ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Friday, 4 January 2013

வேதிக்காயடிப்பு வேலைக்கு ஆகாது

நாட்டில் தினவெடுத்த தடியர்கள் மிகவும் அதிகமாகியுள்ளனரோ என்று ஐயப்பாடு எழுந்துள்ளது. இல்லை பலருக்கும் தினவு அதிகமாகிவிட்டது என்பதாக அரசு எந்திரம் நினைக்கிறது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துவிட்டன என்கிறார்கள். கிராமங்களில் பேசும் போது ”இதெல்லாம் முந்திக்காலத்தில இல்லாததா. நம்ம புள்ளைகள நாம பாத்துக்கிட்டோம். தடிப்பசங்க பொத்திகிட்டு போனாய்ங்க. இப்ப அது இல்லை” என்கின்றனர்.


சுதந்திரம், உரிமை அது இதுன்னு பேசி புள்ளைங்க போயிருதுங்க. ஒரு சம்பவம் நடந்தா முந்தி எல்லாம் சத்தமில்லாம ஊருக்குள்ள பேசி பயபுள்ளய தண்டிப்பாக. இல்ல போலீசுல சொல்லி சத்தமில்லாம லாடங்கட்டி அனுப்புவாக. ஒரு பயம் இருந்துச்சு. பொம்பள புள்ளைகளுக்கும் பாதுகாப்பு இருந்துச்சு. இப்ப டிவி, பேப்பருன்னு போட்டு தீட்டிப்புடுரானுக. பேட்டி வேற கேக்கான் பொழப்பத்த கூமுட்டை”, என்று வேதனைப் பட்டார் ஒரு முன்னாள் ராணுவ வீரர்.


இவர் வயதுக்கு வந்த இரு பேத்திகளுடன் ஊரில் இருக்கிறார். மகன் ராஜஸ்தான் எல்லையில் பாதுக்காப்புக்கு பொறுப்பான ராணுவ வீரர். ”இனி கைவெச்சா காயடிச்சுருவாங்களாமே அரசாங்கத்துல?” என்று கேட்ட போது “ போக்கத்த பசங்க, அதெல்லாம் சரிப்படாது. அடிக்கிற அடில பொம்பள புள்ளகிட்ட பேசக்கூட பயபுள்ள பயப்படணும். இவனுகளுக்கென்ன மனித உரிமை ம*ரு உரிமை?” என்றார்  அந்த ஓய்வு பெற்ற சுபேதார்.

சரி. நாம கொலைகாரப் பாவிகளுக்கும் சிறையில் சிக்கன் வழங்கிப் பூரிக்கும் திராவிடப் பாரம்பரிய ஆட்சியில் இருந்த வரலாற்றுப் பெருமையை எண்ணிப் பூரித்த படி அவரிடம் விடை பெற்றேன். “ திருடன் திருடனுக்குத் தானேலே தொணை போவான்” என்பது அவர் கருத்து. குட்டைகளில் ஊறிய மட்டைகளைத் தரம் பிரித்து சற்றே நல்ல மட்டையை ஆளச் செய்யும் நம் நிலையை எண்ணி வருந்துவது தவிர வேறெதை  இப்போதைக்குச் செய்ய முடியும்?

மஹாராஷ்டிர காங்கிரசுத் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் நிருபம் தொலைக்காட்சிகளில் நடித்த பாஜக பேச்சாளர் ஸ்ம்ருதி இரானியை “காசுக்கு ஆடுபவள்” என்று பேசினார். (ஸ்மிருதி இரானி தொலைக்காட்சிகளில் ஆடைக்குறைப்புச் செய்தவர் அல்ல. கௌரவமான வேடங்களில் வந்தவர்.) இதைப் பெரிதாக எந்தத் தொலைக்காட்சியும் பேசவில்லை. ஆனால் பெண்கள் கண்ணியமான ஆடை அணிவது வேண்டும் என்று சொன்னார் ஒரு பாஜக மந்திரி. கண்ணியத்தை வரையறை செய்ய நீ யார? பெண் சுதந்திரத்தைப் பறிக்கும் ஆணாதிக்க வெறியர் என்றெல்லாம் கூப்பாடு போடுகின்றனர்.  


பெண்கள் ஆடைக்குறைப்பு செய்வதும் பல சமயங்களில் பாலியல் கொடுமைகளுக்குத் தூண்டுதலாக அமைகிறது. அதெப்படிச் சொல்லலாம் என்று பெண்ணியவாதிகள் குதிக்கலாம். குதிக்கட்டும் கவலையில்லை. போகப் பொருளாகச் சித்தரிக்கப்பட்ட குஷ்பு அரசியலுக்கு வந்தபின் திமுகவில் சேர்ந்து கட்சிப் போராட்டங்களில் பங்கெடுத்து ஸ்டாலினுக்கு முன் இருப்பவரிடம் பாராட்டுப் பெற்றார். ஆனால், அவர் கட்சிக் கூட்டத்தில் வரிசையில் நின்ற போது கட்சிக்காரர்களே இடுப்பைக் கிள்ளினர் என்று புகார் வந்தது. 

கிரண்பேடி என்ற முன்னாள் போலீஸ் அதிகாரி அரசியலுக்கு வந்தார். போராட்டங்களில் பங்கெடுத்தார். பிரச்சினை ஏதுமில்லை. அவிழ்த்துக்காட்டி ஆடுதான் பெண்ணுரிமை என்றால் ஏற்புடையது அல்ல. நம்மை நாம் எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே நமக்கான சமூக மரியாதை இருக்கும். போகப் பொருள் போலச் சுற்றுவேன் ஆனால் போகப் பொருளாகப் பார்ப்பது தவறு என்பது சமூகத்துக்கு ஒவ்வாத வாதம்.

சரி, குழந்தைகளைக் கூட விட்டுவைப்பதில்லையே சில மிருகங்கள். அவற்றை அடித்து ஒடுக்க வேண்டும். மிருகங்களுக்கு என்ன மனித உரிமை?

தில்லி முதல் திசையன்விளை வரை (காஷ்மீர் கன்யாகுமரி என்றே எத்தனை நாள் சொல்வது) பாலியல் வன்முறை பல இடங்களில் நடக்கிறது. தில்லியில் நடந்த கொடுமை மிகவும் கொடிது. அந்தப் பெண் உயிருடனிருந்தால் பிரச்சினை என்று கொடூரமாகக் கொன்றிருக்கிறார்கள். இருப்புக் கம்பியை பெண்ணுறுப்பில் செலுத்திக் கொல்ல முயன்றதாகவும் அந்த முயற்சியில் அவள் தப்பினாள். ஆனால் உயிர் பிழைப்பது கடினம் என்பதால் அரசு எந்திரம் சொல்லி சிங்கப்பூர் அனுப்பி மரணத்தை அங்கே இடமாற்றம் செய்ததாகவும் செய்திகள் உலவுகின்றன.

பாலியல் வன் கொடுமைக்குத் தீர்வாக காயடிப்பது என்று பரவலாக அறியப்படும் செயல் தண்டனையாகத் தரப்படுவது குறித்து அரசு பரிசீலிக்கிறதாம். சரி விரைகளை நீக்கிவிடுவார்கள் அதன் பிறகு அவன் அவன் என்ற நிலையில் இருக்கமாட்டான் என்று பார்த்தால் இல்லையாம். மனித உரிமைகள் காரணமாக கொடுமைப் படுத்தாத முறையில் தண்டிப்போம் என்கிறார்கள். எப்படி? வேதிப்பொருட்கள் மருந்துகள் மூலம் குற்றவாளிகளைக் காயடிப்பார்களாம்.



இது வேலைக்கு ஆகாத விஷயம் என்பது மருத்துவ ரீதியான கருத்தாகவும் இருக்கிறது. வேதி முறையில் ஆண்மை நீக்கம் என்பது நடைமுறை சாத்தியமற்றது. உலகளவில் தரப்படும் இத்தகைய தண்டனை முறைகளில் சிப்ரோடெரோன் அசிடேட் (cyproterone acetate) மற்றும் டிபோ ப்ரொவெரா (depo provera) ஆகிய மருந்துகள் பயன்படுத்தப் படுகின்றன. இவை குற்றவாளிகளை முழுதும் ஆண்மையற்றவர்களாக ஆக்கிவிடாது.  சில காலம் பாலியல் உணர்வுகளை மந்தமாக்கும்.

இது ஒருமுறை உட்செலுத்தி முடிக்கும் விஷயமும் அல்ல. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குற்றவாளிகளுக்கு இந்த மருந்து தரப்பட்டால் மட்டுமே அவர்கள் ’கட்டுப்பாட்டில்’ இருப்பார்களாம். அரசு எந்திரம் இதைச் சரியாகச் செய்யுமா? சிலருக்கு இந்த மருந்துகளால் பெண்மைத் தன்மை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளதாம். உடல்பருமன் உள்ளிட்ட பல பக்க விளைவுகள் உண்டு.

குற்றத்தை எண்ணி மருகி குற்றவாளிகள் திருந்த வேண்டும் என்பது சட்டத்தின் எதிர்பார்ப்பு. ஆனால், இது போன்ற தண்டனைகள் குற்றவாள்ளிகளை மனநோயாளிகள் ஆக்கும் வாம் வாய்ப்பும் உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். அதன்பின் அவர்கள் சமுதாயத்துக்குக் கொடிய அச்சுறுத்தலாக மாறும் வாய்ப்பும் இருக்கிறது.




சரி மாற்றத்துக்கு என்னதான் வழி? மனக்கட்டுப்பாடு. அது தவிர வேறு வழி கிடையாது. அதை எப்படிக் கொண்டுவருவது? யோகாசனம், தியானம், உடற்பயிற்சி, நல்லோர் சேர்க்கை, ஆகிய வழிகளில் இது சாத்தியம்.  யோகாசனம், உடற்பயிற்சி ஆகியன உடலையும் உள்ளத்தையும் ஒரு கட்டுக்குள் கொணர வழிசெய்யும். தியானம் மனதை ஒருநிலைப்படுத்த உதவும். மனதை அலைபாய விடாமல் நல்வழிகளில் திருப்புவது நல்லோர் சேர்க்கையில் சாத்தியப்படும்.இதை விடுத்து வேதியியல் காயடிப்பு என்பதெல்லாம் பயன் தராது. 


 
தண்டனை என்பது குற்றவாளிகளுக்கு அச்சத்தைத் தரவேண்டும். வேறொரு பெண்ணைத் தவறாகப் பார்க்கவும் அஞ்சுமளவு தண்டனை இருக்க வேண்டும். இல்லையேல் அது தண்டனை இல்லை, குற்ற விடுமுறைக் காலம்.

பெண் விடுதலை வேண்டும்.. பெரிய கடவுள் காக்க வேண்டும். உண்மை நின்றிட வேண்டும்.

4 comments:

Anonymous said...

poda pappan

Arun Ambie said...

நான் பார்ப்பான் தான். ஊருக்கே தெரியும். அதை இங்கே சொன்ன ஜந்து அனானியா வந்து சொல்லிருக்கே...... யாரு என்னன்னு சொல்லிகிற மாதிரி அதுக்கு எதுவும் இல்லை போலருக்கு பாவம்....

kargil Jay said...

song singing is cheap, disturbing against what you are trying to convey

Gokul said...

சார், நீங்கள் சொல்லுவது தனி மனித ஒழுக்கத்தை , அது சரிதான் , ஆனால் இதில் அரசாங்கம் செய்வதற்கு என்ன இருக்கிறது ? மூன்று மதங்களுக்கு ஒரு முறை ஊசி போடுவதற்கே முடியாத அரசு யந்திரம் , இந்த தனி மனித ஒழுக்க பழக்க வழக்கங்களுக்கு என்ன செய்ய முடியும்? கல்வியோ தனியாரிடம், தார்மிக கடமை , ஒழுக்கம் பற்றி பேசுபவர் 'சாமர்த்தியம் இல்லாத முட்டாள்' என்ற பார்வை... இந்த solution, நல்லதாக இருந்தாலும் நடைமுறையில் வேலைக்காகாது