இன்று காதலர் தினம்(பிப்ரவரி 14, 2013)! விதவிதமான கொண்டாட்டங்கள்!சில நகரங்களில் பூங்காக்கள்(park) இன்று மூடப்பட்டுள்ளது! இதெல்லாம் ஒரு புறம் இருக்க, இன்று நூறு கோடியின் எழுச்சி (one billion rising) என்று ஈவ் என்ஸ்லெர் என்ற அமெரிக்க பெண்மணியின் அழைப்பை ஏற்று, பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சம நீதி கோரி உலகம் முழுவதும் நூறு கோடி பெண்கள் 202 நாடுகளில் வீதிக்கு வரப்போகிறார்களாம்! இந்தப் பெண்மணியை இந்த அறிவிப்பை செய்யத் தூண்டியது என்ன?
“பலவந்தத்தின் மூலம், ஒத்துழைப்பில்லாமல் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டால், பெரும்பாலும் அந்தப் பெண் கர்பமாவதில்லை” என்று அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் திரு. டாட் அக்கின் அவர்கள் பொதுக்கூட்டத்தில் பேசியதே!