யூ நோ கர்நானிதி? இப்படித்தான் விஜயகாந்தை நோக்கி பளம் நளுவும் பால்ல வுளும்னு பொதுவிலேயே பேசி கூட்டணிக்கு ஆசையா இருந்தார். பளம் அவர் தோதுக்கு வுளலை. ஒடனே ஒரு மநகூ போட்டு விஜயகாந்தை ஓச்சுக்கட்டிட்டார்.
ஆகப்பெரிய ஆளுமை அம்புட்டுக்கு ஆவாரா என்றால் நிச்சயம் இல்லை. ஏணி இன்னும் மிதிவாங்கத் தயங்காதிருப்பதால் மட்டுமே அவர் ஆளுமை. சிறு தயக்கம் வந்தாலும் சோலி முடிஞ்.
ஆனால் திமுகவில் சிலர் இன்னும் இருக்கிறார்கள். ஓரளவு திட்டம் போட்டு ஏற்றிவிட்டு இறக்கி கீஈஈழே வைப்பார்கள். அதில் கில்லாடிகள். அவர்களுக்கென்று திட்டத்தைச் செயல்படுத்த உதிரிகள் கட்சி நடத்துகிறார்கள். செலவுக்கும் அச்சமில்லை.
உதயா இல்லை விசயா என்று சர்ச் மேலிடம் முடிவு பண்ண வேண்டும். அந்த முடிவில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்துவதில் திமுகவினர் எம்டன்கள். அங்கே இருக்கிறது விசய்க்கான விசை.
அப்படியானால் தமிழக பாஜக முகத்தைத் மீண்டும் மீண்டும் துடைத்துக் கொண்டு விசயை அழைத்துக்கொண்டே இருக்கிறார்களே? 2024ல் அதிமுக மன்சூரலிகானை சரிக்கு சமமாக உட்கார்த்தி வைத்துத் தொகுதிப் பங்கீடு பேசியது நினைவிருக்கிறதா? அரசியல் அப்படித்தான்.
நிற்க. தமிழக பாஜகவில் திமுகவைத் தள்ளிவிட்டு நமிர்ந்து நிற்பதற்கு வலுவான, தெளிந்த அரசியல் ஆட்டக்காரர்கள் யாரும் எனக்குத் தென்படவில்லை. அண்ணாமலை ஓட்டு % அதிகரித்தார். ஆனால் கட்சி அமைப்பைக் வலுவாகக் கட்டமைத்து திராவிடக் கட்சிகளுக்குச் சவால் விடும் வகையில் அவர் செய்தவை தேவைக்கேற்ப இல்லை. அதற்கென இருப்பவர்கள் தேவையான வலுவில், வேகத்தில் சுழலவில்லை என்பதும் சுணக்கத்தின் காரணம். சச்சின் டெண்டுல்கரே ஆனாலும் அவரும் எதிரே நிற்பவரும் ஒன்றாக ஓடவேண்டும். அப்படி ஓடினால் தான் ரன் கணக்கு வரும். அரசியல் என்பது டெஸ்ட் மேட்ச். பொறுப்பேற்றவர் அனைவரும் அவரவர் பங்கைச் சரியாக அளிக்கவேண்டும். ஒருவர் மட்டும் அடித்து ஆடி வெல்வது நடக்கிற விஷயமில்லை.
மற்றவர்கள் எதிமுகவையே அண்ணாந்து பார்க்கிற நிலை தான். ஆட்டத்தில் தெளிந்த, துணிந்த சில ஜித்தர்கள் தேறும்வரை அமித்ஷா அவரது புரிதலுக்கேற்ற ஆட்டத்தை ஆடுவார். ஆட்டம் பிடித்திருந்தால் பார்க்கலாம், விரும்பினால் கூடச் சேர்ந்து ஆடலாம். இல்லை என்றால் விதியே என்று தேர்தல் நாளில் தாமரை தென்பட்டால் பொத்தானை அழுத்தலாம். தென்படாத இடங்களில் அவரவர் விருப்பம் போல அழுத்தலாம்.
வந்தே மாதரம். 🕉
No comments:
Post a Comment