ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Sunday 7 December 2014

திருமதி தமிழிசை சௌந்தர்ராஜனிடம் சில கேள்விகள்

கேள்விகள் கேட்பவர் - பத்தமடை சுப்பிரமணியன்.

1.    அன்புள்ள சகோதரி, திருவள்ளுவர் திருநாள் வைகாசி அனுடம் என எழுதியும் பேசியும் வருபவர்கள் எந்த ஓர் அரசியல் கட்சியையும் சாராதவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா ?

2.    அவர்கள் அரசியல் கட்சி சாந்தவர்கள் என உங்களால் கூற முடியுமா?

3.    நீங்கள் தி.மு.க. சார்பில் நின்று பேசுவதற்காக திருவள்ளுவர் பிறந்த நாள் தொடர்பாக்க் கருத்துக் கூறுபவர்களைப் பார்த்து இதனை அரசியல் ஆக்க வேண்டாம் எனக் கேட்பது எந்த விதத்தில் நியாயம் ?



4.    இதில் எங்கே வந்தது அரசியல் ?

5.    தை மாதம் இரண்டாம் நாள்- திருவள்ளுவர் பிறந்த நாள் என அறிவித்த கலைஞரின் நிலைப்பாடு சரிதான் எனக் கூறுகிறீர்களா ?

6.    கலைஞர் அறிவிப்பில் நியாயம் உண்டு என உங்களால் கூற முடியுமா?

7.    திருவள்ளுபவர் பிறந்த நாள் தொடர்பான வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

8.    தமிழ் வருடம் சித்திரையில் தொடங்காது தை மாதத்தில் தொடங்குகிறது எனக் கலைஞர் அறிவித்த போது – நீங்கள் என்ன செய்தீர்கள்? எங்கே போயிருந்தீர்கள்?

9.    சித்திரை - தை என்ற வருடப் பிறப்பு சர்ச்சையில் தங்கள் நிலைப்பாடு என்ன?

10.    இந்த வருடப் பிறப்பு சர்ச்சை தொடங்கிய காலத்தில் 14-2-14 சனிக்கிழமை தினமணி நாளிதழில் பேராசிரியர் சாமி.தியாகராசன் எழுதிய கட்டுரையைப் படித்துள்ளீர்களா?

11.    1935- 18ஆம் நாள்(வைகாசி அனுடத்தில்) மறைமலை அடிகள் தலைமையில் தமிழகத்தின் பெரும் பேராசிரியர்கள், தமிழ்ச் சான்றோர்கள் அனைவரும் கூடி வள்ளுவர் நாளைக் கொண்டாடியது உங்கட்குத் தெரியுமா?


12.    1935- 19ஆம் தேதி வைகாசி அனுடத்தில் சென்னையில் உள்ள ஏழுகிணறு, ஏழுகிணற்றுத் தெருவில் அறிஞர் அண்ணா தலைமையில் திருவள்ளுவர் திருவிழா கொண்டாடப்பட்டது உங்கட்குத் தெரியுமா?

13.    இலங்கை, கொழும்பில் வாழ்ந்த பண்டிதர் கா.பொ.இரத்தினம் தான்கண்ட தமிழ் மறைக் கழகத்தின் சார்பில் “ வைகாசி அனுடம் வள்ளுவர் திருநாள் – அதுவே தமிழினத்தை ஒன்றுபடுத்தும் நாள்” என அறிவித்து உலகம் முழுதும் விழா நடத்தியது உங்கட்குத் தெரியுமா?

14.    1966- ஜூன் 2-ஆம் நாள் வைகாசி அனுட நாளில் சென்னை மயிலை சமஸ்கிருத கல்லூரி அருகில் இருக்கும் திருவள்ளுவர் சிலையை – அப்போதைய குடியரசுத்தலைவர் டாக்டர் இராதா கிருஷ்ணன் அவர்கள் திறந்து வைத்ததை நீங்கள் அறிவீர்களா?

15.    அப்போதைய முதலமைச்சர் பெரியவர் பக்தவத்சலம் வைகாசி அனுட நாளை வள்ளுவர் திருநாள் எனக் கொண்டாடி அரசு விடுமுறையாக அறிவித்ததை நீங்கள் அறிவீர்களா?

16.    தங்கள் தந்தை இலக்கியச் செல்வர் திரு. குமரி அனந்தனை இது தொடர்பாகக் கேட்டு அறிய முயற்சி மேற் கொண்டீர்களா?

17.    சென்னை, மயிலைத் திருவள்ளுவர் திருக்கோயிலில் வள்ளுவர் அவதாரத்தினமாக  வைகாசி அனுட நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்களா?



18.    வள்ளுவர் பிறந்த நாள் தொடர்பாகக் கருத்துரைப்பவர்களைக் கண்டு நீங்கள் கலந்து பேசினீர்களா?


19.    அவ்வாறு பேசியிருந்தால் அவர்கள் கருத்தில் உங்கட்கு உடன்பாடா? இல்லையா? என்பதை வெளியிட்டீர்களா?

20.    இப்படி எதுவும் நீங்கள் செய்யாமல் இருந்து கொண்டு “இதனை அரசியல் ஆக்க வேண்டாம்” எனச் சொல்வது நீங்கள் தான் இதனை அரசியலாக்குகிறீர்கள் என்ற எண்ணத்தை உண்டாக்கவில்லையா?

21.    உங்கள் அரசியல் ஆதாயத்திற்காகத் திருவள்ளுவர் பிறந்த நாளை வைகாசி அனுடத்தில் கொண்டாடிய மறைமலை அடிகள், திரு.வி.க, டாக்டர் உ.வே.சா, அண்ணா, ஈ.வே.ரா, வையாபுரிப்பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை, தெ.பொ.மீ, மா.பொ.சி, கி.வா.ஜ, கல்கி -கிருஷ்ணமூர்த்தி முதலான பெருமக்களை நீங்கள் அவமதிக்கிறீர்களே! இது உங்கட்கு வெட்கமாக இல்லையா?

22.    “எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்” என்ற நாலாந்தர அரசியல்வாதி போல நீங்கள் பேசலாமா? நீங்கள் இருக்கும் இட்த்திற்கு அழகா?

23.    நீங்கள் கலைஞரின் கருத்துப் பினாமியாக பாரதிய ஜனதா கட்சியில் செயல்படுபவர் எனப் பலர் சொல்வதை உங்கள் பேச்சு உறுதிப்படுத்தவில்லையா?

No comments: