ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Wednesday, 2 January 2013

மதம் பரப்ப வாரீர்: விதிகள் விலக்கி வலைவிரிக்கும் அரசு

ஒரு நாட்டுக்கு அந்த நாட்டைச் சாராத ஒருவர் போகவேண்டுமென்றால் நுழைவாணை எனப்படும் விசா தேவை. சொந்த நாட்டில் அடையாளப்படுத்தித் தரப்படும் கடவுச்சீட்டு எனும் பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே நுழைவாணை தரப்படும். இல்லையென்றால் அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு மட்டும் சென்று வர அனுமதி பெறலாம்.


இந்தியாவுக்கு வெளிநாட்டார் யார் வருவதாக இருந்தாலும் மைய அரசின் வெளியுறவுத்துறை அனுமதி தரவேண்டும். வருபவரின் பின்னணி, வரும் நோக்கம், ஏன் வருகிறார், எத்தனை காலம் தங்குவார் போன்ற விவரங்கள் இருந்தால் மட்டுமே அவரது மனு பரிசீலிக்கப்படும். பின்னர் உளவு உள்ளிட்ட பல துறைகள் மூலம் அவர் பற்றிய தகவல் சரிபார்க்கப்பட்டு பின்னர் நுழைவாணை வழங்கப்படும்.


ஆனால் எல்லாவற்றிலும் நடைமுறைகளை தன் வசதிக்கு மாற்றி வைத்து தேசநலனைப் பற்றிய கவலை சிறிதுமின்றிச் செயல்படுவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வாடிக்கையாகிவிட்டது. அந்த எண்ணிக்கையில்  இன்னொரு கூட்டல் விசா வழங்குவதில் ஓசையின்றி வந்துள்ள மாற்றங்கள். இந்த மாற்றம் பொதுவில் எல்லோருக்கும் கிடையாது. கிறிஸ்தவ மத போதகர்களுக்கு மட்டும் என்று கூறப்படுகிறது.

 மத்தியப் பிரதேச அரசால் மதமாற்ற நடவடிக்கைகளைக் கண்காணித்து அறிக்கை வழங்க 1956ல் நியமிக்கப்பட்ட  நியோகி ஆணையம் பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியன மதமாற்றத்துக்கான களமாக இருப்பதாக கிறிஸ்தவரல்லாத மக்கள் புகார் தெரிவித்ததை பதிவு செய்துள்ளது. ன் தேவைகளை மதமாற்றத்துக்கு ஒர வாய்ப்பாக கத்தோலிக்க கட்டமைப்பு பயன்படுத்தியது அம்பலமானது.   

The Niyogi Committee Report (edited by Sita Ram Goel, 1998)

நியோகி ஆணையத்தின் பரிந்துரைகள் இவை:

  • மத மாற்றத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பாரதத்துக்கு வரும்  சமயப்பரப்பாளர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டும். பெரும் எண்ணிக்கையில் பாரதம் வரும் வெளிநாட்டு சமயப்பரப்பாளர்கள் தடுக்கப்படவேண்டும்.
  • மருத்துவம், கல்வி, நிதிக்கடன் போன்றவற்றின் மூலம் மதமாற்றம் செய்யப்படுவதை சட்டபூர்வமாகத் தடுக்கவேண்டும்.
  • கட்டாயமாகவோ, மிரட்டியோ, அன்பளிப்புகள் கொடுத்தோ, அறியாமையைப் பயன்படுத்தியோ, ஆன்மீக உணர்வுகளில் நம்பிக்கைகளில் ஊடுருவல் செய்வதன் மூலமோ மதமாற்றம் செய்யப்படுவது கடுமையாகத் தடைசெய்யப்படவேண்டும்.
  • மிரட்டல், கட்டாயம், அன்பளிப்பு போன்ற வழிகளில் மதமாற்றத்தைத் தடைசெய்ய அரசியலமைப்பு திருத்தப்படவேண்டும்.
  • தேவையான சட்டங்களை இயற்றி அநியாய மதமாற்றங்களைத் தடை செய்யவேண்டும்.
  • மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவப் பணியாளார்களின் பதிவு கட்டாயமாக்கப்பட வேண்டும். அவர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு தொழில்முறைச் செயல்பாடுகள் மூலம் மதமாற்றம் செய்வதைத் தடை செய்யவேண்டும்.
  • மாநில அரசுகளின் அனுமதியின்றி மதமாற்றம் சம்பந்தப்பட்ட அச்சு வெளியீடுகள் கூடாது. 



Report of the Christian Missionaries Enquiry Committee Madhya Pradesh, Nagpur, 1956

மதமாற்றப்பட்ட கிறிஸ்தவர்கள் நாகர், கரேன், அம்போய்ன் இன மக்களை இந்துக்களல்லாத பழங்குடியினர் என்று சொல்லி அவர்களைக் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றி ஒரு மதம்சார்ந்த தேசியத்தை உருவாக்க விழைகின்றனர். சமயப்பரப்பாளர்கள் மத்தியில் உதித்த உத்தி இது என்பதும் இதன் மூலம் தேசத்தின் ஒவ்வொரு பகுதியாகத் தம் பிடிக்குள் கொணர்வதே அவர்களின் நோக்கம் என்றும் நீதிபதி நியோகி தம் அறிக்கையில் தெரிவித்துள்ளார். லுத்தரன் மற்றும் கத்தோலிக்க சமயப்பரப்பாளர்கள் பழங்குடியினரைத் தனியே பிரித்து வைப்பதை ஆங்கிலேய அரசு கொள்கை ரீதியில் அனுமதித்ததையும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

பேராசிரியர் கே.சி. ஜார்ஜ் என்பார் இவ்வாணையத்தில் கிறிஸ்தவர்களின் பிரதிநிதியாக இருந்தார். அவர் கூறுவது:கிறிஸ்தவ சமயப்பரப்பாளர்களின் கொள்கையின் நோக்கங்கள் குறித்துக் கூறுகையில்:
  • இந்திய தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கமக்களை வேறுபடுத்தி ஒற்றுமையான வாழ்வை சிக்கலாக்க. 
  • அமெரிக்காவில் இருப்பது போல வேற்றுமையில் தேசிய ஒற்றுமை என்பதை இங்கே இயலாததாகச் செய்ய.
  • அரசியலமைப்பில் தரப்பட்ட மத சுதந்திரத்தைக் கொண்டு தம் மதத்தைப் பரப்பி, முஸ்லிம் லீக் போல ஒரு கிறிஸ்தவ கட்சியைத் துவக்கி தனிநாடு பிரிப்பதும் இயலாத போது ஒரு போர்க்குணமிக்க சிறுபான்மைப் பிரிவாக கிறிஸ்தவர்களை உருவாக்க. 
இவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்படும் மக்களிடம் அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். 
 (Justice Niyogi Committee Report 1956) (Goel, Pseudo-Secularism, Christian Missions and Hindu Resistance 1998)

நுழைவாணையில் சமயப்பரப்பாளர்கள் வந்து செல்லத் தனிவகை இருக்கிறது, மிஷநரி விசா என்று பெயர். பாஸ்போர்ட் அலுவலக விதிமுறைகள் எண் 17ல் இது குறித்துச் சொல்லப்படுகிறது. பாரதத்தில் நுழையத் தடையில்லாச் சான்றிதழ் வைத்திருக்கும் சமயப்பரப்பாளர் தவிர பிறர் உரிய சோதனைகள் நிகழ்த்தப்பட்ட பிறகே தக்க அமைச்சகங்கள் அனுமதித்த பின் நுழைவாணை வழங்கப்பெறுவர்.

விதி எண் 24ல் சொல்லப்படுவது: அயல்நாட்டினர் மாணவர், ஆராய்ச்சியாளர், பணியாளர், சமயப்பரப்பாளர் என்று எந்த வேலை நிமித்தமாக வந்தாலும் 180 நாட்களுக்கு மேல் பாரதத்தில் தங்க உரிய நுழைவாணை இருந்தால் அயல்நாட்டால் பதிவு அலுவலகத்தில் தம் விவரங்களைப் பதியவேண்டும். 180 நாட்களுக்குக் குறைவாக இருந்தால் தேவையில்லை. 180 நாட்களுக்குக் குறைவான நுழைவாணையுடன் வந்து பிறகு நீட்டிப்புப் பெற்றால் பதிய வேண்டும். 



மேலும் மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து ஆகிய பகுதிகளுக்குச் செல்லத் தேவையான பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான அனுமதி (Protected Area Permit) என்ற விதியையும் அரசு ரத்து செய்துவிட்டதாக அறியப்படுகிறது. இங்கே தான் கிறிஸ்தவ சமயப்பரப்பாளர்கள் தங்கள் நோக்கமான தனிமைப்படுத்திப் பிரித்துவைக்கும் சூழ்ச்சிகள் அதிக முன்னேற்றம் கண்டுள்ளன.

உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் Missionary Visa குறித்த பேச்சே இல்லை. Foreigners Regional Registration Office விதிகளிலும் இது குறித்து ஏதும் சொல்லப்படவில்லை. கடவுச்சீட்டு குறித்த விதகளில் மட்டுமே இந்த சமயப்பரப்பாளர் நுழைவாணை குறித்துச் சொல்லப்படுவதால் பெரும்பாலான மக்களுக்கு இது குறித்துத் தகவல் இல்லை.


முன்பெல்லாம் கிறிஸ்தவ சமயப்பரப்பாளர்கள் சுற்றுலா நுழைவாணை மூலம் வருவார்கள். மதமாற்றம், மதப்பிரச்சாரம் என்று ஆரம்பித்தால் விதிமீறல் என்று நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். கூடங்குளத்தில் போரட்டத்துக்கு ஆதரவாக இருந்த சில கிறிஸ்தவ சமயப்பரப்பாளர்கள் இது போல பிடிபட்டு வெளியேற்றப்பட்டனர். 

சமயப்பரப்பாளர்களுக்கு இதுபோல சிறப்பு அனுமதிகள் அளிக்கப்படுவதன் மூலம் அரசு மதசார்பற்றது என்ற அரசியல் சாசன உறுதிமொழி மீறப்படுகிறது. அரசு கிறிஸ்தவ மதமாற்றத்தை ஊக்குவிப்பதாக இந்தச் செயல் அமைகிறது. இந்திய அரசோ அல்லது தற்போது பதவியில் இருப்பவர்களோ கிறிஸ்தவத்தை அதிகாரபூர்வமான அல்லது  இசைவான சமயமாக ஓசையின்றி அறிவித்திருக்கிறார்கள். 


கிறிஸ்தவ சமயப்பரப்பாளர் நுழைவாணை என்பது பாரதத்தின் பன்முக கலாச்சார வாழ்வுக்கு விடப்பட்ட சவாலாக இருக்கும். தம் மதமே சிறப்பு மற்றன எல்லாம் சீரழிவு என்று விஷமப்பிரச்சாரம் செய்யும் இவர்களால் அமைதிக்கும் நல்வாழ்வுக்கும் சீர்கேடே அதிகமாகும்.

மருள் நீக்கி அருள்பெருக்கும் விஷயங்களில் சத்தற்றதாக இருக்கும் கிறிஸ்தவ மதத்தை 400 ஆண்டுகளுக்கு முன்பே நம்மவர்கள் தர்க்க ரீதியாக நிராகரித்துள்ளனர்.  ஏசுமத நிராகரணம் என்பது சதுரகராதி இயற்றிய வீரமாமுனிவரென்னுங் கிருஸ்துவரைக், கவிச் சக்கரவர்தியாகிய ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் கண்டித்து எழுதியதாமெனக் காண்க.

பின் குறிப்பு:  இதை ஆரம்பித்ததில் இருந்து சில தொழில்நுட்பச் சிக்கல்கள், முதலில் தலைப்பு மட்டுமே எழுதியிருந்தேன். எங்கே எதை க்ளிக் செய்தேன் தெரியவில்லை வெளியிட்டு விட்டது ப்ளாகர். டோண்டு ஐயா கண்டறிந்து ஏன் இப்படி என்றார். முழுதும் எழுதி மீண்டும் வெளியிட்டேன். 

எழுத்துருவில் சிக்கல் என்று நண்பர் தரனேந்திரா தெரிவித்தார். அதையும் சரி செய்துவிட்டேன். மீண்டும் நானே வேறு உலவியில் பார்த்த போது சில இடங்களில் எழுத்துருச் சிக்கல் தெரிந்தது. நண்பர் ராம்குமார் சில யோசனைகள் சொன்னார். செய்ததும் சரியானது. 

தற்போது எந்தப் புகாரும் இல்லை என்பதால் All is well என்று மார்பின் இடது பக்கம் (விஜய்யை எவ்வளவு கலாய்ச்சிருப்போம்) தட்டிக் கொள்கிறேன்.

2 comments:

snkm said...

நன்றி. face book லயும் போடுங்களேன். வாழ்க பாரதம்!

Arun Ambie said...

சங்கர்ஜி! இதை முகநூலில் பகிர்ந்துள்ளேன்.