராதிக்கிறோமே அவன் தான்.

இந்த கொலம்பஸ் என்கிற கேடுகெட்டவன், ஸ்பானிய ராணி "இஸபெல்லா" என்பவள் தந்த நிதியைக் கொண்டு இந்தியாவை தேடி பயனித்து வழி தெரியாமல் கரிபீய தீவுகளை அடைகிறான். (ஏதோ அந்த வகையில் பாரதம் தப்பித்தது) அவன் சென்று அடைந்ததோ சூது வாது தெரியாத அப்பாவி மக்கள் வாழும் ஒரு இடம். (இதே கொலைம்பஸ் மிகப்பெரும் வீரர்களான மாயர்கள் அல்லது ஐரொகோயிஸ்கள் வாழும் இடங்களில் முதல் முதலாய் கால் வைத்திருந்தால் கதையே வேறு) இந்த கொலைம்பஸ் அந்த தீவுக்குள் மிக ஜாக்கிரதையாய் செல்கையில் அங்கு உள்ள மக்கள் ஓடி வந்து அவனை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். அவனை வரவேற்கிறார்கள். தங்களுடைய சரித்திரமே இந்த கொலை பாதகர்களால் அழிய போகிறது என்று தெரியாமல் அவனுக்கும் அவன் கூட்டத்திற்கும் உதவுகிறார்கள், விருந்தோம்பல் செய்கிறார்கள்.

கொடுங்கோலன் கொலைம்பஸ்ஸோ, தன் நாட்டுக்கு தகவல் அனுப்புகிறான். "புனித ட்ரினிட்டியின் (பிதா, சுதன், பரிசுத்த ஆவி) பெயரால் இங்கே நமக்கு நிறைய அடிமைகளும், அருமையான மரங்களும் கிடைத்துள்ளன‌, இங்கு இருப்ப‌வர்கள் ஒன்றும் தெரியாத முட்டாள்கள், எளிதாக நாம் இவர்களை பிடித்து விடலாம்" என்று எழுதுகிறான். இதற்கு பின்னர் அத்தீவில் உள்ள 500க்கும் மேற்பட்ட மக்களை பிடித்து மூன்று கப்பல்களில் அவர்களை மிக மிக நெருக்கமாக அடைத்து ஐரோப்பாவின் அடிமை சந்தைக்கு விற்பதற்காக அனுப்புகிறான். துரதிஷ்ட வசமாக அக்கப்பலில் வந்தவர்களில் 300 பேர் உயிரோடு ஐரோப்பாவில் தரை இறக்கப்படுகிறார்கள். அதிர்ஷ்ட வசமாக நெரிசலில் மிஞ்சியவர்கள் இறக்கிறார்கள். இப்படி கொடுங்கோலன் கொலைம்பஸ்ஸால் தொடங்கப்பட்ட இந்த அடிமை வியாபாரம் பல்கி பெருகி, வடக்கு மற்றும் தெற்கு அமேரிக்க கண்டத்தையும் அதன் சுற்றி உள்ள தீவுகளையும் விழுங்கியது. அது விழுங்கி முடித்ததும் கிறிஸ்துவ பிரச்சார குழுக்கள் விழுங்கிய நாட்டை நோக்கி சென்று, யேசுவின் "அனைவரையும் அன்பு செய்" எனும் தத்துவத்தை பரப்ப கிளம்புவார்கள்.

இதை எதற்கு எழுதினேன் என்றால், ஐரோப்பியர்களின் சரித்திரம் தெரிந்தால் தான் அவர்களின் தன்மை நமக்கு புரியும்.
இப்படிப்பட்ட நல்லவர்கள்தான் நம் சரித்திரத்தை எழுதினார்கள் என்றால் அது எப்படி இருக்கும் ? இவர்கள் எதிலுமே திட்டமிட்ட சூழ்ச்சியை மையமாக கொண்டு மக்களை பிரித்து, தாழ்த்தி தங்கள் இனத்தை மட்டுமே வளர்த்தி கொள்வதில் ஈடு இனையற்றவர்கள். ஒற்றுமையாய் வாழும் ஒரு தேசத்தை சுக்கு நூறாக ஆக்குவதில் வல்லவர்கள். இந்த சூழ்ச்சிக்காரர்கள், இந்தியர்களை எப்படி பிரிப்பது என யோசித்து ஒரு கதையை உருவாக்கினார்கள். எங்கோ மத்திய ஆசியாவிலிருந்து சில மக்கள் கிளம்பி வந்து ஹிமாலய மலையின் கைபர் கணவாய் வழியாக இந்தியாவை அடைந்து அங்கு வாழ்ந்துக் கொண்டிருந்த திராவிடர்கள் எனும் இனத்தை அழித்து, அவர்களை தெற்கு நோக்கி ஓட வைத்து ஆளுமை செலுத்தியதாக ஒரு கோட்பாடை உருவாக்கினார்கள். முதலாம் பாகத்தில் நான் குறிப்பிட்டிருந்தது போல் ஒரு மனிதனுக்கு வேர்கள் மிக முக்கியம். தன்னுடைய சரித்திரத்தையும், முன்னோர்களையும் மதிக்கும் ஒரு கூட்டத்தையோ, நாட்டையோ யாராலும் வெல்ல முடியாது, அப்படி வென்றாலும் மீண்டும் அவர்கள் எழுந்து வருவார்கள். அதனால்தான் வெள்ளையன் இந்தியாவின் சரித்திரத்தை மாற்றி போட்டான்.

இப்படி மாற்றிய சரித்திரத்திற்கு உரமிட வேண்டுமே ? சில ஆய்வுகளையும், பொய் கதைகளையும் அதற்கு ஆதாரமாக தயாரித்தான். நாம் யார் என்று நமக்கே ஒரு போலியான எண்ணத்தை தோற்றுவித்தான். சரி எதுவாயினும் அதை நம் அறிவு கொண்டு உரசி பார்ப்பது அல்லவா உயர்ந்தது ? ஒருவேளை அவன் நல்ல எண்ணத்தோடு நமக்கு உதவி செய்ய எழுதியருந்தால் என்று சில அந்நிய அடிமைகள் கேட்கக் கூடும் அல்லவா ?

"தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும், ஆனால் மீண்டும் தர்மம் வெல்லும்" என்பது கீதையின் சத்திய வாக்கு. சுதந்திர இந்தியாவில் இதை குறித்த ஆய்வுகள் நடந்தன. விஞ்ஞானம் மேலும் வளர்ச்சி அடைந்த‌தாலும், நம் அறிஞர்கள், அகழ்வாரய்ச்சி துறையினர், மற்றும் சரித்திர ஆய்வாளர்களின் பெரும் முயற்சியாலும், இந்த ஆரிய சித்தாந்தமே தவிடு பொடியாக்கப் பட்டது. அதைப் பற்றி விரிவாக மூன்றாம் பகுதியில் பார்ப்போம்.

No comments: