ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Sunday, 6 July 2025

ஆபிரகாம் ஒப்பந்தம், பாலஸ்தீனம், அரபு நாடுகள் - பாக்ஸ்டான் சோற்றுப் பிரச்சனை

 பாக்ஸ்டான் Abraham Accordsன் படி இஸ்ரேலை அங்கீகரிக்கவேண்டும் என்று GCC அழுத்துகிறது. ஆனால் பாக்ஸ்டான் ராணுவம் தயங்குகிறது. காரணம் அங்கே பாலஸ்தீனப் பிரச்சனை தீர்ந்தாலோ அல்லது back burner நிலைக்குப் போனால் கூட அரபு நாடுகள் அடுத்த சோலிகளைப் பார்க்கப் போகும்.

பாலஸ்தீனர்கள் பற்றி அராபியர்களுக்கு ஏதும் கவலையில்லை. பாலஸ்தீனர்களுக்கு என்று இருந்த நிலப்பரப்பை இஸ்ரேலைப் போட்டுத்தள்ளி மொத்த இடத்தையும் மீட்போம் என்று பேசி எகிப்து, ஜோர்டன், சிரியா என்று இடத்தை ஆட்டையப் போட்டுகொண்டனர். பாலஸ்தீனர்களை அப்படியப்படியே இருந்த இடத்தில் ஒழுங்காக இரு என்பார்கள். புரியாத பாலஸ்தீனர்கள் போராடினால் என்கௌண்டர் தான்.
அரேபியப் பகுதியில் இதனால் பாக்ஸ்டானும் முக்கியத்துவம் இழக்கும். கஷ்மீர விவகாரத்தில் ஒரு பயல் சீந்தமாட்டான். அணு ஆயுத மிரட்டல் அம்மஞ்சல்லிக்கு உதவாது என்று சிந்தூரம் பூசி நிரூபித்துள்ளோம் நாம். இதனால் இஸ்ரேல் அச்சம் இல்லையென்றால் சகாத் வாங்கித்தான் பிழைக்கவேண்டும் பாக்ஸ்டான். துருக்கி பெரிய அளவில் ஓசி கொடுக்காது. ஆயுதம், மதம் கற்பித்தல் என்று செய்யும். ஆனால் பிச்சை எடுக்கப் போனால் கஷ்டம்.
இன்று பாக்ஸ்டான் மந்திரி இஷாக் டர் ஆப்பிரகாம் ஒப்பந்தமெல்லாம் செல்லாது என்று சொல்லிவிட்டார். ட்ரம்ப் முனீரைக் கூப்பிட்டுச் சோறு போட்டால் நிலை மாறலாம்.
பாக்ஸ்டானில் ஆள் கொல்லும் மர்ம நபர்கள் ஈரானியர் என்ற வதந்தி ஷியா - சுன்னி பிரிவினையால் கிளப்பிவிடப்படுவது. ஈரான் ராணுவத்தலைவர் பாகேரி கொலைக்கு முனீர் உதவினார் என்று மொசாத் போட்டு அடித்ததில் ஈரானியர் பலர் சந்தேகத்தோடேயே உள்ளனர். மேலும் மொசாதின் ஆள் என்று பேசப்படும் கேத்தரின் ஷக்டமைப் பிடிக்க முடியாமல் ஏற்கனவே சிறைவைத்த பிரஞ்சுக்காரர்கள் மீது ஈரான் உளவுக் குற்றம் சுமத்துகிறது. கேதரின் ஈராக் போய் தப்பித்தாள் என்று ஒரு தகவல். இல்லை பாக்ஸ்டான் வந்து பாதுகாப்பாக ஊருக்குப் போனாள் என்று ஒரு செய்தி.

ஈரான் கமேனி வகையறாவினால் மதம் சார்ந்து என்று ஹமாஸ், ஹிஸ்புல்லா உள்ளிட்டவற்றை வளர்க்கிறது. அவர்களும் வெளியே போய் ஷா பஹலாவி வந்தால் சுத்தம். பஹலாவியை நம்ப முடியாது. அமெரிக்க, ஐரோப்பியர்களின் நிலைமை தெரிந்தவர். ஆட்சிக்கு வந்தபின் ஆனதைப் பார் என்றால் கஷ்டம். அதனால்தான் கமேனியை மாற்றிவிட்டு வேறொரு தாடிக்காரரை வைக்க எத்தனிக்கிறார்கள். பிரச்சனை உயிர்ப்புடனிருக்கும். தீர்க்கிறேன் பேர்வழி என்று காசு பார்க்கலாம்.

No comments: