ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Saturday 16 February 2013

டில்லி கற்பழிப்பும் கும்பமேளாக் கோடிகளும்!

நண்பர் பால.கௌதமன் எழுதிய கட்டுரை. இங்கே வெளியிடுகிறேன்....

இன்று காதலர் தினம்(பிப்ரவரி 14, 2013)! விதவிதமான கொண்டாட்டங்கள்!சில நகரங்களில் பூங்காக்கள்(park) இன்று மூடப்பட்டுள்ளதுஇதெல்லாம் ஒரு புறம் இருக்கஇன்று நூறு கோடியின் எழுச்சி (one billion rising) என்று ஈவ் என்ஸ்லெர் என்ற அமெரிக்க பெண்மணியின் அழைப்பை ஏற்றுபெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சம நீதி கோரி உலகம் முழுவதும் நூறு கோடி பெண்கள் 202 நாடுகளில் வீதிக்கு வரப்போகிறார்களாம்இந்தப் பெண்மணியை இந்த அறிவிப்பை செய்யத் தூண்டியது என்ன?

பலவந்தத்தின் மூலம்ஒத்துழைப்பில்லாமல் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டால்பெரும்பாலும் அந்தப் பெண் கர்பமாவதில்லை” என்று அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் திருடாட் அக்கின் அவர்கள் பொதுக்கூட்டத்தில் பேசியதே!

இதைத் தொடர்ந்துபெண் விடுதலைசம நீதி என்ற பெயரில் உலகம் முழுவதும்தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும்சில செய்தி நிறுவனங்களும் இந்த நூறு கோடியின் எழுச்சி (one billion rising) என்ற ஆட்டம்பாட்டம்,கொண்டாட்டம் கலந்த நூதனப் போராட்டத்தை முன்நின்று நடத்துகின்றனநம் நாட்டில் இந்தப் போராட்டத்தில் முன்நிறுத்தப்படுவது டில்லியில் டிசம்பர் 16, 2012 அன்று ஜோதி சிங் என்ற பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சோக நிகழ்வு!

டில்லி உலகின் கற்பழிப்புக்களின் தலை நகரம்இந்தியாவின் பண்பாடு பெண் அடிமைத்தனம் நிறைந்ததுஅதுவே கற்பழிப்புக்களுக்குக் காரணம் என்று ‘சந்தில் சிந்து பாடினர்’ சிலர்இந்த நூறு கோடியின் எழுச்சி (one billion rising)சுதந்திர யுத்தம் என்றும் சிலர் முழங்கினர்இது உலகப் பெண்களின் முழக்கம் என்று சிலர் பெருமிதம் கொண்டனர்.இந்த முழக்கம் இந்தியாவை எப்படி பாதித்தது தெரியுமா?

டில்லி கற்பழிப்பு சம்பவம் நடந்தவுடன் 29 டிசம்பர் 2012 அன்று அமெரிக்க தூதரகமும்.நா பொதுச் செயலர் திரு.பான் கீ மூன் அவர்களும்கண்டனச் செய்தி வெளியிட்டனர்கற்பழிப்பை கண்டித்து பாரிஸ் நகரத்திலுள்ள இந்தியத் தூதரம் வரை பேரணி நடத்தி மனுவும் கொடுக்கப்பட்டதுஉலகம் முழுவதும்ஏதோ இந்தியா ஒரு காமாந்தக நாடு என்பது போன்ற ஒரு தோற்றத்தை இந்த மீடியாக்களும்போராட்ட அமைப்புக்களும் ஏற்படுத்தின.

சரி அது போகட்டும்பிப்ரவரி 10,2013 அன்று அலஹாபாத்தில் சுமார் கோடி மக்கள் கும்பமேளாக் கொண்டாட்டத்திற்காக கூடினர்ஒரே நாளில்ஒரு ஆற்றுப்படுகையில் இத்தனை பேர்பாதுகாப்பிற்கு வெறும் 12,000போலீசார்அதாவது 2,500நபருக்கு ஒரு போலீசார்நம் மந்திரிகளோ இத்தாலிய சூப்பர் மந்திரியோ வந்தாலே ஒரு நபருக்கு எவ்வளவு போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவர்?

இந்த கும்பமேளா நாளில் ஒரு வன்முறையோபெண்கள் மீது தாக்குதலோசாதாரணமாக ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களில் நடக்கும் சில்மிஷங்களோ காணப்படவில்லை!10,000 நபர்கள் நடந்து செல்லும் சென்னை டி.நகர் ரங்கநாதன் தெருவில் சாதாரணமாக நடக்கும் உரசல்கள் கூட இங்கு காணப்படவில்லைஇந்த நிகழ்வு எந்த ஊடகத்தினராலும்சமுதாய சிந்தனையாளர்களாலும் கண்டுகொள்ளப்படவில்லைகற்பழிப்புத் தலை நகரம் என்று முழங்கிய வாய்கள்இந்த கட்டுக்கோப்பானதனி நபர் ஒழுக்கத்தை பிரதிபலிக்கும் நிகழ்வை மறைப்பது ஏன்?

பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹிந்துப் பண்பாட்டைநம் நவீன சிந்தனையாளர்கள் பார்வையில் ’பிற்போக்கு ஆண் ஆதிக்க’ வர்க்கீய முறையை பின்பற்றும் சமுதாயத்தில்போலீசார் துணையின்றி ’கோழை பெண் அடிமைகள்’ பாதுகாப்புடன் வலம் வர முடிகிறதுஆனால்அடிமைத்தளையை அறுத்தெரிந்து தெள்ளிய அறிவு முதிர்ச்சியும்உலகாதய சிந்தனையும் கொண்ட பெண்ணால் ராணுவமும்காவல் துறையும் வலம்வரும் தலைநகர் டில்லியில் பாதுகாப்பாக வலம்வர முடியவில்லையே.ஏன்?

இப்படி ஒரு விவாதம் நடக்குமா என்று எல்லா தொலைக்காட்சி சேனல்களையும் துருவித் தேடினேன்தேடியதுதான் மிச்சம்.காதலிக்க இடமில்லை அதனால் பொது இடத்தில் கட்டிப் புரளுவோம் என்று புதிய தலைமுறை டி.வி யில் முழங்குகிறார் ஒரு பெண்ணிய முற்போக்கு வா(வியா)தி.ஆங்கில சேனல்களில்உடையில்லாமல் வலம் வருவது எங்கள் தனிப்பட்ட உரிமை என்று ஒரு பெண்இப்படி பல உரிமைக்குரல்கள்எங்குமே ஒரு பெரும் கூட்டத்தில் கூட பெண் பாதுகாப்பாக உள்ளாள் எங்கள் நாட்டிலே என்ற முழக்கம் இல்லை.

கும்பமேளாவில் கலந்துகொண்ட இந்தியர்கள் தானே டில்லியிலும்புத்தாண்டுக் கொண்டாட்டத்திலும் ஆடுகின்றனர்?மனநிலை எப்படி வேலை செய்கிறது பார்த்தீர்களா?

பக்தியுடன் சமுதாயம் பாரதீயக் கண்ணோட்டத்தில் ஒருவன் சிந்திக்கும் போது சகோதரியாகவும்தாயாகவும் காட்சி தரும் பெண்வர்த்தகமயமாக்கல்மேற்கத்திய சிந்தனைகள் புகும்போது போகப் பொருளாகக் காட்சி தருகிறாள்இது தானே உண்மை?

பல நூற்றாண்டுகளாக,ஆற்றங்கரையிலும்குளத்தங்கரையிலும் ஆண்களும் பெண்களும் சேர்ந்து குளிக்கும் கிராமங்கள் பல உள்ளனஅங்கு யாரும் பெண்களை காட்சிப் பொருளாகப் பார்ப்பதில்லைசாதாரணமாக பேசிக் கொள்கிறார்கள்ஆனால் நாகரீகம் என்ற பெயரில் உயர் படிப்புப் படித்துவிட்டுஜன்னல் ஜாக்கெட்தொப்புளில் கம்மல் மற்றும் பல அலங்காரங்களுடன் பவனி வரும் பெண்கள்படித்தநாகரீக ஆண்களால் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்.

நிலை இப்படியிருக்ககாமாந்தகர்களாக மக்களை மாற்றும் மேற்கத்திய நாகரீகத்தை அடிப்படை உரிமை என்ற பெயரில் ஆதரித்துவிட்டுநன்நெறிகளை போதித்து பெண்களை பாதுகாப்புடனும்மரியாதையுடனும் நடத்தும் ஆன்மீகத்தை பெண் அடிமைத்தனம் என்று தூற்றும் அற்பர்களின் நோக்கம் தான் என்ன?  

No comments: